Thursday, September 16, 2010

ஃபீலிங்ஸ் - 16 - 09 - 10


எதிர்பார்ப்பை குறைக்கும் எந்திரன்

 பாபா படம் வருவதற்கு முன்னால் பாபா கவுன்டவுன் ஸ்டார்ட்ஸ் என பத்தே வினாடிகள் போட்ட விளம்பரம் பரபரப்பை அள்ளியது. 'பேரை கேட்ட உடனே சும்மா அதிருதுல்ல' என போடப்பட்ட ஒரே ஒரு டிரைலரினால் சிவாஜி ஹைப் ஹைவோல்டேஜில் எகிறியது.  


ஃபேஸ்புக்கில் சுட்டது..  எந்திரன் டிரைலருக்கான டிக்கெட்


ஆனால் இப்போது எந்திரனுக்கு செய்யப்படும் மார்கெட்டிங்கை பார்க்கும்போது கொஞ்சம் அதிகமாக தெரிகிறது. இயல்பாகவே ரஜினி படங்களுக்கு ஏற்படும் எதிர்பார்ப்பு கூட இவர்கள் அடிக்கும் மார்கெட்டிங் கூத்தால் வெகுவாக குறைகின்றது.





■  ஹிந்தி ரோபோவுக்கான ஒரு இசை விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. அது நொல்லை இது நொட்டை என காய்ச்சி எடுத்திருந்தார்கள். படிக்கும்போது ரஜினி ரசிகராய் டென்ஷன் ஆனாலும் ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகராய் கொஞ்சம் உண்மை போலத்தான் தோன்றுகிறது.






இதென்ன சின்னபுள்ளதனமா இருக்கு






■  அது என்னதான்டா இருக்கு இந்த ஃபேஸ்புக் பார்ம்வில்லி கேமில் என்று சென்று பார்த்தால் நல்ல காமெடியாக இருக்கிறது. விதை விதைக்கனும் அறுவடை செய்யனும் அது இதுன்னு மூழ்கியவர்களுக்கு சுவாரஸ்யமான கேம். புதியதாக வந்திருக்கும் பிரன்டியர்வில்லி கேம் சும்மா விளையாடிப் பார்த்தேன். கொடுத்திருக்கும் படம் எனது பார்மில் எடுக்கப்பட்டது. (இதெல்லாம் ஒரு பொழப்பான்னு கேக்குறவங்க ப்ரீயா விடுங்க.. )


விருந்து




சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் இருக்கும் சுரங்கப்பாதைக்கு முன்னர் ஹோட்டல் சுப்ரபா எனும் உணவகம் இருக்கிறது. மதிய உணவு அங்கு தடபுடலாய் இருக்கும். தலை வாழை இலை போட்டு, முதலில் பருப்பு நெய்யுடன் ஆரம்பிக்கிறார்கள். கூட்டு,பொரியல், பச்சடி அல்லது ஸ்பெஷல் சட்னி, ஊறுகாய், அப்பளம் வைக்கப்படும். பிறகு அருமையான சாம்பார், வத்தல் குழம்பு அல்லது மோர் குழம்பு, ரசம், கெட்டி மோர் என அனைத்தின் ருசிகளும் அமர்க்களமாய் இருக்கும்.  சப்ளையர்கள் கவனிப்புதான் இங்கு ஸ்பெஷல்.  கேட்க கேட்க முகம் சுளிக்காமல் கூட்டு, பெரியல் வைப்பதாகட்டும், குடிக்க குடிக்க கடைசியில் மோர் கொடுப்பதாகட்டும், உறவினர் வீட்டிற்கு விருந்திற்கு போன ஃபீலிங் வருகிறது. விலை ரூ.40 என நினைக்கிறேன். அந்த பக்கம் போனால் முயற்சி செய்து பாருங்கள்.




