காலை 8 மணி காட்சி. உட்லண்ட்ஸ் திரையரங்கில் எந்திரன். நண்பர்களுடன் 7.30க்கே சென்று விட்டேன். ரசிகர்கள் கொண்டாட்டம் அவ்வளவாய் இல்லை. பார்க்கிங்கில் ஒரு சுமோவில் எந்திரன் பாடல்களை சத்தமாய் வைத்துக்கொண்டு நாலைந்து பேர் ஆடிக்கொண்டிருந்ததை தவிர.
ரஜினி பேனருக்கு இருவர் பால் அபிஷேகம் செய்து கொண்டிருந்தனர். படத்தின் காஸ்ட்லி பட்ஜெட்டுக்கு ஏற்ப ரசிகர்கள் 'ஆரோக்யா' பால் ஊற்றிக்கொண்டிருந்தது, படத்திற்கு பெருமை சேர்ப்பதாய் அமைந்தது.
ஸ்கிரீன் அருகே இரண்டு போலீஸ் அதிகாரிகள். என்ன இருந்தாலும் போலீஸ் பந்தோபஸ்துடன் படம் பார்ப்பது தனி மரியாதைதான். சன் பிக்சர்ஸ் டைட்டிலுட்ன் படம் ஆரம்பித்தது. 7.55க்கே படத்தை போட்டுவிட்டார்கள். கடைசியில் பல வருடங்களாய் காத்திருந்த எந்திரனை பார்த்தே விட்டேன்.
மெதுமெதுவாய் படம் ஆரம்பிக்கிறது. ரோபோவை அசெம்பிள் செய்யும் விஞ்ஞானி ரஜினி சர்வசாதாரணமாய் இன்ட்ரொட்யூஸ் செய்யப்படுகிறார். ஒரு ரசிகனாய் இதனால் ஏமாற்றம் அடைந்தாலும் பின்னர் தான் தெரிகிறது மற்ற ரஜினி படங்களில் ஒரே ஒருமுறை வரும் இன்ட்ரொடக்ஷன் காட்சியின் விறுவிறுப்பு , இப்படத்தில் அடிக்கடி வந்து பட்டையை கிளப்புகிறது. சிட்டி ரேபோ உருவாவது, வில்லன் ரோபோ அவதாரம், கிளைமேக்ஸ் கிராஃபிக்ஸ் கலக்கல் எல்லாம் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.
படத்தில் பல இடங்களில் வசனம் பளிச்சிடுகிறது. பாடல் காட்சிகளில் கிளிமாஞ்சாரோ டான்ஸ் சூப்பர், சிட்டி தீம் மியூசிக்கில் நடனம் அட்டகாசம், அரிமா அரிமா பாடலும் நைஸ் மற்றதெல்லாம் நாட் பேட்.
முதல் பாதி எந்திரன் அட்டகாசமாய் பறக்கிறது. சிட்டி ரோபோ செய்யும் சாகசங்களும் காமெடிகளும் அமர்க்களம். சென்டிமென்ட் காட்சிகளும் படத்தில் உண்டு. உணர்ச்சிகளை அறியாத எந்திரன் தீவிபத்தில் பெண்ணை காப்பாற்றும் காட்சியும், உணர்ச்சியூட்டிய பின்னர் ரோபோ பிரசவம் பார்க்கும் காட்சியும் மனதில் நிற்கின்றன.
முதல் பாதி முடிந்து கொஞ்ச நேரம் படம் ஸ்லோவாக செல்கிறது. ஆனால் அக்குறையை போக்க வில்லன் அவதாரம் எடுக்கும் ரோபோ கொஞ்சம் கொஞ்சமாய் மிரட்ட ஆரம்பித்து கிளைமேக்சில் கலக்கி எடுக்கிறது.
முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் ஆக்ஷன் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. இரண்டும் வேறு வேறு ரகம். முதல் பாதியில் டிரெயின் சண்டையில் சிட்டி ரோபோ சாகசங்கள் ரசிகர்கள் கூச்சலை அதிகரித்தபடியே இருக்கிறது. இரண்டாம் பாதியில் கடைசி அரை மணி நேர கிராபிக்ஸ் கலக்கல் இருக்கிறதே.. அதைப்பார்த்தால்தான் புரியும். என்னதான் ஆங்கில படங்களில் நாம் இதேப்போல் பார்த்திருந்தாலும், இங்கு சற்று புதுமையாக அதுவும் நம் தமிழ் மொழியில் செய்திருக்கிறார்கள் எனும் போது கண்டிப்பாய் பாராட்டியே ஆகவேண்டும்.
