Thursday, August 26, 2010

மிஸ் பண்ணக்கூடாத வரலாற்றுப் புத்தகம்

உணவின் வரலாறு



நாடு, இனம், மக்கள், மன்னன் என எத்தனையோ வகையான வரலாற்றுப் புத்தகங்களைப் படித்திருப்போம்.  ஆனால் யாராக இருந்தாலும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு குறித்த புத்தகம் ஒன்றினை படித்தேன். அது பா.ராகவன் அவர்கள் எழுதியிருக்கும் உணவின் வரலாறு!


125 ரூபாய்க்கு புத்தகம் கொஞ்சம் குண்டாக அதிக பக்கங்கள் இருக்கிறதே என்கிற ஒரே காரணத்துக்காகத்தான் நான் வாங்கினேன். ஆனால் படிக்க படிக்க அவ்வளவு தகவல்கள்! அதுவும் புத்தகத்தை கீழே வைக்க முடியாத அளவிற்கு வெகு சுவாரஸ்யமான நடையில் செல்ல இந்த புத்தகத்தின் உண்மையான மதிப்பு தெரிந்தது.  நான் சமீபத்தில் படித்த புத்தகங்களிலேயே வெகுவாக ரசித்துப் படித்தது இந்த புத்தகத்தைத்தான்.


கரும்பின் ருசி அறிந்த ஆதி மனிதர்கள் வெகு காலம் வரை அதனை ரகசியமாகவே வைத்திருந்திருக்கிறார்கள். ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் சர்க்கரை உபயோகிக்கப்பட்டிருக்கிறது. எனில், அதற்குப் பல காலம் முன்பே கரும்பு உற்பத்தி இருந்திருக்கிறது என்றாகிறது. 


வரலாறு என்றவுடன் பழங்காலத்து கதை மட்டும் என நினைத்து விடவேண்டாம். தேன் வேட்டைக்கு கிளம்பும் ஆதி கால உணவு தேடல் முதற்கொண்டு அமெரிக்காவின் இன்றைய பர்க்கர் வரை அக்கக்காய் புட்டு புட்டு வைத்து அசத்துகிறது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்நூல்.




கொண்டைக்கடலையில் கார்போஹைட்ரெட் கொஞ்சம் ஜாஸ்தி. அறுபத்தி நாலு சதவீதம். சோற்றுப்பண்டாரங்களுக்கு மாற்று உணவாக இதனைக் கொடுக்கலாம். காரணம், அரிசியில் இல்லாத இருபத்தி மூன்று சதவீத ப்ரோட்டீன் இதில் இருப்பதுதான். தவிரவும் நார்ச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், இரும்பு போன்ற மினரல் சத்துக்களும் கொண்டைக்கடலையில் உண்டு.




கொண்டைக்கடலை, கீரைகள், வாழைப்பழம் என நமது அன்றாட வாழ்க்கையில் அலட்சியமாக பார்த்து பழகிப்போன போன்ற பல உணவு பொருட்களை இவ்வாறு அவைகளின் சத்துக்களை பட்டியலிட்டு விளக்கும்பொழுது அவைகள் மேல் நமக்கு தனி மரியாதையே வந்து விடுகிறது. 

பீர், ஒயின், அரிசி போன்றவைகள் கண்டுபிடிக்கப்பட்ட விதம் குறித்து உலகின் பல பகுதிகளில் நிலவும் கதைகளை ஆங்காங்கே சைட் டிஷ் போல் சேர்த்திருப்பது புத்தகத்திற்கு சுவாரஸ்யம் கூட்டுகிறது.




நமது ஒருவேளை சாப்பாட்டை எடுத்துக்கொண்டு அகழ்வாராய்ச்சி செய்து பார்த்தால், அதில் என்னென்ன ஊட்டச்சத்துகள் உண்டோ, அவை அனைத்தும் ஒரு வாழைப்பழத்தில் உண்டு.

