Thursday, May 13, 2010

வலைமனை ஃபீலிங்ஸ் - 100வது பதிவு




100 வது பதிவு (இது என் தப்பு. இவ்ளோ கொடுமைக்கும் மன்னிச்சுடுங்க. ). 
ஒரு லட்சம் ஹிட்ஸ் (இது உங்க தப்பு ஹி.. ஹி....). 
160+ பாலோயர்ஸ் ( ஒரு வேலை தப்பா வழி  மாறி வந்திருப்பாங்களோ..?.) 
ச்சே.. எல்லாம் தப்பு தப்பா வருது. சரி இப்போ சரியா  சொல்றேன் நோட் பண்ணிகோங்க. 



    நூறு என்பதும்  ஒரு எண்ணிக்கையே என்றாலும் மற்ற பதிவுகளை போல இதுவும் ஒரு பதிவே என்றாலும் இங்கே கொஞ்சம் நின்று எல்லோருக்கும் நன்றி சொல்லும் வாய்ப்பாக இதை நான்  எடுத்து கொள்கிறேன். இதுவரை ஒட்டு போட்டும் பின்னூட்டங்கள் கொடுத்தும் உற்சாகப்படுத்தும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும், பதிவுகள் பலரை சென்றடைய வழிவகுக்கும் தமிழிஷ், தமிழ்மணம், திரட்டி குழுமத்தாருக்கும், பின் தொடரும் நல் உள்ளங்களுக்கும்  ட்விட்டர், பேஸ்புக் முதலியவற்றில் இணைப்புகள்  கொடுக்கும் முகம் தெரியா இணைய நண்பர்களுக்கும், தொடர்ந்து ஆதரித்தும் ஆலோசனைகள் வழங்கியும் பக்க பலமாய் இருக்கும் சக பதிவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் !!!
தொடர்ந்து வாருங்கள். நிறை குறைகளை கூறுங்கள். 

  


ஐ.பி.எல் மேட்ச் பரபரப்பாய் நடந்து கொண்டிருந்த சமயம். திடீரென ஒரு நாள் கேபிள்ஜி போன் செய்தார். மேலே உள்ள கமெண்டை அப்படியே சொல்லி "யோவ் இது உன் பதிவில் போட்டதுதான, இங்க ஒரு டீ கடையில நிக்கறேன், எந்த சேனல் தெரியல, ஒரு எப்.எம் ரேடியோவில இந்த கமெண்டை அப்படியே சொல்லி இப்படி இன்டர்நெட்டில் கிண்டல் பண்றாங்கன்னு சொல்றாங்கய்யா"  என்றார். கேட்கவே மகிழ்ச்சியாய் இருந்தது.  வலைமனையை அறிந்த சில நண்பர்களும் அடிக்கடி இந்த படங்கள் இ-மெயிலில் பார்வர்ட் ஆகி வருவதாக சொல்கிறார்கள். என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நாலு பேரை சிரிக்க வைக்கும் ஆனந்தம் இருக்கிறதே அடடா.. அதன் சுகமே தனி.  அதே சமயம் யாரையும் குறி வைத்து தாக்காமல், முடிந்த அளவு சம்பந்தபட்டவர் படித்தாலும் மனம் புண்படக்கூடாது என்கிற அளவுகோளை வைத்து கொண்டு கமெண்ட் போடுகிறேன். ஒரு சாமானியனாக வாழும் போது நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் சில  நமக்கு டென்ஷன் கொடுக்கும், சில சிரிப்பை கொடுக்கும், இவ்வாறான விஷயங்களை எடுத்து ஜாலியாக கிண்டல் செய்து விட்டு போய் கொண்டிருக்கிறேன். இதில் தெரிந்தோ தெரியாமலோ யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிச்சுடுங்க..
அப்புறம் இன்னொரு விஷயத்துக்கும் மன்னிச்சுடுங்க... இனி கொஞ்சம் கொஞ்சம் எழுதலாமுன்னு இருக்கேன்!!!      (கமெண்ட்ஸ் மட்டுமே போடாதீங்க .. அப்பப்போ கொஞ்சம் எழுதுங்கன்னு சில நண்பர்கள் சொல்றாங்க... உன்னை எல்லாம் யாருய்யா எழுத  சொன்னதுன்னு கொதிப்படையும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன  )


