அஞ்சாதே' ஏற்படுத்திய பிரமிப்பே இன்னும் எனக்கு அடங்கவில்லை. அதற்குள்ளாக 'யுத்தம் செய்'. சமூகத்தில் ரகசியமாக நடக்கும் குற்றங்கள். இதனால் பாதிக்கப்படும் சாதாரண பெண்கள். இவ்வாறாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள, குறிப்பாக இளம்பெண்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறிதும் ஆபாசம் கலக்காமல் 'அஞ்சாதே'விற்கு அடுத்து சொல்லப்பட்டிருக்கும் கதை 'யுத்தம் செய்'. அவ்வகையில் இதைப்போன்ற படங்களை தொடர்ந்து அளிப்பதற்கு மிஷ்கினுக்கு ஒரு பெரிய ராயல் சல்யூட்.
கதை
இதைப்போன்ற சஸ்பென்ஸ் முடிச்சுக்கள் கொண்ட திரில்லர் கதையை சொல்வது மகா பாவம். படம் பார்க்கும் முன்னர் என்னதான் கதையை படிக்காமல் நான் தவிர்த்தாலும் படித்த விமர்சனங்களில் வந்த மற்ற ஒன்றிரண்டு வரிகளாலேயே சில முடிச்சுக்கள் படம் பார்க்கும்பொழுது புரிபட்டு போனதால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. ஸோ படம் பார்க்க செல்பவர்கள் தயவு செய்து எங்கும் கதையை படிக்க வேண்டாம்.
நடிப்பு
■ முதன்முறையாக அமைதியான ஆக்ஷ்ன் ஹீரோ அவதாரத்தில் சேரன் தான் ஏற்ற பாத்திரத்தை கனகச்சிதமாக நிறைவேற்றியிருக்கிறார். அந்த இடைவேளைக்கு முன்னர் வரும் சண்டையிலும் சரி அதற்கு முன்பாக மெதுவாக வீட்டை விட்டு கிளம்பி நடப்பதிலும் சரி நாம் தமிழ் திரையில் முன்னெப்போதும் பார்த்திராத காவல் அதிகாரியாக அமைதியாக சேரன் அசத்துகிறார். பஞ்ச் பேசி நாட்டைக் கெடுக்காத, கலர் கலராக வலம் வந்து கண்ணைக்கெடுக்காத ஹீரோ தேடுபவர்களுக்கு சேரன் நல்ல விடை.
■ ஒய்.ஜிக்கு அல்வா சாப்பிடுவது மாதிரியான ரோல். முதன்முதலில் காவல் நிலையத்தில் குறுகி செய்தறியாது குடும்பத்துடன் நிற்கும் காட்சியில் வாவ்.. லவ்லி சார். அவரது மனைவியாக வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் பின்னுகிறார். கிளைமேக்ஸ் காட்சியில் அவரது ஆளுமை முக்கியமானது.
■ இன்ஸ்பெக்டர் இசக்கி முத்து உடனான சேரனின் முதல் விசாரணை காட்சியில் இசக்கியாக நடிதது இருப்பவரது பெர்ஃபார்மென்ஸ் அபாரம். வெறுப்பு, பயம், கோபத்தை அட்டகாசமாக பாடி லாங்குவேஜில் காட்டி அசத்துகிறார் மனிதர்.
■ ஜுதாஸாக வரும் ஜெயப்பிரகாஷ் மற்றுமொரு ஹைலைட். முதல் காட்சியில் தூக்கத்திலிருந்து எழும்பி வருவது முதற்கொண்டு கடைசியில் மூச்சிறைத்துக்கொண்டே பேசுவது வரை வரும் இடங்களில் எல்லாம் கச்சிதமாக நடித்திருக்கிறார்.
■ தீபா ஷா நாட் பேட். மாணிக்க விநாயகம் அருமையான பெர்பார்மன்ஸ். செல்வா இன்னும் கொஞ்சம் மிரட்டியிருக்கலாமோ என தோன்றுகிறது. இன்னும் பல பல பெயர் தெரியாதவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை உணர்ந்து செய்திருப்பதால் படம் பளிச்சிடுகிறது.
