Wednesday, April 4, 2012
ஃபேஸ்புக் தோழியும் பொய் சொன்ன நண்பனும்
இது மாதிரி ஃபேஸ்புக் என்று ஒன்று வந்து தொலைக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் பத்தாம் வகுப்பு டியூஷனில் உடன் படித்த தனலட்சுமி, கவிதாக்களின் அப்பா பெயரையும் கேட்டு தெரிந்து வைத்திருப்பேன். இப்போழுது தனலட்சுமி என தேடினால் ஆயிரக்கணக்கில் தனலட்சுமிகள் ஃபேஸ்புக்கில் லைன் கட்டுகிறார்கள். நாய்குட்டி பொம்மையும், குட்டி பெண் பாப்பா போட்டோக்களும் புரொஃபைல் பிக்சராய் வைக்கப்பட்டு அதன் பின் மறைந்திருக்கும் தனலட்சுமிக்களில் நம் தனலட்சுமியை எப்படி கண்டுபிடிப்பது என நினைக்கும்பொழுது அழுகையே வந்துவிடுகிறது.
ஆனால், நாம்தான் இவ்வளவு ஃபீல் செய்கிறோம், இதே நேரம் அந்த தனலட்சுமி நம்மை சுத்தமாக மறந்த நிலையில் செரலாக்கை கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்கு பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டிருக்கும் என நினைக்கும்பொழுது வந்த அழுகை கூட நின்னுடுது.
---
தங்கமணி கிச்சனில் கிரைண்டருடன் சண்டை போட்டபடி மாவும் கையுமாக இருந்த சுபமாலை வேளையில், குழந்தையை மடியில் வைத்தபடியே இணையத்தை மேய்ந்துக்கொண்டிருந்தேன். "ம்மே" மட்டுமே சொல்லக்கூடிய, எவ்வளவு கேட்டாலும் அப்பாவோ, தாத்தாவோ இன்னபிற வார்த்தைகளோ வாயில் வராத பத்து மாத அப்பாவிக்குழந்தை.
மேய்ச்சல் போக்கில் பேஸ்புக்கில் புதிதாய் ஆட் ஆன தோழியின் புரொபைலை கிளிக் செய்தேன். அவ்வளவுதான்... சரஸ்வதி சபதத்தில் அருள் வந்து திடீரென பேசும் சிவாஜி மாதிரி, அந்த தோழியின் புகைப்படத்தை பார்த்ததும் மடியில் இருந்த குழந்தை "க்கா... அக்கா" என ஹை டெசிபலில் அபாய ஒலியெழுப்ப, கிச்சனில் இருந்து ஆச்சரியமாக தங்கமணி படாரென எட்டிப்பார்க்க, மடியில் குழந்தை அங்குமிங்கும் மீன் போல துடித்ததால் சட்டென விண்டோவை குளோஸ் செய்ய முடியாமல் எல்லாம் சுபமாய் முடிந்தது.
இன்னும் நமக்கெதிராய் செயல்பட குழந்தைக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்படுகிறதோ என நினைத்தாலே கலக்கமாய் இருக்கிறது.
---
சமீபத்தில் திருமணமான உயிர் நண்பன், படத்துக்கு கூப்பிட்டாக் கூட ரொம்ப நல்லவன் மாதிரியே பேசுனான். இடையில இடையில அவன் மனைவியோட சிரிப்புக்குரல் வேற கேட்டுச்சு. ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போடுறானேனு, டவுட்டோட,
"ஏன்டா ஸ்பீக்கர் போட்டு பேசுறியாடா?"னு கேட்டேன்.
"இல்லையே"ன்னான்.
"ம்.. சரி சரி.. அப்புறம் மச்சி.. பழைய ஃபிகர் சுப்ரபா கூட இன்னும் கான்டாக்ட் இருக்காடா?"ன்னு ஒருவார்த்தைதான் கேட்டேன்.
அப்ப கட் ஆன கால்தான்.
# பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு
Tuesday, March 20, 2012
வள்ளல்கள் கர்ணனும் இன்றைய புரட்சித்தலைவியும்
"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..." என டி.டி.எஸ் ஒலி பின்னணியில் பாடிக்கொண்டே வரும் என்.டி.ஆர்.. டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் முறையில் பூஸ்ட் அப் செய்யப்பட்ட காட்சியில் சரிந்து கிடக்கும் சிவாஜி.. சுமார் 40 வருட பழமை வாய்ந்த திரைக்காவியத்தை மெருகேற்றப்பட்ட நிலையில் திரையில் காணவும் ஒரு பாக்கியம் வேண்டும்.
என் அம்மா தீவிர சிவாஜி ரசிகை. அதிலும் கர்ணண் படம் குறித்து பல முறை சிலாகித்திருக்கிறார். கர்ணண் டிஜிட்டல் மேருகேற்றல் என்கிற விளம்பரம் பார்த்து கடந்த ஞாயிறு இரவுக்காட்சிக்கு ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கிற்கு அழைத்து சென்றேன். படம் துவங்கிய சில நிமிடங்களுக்கெல்லாம் ஹவுஸ்புல்லாகி விட்டது.
படம் ஆரம்பிக்கும் முன்னர் 10 நிமிடம், இன்றைய கர்ணன்.. வாழும் வள்ளல்.. புரட்சித்தலைவி அம்மா, தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரி வழங்குவது சரியான டைமிங் டாக்குமென்ட்டரி. 'முடியலைப்பா' என ஆடியன்ஸ் அலறிய பின்னும் நெஞ்சில் ஈவிரக்கமின்றி ஆப்பரேட்டர் முழுவதையும் ஓட்டி முடித்த பின்னரே படத்தை போட்டார்.
சிவாஜி அறிமுகத்திற்கு கைதட்டல், காதல் காட்சிகளுக்கு விசில், என கொண்டாட்டமான ஆடியன்ஸ். பெரும்பாலும் இளைஞர்கள். வயது முதிர்ந்தவர்கள் அமைதியாக ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்கள். என் அம்மா உட்பட. முதல் பாதியை விட இரண்டாம் பாதி வெகு வேகமாக செல்கிறது. அதிலும் கண்ணனாக என்.டி.ஆர் அறிமுகமாவது முதல் படம் கலாட்டாதான்.
முழுமையாக டிஜிட்டல்மயமாக்கப்படாவிட்டாலும், பல காட்சிகளை பளிச்சென்று பூஸ்ட் அப் செய்திருக்கிறார்கள். இயன்ற இடங்களில் எல்லாம் பின்னணி இசை மிருதுவாக டிஜிட்டலில் ஒலிக்கிறது. நினைத்தால் முழுவதுமாக டிஜிட்டலைஸ் செய்ய முடியும் என்றாலும், வரவேற்பு எப்படியிருக்கும் என தெரியாத நிலையில் இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக செய்துபார்த்திருக்கலாம். மொக்கைப்படங்களாய் வெளியிட்டு விட்டு திரைத்துறை செத்துக்கொண்டிருக்கிறது என புலம்புவதற்கு பதிலாக இதுபோல பழைய படங்களை செப்பணிட்டு திரையிடுவதே மேல்! தற்போது இம்முயற்சிக்கு கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பின் மூலம் அடுத்தடுத்து பெரும் முதலீட்டில் முழுமையான டிஜிட்டல் பிரிண்டுகளில் பழைய படங்களை எதிர்பார்க்கலாம்.
"சின்ன வயசுல பார்த்தது.. ம் ம்.." என படம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அம்மா சொன்னார். அவரது அந்த "ம்ம்.." எனக்கு சொல்ல முடியாத மனநிறைவை தந்தது.