து 2016, 2021 எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்பொழுது தொடங்க போவதாக இருக்கும் விஜய்யின் கட்சிக்கு இப்பொழுதே ஒலிக்கும்   " தமிழன் வீர தமிழன் தலைமை தாங்கும் ஒருவன்"  என்கிற லேட்டஸ்ட் பிரசார பாடலை ஒரு எங்கு கேட்டாலும் டென்ஷன் ஆகிறது. நீங்க கேக்கலைனா எனக்கு ஒண்ணும் இல்லை.. என்னிடம் இவ்வாறான விஷயங்களை விரும்பும் என் ரசிகர்களுக்காக இதை நான் செய்தே தான் தீருவேன் என்பது தான் இது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு  இன்று விஜய்யின் பதிலாக இருக்கிறது.  
  அண்ணா  உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு கேக்குறேண்ணா... சமீபத்துல ஒரு பேட்டியில், மக்களுக்கு ஒரு பிரச்சனைனா இறங்கி போரடுவேன்னு சொல்லி இருக்கீங்க.. இப்போ எங்களுக்கு உங்க படங்கள் ஒரே விதத்தில் வருவதும், நிமிடத்திற்கு ஒருமுறை  உங்கள் படம் சூப்பர் ஹிட் என விளம்பரம் வருவதும் பெரும் பிரச்சனையாக இருக்குதுன்னு சொல்றோம். முதல்ல இதுக்கு என்னை பண்ண போறீங்க... உங்களுக்கு பிடிக்கலைனா பார்க்காதீங்க... என் ரசிகர்களுக்காக நான் இப்படிதான் நடிப்பேன்னு எல்லாம் சொல்ல கூடாது. அப்போ நாளைக்கே நீங்க முதல்வர் ஆனா ( ஒரு பேச்சுக்கு சொல்றேன்) உங்களுக்கு ஒட்டு போட்டவங்களுக்கு  மட்டும் சலுகைகள் கொடுத்திட்டு  வேறு கட்சிக்கு ஒட்டு போட்டவர்களை அம்போவென விட்டுடுவீ ங்களா? 
  சரி என்னமோ போங்க. அடுக்கடுக்காய் இப்போ எங்கு பார்த்தாலும் உங்களுக்கு கடிதம், அறிவுரை, இ-மெயில்னு இதே விஷயம் திரும்ப திரும்ப  அதிக அளவில் சொல்லப்பட்டு வருது. ஆனா வழக்கம் போல இது எதையும் கண்டுக்காம "நான் வச்சதுதான் சட்டம்"னு நீங்க தொடர்ந்தீங்கன்னா.. சாரி பாஸ் நீங்க தமிழக முதல்வர் இல்ல.. அமெரிக்க ஜனாதிபதி ஆகுற மைண்ட் செட்ல  இருக்கீங்கனு அர்த்தம். 

___

.சி.சி. போட்டியில் இந்தியா செமி பைனல்ஸ் போக முடியாதது ஒரு விதத்தில் நல்லதே என தோன்றுகிறது. இப்படி சொதப்பு சொதப்பு என சொதப்பும் டீம் தப்பி தவறி செமி பைனல்ஸ் போய் பாகிஸ்தானுடன் மோதி நாயடி பேயடி வாங்கி இருந்தால் அவ்வளவுதான். உலக கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் இதுவரை இந்தியாவை வென்றதில்லை என இருக்கிற வறட்டு கவுரமும் புஸ் ஆகி இருக்கும். தோனி எது செஞ்சாலும் ஒரு அர்த்தம் இருக்கும்னு ரவி சாஸ்திரி ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சொன்னது நினைவிற்கு வந்தது  ! வாழ்க தோனி ! வளர்க அவர் படை !

___


த்யம் போய் இருந்தேன். How to Train your Dragon - 3D  படம் பார்க்க.  1 மணிக்குதான் ஷோ போட்டிருந்தார்கள். 11 மணிக்கே  போய்விட்டதால் என்ன செய்வதென பார்த்தேன். 11.15 க்கு சுறா படம். டிக்கெட் வாங்கி விடலாமா என ஒரு நிமிஷம் டெம்ப்ட் ஆனாலும் டக்கென அந்த தப்பான எண்ணத்தில் இருந்து சுதாரித்து கொண்டேன். மேலே Blur கேமிங் சோனில் ஐந்தாம் தளத்தில் எப்போதும் பிசியாக இருக்கும் Wii கேம்ஸ் அன்று காலியாக இருக்கவே ஆசை தீர விளையாடினேன். கையில் ஒரு ஒயர்லெஸ்  ரிமோட் கொடுக்கிறார்கள். அதை நாம் பேட் போல பிடித்து கொண்டு விளையாட திரையில் சிக்ஸ், போர் என பால் பறக்கிறது.  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக ஐந்து ஓவரிலேயே 80 ரன்கள் எடுத்தேன். அப்புறம் 1 மணி ஆகி விடவே படம் பார்த்து விட்டு கிளம்பினேன். 
 என்னது படம் பத்தி சொல்லவே இல்லையேனு கேக்குறீங்களா.. சிம்பிளா சொல்லனும்னா ஒரு ஊரு.. அதுக்கு ஒரு பிரச்சனை. அந்த பிரச்னையை நம்ம ஹீரோ எப்படி டீல்  பண்ணி மக்களை காப்பாத்துறாரு.. இதான் கதை!  சுறா கதை மாதிரியே இருக்குல்ல?  என்னது மறுபடியும் முதல்லேயிருந்தானு நீங்க அலறுவது காதில விழுது. இதோட முடிச்சுக்குவோம். 


அமேசான் தளத்தில் இன்றைய ஆஃபர்களை காண 

33 comments:

TechShankar said...

Congrats Dear Buddy.. Cool.

Raju said...

10க்கு வாழ்த்துக்கள்ண்ணே..!

இதே மாதிரி அப்பப்போ கொஞ்சம் எழுதுங்கண்ணே.

அம்ம்ம்ம்ம்ம்மெரிக்க ஜனாதிபதியா..?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

CS. Mohan Kumar said...

வாழ்த்துக்கள். உங்க கமெண்டுகள் ரேடியோ வரை சென்றது அறிந்து மகிழ்ச்சி இப்படியே தொடரவும்

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்..

குசும்பன் said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா!

SShathiesh-சதீஷ். said...

நூறுக்கு வாழ்த்துக்கள். உங்களை பார்த்து ரசித்து வரும் ஒரு ரசிகன் நான். தொடர்ந்து கலக்கிறிங்க. உங்கள் கொமண்ட்ஸ் சிரிப்பை கொண்டு வருகுதே தவிர ஒரு போதும் ஆத்திரத்தைக் கொண்டு வந்ததில்லை. தொடர்ந்து கலக்குங்கள். எதிர்பார்க்கின்றோம். மீண்டும் வாழ்த்துக்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்

Anonymous said...

தமிழ் மணம் திரட்டியை அடிக்கடி செக் பண்ணி புது புது புளொக் வாசிப்பேன். உங்க புளொக் மட்டும் எனக்கு தண்ணி காட்டிடேஎ இருந்தது, நீங்க என் வலைத்தளம் வரும் வரை. உங்கள் தளத்தைப்பார்த்தது மகிழ்ச்சி. நிறைய எழுதுங்கள். சந்தோசமாக தொடர்கிறோம். இந்த படம் எனக்கும் ஈமெயிலில் வந்தது. நீங்க தான் என்று தெரியாது. உடனேயே எனக்கு அனுப்பியவருக்கு உங்கள் வலைத்தளத்தின் லிங்க் அனுப்பிவிட்டேன்.

Paleo God said...

100க்கு வாழ்த்துகள். :))

செ.சரவணக்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

டோனி எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.

Balakumar Vijayaraman said...

100 க்கு வாழ்த்துகள். தொடர்ந்து எழுதுங்கள்.

ARV Loshan said...

வாழ்த்துக்கள் சுகுமார்..
எம்மை வாயார, மனமார சிரிக்க வைக்கும் உங்களுக்கு நன்றிகள்..