ரஜினி! பெரிய இமேஜ் வட்டத்தை வைத்துக்கொண்டு இது மாதிரியான புது மாதிரி கதையை ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். சிட்டி ரோபோ, விஞ்ஞானி, வில்லன் ரேபோ என ஒவ்வொன்றுக்கும் தனித்தன்மை காட்டுகிறார். விஞ்ஞானி கேரக்டரை கொஞ்சம் சொங்கி மாதிரியும், சிட்டியில் படு சுட்டியாகவும், வில்லன் ரேபோ 2.0 வில் பழைய கால வில்லன் ரஜினி போலவும் கலக்கியிருக்கிறார்.
ஐஸ்வர்யா ஐஸ்வர்யாதான். அவரை சுற்றி கதை வருவதால் கொஞ்சம் வெயிட்டான ரோல்தான். வெகு சொற்ப இடங்களில் வயது தெரிவதை தவிர்த்து படம் முழுவதும் வெகு அழகாக இருக்கிறார் என்பதை நான் சொல்ல வேண்டும் என்பதில்லை. நடனங்களில் அவரது நளினம் அபாரம்.
நான் பார்த்த திரையரங்கில் சவுண்ட் சிஸ்டம் சுமார்தான். ஆனால் ரஹ்மான் கண்டிப்பாய் கலக்கி இருக்கிறார் என்பது மட்டும் ஆங்காங்கே புரிந்தது.
சந்தானம், கருணாஸ் பாத்திரங்கள் கடைசிவரை குழப்ப நிலைதான். ரஜினியை அங்கங்கே துண்டு துண்டாக பார்ப்பது கொஞ்சம் என்னவோ போல் இருக்கிறது. உணர்ச்சிகளை போர்டில் எழுதி வைத்து பாடம் எடுத்தால் ரோபோ ரஜினி புரிந்து கொள்கிறது. அது எப்படி சாத்யம் என யோசித்தாலும், சுஜாதாவின் கதை என்பதால் அவர் சொன்னா சரியாய்தான் இருக்கும் என மனதை தேற்றிக்கொண்டு மேலே பார்த்தேன்.
இதுபோன்ற சிற்சில குறைகள் படம் பார்க்கும் போது தோன்றினாலும், ரஜினியின் அட்டகாசத்தாலும், ஷங்கரின் திறமையான காட்சியமைப்பினாலும், சன் பிக்சர்ஸின் கோடிக்கணக்கான கிராபிக்ஸ் காட்சிகளினாலும் திரையரங்கத்தை விட்டு வெளி வரும்முன் அவற்றை மறந்து போய்விட்டேன்.
இதற்கு மேல் ரஜினி ரசிகர்களுக்கு இன்னொரு சிறப்பான விருந்து யாராலும் வைக்க முடியமா தெரியவில்லை. சுஜாதா இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்றே நினைக்கிறேன். ஷங்கரின் பல வருடக் கனவு நன்றாகவே நனவாகியிருக்கிறது.
அதெல்லாம் சரி பதிவு பெயர்க்காரணம் சொல்லுங்கன்னுதானே கேக்குறீங்க... ரஜினி படத்துக்கு ஃபர்ஸ்ட் ஷோ போறோம்.. பேப்பர் கிழிச்சி எடுத்துட்டு வாடானு இந்த கிஷ்ணா பையன்கிட்ட சொன்னா பய வெறுங்கையா வந்து நிக்கிறான். அதான் தியேட்டர் பக்கத்துல இருந்த பொட்டிகடையில இன்னிக்கு வந்திருந்த நல்ல தரமான ஆங்கில தினசரி நாலு வாங்கிட்டுப்போய் உள்ளே உட்கார்ந்து கிழி கிழின்னு கிழிச்சி வீசிக்கிட்டே பார்த்தோம்.
தமிழ் சினிமாவில் ஏன் இந்திய சினிமா சரித்திரத்திலேயே எந்திரன் என்கிற ரோபோ ஒரு தைரியமான முயற்சி. அந்த முயற்சியில் பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்!!