Monday, March 5, 2012
இந்த புத்தகத்திற்கு விமர்சனம் தேவையில்லை
1975 தொடங்கி 2007 வரையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ஹைலைட்ஸை விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே பார்த்தால் எப்படி இருக்கும். சதீஷ் கிருஷ்ணமூர்த்தி எழுதியுள்ள 'உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு' புத்தகம் அவ்வாறான இனிமையான அனுபவமாக இருக்கிறது.
இந்த புத்தகத்திற்கு விமர்சனம் தேவையில்லை. புத்தகத்திலிருந்து சில மேற்கோள்களை மட்டும் காட்டியுள்ளேன். நீங்களே படித்து பாருங்கள். கிரிக்கெட் ஆர்வலராய் இருந்தால் உடனே வாங்கிவிடுவீர்கள்.
174 பந்துகள் ஆடிய கவாஸ்கர் அடித்த ரன்கள் 36 மட்டுமே. ரன் எடுக்க வேண்டும் என்ற பிரக்ஞையே இல்லாமல் நின்ற இடத்திலேயே சிலை போல் நின்று ஆடி, போட்டி முடிவதற்குள் கவாஸ்கர் கால்களை கரையான் அரிக்கத் தொடங்கிவிட்டது போங்கள்.
....
அந்தக் காலத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சென்று எந்தத் தென்னை மரத்தை ஆட்டினாலும் ஒரு நான்கைந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மேலிருந்து விழுவார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
....
இங்கிலாந்தில் இந்திய அணி சென்று இறங்கிய போது ஒருவரும் அவர்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. ஏர்போர்ட்டுக்கு வண்டியை அனுப்பியதே பெரிய விஷயம்தான்.
....
அரவிந்த டிசில்வா சந்தித்த முதல் பந்திலிருந்து அடித்த அடியில் இந்திய அணியினர் திக்குத் தெரியாமல் ஓடினர். 'நாலு பவுண்டரி ஒரு ரூபா' என்று கூவிக்கூவி அடித்தார்.
....
அபூர்வ சகோதரர்கள் மார்க் வாவ் - ஸ்டீவ் வா இருவரும் தமிழ் படங்களில் க்ளைமாக்ஸில் பிரிந்திருந்த சகோதரர்கள் ஒன்று சேர்ந்து வில்லனில் ஆட்களை அடித்து நொறுக்குவது போல நியூசிலாந்து பவுலர்களை போட்டுச் சாத்தினர்.
....
ஒன்றல்ல, இரண்டல்ல, 979 வைட் பால்கள் போடப்பட்டன. இத்தனை வைடையும் பறவை போல் கையை விரித்து, காட்டிக் காட்டிக் கோப்பை முடிவதற்குள் அம்பயர்களுக்கு பறக்கும் சக்தியே வந்துவிட்டது போங்கள்.
....
ரமேஷ் அவுட் ஆக, உள்ளே நுழைந்தார் 'இலக்கணப் புகழ் ராகுல் டிராவிட். 'யாமிருக்க பயமேன்' என்பது போன்ற ஆட்டம் அன்று அவருடையது. 'என்னை அவுட் ஆக்க வேண்டுமென்றால் ஒரு நான்கைந்து பவுலர்கள் சேர்ந்து போட்டால்தான் உண்டு' என்பதைப் போன்ற இலக்கணப் பிழையில்லாத அப்பழுக்கற்ற ஆட்டம்.
....
அடுத்த ஆட்டம் ஆஸ்திரேலியாவுடன். ஒருநாள் போட்டியாக தொடங்கிய ஆட்டம் இந்திய பேட்ஸ்மேன்களின் கேடுகெட்ட ஆட்டத்தால் அரை தினப் போட்டியாக ஆனது.
....
சேவாக் ஏதோ தன் பங்குக்கு நின்று 81 பந்துகளில் 82 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆக, மற்ற அனைவரும் 'எங்களுக்கு எதுவுமே தெரியாது, எங்களை தயவு செய்து விட்டு விடுங்கள்' என்று சரண்டர் ஆக 40வது ஓவரிலேயே 234 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய ஆல் அவுட்.
