கடந்த ஞாயிறு அன்று சென்னையில் இன்டி பிளாகர் மீட். அழைப்பு வந்த உடனேயே ரெஜிஸ்டர் செய்திருந்தாலும் கடைசி நேரம் வரை 'ஏதாவது இங்கிலீஷ்ல கேள்வி கேட்டுடுவாங்களோ ' என்கிற பதட்டத்தால் போகலாமா வேண்டாமா என்கிற குழப்பம் இருந்தது. கடைசியில் போகலாம் என முடிவெடுத்து ஹயாட் ரெஜென்சிக்குள் நுழையும்பொழுது மணி 1.45 இருக்கும். வாசலிலேயே நமது பிலாசபி பிராபகரன் எதிர்ப்பட்டார். உள்ளே கீழே பேஸ்மென்டிற்கு சென்று பைக்கை பார்க் செய்கையில் கவுதம் இன்போடெக் ஆர்.வடிவேலனை கண்டேன். பார்க் செய்துவிட்டு மேலே என்ட்ரன்ஸ் வந்தால் அண்ணன் ஜாக்கி சேகர் உள்ளே ரெஜிஸ்ட்ரேஷன் முடித்து விட்டு வெளியே வந்து கொண்டிருந்தார். |
இருநூறுக்கும் அதிகமான பதிவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் நமது தமிழ்ப்பதிவர்கள் சுமார் 30 பேர் சென்றிருந்தோம். பெரும்பாலானோர் கடைசி வரிசையில் அமர்ந்தோம். தல ஜாக்கி சேகரை நிகழ்சசி ஒருங்கிணைக்கும் ஒரு பெண் கூப்பிட்டு கொண்டு போய் முன்னால் உட்கார வைத்தார். |
நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களுக்கெல்லாம், தமிழ்நாடு மின்சார வாரியம் பாரம்பரிய முறைப்படி 10 விநாடி கரண்ட் செய்து அனைவரையும் வரவேற்றது சிறப்பு. |
49 செகன்ட்ஸ் ஆஃப் ஃபேம் எனும் பகுதி முதலில் துவங்கியது. வந்திருந்தவர்களில் ரேண்டமாக 75 பதிவர்களுக்கு தங்களை பற்றிய அறிமுகம் செய்து கொள்ள 49 வினாடிகள் வழங்கப்பட்டது. ஜாக்கி சேகர், மணிகண்டன் நான் உள்ளிட்ட சில தமிழ் பதிவர்களுக்கே பேச வாய்ப்பு கிடைத்தது. ஜாக்கி பேசும்பொழுது 'ஜெய் ஜாக்கி' உள்ளிட்ட சங்கத்தின் கோஷங்களை எழுப்பி சரியான மாஸ் காட்டினோம். கடைசி வரிசையில் அமர்ந்திருந்த கே.ஆர்.பி.செந்தில், கேபிள், எங்களுக்கு முன் வரிசையில் இருந்த கார்க்கி மற்றும் வேறு சில பதிவர்கள் ஜாலியாக கமெண்ட் அடித்தபடி இருந்தோம். எங்களுடன் இருந்த ஒரு பதிவர் பேசி விட்டு அமர்கையில் எங்களைப் பார்த்து, "பிளாக்ல எல்லாம் கமெண்ட் போடாதீங்கய்யா.. இங்க மட்டும்..." என கமெண்டிற்கு கமெண்ட் அடித்தார். |
பின்னர் நிகழ்ச்சியின் ஸ்பான்சர்களாக டாட்டா கிராண்டே கார் குறித்த அறிமுக உரை தரப்பட்டது. தொடர்பான விளம்பரங்களையும் ஒளிபரப்பினார்கள். |
'ஹை டீ' இடைவேளை விட்டார்கள். சுமார் 1 மணி நேரம் இருக்கும். வந்திருந்த நம் தமிழ் பதிவர்கள் அனைவரையும் பார்த்து மகிழ்வாக உரையாட முடிந்தது. லக்கி, அதிஷா உடன் சேர்ந்து வேலாயுதம் வெற்றி வாய்ப்பு குறித்தும் சுறா ஏன் சரியாக போகவில்லை என்றும் கார்க்கியுடன் நீயா நானா நடத்திக்கொண்டிருந்தோம். |
நல்ல ஸ்நாக்ஸ் வகைகளை பரிமாறி இருந்தார்கள். பாஸ்ட்ரி, சிக்கன் ரோல் தவிர மற்ற எதன் பெயரும் தெரியவில்லை. ஆனால் எல்லாமே சுவையாக இருந்தது. கேபிள் சங்கர்ஜி பாஷையில்.. ம்ம்ம்.. டிவைன்.. |
