Monday, February 13, 2012

வலைமனை | ஃபீலிங்ஸ் 13 02 12





து கடந்த வாரம் வியாழன் அன்று சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை அருகே என் மொபைலில் எடுத்த படம். பத்து மணியை தாண்டியும் தெரு விளக்குகள் பளிச்சென எரிந்து கொண்டிருந்தன.  தவறு செய்வது மனித இயல்புதான் என்றாலும், தினசரி மின்வெட்டை மட்டும் வினாடி சுத்தமாக நிறுத்தும் அளவிற்கு கடமை உணர்ச்சியோ தொழில்நுட்ப புரட்சியோ உடைய மின்சார வாரியத்தினர், தேவையில்லாமல் மின்சாரம் பாழாகும் இதுபோன்ற நிலைகளையும் கொஞ்சம் கவனிக்கலாம்.


கொலைவெறி ஹிட் கொடுத்த தனுஷ்ஷின் கலைவெறி தாகத்திற்கு பூஸ்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்?  ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்பதே ரிப்போர்ட். கொலைவெறிக்கு டிவிட்டரில் கிடைத்த பாசிட்டிவ்வான வரவேற்பு அதை அகில உலக ஹிட் ஆக்கிய நிலையில் பூஸ்ட் தயாரிக்க, தனுஷ் வெளியிட்ட சச்சின் ஆந்தமுக்கு அதே டிவிட்டரில் நெகடிவ் ரெஸ்பான்ஸே அதிகம் இருந்தது. 


எனக்கென்ன இந்தப் பாட்டில் கோபம் என்றால்,  கட்டம் போட்ட சட்டை, கழுத்துல டாலர் எல்லாம் மாட்டிவிட்டு அழகான அனுஷ்காவை மொக்கை பண்ணதுதான். நீங்களே பாருங்க.. டக்குனு பார்த்தா அனுஷ்காவும் தனுஷ் மாதிரியே இல்ல?


வாழ்க்கையிலேயே முதல்முறையாக சன் டி.வியை ம்யூட் பண்ணி பார்க்க வேண்டியதான நிலைமையை நமது நட்சத்திர கிரிக்கெட் தந்தது. நொய்யான் நொய்யான் என்ற நிறுத்தாத பேச்சு, அதிகப்படியான ஆங்கில கிரிக்கெட் பதங்களினால் போட்டியை ரசிக்க முடியவில்லை. மற்றபடி இது ஒரு நல்ல பொழுதுபோக்கு ஐடியா. 

தமிழக சட்டமன்ற உறுப்பினர்களிலேயே நமது அருமை அண்ணன் சரத்குமார்தான் சிறப்பாக செயல்படுகிறார் என நினைக்கிறேன். இரண்டு வருடங்களாக தமிழர்களுக்காக போராடி நட்சத்திர கிரிக்கெட்டில் கோப்பை வாங்கி தந்திருக்கிறார். இன்னும் 3 வருஷமும் நல்லா வெளையாடுங்கண்ணே...

ன்றாக இருக்கிறதே என நண்பன் படத்திற்கு குடும்பத்தோடு கூட்டிச்சென்றால் திரும்பி வந்து அம்மா, அக்கா எல்லோரும் காய்ச்சி எடுத்துவிட்டார்கள். பிரசவ காட்சியில் கும்பலா நின்னு வேடிக்கை பார்க்கிறாங்க.. இப்படியா அசிங்கமா படம் எடுப்பாங்க என்பது உள்ளிட்ட கடும் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இந்த விஷயத்தையெல்லாம் மகளிர் சங்கங்கள் கூட எதிர்க்கலையே என உள்ளுக்குள் வியந்து கொண்டேன். ஒருவேளை இதனால்தானோ என்னவோ மற்ற ஷங்கர் படங்களையெல்லாம் விட வெகு சீக்கிரமாக நண்பனுக்கு பொதுமக்களிடையே மவுத் டாக் குறைந்துவிட்டது? 



1 comment:

Prabu Krishna said...

கமெண்ட்களும் மேட்டர்க்கு ஏத்தபடியே

1. நம்ம மின்சார வாரியத்துக்கு கடமை,கண்ணியம், கட்டுப்பாடு எல்லாமே மக்களுக்கு மின்சாரம் புடுங்குவதே. மற்றபடி அரசியல்வாதிகள் திருடுவது, இது போன்ற விசயங்கள் கண்ணுக்கு படாது.

2. What-u u meanu-u? paattu-u nallu-u illaiyaa-u

3. அப்படியே நம்ம ஆளுங்க ஒழுங்கான படத்துல நடிச்சா தேவல, நமத்து போன வெடி, மொக்கை வேட்டை, வந்தான் நொந்தான் இப்படி இல்லாம

சரத் - ஹி ஹி ஹி


4. இதில் என்ன தவறு இருக்கிறது? கண்டதையும் காட்டும் போது பிரசவம் பார்ப்பதை காட்டுவதை காட்டுவதில் தவறில்லை.