எட்டாவது உலகக் கோப்பை நமக்கு எட்டாத உலகக் கோப்பையானது!
....
மைதானத்துக்குள் ட்ரம், ட்ரம்பெட் எல்லாம் எடுத்துக்கொண்டு போக தடை விதிக்கப்பட்டது. அத்தோடு மைதானங்களில் இருந்த கடைகளில் சேல்ஸ் நன்றாக இருப்பதற்காக ரசிகர்கள் தாங்களே வெளியேயிருந்து சரக்கை உள்ளே எடுத்துப் போகக் கூடாது என்று ஒரு நிபந்தனை வேறு. மேற்கிந்திய ரசிகர்கள் மூச்சு விடாமல் வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் இருப்பார்கள். சரக்கில்லாமல் அவர்களுக்கு இருப்புக் கொள்ளாது.
'யோவ், ட்ரம் எடுத்துண்டு போகக் கூடாதுங்கற சரி, ரம் எடுத்துண்டு போகக் கூடாதுன்னா அந்த மேட்சை நீயே உட்கார்ந்து பாரு' என்று பலரும் டி.வி.யும் சைட் டிஷ்ஷுமாக வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்கள்.
....
இந்தியாவின் அடுத்த போட்டி பெர்முடாவுடன். மொத்தமே 66,000 மட்டுமே ஜனத்தொகை கொண்ட அநியாயத்துக்கு சிறிய நாடு அது. என்ன, அந்நாடு நம் சென்னை சிதம்பரம் ஸ்டேடியம் சைஸ்தான் இருக்கும் போலிருக்கிறது.
....
உலகக்கோப்பை நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளதால், 2011 போட்டிகள் குறித்து இப்புத்தகத்தில் இல்லை. அதையும் சேர்த்து ஒரு அப்டேட்டட் வெர்ஷனை வெளியிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
நல்ல தகவல்களை நகைச்சுவை நடையில் படைத்து அசத்தி இருக்கும் ஆசிரியர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!
உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாறு
விலை : ரூ.50
ஆசிரியர் : சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
கிழக்கு பதிப்பகம்
___________________________________
எனது பிற புத்தக விமர்சனங்கள்/அறிமுகங்கள் :
http://www.valaimanai.blogspot.in/p/blog-page_10.html

Monday, February 13, 2012
வலைமனை | ஃபீலிங்ஸ் 13 02 12
இது கடந்த வாரம் வியாழன் அன்று சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை அருகே என் மொபைலில் எடுத்த படம். பத்து மணியை தாண்டியும் தெரு விளக்குகள் பளிச்சென எரிந்து கொண்டிருந்தன. தவறு செய்வது மனித இயல்புதான் என்றாலும், தினசரி மின்வெட்டை மட்டும் வினாடி சுத்தமாக நிறுத்தும் அளவிற்கு கடமை உணர்ச்சியோ தொழில்நுட்ப புரட்சியோ உடைய மின்சார வாரியத்தினர், தேவையில்லாமல் மின்சாரம் பாழாகும் இதுபோன்ற நிலைகளையும் கொஞ்சம் கவனிக்கலாம்.
கொலைவெறி ஹிட் கொடுத்த தனுஷ்ஷின் கலைவெறி தாகத்திற்கு பூஸ்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்பதே ரிப்போர்ட். கொலைவெறிக்கு டிவிட்டரில் கிடைத்த பாசிட்டிவ்வான வரவேற்பு அதை அகில உலக ஹிட் ஆக்கிய நிலையில் பூஸ்ட் தயாரிக்க, தனுஷ் வெளியிட்ட சச்சின் ஆந்தமுக்கு அதே டிவிட்டரில் நெகடிவ் ரெஸ்பான்ஸே அதிகம் இருந்தது.
