Friday, October 8, 2010

என் திறன் உணரவைத்த எந்திரன்









எந்திரனை நேற்று மூன்றாம் முறையாய் பார்த்தபோது, முதல் இரண்டு முறையை விட பாசிட்டிவ்வாக தோன்றியது. 


ஏ.ஆர்.ரஹ்மான்


போரா, சிட்டியிடமிருந்து நியூரல் ஸ்கீமாவை டவுன்லோட் செய்யும்பொழுது ஆரம்பிக்கும் டெரர் மியூசிக், சிட்டி 2.0 வின் அரக்க குணத்திற்கு எக்ஸலென்ட் மேட்ச். வில்லன் சிட்டியின் சேட்டைகள மிரட்டலாக உணர வைப்பதில் ரஹ்மான் இந்த ஒரே இசையை வைத்தே பல இடங்களில் மிரட்டியிருக்கிறார்.


ஐஸ்வர்யாவை மண்டபத்திலிருந்து கடத்தி வரும் வழியில் ரேபோ போலீசாருடன் சண்டையிடும்பொழுது 2.0 என ஒரு தீம் மியூசிக் வருகிறது. கொஞ்சம் காமிக்கல் உணர்வினை இந்த இசை தருவதால் பயமுறுத்த ஆரம்பிக்கும் வில்லத்தனத்தின் வீரியம் குறைகிறது. 


படத்திற்கான பாடல்களையே மாற்றி மாற்றி பின்னணி இசையாக வடிவமைப்பது ரஹ்மானின் ஸ்டைல். ஆனால் பெரும்பான்மையான இடங்களில் இது படத்தில் வரும் பாடலின் மெட்டு என நாம் உணரவே முடியாதபடி அமைப்பது அவரது ஸ்பெஷாலிட்டி. 
உதாரணத்திற்கு சிவாஜியில் ரஜினி சொத்தை இழந்து, ஷ்ரேயா இனி தேடி வராதீங்க என சொல்லிய பின் கையேந்தி பவனுக்கு செல்லும் வழியில் சோகமாக ஒரு 'ஆஆ....' இசை வரும். கூர்ந்து கவனித்தால் அது பல்லேலக்கா பாட்டில் வரும் காவிரி ஆறும் வரி மெட்டில் அமைந்திருக்கும்.


இதே போன்று இந்த படத்தில் முதல் பாதி சிட்டி ரோபோவிற்கான  பின்னணி இசை இரும்பிலே ஒரு இருதயம் பாடலின் மெட்டில் இருந்து மாற்றி மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. டிரெயினில் ஐஸை காப்பாற்ற தண்டவாளத்தில் ஸ்கேட் பண்ணும்பொழுதும், சார்ஜ் ஏற்றிக்கொண்டு மீண்டும் காப்பாற்ற வரும்பொழுதும், நெருப்பில் காப்பாற்றும் காட்சிகளிலும் வரும் இசை 'பீட்'கள் இரும்பிலே ஒரு இருதயம் பாடலின் மெட்டுக்கள். இந்த சூழ்நிலைகளுக்கு அது மிக கம்பீரமாக  பொருந்தியிருக்கிறது.


அதேபோல், சிட்டி ரேபோவுக்கு உணர்ச்சிகள் வரும் வேளையில் ரஹ்மான் ஒரு இசை கொடுத்திருக்கிறார் பாருங்கள். இந்த இசையால் மிகவும் வினோதமான ஒரு உணர்வு வருகிறது.


படத்தின் மெயின் வில்லன் சிட்டி 2.0விற்கு ஒரு இசை என்றால் சாஃப்ட் வில்லன் போராவிற்கு இன்னொரு வகையான இசை. கருத்தரங்கில் சிட்டி அறிமுகத்தின்போது போரா அறிமுக காட்சியிலும், ஏ.ஐ.ஆர்.டி அப்ரூவலில் ரஜினியை நிராகரிக்கும்பொழுதும் வரக்கூடிய இசைகள் ரசிக்கும் விதத்தில் இருக்கிறது.


