■ ரெண்டு நாட்களாக எந்திரன் ஆடியோ வெளியீடு பார்த்து கனவிலும் ஷங்கர் வாழ்க! சூப்பர் ஸ்டார் வாழ்க! ஐஸ்வர்யா வாழ்க! கலாநிதி மாறன் வாழ்கன்னு விவேக் வாய்ஸ் கேட்டுக்கொண்டே இருந்தது. நடுவில் இன்செப்ஷன் போல கிராஸ் கனவு வந்து வைரமுத்துவை விட்டுவிட்டேன் அவரும் வாழ்கன்னு ஒரு குரல் கேட்கிறது. சாதாரணமாக ரஜினி படங்களின்போது இருக்கும் எதிர்பார்ப்பே வேறு. ஆனால் எந்திரனில் இந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சி பார்த்ததே கொஞ்சம் திகட்டுகிறது. பதிவர் முரளிக்கண்ணன் ஒரு நகைச்சுவை பதிவில் எந்திரனுக்கு தனி சேனலே ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் என சொன்னது நினைவிற்கு வருகிறது. ( பார்த்து பண்ணுங்க சாமி.. மத்த படங்கள் மாதிரி மார்கெட்டிங் பண்ணி தலைவரையும் ஷங்கரையும் தியேட்டர் தியேட்டரா அலைய விட்டுறாதீங்க...)
■ வரும் சுதந்திர தினத்திற்கு கலைஞர் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான டிரைலர் போட்டார்கள். காலையிலிருந்து மாலை வரை, திரைப்படங்கள், திரை முன்னோட்டங்கள் என சுதந்திரத்திற்கு சம்பந்தம் இல்லாத நிகழ்ச்சிகளாக இருக்கிறதே என யோசித்த போதுதான், மானாட மயிலாடவில் தேசிய கொடியுடன் சிலர் டான்ஸ் ஆட, கலா மாஸ்டர் கண்ணில் நீர் பொங்க என உணர்ச்சிகரமான கிளிப்பிங்ஸ் காட்டப்பட்டது.
கடைசியில் மானாட மயிலாடதான் உண்மையான தேச பக்தி நிகழ்ச்சி என்பதை அறியும் பொழுது எனக்கும் கண்ணில் நீர் பொங்குகிறது. ஜெய்ஹிந்த்!
■ வரதட்சணை கேட்பதையே குற்றமாக கருத முடியாது. வரதட்சணை கேட்டு துன்புறுத்தினால்தான் குற்றம் என உச்ச நீதி மன்றம் ஏதோ ஒரு வழக்கில் தீர்ப்பு சொல்லியிருக்கிறதாம். நல்ல வேளை குத்திக் கொலை செய்வதையே குற்றமாக கருத முடியாது. குத்தும்போது குடல் வந்து வெளியே விழுந்தால்தான் குற்றம் என சொல்லாமல் போனார்களே.
■ இந்த வருஷம் எங்கு மழை பொழிந்ததோ இல்லையோ. தமிழகத்தில் நல்ல இசை மழை. அடுத்தடுத்து வி.தா.வ., ராவணன், எந்திரன் என ஏ.ஆரின் இசை மழை பொழிந்தாலும் ராவணன், எந்திரனை விட எனக்கு வி.தா.வ வே சிறப்பாக தோன்றுகிறது.
■ இந்த வருஷம் எங்கு மழை பொழிந்ததோ இல்லையோ. தமிழகத்தில் நல்ல இசை மழை. அடுத்தடுத்து வி.தா.வ., ராவணன், எந்திரன் என ஏ.ஆரின் இசை மழை பொழிந்தாலும் ராவணன், எந்திரனை விட எனக்கு வி.தா.வ வே சிறப்பாக தோன்றுகிறது.
■ நிதியமைச்சருக்கே போன் செய்து வீட்டுக் கடன் வேண்டுமா என கேட்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு எனக்கே இரண்டு மார்கெட்டிங் அழைப்புகளாவது வந்து விடுகிறது. இதில் இன்பாக்சை நிரப்பும் எக்கச்சக்க எஸ்.எம்.எஸ்கள் வேறு. இதிலிருந்து நமது நாட்டில் மார்கெட்டிங் எக்சிகியூட்டிவ்ஸ் அயராமல், கூச்சப்படாமல் உழைக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதற்காக நிதியமைச்சருக்கே கடன் கொடுக்கிற அளவிற்கு வெகுளியாகவா இருப்பார்கள்?