எனக்கென்ன இந்தப் பாட்டில் கோபம் என்றால், கட்டம் போட்ட சட்டை, கழுத்துல டாலர் எல்லாம் மாட்டிவிட்டு அழகான அனுஷ்காவை மொக்கை பண்ணதுதான். நீங்களே பாருங்க.. டக்குனு பார்த்தா அனுஷ்காவும் தனுஷ் மாதிரியே இல்ல?
வாழ்க்கையிலேயே முதல்முறையாக சன் டி.வியை ம்யூட் பண்ணி பார்க்க வேண்டியதான நிலைமையை நமது நட்சத்திர கிரிக்கெட் தந்தது. நொய்யான் நொய்யான் என்ற நிறுத்தாத பேச்சு, அதிகப்படியான ஆங்கில கிரிக்கெட் பதங்களினால் போட்டியை ரசிக்க முடியவில்லை. மற்றபடி இது ஒரு நல்ல பொழுதுபோக்கு ஐடியா.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களிலேயே நமது அருமை அண்ணன் சரத்குமார்தான் சிறப்பாக செயல்படுகிறார் என நினைக்கிறேன். இரண்டு வருடங்களாக தமிழர்களுக்காக போராடி நட்சத்திர கிரிக்கெட்டில் கோப்பை வாங்கி தந்திருக்கிறார். இன்னும் 3 வருஷமும் நல்லா வெளையாடுங்கண்ணே...
நன்றாக இருக்கிறதே என நண்பன் படத்திற்கு குடும்பத்தோடு கூட்டிச்சென்றால் திரும்பி வந்து அம்மா, அக்கா எல்லோரும் காய்ச்சி எடுத்துவிட்டார்கள். பிரசவ காட்சியில் கும்பலா நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க.. இப்படியா அசிங்கமா படம் எடுப்பாங்க என்பது உள்ளிட்ட கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த விஷயத்தையெல்லாம் மகளிர் சங்கங்கள் கூட எதிர்க்கலையே என உள்ளுக்குள் வியந்து கொண்டேன். ஒருவேளை இதனால்தானோ என்னவோ மற்ற ஷங்கர் படங்களையெல்லாம் விட வெகு சீக்கிரமாக நண்பனுக்கு பொதுமக்களிடையே மவுத் டாக் குறைந்துவிட்டது?
Wednesday, January 25, 2012
வலைமனை | ஃபீலிங்ஸ் 25 01 12
யுடான்ஸ் திரட்டியில் 'இந்த வார நட்சத்திரம்' ஆக்கியிருக்கிறார்கள். யுடான்ஸ் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இந்த வருடம் என் நட்சத்திர பலன்கள் நன்றாக இருப்பதாக அப்பா சொன்னார். உண்மைதான் போலிருக்கிறது.
_______________________________________________
இந்த புத்தக கண்காட்சி எனக்கு ஸ்பெஷலாகவே இருந்தது. நான் அட்டைப் படங்கள் வடிவமைத்து வெளியான அழிக்கப்பிறந்தவன், தெர்மாக்கோல் தேவதைகள், நான் கெட்டவன் ஆகிய புத்தகங்களை ஸ்டால்களில் பார்க்கவும் அதை மக்கள் வாங்கிச்செல்வதை காண்கையிலும் பேரானந்தமாய் இருந்தது.
நான் வடிவமைத்த மற்ற டிசைன்களை பார்க்க :
http://valaimanai.blogspot.com/p/blog-page_31.html
(வௌம்பரம்ம்ம்..)
_______________________________________________
என்னடா, கிராபிக் டிசைனர்னு சொல்லிக்கிற ஒரு மாடு வரைய தெரியாதா?" என அம்மா உசுப்பேத்தி விட, நான்கு வருடங்களுக்கு முன்னிருந்து ரொம்பவும் பிராக்டிஸ் செய்து பேப்பரில் வரைந்து வரைந்து பார்த்து மாட்டு பொங்கலுக்கு கிட்டத்தட்ட மாடு மாதிரி ஒன்றை கோலமிட்டு வருகிறேன். சில சமயம் கழுதை, குதிரைகள் என நமக்குள் இருக்கும் எதிர்பாராத திறமைகள் வெளிப்படும். அதையெல்லாம் பார்த்து பெருமைப்பட்டு ஃபீல் பண்ணாமல் அம்மா அதை அப்படியே தண்ணீர் விட்டு அழித்து என்னிடம் இருந்து 'கிட்டத்தட்ட மாடு மாதிரி' ஒன்று வரும் வரை விட மாட்டார்.