தொடர்ந்து எழுதுங்கள்

ஜெயந்தி said...

வாழ்த்துக்கள்!

KULIR NILA said...

century vaalthukkal

photo comment with message apdi continue pannunga

Kumaran said...

Valaimanai one of the blogs i frequently visit. even i miss something I get it as forward.
so eppadiyum nyabaham vandhurum oru 30 mins nalla time pass pannuvaen.

சாருஸ்ரீராஜ் said...

100 க்கு வாழ்த்துக்கள் , உங்கள் எழுத்தும் நன்றாக இருக்கிறது..

ஸ்ரீ.... said...

முதல் சதத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஸ்ரீ....

சூர்யா ௧ண்ணன் said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பா!

Riyas said...

best wishes...

Subankan said...

100 க்கு வாழ்த்துகள் தல :)

MSV Muthu said...

Congratulations Sukumar!

ப.கந்தசாமி said...

வாழ்த்துக்கள்

Prasanna said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள் :)

GD said...

வாழ்த்துக்க‌ள் ஜீ...
உங்க‌ கிட்டேந்து இன்னும் நிறைய‌ எதிர்பார்க்கிறேன்..

விவேக் said...

வாழ்த்துக்கள் நண்பரே!!
"வருங்கால அமெரிக்க ஜனாதிபதி முருகேசன்!!! வாழ்க!!"
இந்த மாதிரி காசு குடுத்ததுக்கு மேல கூவுறவன் இருக்கற வரைக்கும்
விஜய் கண்டிப்பா எதாவது ஒன்னு ஆயிடுவாரு :-)

எம்.எம்.அப்துல்லா said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

ஆபிஸில் ரொம்ப டென்ஷனானா ரிலாஸ்க் செய்ய நான் முதலில் எட்டிப் பார்ப்பது உங்க வலைப்பக்கம்தான்.நைஸா கமெண்ட் அடிப்பதில் மன்னன் நீங்க :))

வந்தியத்தேவன் said...

எல்லோரையும் சிரிக்கவைக்கும் சுகுமாருக்கு வாழ்த்துக்கள். படங்களுடன் இடையிடையே எழுதுங்கள்.

Kiruthigan said...

//உங்களுக்கு ஒட்டு போட்டவங்களுக்கு மட்டும் சலுகைகள் கொடுத்திட்டு வேறு கட்சிக்கு ஒட்டு போட்டவர்களை அம்போவென விட்டுடுவீ ங்களா?//
சபாஷ்.. சரியான கேள்வி...
நடந்தாலும் நடக்கும் சார்..

நாங்களும் கொஞ்சம் தாளிச்சிருக்கம். பதம் எப்டியிருக்குன்னு பாத்து சொல்லுங்க..
http://tamilpp.blogspot.com/2010/05/blog-post_11.html

Ravimohan said...

Hi,

unga post ellame nalla iruku, neenga solli irukara mathiri intha comment potta pictures [IPL special] ellam enaku mail la vanthuchu, atha vachi than intha website ku vanthen, adikadi visit panna thavaruvathillai, ipa kittathatta unga ella post um padichuten nu sollalam,
and
Vazhthugal for your 100 th pathivu, Keep up the good work :)

உண்மைத்தமிழன் said...

செஞ்சுரிக்கு வாழ்த்துக்கள்..!

மென்மேலும் வளருக..!

Joe said...

நூறு இடுகைகள் எழுதியதற்கு வாழ்த்துக்கள்!

"உனக்கு சுயபுத்தியும் கிடையாது, சொல்புத்தியும் கிடையாது" என்று சில பெரியவர்கள் சிறுவர்களை திட்டுவார்கள். அந்த மாதிரி யாரும் விஜய்-க்கு கிடைக்கவில்லை போலும்.

Sukumar said...

@ TechShankar
THank you so much friend... Thanks a lot...!!

@ ராஜூ...
நன்றிண்ணே... எழுதிட வேண்டியாதுதான்.. இனி யாரும் நிம்மதியா இருக்க கூடாதுல்ல...

