Showing posts with label இசை விமர்சனம். Show all posts
Showing posts with label இசை விமர்சனம். Show all posts
Tuesday, March 20, 2012
வள்ளல்கள் கர்ணனும் இன்றைய புரட்சித்தலைவியும்
"உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது..." என டி.டி.எஸ் ஒலி பின்னணியில் பாடிக்கொண்டே வரும் என்.டி.ஆர்.. டிஜிட்டல் ரீஸ்டோரேஷன் முறையில் பூஸ்ட் அப் செய்யப்பட்ட காட்சியில் சரிந்து கிடக்கும் சிவாஜி.. சுமார் 40 வருட பழமை வாய்ந்த திரைக்காவியத்தை மெருகேற்றப்பட்ட நிலையில் திரையில் காணவும் ஒரு பாக்கியம் வேண்டும்.
என் அம்மா தீவிர சிவாஜி ரசிகை. அதிலும் கர்ணண் படம் குறித்து பல முறை சிலாகித்திருக்கிறார். கர்ணண் டிஜிட்டல் மேருகேற்றல் என்கிற விளம்பரம் பார்த்து கடந்த ஞாயிறு இரவுக்காட்சிக்கு ஏ.வி.எம் ராஜேஸ்வரி திரையரங்கிற்கு அழைத்து சென்றேன். படம் துவங்கிய சில நிமிடங்களுக்கெல்லாம் ஹவுஸ்புல்லாகி விட்டது.
படம் ஆரம்பிக்கும் முன்னர் 10 நிமிடம், இன்றைய கர்ணன்.. வாழும் வள்ளல்.. புரட்சித்தலைவி அம்மா, தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரி வழங்குவது சரியான டைமிங் டாக்குமென்ட்டரி. 'முடியலைப்பா' என ஆடியன்ஸ் அலறிய பின்னும் நெஞ்சில் ஈவிரக்கமின்றி ஆப்பரேட்டர் முழுவதையும் ஓட்டி முடித்த பின்னரே படத்தை போட்டார்.
சிவாஜி அறிமுகத்திற்கு கைதட்டல், காதல் காட்சிகளுக்கு விசில், என கொண்டாட்டமான ஆடியன்ஸ். பெரும்பாலும் இளைஞர்கள். வயது முதிர்ந்தவர்கள் அமைதியாக ஆனந்தமாக ரசித்துக்கொண்டிருந்தார்கள். என் அம்மா உட்பட. முதல் பாதியை விட இரண்டாம் பாதி வெகு வேகமாக செல்கிறது. அதிலும் கண்ணனாக என்.டி.ஆர் அறிமுகமாவது முதல் படம் கலாட்டாதான்.
முழுமையாக டிஜிட்டல்மயமாக்கப்படாவிட்டாலும், பல காட்சிகளை பளிச்சென்று பூஸ்ட் அப் செய்திருக்கிறார்கள். இயன்ற இடங்களில் எல்லாம் பின்னணி இசை மிருதுவாக டிஜிட்டலில் ஒலிக்கிறது. நினைத்தால் முழுவதுமாக டிஜிட்டலைஸ் செய்ய முடியும் என்றாலும், வரவேற்பு எப்படியிருக்கும் என தெரியாத நிலையில் இது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக செய்துபார்த்திருக்கலாம். மொக்கைப்படங்களாய் வெளியிட்டு விட்டு திரைத்துறை செத்துக்கொண்டிருக்கிறது என புலம்புவதற்கு பதிலாக இதுபோல பழைய படங்களை செப்பணிட்டு திரையிடுவதே மேல்! தற்போது இம்முயற்சிக்கு கிடைத்திருக்கும் நல்ல வரவேற்பின் மூலம் அடுத்தடுத்து பெரும் முதலீட்டில் முழுமையான டிஜிட்டல் பிரிண்டுகளில் பழைய படங்களை எதிர்பார்க்கலாம்.
"சின்ன வயசுல பார்த்தது.. ம் ம்.." என படம் முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அம்மா சொன்னார். அவரது அந்த "ம்ம்.." எனக்கு சொல்ல முடியாத மனநிறைவை தந்தது.
Wednesday, October 26, 2011
ஏழாம் அறிவு - மன்மதன் அம்பு - ஜெயித்தது எது?