புதிது புதிதாய் இசை அனுபவத்தை நமக்கு தந்துவிட்டு இந்த மனிதரால் கொஞ்சம் கூட கண்ணில் கர்வம் இல்லாமல் எப்படித்தான் அப்புராணியாய் புன்னகைக்க முடிகிறதோ தெரியவில்லை.


ரத்னவேலு


சில இடங்களில் டூப், மாஸ்க், ஸ்டண்ட் என வேறு ஆட்களை பயன்படுத்தியிருந்தாலும், பல இடங்களில் ஒரே சீன்களில் வரும் வேறு விதமான ரஜினிக்களுக்கேற்ப மண்டை குழம்பாமல் காட்சிப்படுத்தியதில் ஒளிப்பதிவாளர் பிரமிக்க வைக்கிறார். பின்னால் அமைக்கக்கூடிய சி.ஜி.க்களுக்கேற்ப முன்னாலேயே, காட்சியை பதிவு செய்யும்பொழுதே வெளிவரக்கூடிய முழு சீனையும் கற்பனை பண்ணி ஸ்ப்பா... எப்படியும் பெண்டு நிமிர்ந்திருக்கும். ஆனால் முழுப்படத்தையும் பார்க்கும் பொழுது இவை எதுவுமே நமக்கு தெரிவதில்லை. அதுதான் ஒளிப்பதிவாளரின் வெற்றி. ஆனாலும் ஈசியாய் நொல்லை சொல்லிவிட்டு போய்விடுகிறோம்.


பெருங்குடி குப்பை கிடங்கில் பார்ட் பார்ட்டாக கிடக்கும் ரேபோவை காரில் போரா ஏற்றிச்செல்லும் காட்சியில் கேமரா ஆங்கிள் சூப்பர். படமே தலை கீழாய் திரும்ப போகிறது என்பதற்கேற்ப காட்சியமைப்பு அது.


ராணுவத்தில் சிட்டி ரோபோவை அறிமுகம் செய்யும் ஆங்கிளும், கிளிமஞ்சாரோவில் கையில் கேமராவை எடுத்துக்கொண்டு படம் பிடித்துள்ள சில ஷாட்களும் சூப்பர்.
ஐஸ்வர்யாவை பார்க்க பிடிக்காதவர்களுக்கு (?!) பின்ணணியில் ஆங்காங்கே மச்சு பிச்சுவின் எழிலையும் காண்பிக்கிறார். 




ஐஸ்வர்யா


இரும்பிலே ஒரு இருதயம் பாடலில், தங்க வண்ணத்தில் பாடல் பாதியில் மாறும் இடத்தில்  "யூ வான் டு..." என ஆரம்பிக்கும் ஆங்கில வரிகளை பாடிக்கொண்டே ஒரு கருப்பு டிரஸ்ஸில் ஐஸ் ஆட ஆரம்பிப்பார் பாருங்கள்.. அட அட அட.. செய்யும் வேலையை ரசித்து செய்திருக்கிறார் ஐஸ். வெகு நளினமான நடனங்கள். குறிப்பாக இந்த பாடலிலும் கிளிமஞ்சாரோ பாடலிலும்.


நடிப்பு.. ஐஸ் அதிலும் கலக்குகிறார். சிட்டியிடம் காதலை நிராகரிக்கும்பொழுது கொடுக்கும் விளக்க உரை, கொசுவை பிடித்து வந்து முத்தம் கேட்கும்போது 'சிட்டி..' என அலுத்துக்கொள்வதும், பிளாக் ஷீப் காட்சியில் ரஜினி வெறுப்பேற்றும்போது தவிப்பை மறைத்து புன்னகைக்க முயற்சிப்பதும் என ஐஸ் ஐஸ்தான்.




ஷங்கர்


கனவு படத்தையும் எடுக்க வேண்டும், படம் பார்க்க வரும் ரஜினி ரசிகர்கள் ஸ்கிரீனை கிழிக்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இரண்டையும் பாலன்ஸ் செய்து பெடல் அடித்து வண்டி ஒட்டியிருக்கிறார் ஷங்கர்.