 வாழைப்பழம் குறித்து வெகு ஆழமாக புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதி காலங்களில் வாழை, அதன் மரபணு மாற்றம், பரவிய வரலாறு, அதன் சத்துப்பொருட்கள், பல்வேறு வகையான வாழைப்பழ இனிப்புகள் என பழனி பஞ்சாமிர்தம் வரை வாழைப்பழத்தின் அருமை சொல்லும மூன்று அத்தியாயங்களை படித்து முடித்த உடன் வாழைப்பழத்திற்கு கட் அவுட் வைக்கும் அளவிற்கு நான் ரசிகன் ஆகிவிட்டேன்.


புத்தகத்தில் விரிவாக சொல்லப்பட்டிருக்கும் இன்னொரு வகை, சரக்கின் இளைய சகோதரர்களான பீர், ஒயின் முதலிய அயிட்டங்கள். அவற்றை சுவைத்திடாத என்னைப்போன்ற அம்மாஞ்சிகளுக்கும் ஓருமுறை அடித்துப்பார்த்துவிடுவோமா என்கிற ஆவலை வரவழைக்கும் அளவிற்கு சுவையாக சொல்லப்பட்டிருப்பதை தவிர புத்தகத்தில் வேறு குறைகள் எதுவும் இல்லை :) 


இட்லி காலத்தால் மிகவும் பிந்தையது. அதனுடைய சூப்பர் ஸ்டார் அந்தஸ்து அதன் சுவையற்ற சுவையினாலும் வயிற்றைக் கெடுக்காது என்னும் சமர்த்து குணத்தாலும் அரிசி - உளுந்து காம்பினேஷனில் கிடைக்கக்கூடிய சத்துகளினாலும் உண்டானது.



இட்லி, திருப்பதி லட்டு போன்ற இன்றைய சூப்பர் ஸ்டார்களின் குழந்தை பருவ நாட்களையும் அவை வளர்ந்த விதங்களையும் குறித்து அவற்றின் சுவையை விட சுவையாக விளக்குகிறார் ஆசிரியர். 


நமது நாட்டு உணவுகள் மட்டுமல்லாது குரங்கின் கழுத்தை திருகி ரத்தத்தை அப்படியே சூப்பாக ஊற்றிக் கொடுக்கும் சீனர்கள், அமெரிக்கர்களின் உணவு பழக்கங்கள், எவ்வளவு பணம் இருந்தாலும் அளந்து அளந்து சாப்பிடும் நிலைக்கு தள்ளப்பட்ட ரஷ்யர்கள், தண்ணீர் தட்டுப்பாட்டினால் அதற்கேற்ற உணவு முறையினை கொண்டுள்ள ஆப்பிரிக்கர்கள் என உலகின் பல்வேறு பகுதியினரின் உணவு பழக்க வழக்கங்களும் மிக விரிவாக புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன.


பொதுவாக புத்தகம் படிக்கும் பொழுது கையில் ஹைலைட்டர் வைத்து குறித்துக்கொண்டு அதை பதிவிடும்பொழுது மேற்கோள் காட்டுவேன். ஆனால் இந்த புத்தகத்தில் ஆரம்பத்தில் ஹைலைட் செய்து செய்து அலுத்துப்போய் ஹைலைட்டரை கீழே வைக்கும் அளவிற்கு புத்தகத்தில் இருக்கும் இருக்கும் அனைத்து பகுதிகளுமே முக்கியமானவை. 




சமையல் குறிப்புகளை விட ஏன் சமையலை விடவுமே ரொம்பவும் சுவாரஸ்யமான கதை என ஆசிரியர் அறிமுகப்படுத்தும் இந்த உணவின் வரலாறு யாராக இருந்தாலும் மிஸ் பண்ணக்கூடாத புத்தகம்..!!! 

___________________


கிழக்கின் மற்ற நூல்களை போலவே இந்த புத்தகமும் சிறப்பான முறையில் அச்சிடப்பட்டுள்ளது. முன் அட்டைப்படத்தில் 'உ' என பெரியதாக உள்ள டைட்டில், உள்ளே ஆசிரியர் அதற்கான காரணத்தை விளக்குவதற்கு பொருத்தமான முறையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. 