அப்படி சில வருடங்கள் முன்பு ஓரு மாட்டு பொங்கலுக்கு நான் வரைந்த 'மாடு மாதிரி' ஒன்றினை ஒரு நாய் அருகே அமர்ந்து நெடு நேரம் பார்த்துக்கொண்டே இருந்தது. அது கடுப்போடு வெறிக்கிறதா, இல்லை ரசிக்கிறதா என கடைசி வரை கண்டுபிடிக்க முடியாமல் போனதுதான் காலத்தின் கோலம்
_____________________________________
கடந்த வாரம் ஆனந்த விகடனில் வந்த எனது ட்வீட் :
ஆனந்த விகடனில் வராத எனது ட்வீட்ஸ் :
தெய்வத்திருமகள் ஆங்கில பட காப்பி என கிண்டலடித்தது தவறுதான். அதற்காக ராஜபாட்டை போன்ற ஒரிஜினல் சரக்கு டூ மச்சான தண்டனை சாமி..
யூத்தாய் டிஷர்ட்டில் கிளம்புகையில், "பனி உங்களுக்கு ஆகாது, குல்லா மாட்டிட்டு போங்க" என மனைவி சொல்லும் வேளையில் துவங்குகிறது வயோதிகம்.
2008ல் பீமா 2012ல் வேட்டை என்கிற லிங்குசாமியின் விளம்பரத்தை பார்க்கும்பொழுது வடக்குப்பட்டி ராமசாமி காமெடிதான் நினைவிற்கு வருகிறது.
குஸ்காவில் பீஸ் தென்படும் அளவிற்கு கூட வெங்காய பச்சடியில் தயிர் தென்படுவதில்லை # சென்னை ஃபாஸ்ட்புட்ஸ்
பாமகவுக்கே ஓட்டு என குலதெய்வம் மீது சத்தியம் வாங்கி உறுப்பினர்களை சேருங்கள்-ராமதாஸ் # நீங்க மருத்துவர் ஐயாவா, இல்ல மேல் மருவத்தூர் ஐயாவா?
டிவிட்டரில் என்னை பாலோ செய்ய : https://twitter.com/#!/sukumarswamin
(அதெல்லாம் முடியாது போய்யா என்பவர்கள் ஃபேஸ்புக்கில் கூட பாலோ செய்யலாம் )
Thursday, January 19, 2012
Friday, January 13, 2012
நண்பன் இஸ் வெல்
காதல், கதையின் மையக்கருவாக இல்லாத படங்கள் தமிழில் குறைவு. அதிலும் ஃபீல் குட் வகை படங்கள் என்றால் விரல் விட்டு எண்ணிவிடலாம். புத்தகங்கள் படிக்கும் பழக்கம் குறைந்து காட்சி ஊடகங்களில் நேரத்தை அதிகம் செலவிடும் காலகட்டத்தில் ஒரு சினிமா, அதுவும் ஒரு தமிழ் சினிமாவில் மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒவ்வொரு படத்திலும் எப்படி ஒரு குற்றத்தை கிரியேட்டிவ்வாக புதிய முறையில் செய்யலாம் என்பதையே நாம் கற்க முடியும்.
ஒரு ஹீரோ, ரெண்டு ஹீரோயின், வில்லன் அப்புறம் கிளைமாக்ஸ் இடையிடையே பாடல்கள் என்கிற உருப்படாத திரை இலக்கணத்தை மீறி தமிழில் படங்கள் வருவது அரிது. அதிலும் அப்படம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஹிட் ஆவது அதனினும் அரிது.