ஷங்கரின் கனவிற்காக ரஜினியும், ரஜினியின் இமேஜிற்காக ஷங்கரும் பரஸ்பரம் தியாகங்கள் செய்திருக்கிறார்கள என்பதே நிஜம்.


படம் பார்த்த என் நண்பர் ஒருவர்,
"ஷங்கரின் பத்து வருஷ கனவிற்கு ஏற்றார்போல படம் இல்லை" என்றார்.


நான் அவரிடம் சொன்னது இதுதான்,
 "இது அவரோட கனவு நண்பா.. நீங்க எதிர்பார்ப்பது போல வேணும்னா நீங்கதான் கனவு கண்டு படம் எடுக்கனும்."


ஜேம்ஸ் கேமரூனின் கனவான அவதார் என்னை எந்த அளவிற்கு பிரமிக்க வைத்ததோ அதே அளவிற்கு ஷங்கரின் கனவான எந்திரனும் பிரமிக்க வைக்கிறான்.  


இரண்டு வருடங்களில் இவ்வளவு வேகமாய் உழைத்து படத்தை கொண்டு வருவது எனில் எவ்வளவு நட்டு கழண்டிருக்கும் என உணர முடிகிறது.


கதை சரியில்லை, கிராபிக்ஸ் சரியில்லை என ஏதேதோ சரியில்லைக்களை பட்டியிலிட்டு சொல்லலாம். ஆனால்... தமிழ், தெலுங்கு பிராதானம். டப் செய்யப்பட்டு ஹிந்தி, ஜப்பானிஸ் மொழிகள் போனஸ். சப் டைட்டிலில் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகள் கொசுறு. இதுதான் படத்திற்கான மார்கெட். இதை வைத்துக்கொண்டு இப்பேற்பட்ட தொழில்நுட்ப தரமான படத்தை இன்றைய காலகட்டத்தில் கொடுத்தமைக்கு ஷங்கரை பாராட்டியே ஆகவேண்டும்.




ரஜினி


பொசஸிவ்னெஸ்ஸில் சிட்டியால் கடுப்புறும்  விஞ்ஞானி, வசீகரன் தன்னை உடைக்கும் பொழுது உயிர் வாழ கெஞ்சும் சிட்டி, மே மே... என மிரட்டும் ரேபோ 2.0 என ரஜினியின் ஆதிக்கம் படம் முழுவதிலும் இருக்கிறது. ஆனால் அவரது நடிப்பிற்காக பாராட்டுவதை விட அவரது உழைப்பிற்காக பாராட்டுவதே பொருத்தமாக இருக்கும். 


60 வயசு. ரிட்டையர் ஆகி ஓய்வெடுக்க உடல் கெஞ்சும் தருவாயில், கதை கேட்கும்பொழுதே கதி கலங்க செய்யும் புராஜக்டை கையில் எடுத்து அதை அனுபவித்து நடித்துக்கொடுத்திருக்கும் ரஜினி சிறந்த மாபெரும் உழைப்பாளி. 


ஆனால் அவர் கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறாரே? 
 சும்மா உட்கார்ந்து ஓப்பி அடித்து கோடி கோடி கணக்கில் பணம் சுருட்டும் அரசியல், ஊழல்வாதிகள் இருக்கும் நாட்டில் உழைத்து பணம் சம்பாதிக்கும் ரஜினி எவ்வளவ்வோ மேல்.


அதுக்காக அவர் சும்மா பாட்டு பாடி டான்ஸ் ஆடி வசனம் பேசறதுக்கு கோடி கணக்கில் பணமா..?
 இது சும்மா வேலைதான் என்றால் இதே வேலையை நீங்களே நானோ செய்ய முடியாது. என்னால் செய்ய முடியும் வாய்ப்பு கொடுத்து பாருங்கள் என சொல்கிறீர்களா.. வாய்ப்பை யாரும் தேடி வந்து கொடுக்க மாட்டார்கள். தேடி தேடி அடிபட்டு மிதிபட்டுதான் ரஜினி இந்த நிலைக்கு வந்திருக்கிறார். அவர் சும்மா ஆகிவிடவில்லை சூப்பர் ஸ்டார். 