இசை
இசை அருமை என ஒரே ஒரு வரியில் சொல்லிவிட்டால் அது ரொம்பவும் கம்மி.
அட்டகாசமான பின்னணி இசை பாஸ். சி.டி.யில் Box Theme என வரும் இசை, படத்தில் டென்ஷனை ஏற்றுகிறது. Chaos Theme மெல்லிய சோகம் இழையோட புதிர் உணர்வினை மனதுக்குள் விளைவிக்கிறது. Hope Theme இசை வரும் காட்சி படத்தில் நெகிழ்ச்சியை ஊற்றுகிறது. 'கன்னித்தீவு பெண்ணா' பாடல் மட்டும் அதன் மூதாதையர்களான 'வாலமீனு' ('ல' வா இல்லை 'ள' வா பாஸ்?) மற்றும் 'கத்தாழ கண்ணால' அளவிற்கு ஜொலிக்காது என நினைக்கிறேன்.
நெகிழ்ச்சி
■ கிளைமேக்ஸ் ரொம்பவும் நெகிழ்ச்சியானது, சேரனின் தங்கையை சுஜா என ஒய்.ஜியும், அவரது மனைவியும் அழைத்து கத்தியை உடனடியாக கீழே போடுவது மிஷ்கினின் டிரேட்மார்க் சென்டிமென்ட் பஞ்ச்.
■ 'அஞ்சாதே'வில் கடத்தப்பட்டு பின் காரில் இருந்து லுங்கியுடன் இறக்கி விடப்படும் இளம்பெண்ணை பார்த்த மாத்திரத்தில் நரேன் ஓடிச்செல்வாரே அந்த ஃபீல் இந்த படத்தின் கிளைமேக்சில் வருகிறது.
■ படத்தின் இசை டாப் டக்கர். பிண்ணனி இசை சரியான இடங்களில் மிகச்சரியாக செட் ஆகியிருப்பது படத்திற்கு மிகப்பெரிய பலம்.
■ "கொஞ்சம் அறிவை வச்சுகிட்டு நீங்களே இவ்வளவு பண்ண முடியும்னா நிறைய அறிவை வச்சுகிட்டு நாங்க எவ்வளோ பண்ண முடியும்" என ஜெயப்பிரகாஷ் சொல்லும் இடம் உட்பட வசனமும் படத்தில் டாப்.
விஷுவல்ஸ்
■ காட்சியமைப்புகள் பல இடங்களில் ரசிக்க வைக்கின்றன. இன்ஸ்பெக்டரை சேரன் விசாரிக்கையில் சட்டென ஒய்.ஜி புகார் அளிக்க வரும் காட்சியை பிளாஷ்பேக்கில் மாற்றி டக்கென டீ கொண்டு வரும் நிகழ்காலத்துக்கு திரும்பி வருவது லவ்லி விஷுவல்.
■ அந்த சிறுமி ஜன்னலோரம் நின்று பழைய காட்சியை நினைவுபடுத்தி சட்டென ஆமா சார் இன்னொருத்தர் ஆட்டோவில் இருந்தார் என சொல்வதும் அருமை.
■ அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனை இருளில் காண்பித்து கரண்ட் கட் ஆகி சட்டென பகல் பொழுதிற்கு மாறுவது அருமை.
■ கடைசியில் அந்த சிறுவன் விமான நிலைய எஸ்கலேட்டரில் ஏறி விடியலை நோக்கி செல்வது போன்ற காட்சியமைப்பில் இத்தனை சஸ்பென்ஸ், இத்தனை முடிச்சுக்களையும் அவிழ்த்து நெகிழ்ச்சியான தீர்வை சொல்லும் இடத்திற்கு ஏற்றாற்போல் மனதிற்கு இதமாய் அமைந்துள்ளது.
■ கதையின் முக்கிய முடிச்சான பீப் ஷோ நிகழ்வுகளை மற்ற எந்த சாதாரண கமர்ஷியல் தமிழ் சினிமாவை விடவும் டீசன்டாக காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.