@ மோகன் குமார்
நன்றி பாஸ்.. உங்கள் ஆதரவினால்... தொடர்கிறது...

@ அஹமத் இர்ஷாத்
நன்றி சார்..

@ குசும்பன்
ரொம்ப நன்றி பாஸ்... எல்லாம் உங்க ஆசீர்வாதம்

@ சதீஷ்
நன்றி நண்பா... உங்கள் வார்த்தைகள் மேலும் உற்சாகம் கொடுக்கிறது.

@ T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி சார்.. உங்கள் வாழ்த்துக்கு

@அனாமிகா துவராகன்
நெகிழ்ச்சியாய் இருக்கிறது.. மிக்க மகிழ்ச்சி..

@ 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║
வாழ்த்துக்கு ரொம்ப நன்றி தல...

@ செ.சரவணக்குமார்
நன்றி தோழா...

@ சுரேஷ்
ஆமாண்ணா.. அதேதான்.. வருகைக்கு நன்றி..

@வி.பாலகுமார்
நன்றி பாஸ்... எழுதிடுவோம்.. விதி யாரை விட்டது

@LOSHAN
வாங்க தல உங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி.. ரொம்ப நன்றிங்க...

@ ஜெயந்தி
நன்றி மேடம்....


@ KULIR NILA
நன்றி வாழ்த்துக்கு... அப்படியா சொல்றீங்க... அப்போ கருத்து சொல்லிடாம்னு சொல்றீங்க.... ரைட்டு...

@ குமரன்
ரொம்ப நன்றி சார்.. பரவா இல்லையே.. முப்பது நிமிஷம் நம்ம ப்ளாக மூச்சு தெணர தெணர பாக்குறீங்களே...

@ Sarusriraj
நன்றி மேடம்... அப்போ இனி மொக்கை போட்டுட வேண்டியதுதான்...

@ ஸ்ரீ
நன்றி நண்பா.. உங்கள் வாழ்த்துடன் உங்கள் புன்னகை முகம் கண் முன்னே வந்து போகிறது...

@ சூர்யா கண்ணன்
மிக்க நன்றி சார்..

@ Riyas
Thank u :)

@ Subankan
நன்றி தல... தாங்கள் வாழ்த்துக்கு

@ MSV Muthu
குருவே சரணம்...!!

@ Bavan
வாங்க பாஸு.. போட்டோ கமெண்ட்ஸ் உடன் பிறப்பிடம் இருந்து வரும் வாழ்த்து மகிழ்வளிக்கிறது

@ Dr.P.Kandaswamy
நன்றி சார்.. எல்லாம் உங்கள் ஆசிர்வாதம்

@ பிரசன்னா..
நன்றி பாஸு.. :)

@ GD
நன்றி தல... உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கு என் நன்றியை எப்படி சொல்வதென தெரியவில்லை...

@விவேக்..
சரியா சொன்னீங்க பாஸ்..
வாழ்த்துக்கு நன்றி..

@ எம்.எம்.அப்துல்லா...
அண்ணே ரொம்ப தேங்க்ஸ்ண்ணே..
(அப்புறம் என்ன நீங்க வாங்கன்னுக்கிட்டு ... என்னை விட உங்களுக்கு 15 வயசு அதிகம்கிறதை மறந்துட்டீங்களா....)

@ வந்தியத்தேவன்.
எழுதுடுவோம் தல...
ஆரம்ப கால கட்டங்களில் நீங்கள் கொடுத்த உற்சாகம் நன்றாக நினைவிருக்கிறது.. நன்றி தல..

@ Cool Boy
நன்றி நண்பா..
பார்த்தேன் சிரித்தேன்... தங்கள் தாளிப்பு அருமை..

@Ravimohan
நெகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பரே... தேடி வந்தமைக்கு நன்றி.. தொடர்ந்து படிப்பதற்கும் நன்றி...

@ உண்மைத்தமிழன்
அண்ணா.. வாங்கண்ணா வாங்கண்ணா.. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி அண்ணா...

@ Joe
சீக்கிரம் யாரவது அவருக்கு சொல்லணும் பாஸ்.. நன்றி பாஸ்... வாழ்த்துக்களுக்கு..