டிரெயின் சண்டை காட்சி, ரோபோ பாடல் காட்சிகளில் மாஸ்க் போட்டு வேறு யாரோ பொர்பார்ம் செய்ய, புகழ் மட்டும் இவருக்கா?
 அந்த மாஸ்க்கை எடுத்துவிட்டோ அல்லது வேறு முகம் போல வடிவமைத்து போட்டுக்கொண்டு பெர்பார்ம் செய்தாலோ அவர்களுக்கு இந்த படத்தில் வேலையே இல்லை. இந்த முகத்தை இத்தனை வருட உழைப்பில் மக்கள் மனதில் நிறுத்தியது தான் ரஜினியின் பெர்பார்மன்ஸ். மாஸ்க் போட்டு உழைத்திருக்கும் கலைஞர்களை மட்டம் தட்டவில்லை. அவர்களுக்கான பாராட்டு  கண்டிப்பாய் உண்டு. ஆனால் அவர்களது முகத்தை, அவர்களது திறமை மற்றும் உழைப்பின் மூலம் அவர்கள்தான் மக்கள் மனதில் நிறுத்த வேண்டும்.


எந்திரன் 


ஏ.ஆர், ஐஸ், ரத்னம், ஷங்கர், ரஜினி என அவரவர் தனித்தன்மையான கூட்டு உழைப்புகளால் உருவாகி இருக்கும் எந்திரனை பார்க்கும்போது எனக்கு பிரமிப்பு மட்டுமே ஏற்படுகிறது. 


சினிமா என்பதும் ஒரு தொழில்தான். இதே போன்றதொரு புதிய சிந்தனையை, புதிய தொழில்நுட்பம் நாடும் தேடலை சிறப்பான உழைப்பை நமது வேலையில், நமது தொழிலில் நாம் முயற்சித்து பார்க்கிறோமா என்பதை மட்டுமே நான் யோசித்துக்கொண்டிருக்கிறேன். 


நமது சமகால தமிழர்கள் வட இந்தியாவை, உலகை, பிரமிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால் இதேப்போன்ற பிரமிப்பை நமது தொழிற்சர்ந்த சாதனைகளால் நாமும் நிகழ்த்த முடியும் என்கிற பாசிட்டிவ் உணர்வினை எனக்கு தந்த எந்திரனுக்கு நன்றி!

24 comments:

Anonymous said...

This is like a late 90s hollywood movie. Nothing great in it.

Sukumar said...

வாங்க அனானி... கடையை திறந்து அரை மணி நேரம் ஆச்சே.. போனி ஆகலையேனு பார்த்தேன்...

Thamira said...

சும்மா வருவாளா சுகுமாரி.? நான் சூப்பர்ஸ்டார் பட்டத்தைச் சொன்னேன். அதற்குரிய தகுதியான நபர்தான் ரஜினி.

விமர்சனம் நன்று.

Balaji said...

நீங்கள் ரசித்து கூறிய BGM - யை கேட்பதற்கு எந்திரனை மறுமுறை பார்க்க தூண்டுகிறது!

எஸ்.கே said...

நல்ல விமர்சனம்!

Balaji said...

ji,

நான் அவரிடம் சொன்னது இதுதான்,
"இது அவரோட கனவு நண்பா.. நீங்க எதிர்பார்ப்பது போல வேணும்னா நீங்கதான் கனவு கண்டு படம் எடுக்கனும்."//

-கரெக்ட சொன்னிங்க... சில பன்னாடைகள் படத்த பற்றி அவதூறாக பேசுகின்றனர். அவங்களுக்கு சரியான பதிலடி...

Balaji said...

ji,

i like your review..

Anonymous said...

Its easy to criticize others work.
It must be a beautiful mind to appreciate the hard work. Really ,you have it.

People with inferiority speak stupidly. They can't shine even in thier own work.

Anonymous said...

Anonymouns stupid fellow, the budget is a constraint. This movie has only budget of 10% of what hollywood movies have. Despite of the output is great. So shut up and go.

Raja said...

