Wednesday, December 8, 2010

அழகிய சிருஷ்டி நந்தலாலா ஆர்யாவின் திருஷ்டி சிக்குபுக்கு





சரியாக நந்தலாலா வெளியாகி ஒரு வாரம் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை பத்மம் திரையரங்கில் பார்த்தேன். பதிவுலகில் நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்றதாலும், பல பதிவர்கள் படத்தை பார்க்க பரிந்துரை செய்ததாலும் படம் பார்க்கும் ஆவல் விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது.  ஆனால் திரையரங்கினுள் நுழைந்த உடன் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. சரியாக ஏழெட்டு பேர்தான் இருந்தார்கள். படம் ஆரம்பிக்கும்போது எண்ணிக்கை இருபதை தாண்டவில்லை.

 தாயை தேடி பயணிக்கும் இரு குழந்தைகளின் கதை. இது போன்ற டெம்ப்ளேட்களை டி.வி.டி போட்டு சனிக்கிழமை இரவுகளில் சப் டைட்டிலுடன் வேற்று மொழியில் பார்த்தே பழகிவிட்டதால் திரையரங்கில் நமது மொழியில் பார்க்கும் அனுபவம் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது.

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே என மிரட்டிய இயக்குனர் மிஷ்கின் முற்றிலும் வேறு பரிமாணத்தில் பயணித்து முக்கிய கதாபாத்திரத்தையும் சுமந்து, நந்தலாலவிலும் மிரட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்.

படத்தில் முதலில் என்னை ஈர்த்தது டைட்டில்தான். ஓடிக்கொண்டிருக்கும் நீரில் அந்த அசையும் நீர் செடிகள்.. வாவ்...படத்தின் டோன் இற்கேற்ப மனதை தயார் செய்யும் விதத்தில் அந்த டைட்டில், சிறிய தியானம் செய்வதை போன்ற மன அமைதியை தருகிறது. ஹேட்ஸ் ஆஃப்.

இளையராஜாவின் இசை படத்திற்கு பெரிய பலம்தான் என்றாலும்,  பல விமர்சனங்களை படித்து அதிகமாக நான் எதிர்பார்த்து சென்றபடியால் எனக்கு இது கம்மியாகவே பட்டது. பொம்முக்குட்டி அம்மாவுக்கு பிண்ணனி இசையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது கம்மிதான்.

இது போன்ற புதிய முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியவை. படத்தில் வெகு சில இடங்களில் இடர்கிறது. அந்த சைக்கிள் பெண் அடிபட்டு கிடக்க, மிஷ்கின் காயத்தை பார்க்க முயல்கையில் எந்த பெண்ணும் அவ்வாறு கூச்சலிடாமல் உட்கார்ந்தே இருக்க மாட்டாள். இதுபோன்ற சில சில விஷயங்கள் இடரினாலும் அவற்றை சொல்லி கும்மியடிக்க இந்த படத்தை பொறுத்த வரையில் எனக்கு மனசு வரவில்லை. அதற்காகவே தான் பல படங்களை வெளியிடுகிறார்களே.. வாங்க அதில் ஒன்றினை பார்ப்போம்.





அதே பத்மம் திரையரங்கம், மறுநாள் சனிக்கிழமை நண்பன் டிக்கெட் எடுத்துவிட்டபடியால் சிக்கு புக்கு செல்ல வேண்டியதாகி விட்டது. நேற்று பார்ததிருந்த அதே பயண கதை பாணியில் பார்ப்பவர்களை எவ்வளவு வெறுப்பேற்றலாம் என யோசித்து செதுக்கப்பட்டிருக்கும் திரைப்படம்.

தமிழ் சினிமாவின் லூசு கதாநாயகிகள் கலாச்சாரப்படி ஷ்ரேயா. சத்தியமா சொல்றேன். ஷ்ரேயாவை இதுக்கு மேல யாரும் மொக்கையா காண்பிக்க முடியாது. இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஷ்ரேயா வந்ததைதான் இத்தனை நாள் மொக்கையாக நினைத்திருந்தேன். ஆனால் இதில் அவர் தனது பழைய சாதனையை அவரே முறியடிக்கிறார்.  லண்டனில் வாழும், படித்த அழகான பெண் கேரக்டர், அதுக்குன்னு ஒரு மரியாதை இல்லையா பாஸ்... இவ்வளவு லூஸாவா இருப்பாங்க.

கையில் காசு இருக்கிறது. டிரையினில் இருந்து இறக்கி விட்டால் நாம என்ன செய்வோம். அதே ஸ்டேஷனில் இறங்கி வெயிட் பண்ணி அடுத்த டிரையினில் போவோம் இல்லையா.. இங்கே அப்படியில்லை. காடு, மலை, கடல் தாண்டி பயணித்து மீண்டும் வேறு ஏதோ ஸ்டேஷனில் ஏறுகிறார்கள்.. முடியல.. பயண கதை எடுக்கனும்னு ஆசை படுறது தப்பில்லை. அதுக்காக இப்படியா..

கதையில் சடாரென ஃபிளாஷ் பேக் துவங்கும்போது ஏதோ புதிதாய் செய்யப்போகிறார்கள் என நிமிர்ந்து உட்கார்கிறோம். ஆனால் நன்றாக போகும் பிளாஷ் பேக்கில் அந்த அம்மையப்பன் கேரக்டர், ஒடி வர மறுத்த ஹீரோயின் திடீரென ஹீரேவை தொடர்பு கொள்வது என அதையும் சொதப்புகிறார்கள்.

அந்த இன்னொரு கதாநாயகி ப்ரீத்திக்கா அழகாக இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் பிராகாசிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம்தான். மனிதர் வரும்போதே விசில் பறக்கிறது. சந்தானம் வரும் காட்சிகள் நல்ல கல கல.