____________________


உணவின் வரலாறுஆசிரியர் - பா.ராகவன்
கிழக்கு பதிப்பகம்
விலை ரூ.125


புத்தகம் குறித்த அதிகாரபூர்வ சுட்டி

______




குறிப்பு : சிவப்பு எழுத்துக்கள் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள மேற்கோள்களாகும்



8 comments:

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

Anonymous said...

informative !! will buy the book sooner i land in india !

Chitra said...

சமையல் குறிப்புகளை விட ஏன் சமையலை விடவுமே ரொம்பவும் சுவாரஸ்யமான கதை என ஆசிரியர் அறிமுகப்படுத்தும் இந்த உணவின் வரலாறு யாராக இருந்தாலும் மிஸ் பண்ணக்கூடாத புத்தகம்..!!!


..... Interesting book... Thank you for recommending it. :-)

மோகன்ஜி said...

இவ்வளவு புத்தகத்த பத்தி எழுதியிருக்கீங்க. சென்னை வரும் போது வாங்கிடுவோம்.உங்கள் வலைமனை ஆரோக்யமாக இருக்கிறது.தொடட்ன்து கலக்குங்க!
மோகன்ஜி ஹைதராபாத்

DR said...

நான் இந்தியாவில் இல்லை, இருந்தாலும் என்னுடைய தந்தை படிக்கட்டுமே என்று புத்தகத்தை ஆன்லைன்-இல் ஆர்டர் செய்து விட்டேன்.

புத்தகம் எப்படியோ, அதை விட நீங்க அந்த புத்தகத்துக்கு குடுத்த இண்ட்ரோ நல்லா இருந்தது.

Sukumar said...

செ.சரவணக்குமார் said...
பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே.

-----> வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் எனது நன்றிகள் பாஸ்....

***

Anonymous said...
informative !! will buy the book sooner i land in india !

-----> Hi Thanks for the comment. ya pls do it.

***

Chitra said...
சமையல் குறிப்புகளை விட ஏன் சமையலை விடவுமே ரொம்பவும் சுவாரஸ்யமான கதை என ஆசிரியர் அறிமுகப்படுத்தும் இந்த உணவின் வரலாறு யாராக இருந்தாலும் மிஸ் பண்ணக்கூடாத புத்தகம்..!!!
..... Interesting book... Thank you for recommending it. :-)

-----> கண்டிப்பாக சித்ரா.. படிச்சு பாருங்க... ரொம்ப நல்லா இருக்கும்.. வருகைக்கு நன்றி

***

மோகன்ஜி said...
இவ்வளவு புத்தகத்த பத்தி எழுதியிருக்கீங்க. சென்னை வரும் போது வாங்கிடுவோம்.உங்கள் வலைமனை ஆரோக்யமாக இருக்கிறது.தொடட்ன்து கலக்குங்க!
மோகன்ஜி ஹைதராபாத்

-----> ஆஹா.. அப்படியா சொல்றீங்க.. ரொம்ப நன்றி பாஸ்....

***

தனுசுராசி said...
நான் இந்தியாவில் இல்லை, இருந்தாலும் என்னுடைய தந்தை படிக்கட்டுமே என்று புத்தகத்தை ஆன்லைன்-இல் ஆர்டர் செய்து விட்டேன்.
புத்தகம் எப்படியோ, அதை விட நீங்க அந்த புத்தகத்துக்கு குடுத்த இண்ட்ரோ நல்லா இருந்தது.

-----> சத்தியமாக நான் கொடுத்த இன்ட்ரோவை விட புத்தகம் பல ஆயிரம் மடங்கு சிறந்தது தலைவா... ஆர்டர் செய்ததற்கு பாராட்டுகள்..... வருகைக்கு நன்றி

Ganesan said...

தம்பி,

அருமையான புத்தக விமர்சனம்.
நடை அழகு.

வாழ்த்துக்கள்.

Prabu said...

நீங்க மட்டும் எப்படி இவ்வளவு புத்தகம் படிக்கிறீங்க...

உங்க பதிவுகளெல்லாம் நல்லா இருக்கு...

பசியைத் தூண்டும் பதிவு.