கண்ணா லட்டு தின்ன ஆசையா?
புத்தக கண்காட்சி நடைபெற்ற வாரத்தில் இடையே வைரஸ் காய்ச்சலில் படுத்து விட்டதால் பல புத்தகங்கள் வாங்க முடியாமல் போனது வருத்தமாக இருந்தது. நடப்பவை யாவும் நன்மைக்கே என்பதை போல நேற்று கிழக்கு பதிப்பகத்தின் அதிரடி கிளியரன்ஸ் புத்தக விற்பனை கண்காட்சிக்கு போயிருந்தேன். 'டேமேஜ் புக்ஸ்' என சீல் இடப்பட்டுள்ள புத்தகங்களை குறைந்த விலையில் விற்கிறார்கள். எனக்கு அலிபாபா குகைக்குள் நுழைந்து புதையலை பார்த்தது போல் இருந்தது. பல நாட்களாக வாங்க வேண்டும் என நினைத்திருந்த புத்தகங்களை எல்லாம் நினைத்து பார்க்க முடியாத விலை குறைவில் வாங்கினேன். மொத்தத்தில் ரூ.1,200 மதிப்புள்ள புத்தகங்களை வெறும் ரூ.240க்கே வாங்க முடிந்தது. சில புத்தகங்கள் புத்தம் புதியதாக இருக்கிறது. ஆனால் எதையும் டேமேஜ் என சொல்லிவிட முடியாத அளவில் நன்றாகத்தான் இருக்கிறது. ரூ.90, ரூ.100, ரூ.200 மதிப்புள்ள புத்தகங்கள் எல்லாம் ரூ.10, ரூ.20, ரூ.30 போன்ற விலைகளில் கிடைக்கிறது. புத்தக பிரியர்கள் மிஸ் செய்யவே கூடாத கண்காட்சி. நடக்கும் இடம் டி.நகர் பேருந்து நிலையம் அருகே. சிவா விஷ்ணு ஆலயத்திற்கு நேர் எதிரே. எல்.ஆர்.சுவாமி ஹால், மைலாப்பூர் குளத்திற்கு அருகில்
'க'னா 'ஜெ'னா 'கே'னா
கேப்டனுக்கு இந்த தேர்தல் தலை தீபாவளி போலத்தான். புதுமாப்பிள்ளை ரேஞ்சுக்கு "தம்பி.. டீ இன்னும் வரல" என அலட்டலாக இருக்கிறார். ஆனால் 'க'னாவும் வேணாம். 'ஜெ'னாவும் வேணாம் அதுக்கு பதில் தனியா நின்னு தவிதவிக்கிற 'கே' னாவுக்கு குத்துவோம் என ஒரு லட்சம் மக்களும் ஓட்டு குத்தியது இவரது 'தனி'த்தன்மைக்குதான். இனி இவர் இரண்டில் ஒன்றுடன் கூட்டணி சேர்ந்தால் உண்மையில் அது இவருக்கு சாதகமாக அமையுமா இல்லை பாதகமாக அமையுமா என்பது 2011 தேர்தலில் நடக்கப்போகும் பல ஆச்சரியங்களில் ஒன்று.
வேர்ல்டு கப்பு வருது ஓடுங்க ஓடுங்க
வேர்ல்டு கப் வருகிறது. ஆனால் முன்பெல்லாம் உள்ளே எழும் குதூகலமே இப்பொழுது இல்லை. வருடா வருடம் ஏதாவது ஒரு கப்பை வைத்து ஐ.சி.சி கல்லா கட்டுவதும் ஐ.சி.சியை விழுங்கும் ஐ.பி.எல்லின் அட்டகாசமும் கிரிக்கெட் மீதிருந்த மரியாதையை குறைத்துவிட்டன. இதில் இந்தியா தோற்றாலும் அடுத்த ஒரே வாரத்திற்குள் ஐ.பி.எல் வந்துவிடுவதால் தோனியின் கொடும்பாவி எரிப்போ, ஹர்பஜனின் வீடு மீது கல் விழும் சம்பவங்களோ நிகழ வாய்ப்பில்லை.
காதில் விழுந்தது
"சார் நாங்க ------- பேங்க்ல இருந்து பேசுறோம்... கிரெடிட் கார்டு ஆஃபர் பண்றோம்..."
"மேடம்.. நான் ஆபிஸ்ல இருக்கேன் ஈவினிங் 7 மணிக்கு மேல கால் பண்ணுங்க..."
"சாரிங்க சார்.. 6 மணிக்கு பண்ணட்டுமா?"
"அப்படியா உங்க மொபைல் நம்பர் கொடுங்க மேடம்.. நானே பண்றேன்..."
"இல்லை சார் மொபைல் நம்பர் பர்சனல்... இந்த ஆபிஸ் நம்பருக்கே பண்ணுங்க..."
"இது என்னங்க அநியாயமா இருக்கு... உங்க நம்பர் பர்சனல்னா அப்போ என் மொபைல் நம்பர் மட்டும் பப்ளிக்கா.. National Do Not Disturb Directory ல என் நம்பரை போட்டு வச்சும் எந்த தைரியத்துல போன் பண்றீங்க...?"