நீங்கள் ரசித்து கூறிய BGM - யை கேட்பதற்கு எந்திரனை மறுமுறை பார்க்க தூண்டுகிறது! good....................

Madurai pandi said...

BGM is not that great in last 30 minutes... too mush noisy music... My opinion...

NARI said...

இது சங்கரோட கனவு படமுன்னு அவரே சொல்லி அவரே காமெடி பண்ணிகிட்டாரு ஹீ ஹீ ஹீ

NARI said...

//Anonymouns stupid fellow, the budget is a constraint. This movie has only budget of 10% of what hollywood movies have. Despite of the output is great. So shut up and go.

//

Great output,people are running away from theatres:)

NARI said...

ஒருத்தர் சொல்றாரு இது சங்கரோட கனவாம். யோவ் அவனோட கனவ அவன் கண்டு அவன் வீட்டுக்குள்ளயே போட்டு பாத்துக்கவேண்டியது தானே. அத எதுக்கு பப்ளிக்குல வச்சு உண்டி குலுக்கி கல்லா கட்டுறான்.

பாசகி said...

ஜி நீங்களும் மூணு முறை பாத்தாச்சா? நான் செவ்வாய்கிழமையே மூணாவது முறை :)

Sunday மறுபடியும் போகணும். தலைவர் Rocking... ம்ம்ம்ம்மேமே :)))

ரவிஷா said...

ஏதேது! விட்டா ஆரத்தியே எடுப்பீங்க போல? பத்திரிக்கைகளுக்கு நோட்டீஸ் விட்ட பயமா, இப்படி “நெஞ்ச நக்கறீங்க”?

முத்து said...

NARI said...

//

Great output,people are running away from theatres:)//////


ஏன் நீ அங்கே போனதாலா

முத்து said...

NARI said...

இது சங்கரோட கனவு படமுன்னு அவரே சொல்லி அவரே காமெடி பண்ணிகிட்டாரு ஹீ ஹீ ஹீ///////

அவர் கனவு விடு எங்கே உன் கனவு என்னன்னு சொல்லு பாப்போம்

Sukumar said...

***

ஆதிமூலகிருஷ்ணன் said...
சும்மா வருவாளா சுகுமாரி.? நான் சூப்பர்ஸ்டார் பட்டத்தைச் சொன்னேன். அதற்குரிய தகுதியான நபர்தான் ரஜினி.

விமர்சனம் நன்று.

----------> தல நீங்களே சொன்னா சரிதான்.. ரொம்ப நன்றி தல...

***

Balaji said...
நீங்கள் ரசித்து கூறிய BGM - யை கேட்பதற்கு எந்திரனை மறுமுறை பார்க்க தூண்டுகிறது!

----------> வருகைக்கு நன்றி பாஸ்..


***


எஸ்.கே said...
நல்ல விமர்சனம்!

----------> நன்றிங்க எஸ்.கே தொடர் ஆதரவிற்கு



***


balaji said...
ji,

நான் அவரிடம் சொன்னது இதுதான்,
"இது அவரோட கனவு நண்பா.. நீங்க எதிர்பார்ப்பது போல வேணும்னா நீங்கதான் கனவு கண்டு படம் எடுக்கனும்."//

-கரெக்ட சொன்னிங்க... சில பன்னாடைகள் படத்த பற்றி அவதூறாக பேசுகின்றனர். அவங்களுக்கு சரியான பதிலடி...

----------> நன்றிங்க பாலாஜி.. வருகைக்கு... இனி இந்த திட்டும் வார்த்தைகளை தவிர்த்து விடுங்களேன் ..


***

balaji said...
ji,

i like your review..

----------> நன்றி


***


Anonymous said...
Its easy to criticize others work.
It must be a beautiful mind to appreciate the hard work. Really ,you have it.

People with inferiority speak stupidly. They can't shine even in thier own work.

----------> நன்றிங்க.. அப்படியே உங்க பெயரையும் சொல்லி இருக்கலாம்...


***


Anonymous said...
Anonymouns stupid fellow, the budget is a constraint. This movie has only budget of 10% of what hollywood movies have. Despite of the output is great. So shut up and go.

