Thursday, April 12, 2012

என் விகடனில் வலைமனை




இந்த வார ஆனந்த விகடன் இணைப்பான என் விகடன் சென்னை பதிப்பு வலையோசையில் வலைமனை குறித்த அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் எழுதிய இரண்டு பதிவுகளுடன், எனது ட்வீட்ஸும் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது. 


ரெண்டு பக்கம் விகடனில், அதுவும் பிறந்த ஊர், படித்த கல்லூரியின் அடையாளங்களுடன்.  தீபாவளி ராக்கெட்டின் திரியைக்கொளுத்தினாற் போல் மனது பறந்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆஸ்கார்களை வாங்கி கொண்டு ஏ.ஆர் எல்லாம் எப்படித்தான் கம்மென்று இருந்தாரோ... மேன் மக்கள் மேன்மக்களே...!



விதையில் ஒளிந்திருக்கும் செடியை தண்ணீரும், ஒளியும் மேலெழ செய்வது போல ஊக்கம் தந்து வலைமனையை உயிர்ப்போடு வைத்திருக்கும் இணையம் மற்றும் இணையம் சாராத அனைத்து நண்பர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மற்றும் பதிவர்களை ஊக்கப்படுத்தும் விகடன் குழுமத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.  




Wednesday, April 11, 2012

நாக்கை கடித்த ஷேவாக் - வார்னிங் கொடுத்த தோனி | வலைமனை போட்டூன்ஸ்


அனைத்து கற்பனையே .. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல..  (படங்கள் | நன்றி : பி.சி.சி. ஐ)










Thursday, April 5, 2012

ஐ.பி.எல் கொசுவர்த்தி | வலைமனை



2009ல் வலைமனையில் பதிவெழுத ஆரம்பித்த வேளையில் ஒன்றிரண்டு பதிவுகள் எழுதி போஸ்ட் செய்து நானே படித்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பேன். இப்படியாய் பதிவுலக வாழ்க்கை நிம்மதியாய் போய்கொண்டிருந்த நிலையில் திடீரென ஒருநாள் நான் ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸை போட, அது வரை ஹிட் மீட்டரில் சிங்கிள் டிஜிட் மட்டுமே பழகியிருந்த எனக்கு நூறு, ஆயிரங்கள் முதல்முறையாக பரிச்சயம் ஆனது. பின்னர் ஐ.பி.எல் சீசன்களில் அடிக்கடி போட்டோ கமெண்ட்ஸ் போட ஆரம்பித்தேன். மெயில்களில் போட்டோ கமெண்ட்ஸ் சுற்றி வருவது குறித்து பழக்கப்பட்ட நண்பர்கள் கூறும்பொழுதெல்லாம் உற்சாகமாக இருக்கும். இப்பொழுதும் கூட சில சமயம் பேஸ்புக்கில் ஏதோ ஒரு சங்கத்தில் நூற்றுக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டிருக்கும் வலைமனை போட்டோ கமெண்ட்டை பார்க்கும் பொழுது எனக்கே செம காமெடியாக இருக்கிறது. 

ம் ம்.. இதான் சிம்பிளான கொசுவர்த்தி பிளாஷ்பேக்.. இப்போ கடந்த வருடங்களில் நான் பதிவிட்ட ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸ்களில் சிலவற்றை கொசுவர்த்தி சுற்றி காட்டப்போகிறேன். விரைவில் நடப்பு ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸையும் எதிர்பார்க்கலாம். இணைய நண்பர்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் என்றென்றும் எனது நன்றிகள்.































































































Wednesday, April 4, 2012

ஃபேஸ்புக் தோழியும் பொய் சொன்ன நண்பனும்





து மாதிரி ஃபேஸ்புக் என்று ஒன்று வந்து தொலைக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் பத்தாம் வகுப்பு டியூஷனில் உடன் படித்த தனலட்சுமி, கவிதாக்களின் அப்பா பெயரையும் கேட்டு தெரிந்து வைத்திருப்பேன்.  இப்போழுது தனலட்சுமி என தேடினால் ஆயிரக்கணக்கில் தனலட்சுமிகள் ஃபேஸ்புக்கில் லைன் கட்டுகிறார்கள். நாய்குட்டி பொம்மையும், குட்டி பெண் பாப்பா போட்டோக்களும் புரொஃபைல் பிக்சராய் வைக்கப்பட்டு அதன் பின் மறைந்திருக்கும்  தனலட்சுமிக்களில் நம் தனலட்சுமியை எப்படி கண்டுபிடிப்பது என நினைக்கும்பொழுது அழுகையே வந்துவிடுகிறது.


ஆனால், நாம்தான் இவ்வளவு ஃபீல் செய்கிறோம், இதே நேரம் அந்த தனலட்சுமி நம்மை சுத்தமாக மறந்த நிலையில் செரலாக்கை கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்கு பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டிருக்கும் என நினைக்கும்பொழுது வந்த அழுகை கூட நின்னுடுது.


---


ங்கமணி கிச்சனில் கிரைண்டருடன் சண்டை போட்டபடி மாவும் கையுமாக இருந்த சுபமாலை வேளையில், குழந்தையை மடியில் வைத்தபடியே இணையத்தை மேய்ந்துக்கொண்டிருந்தேன். "ம்மே" மட்டுமே சொல்லக்கூடிய, எவ்வளவு கேட்டாலும் அப்பாவோ, தாத்தாவோ இன்னபிற வார்த்தைகளோ வாயில் வராத பத்து மாத அப்பாவிக்குழந்தை. 


மேய்ச்சல் போக்கில் பேஸ்புக்கில் புதிதாய் ஆட் ஆன தோழியின் புரொபைலை கிளிக் செய்தேன். அவ்வளவுதான்... சரஸ்வதி சபதத்தில் அருள் வந்து திடீரென பேசும் சிவாஜி மாதிரி, அந்த தோழியின் புகைப்படத்தை பார்த்ததும் மடியில் இருந்த குழந்தை "க்கா... அக்கா" என ஹை டெசிபலில் அபாய ஒலியெழுப்ப,  கிச்சனில் இருந்து ஆச்சரியமாக தங்கமணி படாரென எட்டிப்பார்க்க, மடியில் குழந்தை அங்குமிங்கும் மீன் போல துடித்ததால் சட்டென விண்டோவை குளோஸ் செய்ய முடியாமல் எல்லாம் சுபமாய் முடிந்தது. 


இன்னும் நமக்கெதிராய் செயல்பட குழந்தைக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்படுகிறதோ என நினைத்தாலே கலக்கமாய் இருக்கிறது.
---


மீபத்தில் திருமணமான உயிர் நண்பன், படத்துக்கு கூப்பிட்டாக் கூட ரொம்ப நல்லவன் மாதிரியே பேசுனான். இடையில இடையில அவன் மனைவியோட சிரிப்புக்குரல் வேற கேட்டுச்சு. ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போடுறானேனு, டவுட்டோட, 


"ஏன்டா ஸ்பீக்கர் போட்டு பேசுறியாடா?"னு கேட்டேன். 

"இல்லையே"ன்னான். 

"ம்.. சரி சரி..  அப்புறம் மச்சி.. பழைய ஃபிகர் சுப்ரபா கூட இன்னும் கான்டாக்ட் இருக்காடா?"ன்னு ஒருவார்த்தைதான் கேட்டேன்.

அப்ப கட் ஆன கால்தான். 

# பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு