Sunday, April 3, 2011

உலக கோப்பை வெற்றி - விட்டுவிட விரும்பாத தருணம்





இதோ இந்தியா உலகக்கோப்பையினை இரண்டாம் முறையாய் வென்றே விட்டது. வாழ்நாளுக்கும் மறக்க முடியாத இத்தருணத்தை ஒரு டைரிக்குறிப்பின் அளவிற்கேனும் பதிவு செய்து வைத்து விட மனம் ஆசைப்படுவதால் கொண்டாட்டங்கள் முடித்த உடனேயே இந்த பதிவை எழுத உட்கார்ந்துவிட்டேன். ஏனெனில் இந்த நிமிடங்கள் அபூர்வமானவை. உற்சாகமூட்டுபவை. பெருமைப்பட வைப்பவை. இதை அப்படியே விட்டு விட மனதில்லை.

Sachin Tendulkar and Gautam Gambhir walk with the trophy

போட்டி ஆரம்பிக்கும் முன்னரே தோனி சொல்லியிருந்தார். இந்த உலகக்கோப்பையை சச்சினுக்காக பெற்றுத்தருவோம் என்று. அதே போல் இன்று சச்சின் கையில் கோப்பையை பார்க்க மகிழ்சசியாக இருக்கிறது. அனைவரும் அவரை தலையின் மேல் தூக்கி வைத்து வலம் வருவது சிலிர்ப்பாக இருக்கிறது.


பங்களாதேஷ் உடனான முதல் போட்டி ஆரம்பித்த அன்று எனது ஃபேஸ்புக் புரஃபைல் புகைப்படத்தை இவ்வாறாக மாற்றினேன். ஏதோ ஒரு நம்பிக்கை இருந்தது இம்முறை தோனி மீது. ஐபிஎல் வென்றதும், சாம்பியன்ஸ் லீக் வென்றதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

முதல் சுற்றுகள் முடிந்த உடன், இருந்த நம்பிக்கைக்கு எல்லாம் அடுத்தடுத்து சோதனையாக அணிகள் வரிந்து கட்டி வரத்துவங்கின. முதலில் ஆஸ்திரேலியா. மூன்று முறை உலக சாம்பியன்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அந்த காலிறுதி போட்டி அதிகபட்சமாக இதயத்துடிப்பை எகிறச்செய்தது. கடைசி ஓவர்களில் யுவராஜும் ரெய்னாவும் தில்லாக விளையாடி வென்றது மறக்க முடியாத அனுபவம். பார்க்கும் நமக்கே படபடப்பாய் இருக்கிறதே.. எப்படி இவர்கள் நின்று விளையாடுகிறார்கள் என நினைத்து நினைத்து ஆச்சர்யப்பட்டேன். என்றைக்கு ஆஸ்திரேலியாவை கோப்பை பெற முடியாமல் தோற்கடித்து அனுப்பினார்களோ அன்றே நாம் முழு வெற்றி பெற்றுவிட்டதாகத்தான் அர்த்தம்.

அடுத்து பாகிஸ்தான் அரையிறுதியில். அந்த ஆட்டத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஆஸ்திரேலியா அளவிற்கு படபடப்பை எகிறச்செய்யும் டைட் மேட்சாக இல்லையென்றாலும் மோதும் அணிகளுக்கான மதிப்பு மற்றும் பகை நாடுகள் என்ற பொதுவான பதம் காரணமாக இந்தியா ஜெயிக்கும் வரை படபடப்பாகவே இருந்தது. ஆனால் இந்த போட்டியில் பாக் வீரர்கள் நடந்து கொண்ட விதம் மெய்சிலிர்க்க வைத்தது. குறிப்பாக அப்ரிடி பேச்சு உண்மையான ஸ்போர்ட்மேன் ஷிப்பை வெளிப்படுத்தியது.

அடுத்ததாக இலங்கை. இங்கிலாந்தை விக்கெட் லாஸ் இன்றி அவர்கள் அடித்த விதம் கண்டு பயந்து போயிருந்தேன். ஆனால் இன்று தோனியும் அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்றிவிட்டனர்.

கோப்பையை வென்று விட்டு அதே எளிமையாக தோனி பேசுகிறார். கோப்பையை பெற்றுக்கொண்டு அணியினரிடம் கொண்டாட கொடுத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இதைப்போன்ற ஒரு தலைமைப் பண்பு, திறமை, தன்னடக்கம்தான் அவரை மென்மேலும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.

பள்ளிப்பருவத்தில் காம்ப்ளி அழுது கொண்டே உலகக்கோப்பை கனவை தகர்த்து வெளியேறியது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த தீராத ஏக்கத்திற்கு மருந்தாக இன்றைய சச்சின், சேவாக், பஜ்ஜியின் ஆனந்த கண்ணீர்த்துளிகள் அமைந்திருக்கின்றன. நீண்ட நாட்களாக காலில் குததியிருந்த முள் ஒன்று நீங்கினாற் போல் இருக்கிறது.

சிறப்பான இரவு. மகிழ்வாக தூங்கப்போகிறேன். தோனி மற்றும் இந்திய அணியினருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.

The champions celebrate with the World Cup trophy

17 comments:

Philosophy Prabhakaran said...

// பார்க்கும் நமக்கே படபடப்பாய் இருக்கிறதே.. எப்படி இவர்கள் நின்று விளையாடுகிறார்கள் என நினைத்து நினைத்து ஆச்சர்யப்பட்டேன். //

ஒவ்வொரு மேட்ச் பார்க்கும்போது எனக்கும் அதே ஆச்சர்யம் இருந்தது...

Philosophy Prabhakaran said...

// பள்ளிப்பருவத்தில் காம்ப்ளி அழுது கொண்டே உலகக்கோப்பை கனவை தகர்த்து வெளியேறியது இன்னும் நினைவில் இருக்கிறது. //

அதுதான் நான் பார்த்த முதல் கிரிக்கெட் மேட்ச் என்று நினைக்கிறேன்... சச்சின் அவுட் ஆனதும் வரிசையாக எல்லாரும் அவுட் ஆனது இன்றும் நினைவில் இருக்கிறது...

butterfly Surya said...

பெருமை மிக்க தருணம்!

Excited !!!!!!!

middleclassmadhavi said...

our boys have done it! Congrats team India!

ஊரான் said...

துன்பக் கடலில் துவளும் இந்தியா!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்றிருந்தால்....
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_02.html

எல் கே said...

//பள்ளிப்பருவத்தில் காம்ப்ளி அழுது கொண்டே உலகக்கோப்பை கனவை தகர்த்து வெளியேறியது இன்னும் நினைவில் இருக்கிறது. அந்த தீராத ஏக்கத்திற்கு மருந்தாக இன்றைய சச்சின், சேவாக், பஜ்ஜியின் ஆனந்த கண்ணீர்த்துளிகள் அமைந்திருக்கின்றன. நீண்ட நாட்களாக காலில் குததியிருந்த முள் ஒன்று நீங்கினாற் போல் இருக்கிறது./

உண்மை உண்மை

மாணவன் said...

//தோனி மற்றும் இந்திய அணியினருக்கு சிறப்பான வாழ்த்துக்கள்.//

இந்த மகிழ்ச்சியான தருணங்களை உடனே பதிவிட்டு பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே :))

Unknown said...

எங்கள் தெருவில் நேற்று வெடித்த வெடிகள் இன்னும் காதுகளில் எதிரொலிக்கிறது.

Unknown said...

வாழ்த்துக்கள் நண்பரே

Sukumar said...

@ Philosophy Prabhakaran
நன்றி பிரபா.. வருகைக்கும் கருத்துக்கும்..