இடைவேளை முடிந்து பதிவுகளை குறும்படங்கள், மேடை நாடகங்கள், திரைப்படங்களாக அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தும் இயக்கமான பிளாக்கலாக்ஸ் குறித்த விரிவுரை நடந்தது. நமது அதிஷாவின் 'மெட்ராஸ் பாஷையில் ஜென் கதைகள்' மேடை நாடகமாக அரங்கேறியிருக்கிறது என தொகுப்பாளர் சொன்னபோது ஆச்சரியமாகவும், பெருமையாகவும் இருந்தது. |
அடுத்ததுதான் சுவாரஸ்யமான விளையாட்டு, ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்ட சார்ட்டில் அரை மணியில் யார் அதிகம் பதிவர்களை சந்தித்து அதில் அதிகமாக கமெண்ட் பெறுகிறார்கள் என்கிற ஜாலியான போட்டி. 'ஐயாம் மொக்கை ஆர் யூ?' என சார்ட்டில் எழுதி முதுகில் கட்டிக்கொண்டார் லக்கி. தமிழ் பதிவர்கள் யாரும் இதை அவ்வளவு ஆர்வமாய் எடுத்துக்கொள்ளவில்லை. எங்களுக்குள்ளேயே எழுதிக்கொண்டிருந்தோம். |
கார்க்கியின் சார்ட்டில் வேலாயுதம் சூப்பர் பிளாப் என யாரோ தமிழ்நாட்டிற்கே தெரிந்த ரகசியத்தை எழுதியிருந்தார்கள். எங்காத்தா மேல சத்தியமா நான் 'மங்காத்தா ராக்ஸ்' மட்டும்தான் அவர் சாட்டில் எழுதினேன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ஜாக்கி முதுகிலிருந்து சார்ட்டை கழட்டி கையில் வைத்துக்கொண்டார். ஏன் தல என்று கேட்டால், அனானியா வந்து பின்னூட்டம் போட்டுருவாங்கடா என ஜாலியாக சிரித்தார். |
இந்த விளையாட்டின் முடிவில் அதிகமாக கமெண்ட் பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நகைச்சுவையான கமெண்ட்டுகளையும் கேட்டு பரிசுகள் கொடுத்தார்கள். ஒரு இளம்பெண் பதிவர் எழுந்து, "யார் எழுதியது தெரியலை. என்னோட சார்ட்டில் ரவுடி ஆஃப் பிளாகர் மீட்னு எழுதியிருக்காங்க. யார் எழுதியிருந்தாலும் கையை தூக்குங்க ப்ளீஸ்" என்றார். உடனே கடைசி வரிசையில் இருந்த நாங்கள் அனைவரும் கையை தூக்கி நான்தான் நான்தான் என்றோம். தொகுப்பாளர், அவருக்கு பரிசு வழங்கியதும் அதை வாங்கிக்கொண்டு எங்களைப் பார்த்து தாங்க்ஸ் என சொல்லி அவர் அமர்ந்தது செம க்யூட். |
இனிமையான சந்திப்பு, கடைசியில் அந்த டிஸ்கஷன் நிகழ்ச்சியில் ஹவ் கேன் வி ஹெல்ப் தமிழ் பிளாக்கர்ஸ் போர்ட் சர்ச்சைக்குரிய விஷயமானது. அந்த போர்டை திரும்ப பெற வேண்டும் என ஒருங்கிணைப்பாளரிடம் முறையிட, அதற்கு அவர்கள் அந்த அர்த்தத்தில் தாங்கள் சொல்லவில்லை என வருத்தம் தெரிவித்து போர்டை திரும்ப பெற்றனர். |
இந்த பதிவில் பயன்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் போட்டோ பிளாக்கர் Pheno Menon அவர்களுடையது. த்ரூ தி லுக்கிங் கிளாஸ் என்கிற போட்டோ பிளாக் வைத்திருக்கிறார். அத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் அருமையாக இருக்கிறது. இந்த புகைப்படங்களை பயன்படுத்திக்கொள்ள அனுமதி தந்த அவருக்கு எனது நன்றிகள். |
Thanks - Photo Courtesy :
indiblogger tatagrande chennai meet hyatt regency valaimanai sukumar swaminathan
8 comments:
அனானியா வந்து பின்னூட்டம் போட்டுருவாங்கடா என ஜாலியாக சிரித்தார்.//
HAHAA
nice!! and thnx
Pheno
Thanks for the pics Sukumar!