நெருடல்
■ என்னதான் பெண்ணுக்காக பழி வாங்கினாலும் குடும்பத்தினர் அனைவரும் புரஃபஷனல் கில்லர் போல் கருப்பு உடையணிவது கொஞ்சம் இடிக்கிறது.
■ முதல் பாதியில் ஏகப்பட்ட பெயர்கள், ஏகப்பட்ட முடிச்சுக்கள், விசாரணைகள் என கொஞ்சம் கவனம் தப்பிவிட்டாலும் குழப்பிவிடக்கூடிய விதத்தில் படம் அமைந்திருக்கிறது.
■ அவ்வளவு நாள் தேடிய ங்கை கிடைக்க வாய்ப்பு வருகிறது என்றாலும் உயர் அதிகாரி சொல்லிவிட்டார் என்பதற்காக எதுவும் செய்யாமல் சேரன் வீட்டில் போய் அமைதியாய் உட்காருவது இடிக்கிறது.
ஆனாலும் எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்காகவும் தரப்பட்டுள்ள நல்ல படைப்பிற்காகவும் இதற்கு மேல் இங்கு எதையும் பட்டியிலிட விரும்பவில்லை.
__________________________
ஆறு பாட்டு, ஏழு ஃபைட்டு என டார்ச்சர் செய்யும் தமிழ் சினிமாவில் கொடுத்த காசிற்கு எரிச்சல் படாமல் ஆத்ம திருப்தியுடன் ரசிகன் வெளியில் வரும் படங்களில் யுத்தம் செய் முக்கிய இடம் பிடிக்கும்.
12 comments:
ம்.. நல்லாருக்கு..
இன்னும் அந்த படம் பார்க்கும் வாய்ப்பு எனக்கு வரவில்லை.... கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று இருக்கிறேன். :-)
Good Review..
அஞ்சாதேக்கு அப்புறம் நந்தலாலா வந்துச்சே.. பார்க்கலையா தம்பி..?
உங்கள் எழுத்து மிக நன்றாக வந்திருக்கிறது.
பெண்பிள்ளைகள் வந்து பார்க்கிற படமில்லை இது, ஆகையால் பெரிய வெற்றியை எதிர்பார்ப்பதற்கில்லை.
மிஷ்கின் deja vu அலுப்பு வரம்புக்குள் வந்துவிட்டார் என்றே தோன்றுகிறது. தப்பிப்பாரா?
கேபிள் சங்கர் பதிவுக்கு இட்ட எனது பின்னூட்டம்:
தொழில்நுட்பங்கள் எல்லாம் தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள், ஆனால்...
‘ஸுஜாத’ என்றால் உயர்பிறப்பு என்று அர்த்தம். யோனி சிதைக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்தப் பெண்ணின் பெயர் அது.
வைசியக் கிழடுகளின் பார்வை ருசிக்கு யோனி சிதைத்துக் காட்டும் சூத்திரர்களின் கைகள் வெட்டப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் படுகின்றன. Sex & violence-ஐக் காட்சிப்பொருள் ஆக்காதீர்கள் என்று சொல்வதற்கும் எவ்வளவு வன்முறை தேவைப்படுகிறது பாருங்கள்! கொப்பூழைக் காட்டாமல் குத்துபாட்டு வைத்து என்ன புண்ணியம், ரோஜா இதழ்கள் மிதக்கும் நீர்க்குட்டைக்குள் சிறுபெண்கள் மீது பாயும் கருத்த தடியர்கள் நம்மை psychological rape பண்ணிவிடுகையில்? (இதே மனவெளி வற்கலவி ‘அஞ்சாதே’ படத்திலும் உண்டு).
Antagonist-களுக்கு ஒத்தாசையாய் இருக்கிற க்ஷத்திரியர்களுக்கு இசக்கிமுத்து, துரைப்பாண்டி இப்படியாக்கும் பெயர்கள்.
Protagonist கருப்பனுக்குப் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இறுதிச் சண்டையில் இவர், அவன்களே அடித்துக்கொண்டு சாகட்டும் என்று ஒதுங்கி நிற்கிறார். ‘மகாபாரத’ influence-ஆ?