படத்தில் நான் ரொம்ப சிரித்தது, கடைசியில் அந்த அம்மையப்பன் கேரக்டரை அப்பா வேஷத்தில் காண்பித்ததைத்தான்.. பேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில் வேஷ்டி சட்டை கட்டிய சிறுபிள்ளை போல இருந்தார். 

'அங்கதான் சார் டிவிஸ்டு வைக்கிறோம்' என கிளைமேக்ஸில் ஒரு டிவிஸ்ட்டு... ஸ்ஸ்ஸ்ப்பா இதுக்கும் மேல சொன்னா சரிப்பட்டு வராது... 

12 comments:

Chitra said...

கையில் காசு இருக்கிறது. டிரையினில் இருந்து இறக்கி விட்டால் நாம என்ன செய்வோம். அதே ஸ்டேஷனில் இறங்கி வெயிட் பண்ணி அடுத்த டிரையினில் போவோம் இல்லையா.. இங்கே அப்படியில்லை. காடு, மலை, கடல் தாண்டி பயணித்து மீண்டும் வேறு ஏதோ ஸ்டேஷனில் ஏறுகிறார்கள்.. முடியல.. பயண கதை எடுக்கனும்னு ஆசை படுறது தப்பில்லை. அதுக்காக இப்படியா..


........ எப்படி முழு படத்தையும் பார்த்தீங்க? பொறுமைசாலி சார், நீங்க!

Cable சங்கர் said...

haa..haa..haa..

butterfly Surya said...

ஆஹா. நீயும் பார்த்தாச்சா..? இப்ப கொஞ்சம் திருப்தியா இருக்கு.. நன்றி.

இதையும் பார்க்கவும்.

சிக்கு புக்கு - தமிழ் சினிமா
http://mynandavanam.blogspot.com/search/label/Chikku%20bukku

Thirumalai Kandasami said...

தமிழ்ல நடிக்க தேவை இல்லை(கொஞ்சமா நடிச்ச போதும்).

Thirumalai Kandasami said...

ஆர்யா அண்ணே,,இனி உங்களுக்கு ஆப்பு ரெடி.
எப்படியோ,சொந்த காசுல சூனியம் வச்சுகிட்டிங்க.

http://enathupayanangal.blogspot.com

Thirumalai Kandasami said...

ஆர்யா அண்ணே,,இனி உங்களுக்கு ஆப்பு ரெடி.
எப்படியோ,சொந்த காசுல சூனியம் வச்சுகிட்டிங்க.


http://enathupayanangal.blogspot.com

Ramesh said...

//பேன்சி டிரஸ் காம்பெட்டிஷனில் வேஷ்டி சட்டை கட்டிய சிறுபிள்ளை போல இருந்தார்.

சேம் ஃபீலிங்..

ஆமாம் அந்தப் பயணம் இன்னொரு காமெடி.. ஒரு போன் பண்ணினா கார் வர ரேஞ்சுக்கு ரேண்டு பேருமே பணக்காரங்க.. ஆனா.. ரிப்பேர் ஆயிருக்கற டெலிபோன் வரைக்கும் கஸ்டப்பட்டு டிராவல் பண்ணி.. ரெண்டு பேரும் அடுத்தடுத்து போன் பன்னுவாங்களாம்.. யப்பா தாங்கலை...

வந்து இதையும் பாருங்க...

http://rameshspot.blogspot.com/2010/12/blog-post_04.html

Unknown said...

நல்ல விமர்சனம்

Sukumar said...

Chitra <-----------------> வேறு என்ன செய்யறது...உள்ள போயாச்சு.... நன்றி மேடம் வருகைக்கு...


Cable Sankar <-----------------> வாங்க தல.. மிக்க நன்றி வருகைக்கு.


butterfly Surya <-----------------> ஆஹா.. துக்கம் விசாரிக்கிறதுல என்னா ஒரு சுகம்ல தல... ரைட்டு...

Thirumalai Kandasami <-----------------> வருகைக்கு நன்றி பாஸ்...

பிரியமுடன் ரமேஷ் <-----------------> நிறைய பேர் நொந்து நூடுல்ஸ் ஆகியிருக்கோம் போல.. நன்றி பாஸ்.. உங்க பதிவு டாப்கிளாஸ்...


இரவு வானம் <-----------------> நன்றி வருகைக்கு...

DR said...

சிக்கு புக்கு பாத்து நொந்தவங்களில் நானும் ஒருவன்.

இந்த பதிவில் எழுத்தின் அளவு ரொம்ப சின்னதா இருக்குது. கொஞ்சம் பெருசா மாத்துங்க. படிக்கிறதுக்கு சிரமமா இருக்குது.

Anonymous said...

கிகுஜிரோ பார்த்துவிட்டீர்களா சுகுமார்? பார்த்திருந்தால் நந்தலாலா பற்றி தங்கள் ஒப்பீட்டை சொல்லவும். பார்க்காவிடில் சப் டைட்டிலுடன் உள்ளது கிகுஜிரோ என்னிடம். தேவைப்பட்டால் சொல்லுங்கள். சென்னை வாசிதான் நானும். நான் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கும் இடங்கள் madrasbhavan.blogspot.com & nanbendaa.blogspot.com. நேரம் இருந்தால் எட்டிப்பாருங்கள். இன்று முதல் தங்களை பின்தொடரும் 249 ஆவது ஆசாமி நான்!

Filmics said...

நல்ல விமர்சனம்..நந்தலாலா வில் இளையராஜாவின் இசை நன்று ...



மேலும் உங்களுடைய சினிமா சம்பதமான பதிப்புகள் பிரபலம் அடைய எங்களுடைய Filmics.com
பதிவு செய்க....