----------> வருகைக்கு நன்றி.. இனி இந்த திட்டும் வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள் ...


***


Raja said...
நீங்கள் ரசித்து கூறிய BGM - யை கேட்பதற்கு எந்திரனை மறுமுறை பார்க்க தூண்டுகிறது! good....................

----------> நன்றிங்க ராஜா....


***


மதுரை பாண்டி said...
BGM is not that great in last 30 minutes... too mush noisy music... My opinion...

----------> உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றி பாஸ்


***


NARI said...
இது சங்கரோட கனவு படமுன்னு அவரே சொல்லி அவரே காமெடி பண்ணிகிட்டாரு ஹீ ஹீ ஹீ

NARI said...
//Anonymouns stupid fellow, the budget is a constraint. This movie has only budget of 10% of what hollywood movies have. Despite of the output is great. So shut up and go.

//

Great output,people are running away from theatres:)


----------> வருகைக்கு நன்றி


***


NARI said...
ஒருத்தர் சொல்றாரு இது சங்கரோட கனவாம். யோவ் அவனோட கனவ அவன் கண்டு அவன் வீட்டுக்குள்ளயே போட்டு பாத்துக்கவேண்டியது தானே. அத எதுக்கு பப்ளிக்குல வச்சு உண்டி குலுக்கி கல்லா கட்டுறான்.

----------> முதலில் இதை உண்டியல் குலுக்குவதோடு ஒப்பிட முடியாது. நீங்களாக தேடிப்போய்தானே படம் பார்த்தீர்கள். அவர்களாக தேடி வந்து உங்களுக்கு படம் போட்டு காட்டினார்களா... எனக்கு விருப்பம் இருந்தது பார்த்தேன்... உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் பார்க்காதீர்கள்.. சிம்பிள்.... அவன் இவன் என ஒருமையில் அழைப்பதை இனி தவிருங்கள்...

***


பாசகி said...
ஜி நீங்களும் மூணு முறை பாத்தாச்சா? நான் செவ்வாய்கிழமையே மூணாவது முறை :)

Sunday மறுபடியும் போகணும். தலைவர் Rocking... ம்ம்ம்ம்மேமே :)))

----------> ஆமாம் பாஸ்.. தலைவர் பின்னியிருக்கார்... நன்றி வருகைக்கு... பார்த்து என்சாய் பண்ணுங்க


***


ரவிஷா said...
ஏதேது! விட்டா ஆரத்தியே எடுப்பீங்க போல? பத்திரிக்கைகளுக்கு நோட்டீஸ் விட்ட பயமா, இப்படி “நெஞ்ச நக்கறீங்க”?

----------> எனக்கு ஆரத்தி எடுக்கனும் என்று தோன்றியது சார்.. அதான் எடுத்தேன்.... பயமா...? கொஞ்சம் எனது பழைய பதிவுகளை பார்த்துவிட்டு வாருங்கள்...
அநாகரிகமான சொற்களை இனி தவிர்த்து விடுங்கள்...

Sukumar said...

இனி அநாகரிகமான சொற்கள் தாங்கிய பின்னூட்டங்கள், ஒருமையில் விளிக்கும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீங்க சொன்ன BGM விளக்கத்திற்காகவே இன்னொரு வாட்டி பாக்கப் போறேன்!

MANO நாஞ்சில் மனோ said...

யோவ், எந்திரன் காய்ச்சல் இன்னுமா தீரலை உங்களுக்கு.......எந்திரனை பற்றி படிச்சு படிச்சு.....போராகி பேஜாராகி கிடக்கோம் நாங்க........நிறுத்துங்க, என்ன? அவனை நிறுத்த சொல்லனுமா......? ஆத்தீ எஸ்கேப்....

Anonymous said...

Great Movie....we should be proud that its from Tamilnadu

Deepak Krishnan said...

Last two paras are really inspiring... I feel the same way.. I may have difference of opinions about Maran Bros, Kalaingar and Rajini... But their unparalleled hard work and commitment is really what we've to learn from them...