விளம்பரம்


■  ஷாருக்கான், அமிதாப் தோன்றும் விளம்பரங்களுக்கு தமிழில் ஏன்தான் இப்படி கர்ணகொடூரமாய் கிழவன் போல் இழுத்து இழுத்து டப்பிங் கொடுக்கிறார்கள் என தெரியவில்லை. அமிதாப்பின் சாம்பியன்ஸ் லீக் விளம்பரத்தையும், ஷாருக்கின் பெப்ஸோடன்ட் விளம்பரத்தையும் அடுத்த முறை கண்ணை மூடி கேட்டுப்பாருங்கள்.


■  ஹமாம் சோப் விளம்பரத்தில் 'ஆட்டோல பசங்க கூட ஒட்டிக்கிட்டு போறாளே அதான்' என ஆக்ரோஷமாய் தாத்தா கேரம் காயினை அடிப்பார். இது குறித்து பதிவிட வேண்டும் என முன்னரே யோசித்திருந்தேன். தற்போது அது டப்பிங்கில் மாற்றப்பட்டு தூசு கீசு பட்டிருக்கும் என வருகிறது. இதுக்கு விளம்பரத்தையே மாற்றியிருக்கலாம்.





■  'வான் எ டான்ஸ்?' என ஹிரிதிக் அழைப்பதும் அந்த பெண் 'ஐ கான்ட்' என புன்னகைப்பதும்,  பின்னர் ஹிரிதிக் கையில் ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வைத்துக்கொண்டு காட்டுவதும் அதற்கு அந்த பெண் பின்னாலேயே சென்று டான்ஸ் ஆடுவதும் என மகா காமெடியான விளம்பரம் ஒன்று ரொம்ப நாட்களாய் ஓடுகிறது. நிஜத்தில் ஏதாவது ஒரு பெண்ணிடம் இப்படி பிஸ்கட் பாக்கெட்டை நீட்டினால் நான் என்ன நாய்குட்டியா என பட்டென்று அடிதான் விழும். எந்த எந்த விளம்பரத்துக்கோ 'இதை முயன்று பார்க்காதீர்கள்'னு கேப்ஷன் போடுறாங்க.. முதல்ல இதுக்கு போடுங்கப்பா..


போட்டோ கமென்ட்ஸ்


சென்ற வாரம் அறிவித்திருந்த போட்டோ கமென்ட்ஸ் போட்டிக்கு எதிர்பார்த்ததை விட அதிகமாய் கமென்ட்ஸ் குவிந்திருக்கிறது. அனைவருக்கும் மிக்க நன்றி. பேனர் டிசைன் செய்து முடிவுகளை அறிவிக்க வேண்டி இருப்பதால் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. விரைவில் வெளியிடுகிறேன். நண்பர்கள் பொறுத்துக்கொள்ளவும்.



11 comments:

ஸ்வர்ணரேக்கா said...

உண்மை தான்... மற்ற ஓடாத படங்களுக்கு செய்த மாதிரியே எந்திரனுக்கும் செய்கிறார்கள்...

ஸ்வர்ணரேக்கா said...

உண்மை தான்... மற்ற ஓடாத படங்களுக்கு செய்த மாதிரியே எந்திரனுக்கும் செய்கிறார்கள்...

Anonymous said...

// Then comes Naina mile. The fast-paced number is sung by Rahman along with Suzzane and Kash 'N' Krissy. It fails to make a mark. //

என்ன கொடும சார் இது.. :(

என்னது நானு யாரா? said...

நண்பா! என்னது படத்தோட டிரைலருக்கோ டிக்கட். நாடு உருப்பட்ட மாதிரி தான்.

உங்க தொகுப்பு எல்லாம் அருமை.

போட்டியின் முடிவுகளுக்காக காத்திருக்கின்றேன்.

எனக்கு மட்டும் ரகசியமா சொல்ல கூடாதா?

Unknown said...

அந்த பிஸ்கட் விளம்பரத்தைப் பார்த்தால் என் மகன் (20 மாதம்) பயப்படுகிறான்.

Thamira said...