@ butterfly Surya
நன்றி தல


@ middleclassmadhavi

Yes.. Ma'm..
Thanks for the Comment


@ ஊரான்

நன்றி வருகைக்கு

@ எல் கே

நன்றி பாஸ்.. வருகைக்கும் கருத்துக்கும்


@ மாணவன்
உங்களது பின்னூட்டத்தை பகிர்ந்து கொண்டமைக்கும் மிக்க நன்றிகள் நண்பரே...


@ கலாநேசன்
ஆம்.. மகிழ்ச்சியான தருணங்கள் சார்...


@ விக்கி உலகம் said...
நன்றி பாஸ்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Ist time I saw the match. Its excellent

Anonymous said...

//முதலில் ஆஸ்திரேலியா. மூன்று முறை உலக சாம்பியன்.//
தவறு. நான்கு முறை.

டோனியை வந்த நாளில் இருந்தே பிடிக்கும். இந்தியாவுக்குக் கிடைச்ச ஒரே ஒரே கூலான ஸ்கிப்பர். டென்ஷன் காட்டாத முகம். ரொம்ப கூலாக விளையாடும் போது ரொம்ப பிடிக்கும். நான் சொல்லும் போதெல்லாம், லூசா நீ என்று பார்த்தவர்கள் தான் அதிகம். இப்பவாவது புரிஞ்சுக்கோங்கோ மக்காள்ஸ்.

pozhuthupoku said...

கோப்பையை வென்று விட்டு அதே எளிமையாக தோனி பேசுகிறார். கோப்பையை பெற்றுக்கொண்டு அணியினரிடம் கொண்டாட கொடுத்துவிட்டு எங்கோ சென்றுவிட்டார். இதைப்போன்ற ஒரு தலைமைப் பண்பு, திறமை, தன்னடக்கம்தான் அவரை மென்மேலும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.

Boss...dhoni sonnaru..
i have to answer many questions if "I" did not win the match...
parrunga...avaru "I" nu sonnathukku pathila "we" nu soliruntha neenga solrathu correctu.. ithu ennoda openion.. avlothan.. the great captain of india is kapildev forever..

Cable சங்கர் said...

நல்லா எழுதியிருக்கே சுகுமார்.

Sukumar said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
Thanks for the Comment Boss...


@ அனாமிகா துவாரகன்
தொடர்ச்சியாக மூன்று முறை பெற்று வந்தவர்களை வீட்டுக்கு அனுப்பியதை சொல்ல வந்தேன்.
நன்றி வருகைக்கும் கருத்துக்கும்..

@ Rathnavel
நன்றி பாஸ்....


@ pozhthupoku
தோற்கும் பட்சத்தில் தான் அப்படி சொல்ல வேண்டும் என தோனி சொன்னார். அவ்வகையில் பார்த்தால் தோல்விக்கு தலைவனே பொறுப்பு வேறு யார் மீதும் பழி போட முடியாது என்கிற கோணத்திலும் அவரது தலைமைப் பண்பை நான் பார்க்கிறேன். மற்றபடி கபில்தேவ் சிறந்த கேப்டன் என்பதில் மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. நன்றி வருகைக்கும் கருத்திட்டமைக்கும்.


@ சங்கர் நாராயண் @ Cable Sankar
நன்றி தல.. எல்லாம் உங்க ஆசிர்வாதம்..

சாருஸ்ரீராஜ் said...

எங்கள் வீட்டு குட்டிஸ் கூட கண்விழித்து கோப்பையை வென்றதை பார்த்தாங்க அவர்களுக்கு அளவில்லா சந்தோசம் ,அந்த சந்தோச தருணத்தை நினைத்து பார்கும் போதே சிலிர்க்கிறது.

Unknown said...

தோல்விக்கு தலைவனே பொறுப்பு வேறு யார் மீதும் பழி போட முடியாது என்கிற கோணத்திலும் அவரது தலைமைப் பண்பை நான் பார்க்கிறேன்



Really me too Was thinking so....