■ கலாநிதி மாறனிடம் எந்திரன் படத்தை தயாரிக்க கேட்ட போது, அவர் ஷங்கரிடம் கதை கேட்கவில்லை.. பட்ஜெட் எவ்வளவு ஆகும், படத்தை எப்ப முடிப்பீங்க என்றுதான் கேட்டதாக ரஜினி சொன்னார்.
கலாநிதி மாறன் புத்திசாலி! யார் யாரிடம் எதை கேட்க வேண்டுமென அவருக்கு தெரிந்திருக்கிறது!
14 comments:
மானும்,மயிலும் ஆடுவதை ரசிக்காமல் விமர்சிப்பது ஏன்? :) தேசிய நிகழ்ச்சியை அவமதித்த சுகுமாரைக் கண்டித்துப் பதிவர்கள் சார்பில் விரைவில் குடிக்கா விரதம்! பழைய template நல்லாதானே இருதத்து? ஏன் மாற்றினீர்கள்?
ஸ்ரீ....
//இந்த வருஷம் எங்கு மழை பொழிந்ததோ இல்லையோ. தமிழகத்தில் நல்ல இசை மழை. அடுத்தடுத்து வி.தா.வ., ராவணன், எந்திரன் என ஏ.ஆரின் இசை மழை பொழிந்தாலும் ராவணன், எந்திரனை விட எனக்கு வி.தா.வ வே சிறப்பாக தோன்றுகிறது.//
ஆமோதிக்கிறேன்
எனக்கும் அப்படியே ஆனால் ராவணனை விட எந்திரன் பெட்டெர்
// தேசிய நிகழ்ச்சியை அவமதித்த //
அய்யா ஸ்ரீ... தெரியாம பண்ணிட்டேன் சாமி... இறையாண்மையை பாதிச்சுட்டேன்னு ஏதாவது கேஸ்ல இழுத்து விட்டுறாதீங்க ராசா...
// பழைய template நல்லாதானே இருதத்து //
அப்படியா சொல்றீங்க.. ரைட்டு.. மாத்திடலாம்...
நன்றிங்க சிவகாசி மாப்பிள்ளை
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..
வாங்க தர்ஷன்.. நன்றி உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்..
//கடைசியில் மானாட மயிலாடதான் உண்மையான தேச பக்தி நிகழ்ச்சி என்பதை அறியும் பொழுது எனக்கும் கண்ணில் நீர் பொங்குகிறது. ஜெய்ஹிந்த்//
எனக்கும் இத படிச்சவுடனே... கண்ணுலேர்ந்து தாரை தாரையா அருவி மாதிரி நிக்காம கொட்டுதுண்ணே.....
வாங்க Jey... அடாடா.. நீங்களும் பீலிங் ஆயிட்டீங்களா... சே சே... மனசை தேத்திக்குங்க... என்ன பண்றது..
நல்ல பதிவு .. சானல்கள் எல்லாம் போட்டி போட்டுகிட்டு நம் தேச பக்தியை வளர்கிறார்கள்.
// சாருஸ்ரீராஜ் //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..
நானும் ஏதும் ப்ளாக் மாறி வந்துட்டமான்னு யோசிச்சுக்கிட்டே படிச்சுட்டு, தலைப்பப் பார்த்தா ஒரே
ஃபீலிங்ஸ்பா
///////கலாநிதி மாறனிடம் எந்திரன் படத்தை தயாரிக்க கேட்ட போது, அவர் ஷங்கரிடம் கதை கேட்கவில்லை.. பட்ஜெட் எவ்வளவு ஆகும், படத்தை எப்ப முடிப்பீங்க என்றுதான் கேட்டதாக ரஜினி சொன்னார்.///////
தெளிவான ஆளுதான் போங்க . பகிர்வுக்கு நன்றி
Maanaada mayilaada comment super! padiththa en kangalilum kanneer! Aanaa Endhiran songs good, but vinnaithaandi varuvaayaa songs best nu sonnadhai naan angeegarikkavillai...Irumbilae oru idhayam paattu ondrae podhum..adhukkae Rahman ku naalu grammy kudukkalaam! One of the best club tracks I have heard so far! maththa paadalgal konjam sumaardhaan!
இப்போதான் பார்த்தேன்.
கடைசி பன்ச் .... சூப்பர்..
Post a Comment