நல்லாயிருக்கே தொகுப்புப்பதிவு. இதுக்கு நீங்க பேர் எதுவும் வச்சுக்கலையா.?

DR said...

எந்திரன் ஒடுமா ஓடாதா ?

Chitra said...

ஹோட்டல் சுப்ரபா - அடுத்த முறை, சென்னை வரும் போது இங்கே சாப்பிட்டு பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி.

க ரா said...

நீங்களும் சாப்பாட்டுகடை பத்தி எழுத ஆரம்பிச்சுடீங்களா.. இந்த தொகுப்பும் நல்லா இருக்குங்க....

எஸ்.கே said...

எந்திரனை பற்றி அடிக்கடி காண்பித்து அதன் மேல் ஒரு வித சலிப்ப்பு வந்துவிட்டது.

Sukumar said...

ஸ்வர்ணரேக்கா said...
உண்மை தான்... மற்ற ஓடாத படங்களுக்கு செய்த மாதிரியே எந்திரனுக்கும் செய்கிறார்கள்...

------> செம கடுப்பேத்துறாங்க மை லார்ட்... வருகைக்கு நன்றிங்க


Anonymous said...
// Then comes Naina mile. The fast-paced number is sung by Rahman along with Suzzane and Kash 'N' Krissy. It fails to make a mark. //

என்ன கொடும சார் இது.. :(

------> கொடுமையோ கொடுமைங்க.. வருகைக்கு நன்றி.. உங்க பெயரையாவது போட்டிருக்கலாம்...

என்னது நானு யாரா? said...
நண்பா! என்னது படத்தோட டிரைலருக்கோ டிக்கட். நாடு உருப்பட்ட மாதிரி தான்.

உங்க தொகுப்பு எல்லாம் அருமை.

போட்டியின் முடிவுகளுக்காக காத்திருக்கின்றேன்.

எனக்கு மட்டும் ரகசியமா சொல்ல கூடாதா?

------> நன்றி பாஸ்....

முகிலன் said...
அந்த பிஸ்கட் விளம்பரத்தைப் பார்த்தால் என் மகன் (20 மாதம்) பயப்படுகிறான்.

------> சின்ன புள்ளைங்க கூட பயப்படுதா... அடக்கடவுளே.. வருகைக்கு நன்றி பாஸ்...



ஆதிமூலகிருஷ்ணன் said...
நல்லாயிருக்கே தொகுப்புப்பதிவு. இதுக்கு நீங்க பேர் எதுவும் வச்சுக்கலையா.?

------> அண்ணா... பதிவு தலைப்பே ஃபீலிங்ஸ்னு வச்சிருக்கேனே அண்ணா....


தனுசுராசி said...
எந்திரன் ஒடுமா ஓடாதா ?

------> ஓடும்ம்ம்.. ஆனா ஓடாது... நன்றி வருகைக்கு


Chitra said...
ஹோட்டல் சுப்ரபா - அடுத்த முறை, சென்னை வரும் போது இங்கே சாப்பிட்டு பார்க்கணும். பகிர்வுக்கு நன்றி.

------> கண்டிப்பா சாப்பிட்டு பாருங்க... வருகைக்கு நன்றி

இராமசாமி கண்ணண் said...
நீங்களும் சாப்பாட்டுகடை பத்தி எழுத ஆரம்பிச்சுடீங்களா.. இந்த தொகுப்பும் நல்லா இருக்குங்க....

------> இல்ல தலைவா... அடிக்கடி இங்க சாப்பிடுவேன் அதான் சும்மா ஹைலைட் பண்ணலாமேன்னு....

எஸ்.கே said...
எந்திரனை பற்றி அடிக்கடி காண்பித்து அதன் மேல் ஒரு வித சலிப்ப்பு வந்துவிட்டது.

------> ஆமா பாஸ்... எங்காவது பாட்டைக் கேட்டாக்கூட வெறியாகுது... நன்றிங்க வருகைக்கு...