சில மாதங்கள் முன்பு ஒரு விழாவில் :
"மன்மதன் அம்பு படத்துடன் ஆரோக்கியமான போட்டி போடுகிறோம். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த இரண்டு படங்களில் எது அதிகம் ஜெயிக்கிறது பார்த்துவிடுவோம்" - ஏ.ஆர்.முருகதாஸ்
போதி தர்மன் எபிசோட் உள்ளிட்ட, தமிழர்களுக்கு இந்த படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லியிருக்கும் செய்திகளுக்காக பாராட்டப்பட வேண்டி படங்கள் வரிசையில் அமர்கிறது ஏழாம் அறிவு!
போதி தர்மன் என்றால் யார் என்பது தமிழகத்தில் அனேகமாய் யாருக்குமே தெரியாத நிலையில், நம்மிடையே மறக்கடிக்கப்பட்ட, தேசம் கடந்து இன்றும் பெருமையாய் நினைவு கூறப்படும் ஒரு தமிழனின் சரித்திரத்தை தூசு தட்டி எடுத்து லேட்டஸ்ட் கேமராக்களினாலும், டிஜிட்டல் ஒலிகளினாலும் செல்லுலாய்டில் செதுக்கி, பயங்கரமாக மார்க்கெட்டிங் செய்து, ஒரு நல்ல தீபாவளி நாளாய் பார்த்து அமளி துமளியாய் சில லட்சம் தமிழர்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார். இவ்வகையில் போதி தர்மன் சரித்திரத்தை புத்தகமாக அச்சடித்திருந்தால் சில நூறு பிரதிகள் மட்டுமே போணியாகி இருக்கும். அதனால் சொல்லப்பட்ட செய்திக்கு ஏ.ஆர்.முருகதாசுசுக்கு நன்றிகள்.
முதல் அரை மணி நேரம் மட்டும் மிஸ் செய்துவிடாதீர்கள். கண்ணுக்குளிர்ச்சியான சைனா எபிஸோட். போதி தர்மனின் வரலாறை சுருக்கமாகமாகவும் கம்பீரமாகவும் பதிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அதன் பிறகு தற்காலத்திற்கு திரும்புகிறது கதை. போதி தர்மரின் மறக்கடிக்கப்பட்ட வரலாறை போலவே நம்மிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட நமது பாரம்பரியம், நமது வீரம், மருத்துவம் உள்ளிட்ட நமது பண்டைய பெருமைமிகு மகத்துவங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை, மிரட்டும் வில்லன், அழகிய கதாநாயகி, அட்டகாசமான ஒளிப்பதிவு, விஞ்ஞானம் அஞ்ஞானம் எல்லாம் கலந்து சொல்வதே ஏழாம் அறிவு.
இந்த வாரம் முழுமைக்கும் ஏற்கனவே டிக்கெட் ஃபுல் ஆகிவிட்டது. டிக்கெட் எடுத்தவரில் நீங்களும் ஒருவர் என்றால், இத்துடன் எஸ் ஆகிவிடுங்கள். இல்ல பரவாயில்ல நீ சொல்லு என்பவர்கள் மேலே தொடரலாம்.
கதையின் கரு என்னவென்றால்,
அந்த காலத்தில் தமிழர்கள் வீரத்தோடும் தன்மானத்தோடும் இருந்தார்கள். 'யம்மா யம்மா', 'ரிங்கா ரிங்கா' போன்ற மொக்கையான பாட்டுகளை தேவையற்ற இடங்களில் திணித்தாலோ, படம் நெடுகிலும் ஹிப்னாடிசம் செய்தே சாகடிக்கும் காட்சிகளை வைத்து இம்சித்தாலோ, அந்த கால தமிழர்களாக இருந்தால், நெட்டில் 250 ரூவா கொடுத்து டிக்கெட் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று தன்மானத்தோடு வெளிநடப்பு செய்திருப்பார்கள்.
ஆனா நேத்து படம் பார்த்த நான் உள்ளிட்ட தற்போதைய தமிழர்கள் காசு போகுதே என்கிற ஒரே காரணத்துக்காக முழு படத்தையும் மாடு மாதிரி உட்கார்ந்து பார்த்தோம்.
ஒருவேளை இயக்குனர், இக்கால தமிழர்கள் நமது பாரம்பரிய வீரத்தை மறந்துவிட்டோம் என்பதை பிராக்டிக்கலாக உணர்த்த விரும்பினாரோ என்னவோ...?