Tags : Enthiran Review, blog, blogger, sukumar swaminathan, robot endhiran endiran entiran endhtiran rajnikanth aishwarya rai, a r rahman sun pictures movie review
14 comments:
பதிவோட பேரே அமர்களமா வைச்சிருக்கீங்களே! நான் ஏதோ படத்தைபார்த்து, திட்டப்போறீங்கன்னு நினைச்சி வந்தேன்ப்பா. சூப்பரு தல!
நடுநிலையான விமர்சனமாக எழுதியிருக்கீங்க. சந்தோஷம். நன்றி நண்பா!
எந்திரன் ரேட்டிங்
http://southcine.blogspot.com/2010/10/endhiran-review-robot-movie-reviews.html
காஸ்ட்ரோல் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ?
http://cyberbuddies.blogspot.com/2010/09/rajini-great-ad-castrol-advertisement.html
சிறப்பான விமர்சனம் எழுதியிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
பதிவோட தலைப்பைபார்த்து மகிழ்ச்சியாக வந்த வயித்தெரிச்சல் நண்பர்களின் காலை இப்படியா வாருவது? கலக்கல் விமர்சனம்.
ஏதோ காரசாரமா இருக்குமேன்னு வந்தேன்.
சப்புன்னு ஆய்டுச்சு
புறக்கணிப்போம் எந்திரனை
ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களின்
சிந்தனைகளை முடக்கி
அரிதார அழகிகளின் அங்கங்களை காட்டி
அதில் தொழில் செய்து
தமிழை கொன்று
தமிழின வேதனைகளை
இருட்டடிப்பு செய்த
தொலைக்காட்சி சவப்பெட்டியின்
சங்கை நெறிக்க...!!
புறக்கணிப்போம் எந்திரனை
தமிழ் சமுதாயத்தின்
சாபக்கேடாகிப்போன
ஒரு தனிமனிதனிடமிருந்து..
திரயுலக்கத்தின்
மாய உலகில் மூழ்கிக்கிடக்கும்
தமிழ் இளைஞர்களை மீட்டுக்க
புறக்கணிப்போம் எந்திரனை
சொந்த (எந்திரன்) ஆதாயதிர்க்காக
IIFA வை புறக்கணித்து,
தமிழர்களின் உணர்வுகளை
புரிந்து கொண்டதாக தம்பட்டம் அடித்த
அரிதார அழகியின் கோட்டம் அடக்க..!!
புறக்கணிப்போம் எந்திரனை
நல்லா சொன்னீங்க பாஸ்...
இன்னொரு விமர்சனம் http://tamilpp.blogspot.com/
ரைட்டு. அடுத்த விமர்சனக் கடைக்குப் போகணும். பைபை.
Thanks 4 sharing Your Review - உங்கள் விமர்சனத்திற்கு நன்றி
டாப் 60 ரோபோட் எந்திரன் ஸ்டில் படங்கள்
Nice review....:)
ஆஹா....
இப்படியெல்லாம் கூட விமர்சனம் எழுத தலைப்பு வைக்கலாம் போல இருக்கே..
ஆனாலும், இந்த மத்திய கிழக்கு நாடுகள் தான் புண்ணியம் கட்டிக்கொண்டது..
எல்லாரும் 01.10.10 அன்னிக்கு காலங்கார்த்தால 7.00 மணிக்கு முதல் நாள் முதல் ஷோ பார்க்க போனீங்க.. ஆனா, இங்க துபாய்ல 30.09.10 அன்னிக்கு காலை 7.30 மணிக்கே “எந்திரன்” சரவெடி கொளுத்திட்டார்..
அதனால, கேமராவும் கையுமா ஒரு பெரிய க்ரூப் துபாய் வந்து, பேட்டி எடுத்து உலகத்துக்கே ரிசல்ட் சொல்லியது....
எந்திரன் எட்டு திக்கும் வெற்றி முரசு கொட்டும் மந்திரன்....
மிக அருமையான பதிவு
http://denimmohan.blogspot.com/
அன்பின் சுகுமார்
விமர்சனம் நல்லாவே இருக்கு
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நல்ல விமர்சனம்! என்ன தலைப்புதான் கொஞ்சம் கதிகலக்கிருச்சி!
Post a Comment