Opening shot-இல் top angle வைக்கும்போதே இது மேல்தட்டுப் பார்வை என்று விளக்கிவிடுகிறார். ஆனால், பாதிக்கப் படுகிற ‘அறிவுள்ளவர்கள்’ யுத்தம் செய்வதே சாலும் என, யூதாயிஸ போதனையான ‘கண்ணுக்குக் கண்’ கொள்கையைத் தூக்கிப் பிடிக்கையில், போராளிகளை பித்துப்பிடித்தவர்களாகக் காட்ட வேண்டிய அவசியம் என்ன? தோஸ்தொயேவ்ஸ்கிக்கே வெளிச்சம்!
// சங்கர் நாராயண் @ Cable Sankar //
நன்றி தல.. இதென்ன புதுசா பெயர் மாத்திட்டீங்களா...?
// Chitra //
அவசியம் பார்க்கவும்... வருகைக்கு நன்றிகள் பல...
// உண்மைத்தமிழன் //
வருகைக்கு நன்றிண்ணே... அது வேறு இது வேறுண்ணே.. ஹி.. ஹி.. நந்தலாலா பார்த்தேன்.. ஆனால் அஞ்சாதே யுத்தம் செய் ஒரே ஜெனரி என்பதால் சிறு ஒப்பீடு..
// உங்கள் எழுத்து மிக நன்றாக வந்திருக்கிறது. //
நன்றி Rajasundararajan...
// பெண்பிள்ளைகள் வந்து பார்க்கிற படமில்லை இது, ஆகையால் பெரிய வெற்றியை எதிர்பார்ப்பதற்கில்லை. //
பதிவு எழுதும் முன்னர் படம் பார்த்த எனக்கு தெரிந்த கல்லூரி பெண் ஒருவர் இப்படத்தினை கண்டிப்பாக அனைத்து இளம்பெண்களும் பார்க்க வேண்டும் என்று கூறியதை உங்களுக்கு இங்கே சொல்ல விரும்புகிறேன்.
இவ்வாறெல்லாம் சமூகத்தின் மறைவில் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் அதற்கான விழிப்புணர்வை அவர்கள் பெறுவதும் இன்றைய நிலையில் மிகவும் அவசியம் என்பதால் முக்கியமாக அவர்கள்தான் இப்படத்தை பார்க்க வேண்டும் என்பதும் எனது தாழ்மையான கருத்து.
// கருத்த தடியர்கள் நம்மை psychological rape பண்ணிவிடுகையில்? //
வெள்ளை ஒல்லியர்கள் மற்ற படங்களில் கதாநாயகிகளை தங்கள் பின்னால் லூசுப்பெண் போல் சுற்ற வைத்து தங்கள் மேலே மேலே வந்து விழ வைத்து தமிழ் பெண்களின் மரியாதையை கெடுத்து Heritage Cultural Rape செய்வதற்கு ஒப்பிடுகையில் இப்படத்தில் கருத்த தடியர்களின் சில வினாடிகள் Psychological rape நாகரீகமாகவே காட்டப்பட்டிருக்கிறது.
நுண்ணிய கோடுகளால் வரையப்பட்ட அழகான ஓவியமாக உங்கள் விமர்சனம்.
வாழ்த்துக்கள் தம்பி.
// காவேரி கணேஷ் //
ஆஹா அழகான பின்னூட்டம்... மிக்க நன்றி அண்ணே...!!!
நன்றி, என்னுடைய பிழையான வாக்கிய அமைப்பைச் சுட்டிக் காட்டியமைக்காக.
/ரோஜா இதழ்கள் மிதக்கும் நீர்க்குட்டைக்குள் சிறுபெண்கள் மீது பாயும் கருத்த தடியர்கள் நம்மை psychological rape பண்ணிவிடுகையில்/ என்பது /ரோஜா இதழ்கள் மிதக்கும் நீர்க்குட்டைக்குள் சிறுபெண்கள் மீது பாயும் வன்முறைக் காட்சி நம்மை psychological rape பண்ணிவிடுகையில்/ என்று இருக்க வேண்டும்.
நன்றி.
விமர்சன பகிர்வுக்கு நன்றி நண்பரே
Post a Comment