எஸ்.எம்.எஸ்
காதலி : "உங்களுக்கு தாடி வைச்சா நல்லா இருக்கும்"
காதலன் : "கழட்டி விட போறேன்னு நேரடியா சொல்லு"
மனைவி : "பக்கத்து வீட்ல பெரிய சண்டை நடக்குது.. நீங்க ஒரு தடவை அங்க போய் என்னன்னு பார்க்க கூடாதா?"
கணவன் : "நான் ஒரு தடவை அங்க போனதால வந்த சண்டைதான்டி அது!"
Tags : Valaimanai, Valamanai Blog, Valaimanai Blogspot, Sukumar Swaminathan, Sukumarswamin, Feelings, Day-to-day events, Diary, Arasiyal, Captain vijakanth, World CUp 2011 ICC, IPL SEason 4, Forward SMS Joke
21 comments:
பீலீங்ஸ் சூப்பர்...
காதில் விழுந்தது பிளஸ் SMS - ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... செம காமெடி!
காதில் விழுந்தது//
kalakkal
Feelings shared - nice!
// சங்கவி //
நன்றி... வருகைக்கும் வாழ்த்துக்கும்..
// Chitra ??
தொடர் ஆதரவிற்கு நன்றிங்க...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) //
ரொம்ப தேங்க்ஸ் பாஸ்...
// middleclassmadhavi //
Thank you so much !!!!
காதில் விழுந்தது , S.M.S இரண்டுமே சூப்பர்.
எல்லாம் சூப்பர் தல
உண்மையா காதில் விழுத்தது எடுக்க முடியல்ல உள்ளே பிடித்து வைத்து விடேன் .
அங்க நீங்கதான் போனிங்களா .பக்கத்துக்கு வீடுக்கு
// சாருஸ்ரீராஜ் //
ரொம்ப நன்றிங்க...
// GD //
நன்றி தல... :)
// A.சிவசங்கர் //
நன்றி வருகைக்கு.. குதூகலமா இருக்கிற குடும்பத்துல கும்மி அடிச்சிட்டு போயிடாதீங்க பாஸ்... ஹி..ஹி...
மனைவி : "பக்கத்து வீட்ல பெரிய சண்டை நடக்குது.. நீங்க ஒரு தடவை அங்க போய் என்னன்னு பார்க்க கூடாதா?"
கணவன் : "நான் ஒரு தடவை அங்க போனதால வந்த சண்டைதான்டி அது!"///////////////////////////////போங்க சார் இதெல்லாம் போயி வெளியே சொல்லிட்டு...
உங்க நம்பர் பர்சனல்னா அப்போ என் மொபைல் நம்பர் மட்டும் பப்ளிக்கா
இந்த ரிப்ளை இதுவரை நமக்கு உதிக்காம போயிட்டது.
இனி, எவனாவது போன் பண்ணட்டும், இந்த டார்ச்சர் தான்.
காதில் விழுந்தது எஸ்.எம்.எஸ்.ரெண்டும் சூப்பர்..
//ஆனால் முன்பெல்லாம் உள்ளே எழும் குதூகலமே இப்பொழுது இல்லை. வருடா வருடம் ஏதாவது ஒரு கப்பை வைத்து ஐ.சி.சி கல்லா கட்டுவதும் ஐ.சி.சியை விழுங்கும் ஐ.பி.எல்லின் அட்டகாசமும் கிரிக்கெட் மீதிருந்த மரியாதையை குறைத்துவிட்டன. //இப்படியெல்லாம் உங்களுக்கு ஆசை இருக்கா? எத்தனை மேட்சுகளில் இந்திய அணி ஊத்திகிட்டாலும், அதை [நன்றல்லது அன்றே மறப்பது நன்று] அப்படியே மறந்துவிட்டு அடுத்து வரும் எவ்வளவு சப்பை மேட்சையும் உட்கார்ந்து பார்க்கவும், அதில் எந்த பந்து எந்த ஆங்கிளில் வந்தது என்று பட்டி மன்றம் போட்டு விவாதிக்கவும் நம்ம கூமுட்டைகள் ரெடியா இருக்கு. IPL, ICC கிரிக்கெட் காரனுங்க கொட்டத்தை ஒரு போது அடக்க முடியாது.
//"நான் ஒரு தடவை அங்க போனதால வந்த சண்டைதான்டி அது!"// சூப்பர், ஹா..ஹா..ஹா..ஹா..
// புலிக்குட்டி //
ஹா.. ஹா.. ஆமால்ல... வருகைக்கு நன்றிங்க...
// காவேரி கணேஷ் //
ரைட்டு தல.. நன்றி கருத்துக்கு...
// மணி (ஆயிரத்தில் ஒருவன்) //
நன்றி பாஸ்...
// Jayadev Das //
நன்றி வருகைக்கு...
நல்லாதான் இருக்கு பீலிங்கு!
நானும் நீங்கள் சொன்ன அதே கிழக்கு பதிப்பக ஸ்டாலுக்கு பொய் அள்ளிட்டு வந்தேன்... அடுத்த வாரம் வரை extend பண்ணியிருக்காங்க...
Post a Comment