போதி தர்மர் போன்ற நாம் அறிந்திராத ஆச்சரியமான போர்ஷனை சொல்லி, எடுத்துக்கொண்ட அருமையான கதைக்களனிற்கு ஈடாக, கஜினி, ரமணா போன்ற சுவாரஸ்யமான பிரசன்டேஷன் 7ஆம் அறிவு படத்தில் அமைக்கப்படவில்லை என்பதை மிகுந்த ஏமாற்றத்துடன் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. காதல் காட்சிகளிலும், நகைச்சுவை காட்சிகளிலும் கஜினி தந்த ஏ.ஆர்.முருகதாஸா இது...? அவ்வளவு கற்பனை வறட்சியான காட்சிகள்.
பாடல்கள் படத்தை விட்டு தனியே விலகி நிற்கிறது. முன் அந்தி, எல்லேலம்மா பாடல்களில் ஸ்ருதி கண்ணிற்கு குளுகுளுவென இருப்பதால் ஏதோ மன்னித்து விடலாம். படத்தின் அடுத்த சோதனை ஸ்ருதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நீ......ள தமிழ் வசனங்கள். டப்பிங் ஆவது கொடுத்திருக்கலாம்.
அழகிய போதி தர்மா எபிசோடுக்கு திருஷ்டி பொட்டு அந்த டாக்குமென்டரி போன்ற வாய்ஸ் ஓவர். முருகதாஸ் அந்த போர்ஷனையும் கதையாகவே அமைக்க முடியாதவரா என்ன?
மிரட்டல் வில்லன் ஆரம்பத்தில் அசத்தினாலும், திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக அவர் ஹிப்னாடிஸத்தில் (நம்மளையும்) சாவடிப்பது அலுப்பை தருகிறது.
ஆனால் இதுபோன்ற குறைகள் ஒருபுறம் இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம் ஏழாம் அறிவு.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
மன்மதன் அம்பு படத்துடன் போட்டியிடுகிறோம் என முன்னர் ஒரு விழாவில் உற்சாகமாய் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் என்ன இருந்தாலும் உலக நாயகனோடு சவால் விட்டு யாரும் ஜெயிக்க முடியாது என்பது நிருபணமாகி இருக்கிறது.
ஆம்! ஏழாம் அறிவு. மன்மதன் அம்பு அளவிற்கெல்லாம் மொக்கை இல்லை. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!
7aam arivu 7am arivu 7aam arivvu blog review by tamil blogger sukumar swaminathan
7th sense 7aam aarivu vimarsanam review
A.R.Murugadoss, Harris Jayaraj, Surya. Shruthi hassan
7ஆம் அறிவு 7ம் அறிவு ஏழாம் அறிவு பதிவு பதிவர்கள் விமர்சனம் வலைப்பூ வலைமனை சுகுமார் சுவாமிநாதன்
Tuesday, August 3, 2010
என் இனிய எந்திரன்
எந்திரன் பாடல்களை கேட்கும்பொழுது, ஆனந்த விகடன் சிவாஜி பட விமர்சனத்தில், படத்தை ரஜினி ரசிகர்களை குறிவைத்து ஷங்கர் விட்டிருக்கும் ராக்கெட் என குறிப்பிட்டது நினைவிற்கு வருகிறது. ரஜினியை வைத்து ஷங்கர் சிவாஜியில் பின்னியிருந்தார். தற்போது, தொழில்நுட்பம், மாபெரும் பிரம்மாண்டம் எல்லாம் சேர்ந்து வெகுவாக எதிர்பார்த்த எந்திரன் பாடல்கள் புதிய பரிமாணத்தில் நன்றாகவே வந்திருக்கிறது.
சமீபத்திய ரஜினி படங்களில் கண்டிப்பாக தமிழன், தமிழ் மண், தமிழ்நாடு என ஒரு வரி வரும். தங்க காசு கொடுத்தது தமிழல்லவா, உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன், என்னை வாழ வச்சது தமிழ் பால் என ரஜினி அந்த வரிகளை ரசிகர்களை நோக்கி பாடும்போது ஏற்கனவே அதிர்ந்து கொண்டிருக்கும் அரங்கம் இன்னும் கொஞ்சம் அதிக டெசிபல் அலறும். இதற்கு ஷங்கரும் விதிவிலக்கல்ல. சிவாஜியில் "அப்போ நான் பச்சைத்தமிழன் இப்போ நான் வெள்ளைத் தமிழன்" என லைட்டாய் உபயோகப்படுத்தியவர், இப்போது எந்திரனில் "ரோபோ ரோபோ பன் மொழிகள் கற்றாலும் என் தந்தை மொழி தமிழ் அல்லவா..." என ரோபோ பாடுவது போல வித்யாசமாய் அமைத்திருக்கிறார்.
