Wednesday, October 26, 2011

ஏழாம் அறிவு - மன்மதன் அம்பு - ஜெயித்தது எது?




சில மாதங்கள் முன்பு ஒரு விழாவில் : 


"மன்மதன் அம்பு படத்துடன் ஆரோக்கியமான போட்டி போடுகிறோம். ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்த இரண்டு படங்களில் எது அதிகம் ஜெயிக்கிறது பார்த்துவிடுவோம்" - ஏ.ஆர்.முருகதாஸ்


போதி தர்மன் எபிசோட் உள்ளிட்ட, தமிழர்களுக்கு இந்த படம் மூலம் ஏ.ஆர்.முருகதாஸ் சொல்லியிருக்கும் செய்திகளுக்காக பாராட்டப்பட வேண்டி படங்கள் வரிசையில் அமர்கிறது ஏழாம் அறிவு!

போதி தர்மன் என்றால் யார் என்பது தமிழகத்தில் அனேகமாய் யாருக்குமே தெரியாத நிலையில், நம்மிடையே மறக்கடிக்கப்பட்ட, தேசம் கடந்து இன்றும் பெருமையாய் நினைவு கூறப்படும் ஒரு தமிழனின் சரித்திரத்தை தூசு தட்டி எடுத்து லேட்டஸ்ட் கேமராக்களினாலும், டிஜிட்டல் ஒலிகளினாலும் செல்லுலாய்டில் செதுக்கி, பயங்கரமாக மார்க்கெட்டிங் செய்து, ஒரு நல்ல தீபாவளி நாளாய் பார்த்து அமளி துமளியாய் சில லட்சம் தமிழர்களிடையே கொண்டு சேர்த்திருக்கிறார்.  இவ்வகையில் போதி தர்மன் சரித்திரத்தை புத்தகமாக அச்சடித்திருந்தால் சில நூறு பிரதிகள் மட்டுமே போணியாகி இருக்கும். அதனால் சொல்லப்பட்ட செய்திக்கு ஏ.ஆர்.முருகதாசுசுக்கு நன்றிகள்.

முதல் அரை மணி நேரம் மட்டும் மிஸ் செய்துவிடாதீர்கள். கண்ணுக்குளிர்ச்சியான சைனா எபிஸோட். போதி தர்மனின் வரலாறை சுருக்கமாகமாகவும் கம்பீரமாகவும் பதிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

அதன் பிறகு தற்காலத்திற்கு திரும்புகிறது கதை. போதி தர்மரின் மறக்கடிக்கப்பட்ட வரலாறை போலவே நம்மிடமிருந்து மறைத்து வைக்கப்பட்ட நமது பாரம்பரியம், நமது வீரம், மருத்துவம் உள்ளிட்ட நமது பண்டைய பெருமைமிகு மகத்துவங்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டிய அவசியத்தை, மிரட்டும் வில்லன், அழகிய கதாநாயகி, அட்டகாசமான ஒளிப்பதிவு, விஞ்ஞானம் அஞ்ஞானம் எல்லாம் கலந்து சொல்வதே ஏழாம் அறிவு.

இந்த வாரம் முழுமைக்கும் ஏற்கனவே டிக்கெட் ஃபுல் ஆகிவிட்டது. டிக்கெட் எடுத்தவரில் நீங்களும் ஒருவர் என்றால், இத்துடன் எஸ் ஆகிவிடுங்கள். இல்ல பரவாயில்ல நீ சொல்லு என்பவர்கள் மேலே தொடரலாம்.

தையின் கரு என்னவென்றால்,

அந்த காலத்தில் தமிழர்கள் வீரத்தோடும் தன்மானத்தோடும் இருந்தார்கள். 'யம்மா யம்மா', 'ரிங்கா ரிங்கா' போன்ற மொக்கையான பாட்டுகளை தேவையற்ற இடங்களில் திணித்தாலோ, படம் நெடுகிலும் ஹிப்னாடிசம் செய்தே  சாகடிக்கும் காட்சிகளை வைத்து இம்சித்தாலோ, அந்த கால தமிழர்களாக இருந்தால், நெட்டில் 250  ரூவா கொடுத்து டிக்கெட் எடுத்திருந்தாலும் பரவாயில்லை என்று தன்மானத்தோடு வெளிநடப்பு செய்திருப்பார்கள்.

ஆனா நேத்து படம் பார்த்த நான் உள்ளிட்ட தற்போதைய தமிழர்கள் காசு போகுதே என்கிற ஒரே காரணத்துக்காக முழு படத்தையும் மாடு மாதிரி உட்கார்ந்து பார்த்தோம்.

ஒருவேளை இயக்குனர், இக்கால தமிழர்கள் நமது பாரம்பரிய வீரத்தை மறந்துவிட்டோம் என்பதை பிராக்டிக்கலாக உணர்த்த விரும்பினாரோ என்னவோ...?

போதி தர்மர் போன்ற நாம் அறிந்திராத ஆச்சரியமான போர்ஷனை சொல்லி,  எடுத்துக்கொண்ட அருமையான கதைக்களனிற்கு ஈடாக, கஜினி, ரமணா போன்ற சுவாரஸ்யமான பிரசன்டேஷன் 7ஆம் அறிவு படத்தில் அமைக்கப்படவில்லை என்பதை மிகுந்த ஏமாற்றத்துடன் பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. காதல் காட்சிகளிலும், நகைச்சுவை காட்சிகளிலும் கஜினி தந்த ஏ.ஆர்.முருகதாஸா இது...? அவ்வளவு கற்பனை வறட்சியான காட்சிகள்.