இவ்வாறான நிலையில் வெற்று இலக்கணங்களை உடைத்து புதிய பரிமாணத்தில் ஒரு படத்தை கொடுக்க முதன்முறையாக ஷங்கரும், மாஸ் ஹீரோவான விஜய்யும் முன்வந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்காலத்திற்கு ரொம்பவும் நல்லது.
தற்போதைய கல்வி கற்பிக்கப்படும் முறை குறித்தும் அது மாணவர்களின் பால் உண்டாக்கும் தாக்கத்தையும், இதற்கான மாற்று வழிகளையும் மையமாக வைத்து இன்னபிற பொழுபோக்கு சமாச்சாரங்களை சேர்த்துக்கொண்டு ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ், கெட்ட ஹிட் ஆகி பட்டையை கிளப்பிய படம். இன்று சீனாவில் கூட பல கல்லூரிகள் 3 இடியட்ஸ் படத்தை பார்க்குமாறு மாணவர்களுக்கு பரிந்துரைக்கின்றன என்றால் அக்கதையின் வலு குறித்து அறிந்துக்கொள்ளலாம்.
அப்படியாகப்பட்ட டபுள் ஸ்டராங் கருத்துள்ள, படு சுவாரஸ்யமான நடையில் செல்லும் மெகா ஹிட்டான படத்தை தமிழில் எடுக்க வேண்டும் என நினைத்ததற்கே ஷங்கர் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ் பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்.
தமிழக மக்கள் தொகையில் 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் சொற்ப சதவிகதத்திலேயே இருப்பார்கள் என்பதால், ஷங்கர் எடுப்பதன் மூலமும், விஜய் நடிப்பதன் மூலமும் படத்தின் அற்புதமான கருத்துக்கள் பெரும்பாலான தமிழ் மக்களுக்கு போய் சேரப் போகிறது குறித்து மகிழ்ச்சியே.
ஆகவே குரங்கை நினைக்காமல் மாத்திரையை சாப்பிட வேண்டும் என்கிற கதையைப் போல் ஏற்கனவே 3 இடியட்ஸ் பார்த்தவர்கள் அமீர் - விஜய், சத்யராஜ் - இரானி, மாதவன் - ஸ்ரீகாந்த் என ஒப்பீட்டு பார்வை இல்லாமல் பார்க்க முடிந்தால் நண்பனை ரசிக்கலாம். 3 இடியட்ஸ் பார்க்காதவர்களுக்கு அந்தப் பிரச்சினை கூட இல்லை. இந்த படம் சுவையாகவும், நல்ல பல விஷயங்களை அறியத்தரும் புத்தகமாகவும் இருக்கும். இடையிடையே இலியான இடுப்பை ரசித்துக்கொள்ளும் வசதியும் உண்டு.
| முதல் நாள் காட்சி - சென்னை ஏ.ஜி.எஸ் திரையரங்கம். |
■ காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக சமயங்களில் விஜய்யை இவ்வளவு க்யூட்டாக அமைதியாக பார்த்ததாக ஞாபகம். அப்பாடா.... ஷங்கர் யாருடனாவது இணைந்தால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றவாறு சம்மந்தப்பட்ட நடிகரை வைத்து பிரமிப்பினை படத்தில் காட்டுவார். பல வருடங்கள் கழித்து அமைதியாக வரும் விஜய்யை பார்த்து நண்பனிலும் அதே பிரமிப்பு நமக்கு ஏற்படுகிறது.
ஒரு ஸ்டூடன்ட்டாக மட்டும் விஜய் கொஞ்சம் இடறுகிறார். டொக்கோமா விளம்பரத்தில் கூட செம யூத்தாக இருந்தாரே...? எது எப்படியோ... விஜய் இதுபோன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தால், தமிழ்நாட்டில் எஸ்.எம்.எஸ் ஜோக்குகளே அழிந்து விடும் ஆபத்தும் உள்ளது.
■ இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தான் காத்திருந்தேன் என்பது போல படத்தில் வெறித்தனமாக விளாசி இருப்பவர் சத்யன் ஒருவர் மட்டுமே. படத்தை தூக்கி நிறுத்துகிறார். சத்யராஜும் தன் பங்கிற்கு சிறப்பாகவே செய்திருக்கிறார்.
■ மாணவ தோற்றத்திற்கு மூவரில் சூப்பராக ஃபிட் ஆகிறவர் ஜீவா மட்டுமே. அனுபவித்து நடித்திருக்கிறார் மனிதர். ஸ்ரீகாந்திற்கு இது டூ ஆர் டை மேட்ச் மாதிரி. திரையுலகில் அவரது இரண்டாம் இன்னிங்ஸ் இந்த படத்தையே நம்பி உள்ளதால், கிடைத்த பந்துகளில் சிக்ஸர் அடிக்காவிட்டாலும் சொதப்பாமல் இயன்ற அளவு சிறப்பாகவே செய்திருக்கிறார்.
■ நடிப்புக்கு ஆள் எடுங்கன்னா, இடுப்புக்கு ஆள் எடுத்த வகையில் இலியானாவும் இருக்கிறார். பாவம் நெஞ்செலும்புகள் தெரிகிறது. சிவாஜியில் ஸ்ரேயாவை பார்த்துவிட்டு இப்படி ஒரு ஷங்கர் ஹீரோயினை மனசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. அவரது அக்காவாக வந்த அனுஹ்யாவே அவரை விட எனக்கு அழகாகத்தான் தெரிந்தார். சரி ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ் லூஸ்ல விடுங்க.
உலக அளவில் மெகா ஹிட் ஆன (சன் டிவியில அப்படித்தான் சொல்றாங்க) எந்திரன் படத்திற்கு பின்னர் ஷங்கர் ஒரு ரீமேக் படம் செய்திருக்கிறார். அதுவும் கொஞ்சம் கூட மாற்றாமல் அதே கதை, அதே திரைக்கதை, அதே காட்சியமைப்புகள். தன்னை பாதித்த ஒரு பாசிட்டிவ், ஃபீல் குட் படத்தை தமிழக மக்கள் அனைவருக்கும் அறியத் தர வேண்டும் என தனது அத்தனை இமேஜுகளையும் மறந்து விட்டு நண்பன் தந்திருக்கும் இயக்குனர் ஷங்கரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நண்பன் - ஒரு நல்ல புத்தகம்!
Nanban Movie Review by blogger Sukumar Swaminathan
Valaimanai
நண்பன் - ஒரு நல்ல புத்தகம்!
Nanban Movie Review by blogger Sukumar Swaminathan
Valaimanai
Friday, January 6, 2012
Thursday, January 5, 2012
கேபிள் சங்கர், யுவகிருஷ்ணா புத்தக வெளியீடு புகைப்படங்கள்
இன்று மாலை உ பதிப்பகத்தின் மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. சங்கர் நாராயண் எழுதிய தெர்மக்கோல் தேவதைகள், யுவகிருஷ்ணா எழுதிய அழிக்கப்பிறந்தவன் மற்றும் பதிப்பாளர் என்.உலகநாதன் எழுதிய நான் கெட்டவன் ஆகிய இந்த புத்தகங்களுக்கான முகப்பு அட்டைகளை நான் வடிவமைத்து இருந்ததனால் எனக்கு கூடுதல் மகிழ்வான விழாவாக இருந்தது. விழாவில் நான் எடுத்த புகைப்படங்களை தொகுத்திருக்கிறேன். மொபைலில் எடுத்தவை ஆதலால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளவும்.
பி.கு. : சில முக்கியமான புகைப்படங்களை தனியே எடுத்து வைத்துள்ளேன். அனேகமாய் அவைகளை வைத்து நாளை போட்டோ கமெண்ட்ஸ் வெளியிட உத்தேசித்துள்ளேன்.
Subscribe to:
Posts (Atom)