இதுபோன்ற வார்த்தைகளும் டிரைலரில் ரோபோ செய்யும் மேஜிக்குகளும் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய ட்ரீட்டாக எந்திரன் இருக்கும் என உறுதி செய்கிறது. இந்த வரி வரும் புதிய மனிதா பாடல் ஒரு புதிய அனுபவம். அனைத்து பாடல்களிலுமே வரும் சிற்சில இசை துணுக்குகள் இந்த பாடலின் பின்னணியில் நிறையவே ஒலிக்கிறது. மெதுவாக ஆரம்பித்து எஸ்.பி.பியின் குரலில் ஏற்றம் அடையும் போது பாடல் நம்முள் உற்சாகத்தை விதைக்கிறது.
கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்.. அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை என்ற வார்த்தைகள் ரொம்பவும் ஆழமானது. ஹேட்ஸ் ஆஃப்....
அனைத்து பாடல்களிலும் அதி உற்சாகமான பாடல் கிளிமஞ்சாரோதான். கிழிகிறது டிரம்ஸ்.. துள்ளலோ துள்ளலாக ரஹ்மான் துள்ளியிருக்கிறார். அதிலும் குறிப்பாக பாடலில் அக்கக்கோ என்ன பின்னிக்கோடி வரும்போது பகவான் ஆசிரமத்தில் போதையேறிய பக்தர்கள் தலைகால் புரியாமல் ஆடுவதை போல தியேட்டரில் ரசிகர்கள் பேயாட்டம் போடப்போவது உறுதி. தயவு செய்து அமைதியாய் படம் பார்க்க விரும்புகிறவர்கள் இந்த பாடலின்போது எழுந்து தம் அடிக்க போய் விடுங்கள். டங் டிவிஸ்டர் போல வார்த்தைகளை வைத்து பெண் குரல் க்யூட்டாக விளையாடுகிறது.
அடுத்ததாய் காதல் அணுக்கள்.. உடம்பை லேசாக்கி பறக்க வைப்பது போன்ற பாடல். பாடல் முழுவதும் வரும் கிடார் இசை தலை முதல் கால் வரை பரவி லைட்டான போதையை தருகிறது. காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை என கிக் ஆக ஆரம்பிக்கும் குரல் லவ்லி.. டிரைலரில் அதை ரஜினி வாயசைத்துப் பார்த்த பின் பாடல் இப்பொழுதே மனதில் ஓட ஆரம்பித்துவிட்டது.
அரிமா அரிமா பாடலையும் அறிமுக பாடல் என சொல்லிவிட முடியாது. பாடல் முழுவதும் ஒரு கம்பீர பீட் வருகிறது. இவன் பேர் சொன்னதும் பெருமை சொன்னதும் கடலும் கடலும் கைதட்டும்...இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டவன் நிலவு நிலவு தலை முட்டும்.. என ரஹ்மான் கரிஸ்மாட்டிக் குரலில் பாடுகிறார். இதை விட நிறைய போற்றி பாடடி பெண்ணேக்களை தற்போதைய ஹீரோக்களுக்கு கேட்டு காது பஞ்சர் ஆகி போனாலும் ரஜினிக்கு வரும் போது அதன் தரமே தனிதான். புகழ் பாடுவதை சூப்பர் ஸ்டாரே இரண்டே வரிகளில் சுருக்கி விட்டிருப்பதை மற்றவர்கள் கவனித்து கொஞ்சம் திருந்தலாம்.
இரும்பிலே ஒரு இருதயம் முளைக்குதே பாடல் மட்டும் எனக்கு அதிருப்தி.. பாடல் வரிகளை தவிர இசை அந்தளவிற்கு மனதில் ஒட்டவில்லை. மற்ற பாடல்களுடன் ஒப்பிடும்போது இந்த பாடல் ரொம்ப சுமார்தான்.
பூம் பூம் ரோபோ டா... ரோபோ டா.. ரோபா டா பாடலை கேட்கும்போதும், டிரைலரை பார்க்கும்போதும் திரையில் ரோபோ ரஜினியின் கலக்கல் காக்டெயில் அட்டகாசங்கள் இருக்கும் என நினைக்கிறேன். எப்படியும் இந்த பாடலுக்கே ஐந்து கிலோ பேப்பர் கிழிசல்கள் தேவைப்படும். தயவு செய்து நான் போகப்போகும் தியேட்டருக்கு வீக்கான ஹார்ட் உள்ளவர்கள் வராதீர்கள்.
Subscribe to:
Posts (Atom)