பாடல்கள் படத்தை விட்டு தனியே விலகி நிற்கிறது. முன் அந்தி, எல்லேலம்மா பாடல்களில் ஸ்ருதி கண்ணிற்கு குளுகுளுவென இருப்பதால் ஏதோ மன்னித்து விடலாம்.  படத்தின் அடுத்த சோதனை ஸ்ருதிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் நீ......ள தமிழ் வசனங்கள். டப்பிங் ஆவது கொடுத்திருக்கலாம்.

அழகிய போதி தர்மா எபிசோடுக்கு திருஷ்டி பொட்டு அந்த டாக்குமென்டரி போன்ற வாய்ஸ் ஓவர். முருகதாஸ் அந்த போர்ஷனையும் கதையாகவே அமைக்க முடியாதவரா என்ன?

மிரட்டல் வில்லன் ஆரம்பத்தில் அசத்தினாலும், திரும்ப திரும்ப ஒரே மாதிரியாக அவர் ஹிப்னாடிஸத்தில் (நம்மளையும்) சாவடிப்பது அலுப்பை தருகிறது.

ஆனால் இதுபோன்ற குறைகள் ஒருபுறம் இருந்தாலும் என்னைப்பொறுத்தவரை நெகடிவ் அம்சங்களை பொறுத்துக்கொண்டு கண்டிப்பாக ஒருமுறை பார்க்க வேண்டிய படம் ஏழாம் அறிவு.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மன்மதன் அம்பு படத்துடன் போட்டியிடுகிறோம் என முன்னர் ஒரு விழாவில் உற்சாகமாய் ஏ.ஆர்.முருகதாஸ் அறிவித்திருந்தார். ஆனால் என்ன இருந்தாலும் உலக நாயகனோடு சவால் விட்டு யாரும் ஜெயிக்க முடியாது என்பது நிருபணமாகி இருக்கிறது. 


ஆம்! ஏழாம் அறிவு. மன்மதன் அம்பு அளவிற்கெல்லாம் மொக்கை இல்லை. கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!
7aam arivu 7am arivu 7aam arivvu blog review by tamil blogger sukumar swaminathan
7th sense 7aam aarivu vimarsanam review
A.R.Murugadoss, Harris Jayaraj, Surya. Shruthi hassan
7ஆம் அறிவு 7ம் அறிவு ஏழாம் அறிவு பதிவு பதிவர்கள் விமர்சனம் வலைப்பூ வலைமனை சுகுமார் சுவாமிநாதன் 




10 comments:

சேலம் தேவா said...

பாராட்ற மாதிரியே பாராட்டி கடைசில ஒலகநாயகனை கேவலப்படுத்திட்டிங்க...

Sukumar said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. கேவலப்படுத்தலை பாஸ்.... மன்மதன் அம்பு மொக்கைதானே பாஸ்..?

bandhu said...

போதி தர்மர் தமிழர் என்பது எவ்வளவு தூரம் உண்மை? இன்டர்நெட்டில் தேடினால் கிடைப்பது விக்கி பீடியா மற்றும் சிற்சில சின்ன சைட்களே.. இது வெறும் மார்கெடிங் உத்தி என்று நினைக்கிறேன்.

வவ்வால் said...

சுகுமார்,

உதயநிதி தான் தயாரிப்பாளர் என்றவுடன் எல்லாருக்கும் குளிர் விட்டுப்போய் மொக்கை படம் எடுக்கிறாங்களோ என்னமோ?
தி மித்,= மஹாதீரா= 7 ஆம் அறிவா மாற மாற வர வர மாமியார் கழுதைப்போல ஆகிறார் கதையாய் ஆகி இருக்கும்.

Saravanaa said...

Deepavali nalvaazhthukkal. Ungalukum ungaladhu kudumbathinarukum.

middleclassmadhavi said...

இருந்தாலும் மன்மதன் அம்பு படத்தை இவ்வளவு கேலி செய்திருக்க வேண்டாம்! :-))

தீபாவளி வாழ்த்துக்கள்! தங்கள் அழகிய வாழ்த்துக்களுக்கு நன்றி!

சுப்ராயன் said...

மன்மதன் அன்பு மொக்கை என்பதில் எந்த சந்தேகம் இல்லை. ஒலகநாயகன் ஒலகநாயகன் என்கிறீர்களே? எந்தெந்த ஒலகத்தின் நாயகன் என கூறுவீர்களா?

சுரேன் said...

போதிதர்மனாக நடித்தது சூர்யாவிற்கு ஒரு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தக்கூடும். சூர்யாவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கவும் கூடும். ஆனால் போதிதர்மனின் உருவத் தோற்ற அமைப்புடன் சூர்யா ஒத்துப்போகவில்லை. அந்தப் பாத்திரத்திற்கு சரத்குமார் நடித்திருப்பாரானால் மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். போதிதர்மனை கண்முன்னே நிறுத்தியிருக்கும்.

தக்குடு said...

சில சமயம் ரொம்ப எதிர்பார்க்கும் போது ஏமாற்றம் ஆகர்து நியதி! நல்ல விமர்சனம்!

#அண்ணே வேலாயுதம் சாயங்காலமா?? மனசை தைரியமா வச்சுண்டு போயிட்டு வாங்க!!

ஸ்வர்ணரேக்கா said...

முருகதாசுமா..?
அடக்கஷ்ட்டமே!!!