தல அன்னைக்கு சாயுங்காலம் நீங்க கூப்பிட்டப்பவே மூடிக்கிட்டு கிழக்கு புத்தக நிலையத்திற்கு வந்திருந்தாள் பல பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டிருக்கும்... வேறொரு இடத்திற்கு சென்று பல சிக்கல்களுக்கு ஆளாகிவிட்டேன் :(
அருமையான பகிர்வு,
எங்களுடன் இருந்த ஒரு பதிவர் பேசி விட்டு அமர்கையில் எங்களைப் பார்த்து, "பிளாக்ல எல்லாம் கமெண்ட் போடாதீங்கய்யா.. இங்க மட்டும்..." என கமெண்டிற்கு கமெண்ட் அடித்தார்.
////////////////////
யோவ் என்னையா சம்பவம் மட்டும் நியாபகம் இருக்கு என் பெற மறந்துட்டீங்களே ...............................................
8 CommentsClose this windowJump to comment form
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அனானியா வந்து பின்னூட்டம் போட்டுருவாங்கடா என ஜாலியாக சிரித்தார்.//
HAHAA
நன்றி வருகைக்கு...
capturedalive said...
nice!! and thnx
Pheno
Thanks for your Excellent fotos Boss..
! சிவகுமார் ! said...
Thanks for the pics Sukumar!
புகைப்படங்கள் மேலே குறிப்பிட்டுள்ள நண்பருடையது அண்ணே.. வருகைக்கு நன்றி....
Philosophy Prabhakaran said...
தல அன்னைக்கு சாயுங்காலம் நீங்க கூப்பிட்டப்பவே மூடிக்கிட்டு கிழக்கு புத்தக நிலையத்திற்கு வந்திருந்தாள் பல பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டிருக்கும்... வேறொரு இடத்திற்கு சென்று பல சிக்கல்களுக்கு ஆளாகிவிட்டேன் :(
பிரபா.. பேசாம உங்ககூடயே வந்திருக்கலாம்.. கிழக்குல அன்னைக்கு புது புக் ஸ்டாக்கே வரலை.. போனதுதான் மிச்சம்....
suryajeeva said...
அருமையான பகிர்வு,
தேங்க் யூ....
அஞ்சா சிங்கம் said...
எங்களுடன் இருந்த ஒரு பதிவர் பேசி விட்டு அமர்கையில் எங்களைப் பார்த்து, "பிளாக்ல எல்லாம் கமெண்ட் போடாதீங்கய்யா.. இங்க மட்டும்..." என கமெண்டிற்கு கமெண்ட் அடித்தார்.
////////////////////
யோவ் என்னையா சம்பவம் மட்டும் நியாபகம் இருக்கு என் பெற மறந்துட்டீங்களே
ஒ.. நீங்கதானா அது... சாரி பிரதர்....
Kannan said...
மிகவும் அருமையான பகிர்வு.......
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நன்றி வருகைக்கு....
Cpede News said...
தமிழில் சிறந்த வலைப்பதிவர்களுக்கான சிறந்த தளம் இணைந்திருங்கள் http://cpedelive.blogspot.com/
ரைட்டு...
// பிரபா.. பேசாம உங்ககூடயே வந்திருக்கலாம்.. கிழக்குல அன்னைக்கு புது புக் ஸ்டாக்கே வரலை.. போனதுதான் மிச்சம்.... //
இப்பதான் நிம்மதியா இருக்கு...
Post a Comment