வழக்கமாக #சி.எஸ்.கேடா #இந்தியாடா #தோனிடா என்று டேக் போட்ட எங்களை #இஷாந்த்டானு எல்லாம் டேக் போட வச்சிட்டீங்களேடா இங்கிலாந்து பாய்ஸ். இதுக்கும் மேலயா நீங்க கிரிக்கெட் விளையாடனும்? போங்கடா... போய் புள்ள குட்டிங்களை கிரிக்கெட் கோச்சிங்ல சேருங்க.
•••
இது தலைநகர் தில்லியின் லேட்டஸ்ட் புகைப்படம் (!). இப்பொழுதெல்லாம் மழை தண்ணீர் நிற்பதில்லையாம். கொசு கடிப்பது கூட இல்லையாம். மக்கள் அனைவரும் 'முவாங் சுவாங்' என சைனா பாஷையிலே ஜோக் அடித்து சிரித்து இன்புற்ற நிலையில் இருக்கிறார்களாம்.
"துபாய் எங்க இருக்குன்னு கேட்டா ஈரோடு பக்கம் தூத்துக்குடி பக்கம் இருக்கும்பேன்"கிற மாதிரி தேர்தல் நேரத்தில் சீன எழுத்துக்களை போட்டோஷாப்பில் சரியாய் கூட அழிக்காமல் சீனத்து பஸ் ஸ்டான்ட் போட்டோவை போட்டு, 'மோடியின் குஜராத்தை பாரீர்' என மார்க்கெட்டிங் பண்ண நல்லவங்களுக்காக இந்த பதிவை டெடிகேட் பண்றோம்.
# ஆப் கி பார்.. கொசு கடிக்குது சார்! போட்டோஷாப்லயே கொசுவை எப்படி கொல்றதுன்னும் சொல்லிக்குடுத்தீங்கன்னா...
•••
சூளைமேடு மெயின்ரோடை சுற்றிய பகுதிகளில் அதிக அளவில் வடகிழக்கு மாணவ மாணவிகளை பார்க்கலாம். சுரீரென மண்டையைப் பிளக்கும் சென்னை வெயிலையே 'போடா வெண்ணெய்' என சொல்வது போல் இவர்களது நிறம் மட்டும் எத்தனை வருடம் இங்கிருந்தாலும் மாறுவதே இல்லை. படிக்க வரும்பொழுதே ரிசர்வேஷனில்தான் வருவார்கள். அதனால் இவர்களை ஜோடியாகத்தான் பார்க்க முடியும்.
அன்றொருநாள் நெல்சன் மாணிக்கம் சாலையில் பைக்கை ஓரங்கட்டி செல்போனில் பேசிக்கொண்டிருந்த போது அதிசயமாக தனியாக ஒரு வடகிழக்கு பெண்ணை பார்த்தேன். என்னை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தார்.
"ஆஹா... இவங்க பாஷை நமக்கு புரியாதே.. அவசரத்திற்கு நமக்கு வாயில இங்கிலீஷ் வேற வராதே.. லிப்ட், கிப்ட் கேட்டா பைக்குல பெட்ரோல் வேற இல்லையே" என மனதில் பல குழப்பங்களுடன் அந்த பெண்ணை எதிர்நோக்க, அவரோ "அண்ணா ... வேர் இஸ் ஸ்கைவாக்..?" என சிம்பிளாக கேட்டார். 'அண்ணா'வில் 'ண'கர உச்சரிப்பு கூட அவ்வளவு சுத்தமாக இருந்தது.
அன்றுதான் தெரிந்துகொண்டேன். ஊருக்கு வந்த உடன் முதல் வேலையாக உள்ளூர் பாஷையில் 'அண்ணா' என்கிற வார்த்தையை வடகிழக்கு பெண்களும் கற்று வைத்துக்கொள்கிறார்கள் என்று.
2 comments:
வத்தலும் தொத்தலுமா இருக்கற புள்ளைங்க "அண்ணா" ன்னு சொல்லுதுங்க.வாட்ட சாட்டமா இருக்கற புள்ளைங்க "மச்சான்" ன்னு சொல்லுதுங்க.
ஆகா
Post a Comment