Monday, October 10, 2011

சதுரங்கம் - பிளாக்கர்ஸ் ஷோ





பதிவர் அண்ணன் உண்மைத்தமிழன் மீண்டும் ஒரு பதிவர்களுக்கான சிறப்புக்காட்சிக்கு அழைத்திருந்தார்.  கடந்த முறை கரு.பழனியப்பன் அவரது மந்திரப்புன்னகை. இம்முறை சதுரங்கம்.

முதல் பாதியில் முக்கால்வாசி முடிந்துவிட்ட நிலையில் தாமதமாக நான் சென்றதால் முழுமையான திரை விமர்சனம் எழுத முடியவில்லை.  படம் பல வருடங்கள் தாமதமாக வெளிவந்திருக்கிறது. ஆனாலும் பார்ப்பதற்கு புத்தம் புதிய காப்பியாக இருந்தது. எல்லாம் டிஜிட்டல் மாயம்.

நேர்மையான பத்திரிக்கை ரிப்போர்ட்டரால் பாதிக்கப்படும் ஒருவர் அவரது காதலியை கடத்தி வைத்துக்கொண்டு கண்ணாமூச்சி ஆடுகிறார். கடைசியில் எப்படி அந்த ரிப்போர்ட்டர் தனது காதலியை மீட்டார் என்பதே சதுரங்கம்.

அழுத முகத்துடன் இருக்கும் சோனியாவையும் காதல் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் அழகாக காண்பித்திருக்கிறார்கள்.  கரு.பழனியப்பனின் வழக்கமான படங்கள் போலவே வசனங்கள் ஷார்ப். ஸ்ரீகாந்த்திற்கு பதில் மந்திரப்புன்னகை போல் அவரே நடித்திருக்கலாமோ என்று யோசித்தேன்.
மிதமான வேகத்தில் போரடிக்காமல் செல்லும் படத்திற்கு கிளைமேக்ஸ் பெரிய டிரா பேக்.

பாதி படமே பார்த்ததால் இதற்கு மேல் விமர்சித்தால் அது தர்மமாகாது.

படம் முடிந்து இயக்குனர் கரு.பழனியப்பனுடன் எங்களது அரட்டை  சுவாரஸ்யமாக இருந்தது. ஜாக்கி அவரது படங்கள் குறித்து ஜாலியாக பேசிக்கொண்டிருந்தார். அதையெல்லாம் புன்னகையுடன் பழனியப்பன் கேட்டுக்கொண்டிருந்தார்.

ஒரு இயக்குனராக தான் யோசித்த கிளைமேக்ஸை எடுக்க முடியாமல் போனதன் சிரமத்தை அவர் விவரித்த போது படத்தின் சொதப்பல் கிளைமேக்ஸுக்கான காரணம் புரிந்தது.


பிரசாத் ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த சிறப்பு காட்சிக்கு பல பதிவர்கள், பேஸ்புக் நண்பர்கள் யாவரும் வந்திருந்தனர். கேபிள் சங்கர், ஜாக்கி சேகர், உண்மைத்தமிழன், கே.ஆர்.பி.செந்தில், காவேரி கணேஷ், மயில்ராவணன், மணிஜி, பட்டர்பிளை சூர்யா, அதிஷா, யுவகிருஷ்ணா, தேனம்மை லஷ்மணன் மேடம் அதில் சிலர்.
_____


இதே போல் இன்று மாலை அண்ணன் உண்மைத்தமிழன் மாலை 6 மணிக்கு வர்ணம் சிறப்பு காட்சிக்கு அழைத்திருக்கிறார்.   ஏ.வி.எம் ஸ்டுடியோவிற்கு உள்ளே இருக்கும் ப்ரிவியூ தியேட்டரில் இந்த காட்சி திரையிடப்படுகிறது. ஆகவே வர இயலும் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

விவரங்களுக்கு : http://truetamilans.blogspot.com/2011/10/blog-post_08.html


Sathurangam sadhurangam sadurangam sonia agarwal srikanth karu palaniappan valaiamanai movie review


6 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Boss my name is missing... :)

Cable சங்கர் said...

அது மிஸ்ஸிங் இல்லை.. வேணுமின்னே விட்டது..:))

Sukumar said...

@ ரமேஷ்
எப்ப கேபிள் சங்கர், ஜாக்கி சேகர்னு போட்டுட்டோமோ.. அதுக்குள்ளயே எல்லா தமிழ் பதிவர்களும் அடக்கம்னு அர்த்தம்.. என் பெயர் கூட தனியா இல்லை பாருங்க பாஸ்..

@ கேபிள்
எப்பூடி....????

Anonymous said...

வர்ணம் வர்னும்னு ஆசைதான். சனி, ஞாயிறா இருந்தா வர்லாம். மிஸ். மோனிகாவை மிஸ் பண்ணப்போறேன்னு நினைச்சாலே துக்கம் தொண்டைய அடைக்குது.

aotspr said...

மிகவும் நல்ல விமர்சனம்...
தொடர்ந்து எழுதுங்கள்....


நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

N.H. Narasimma Prasad said...

பகிர்வுக்கு நன்றி.