Tuesday, July 20, 2010

பீலிங்ஸ் - 20 ஜுலை 10




ரிமோட்

      செம்மொழி மாநாட்டு அறிவிப்பின் படி பல கோடிகள் தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்குவதாக கேள்வி. வேறு எதற்கு ஒதுக்குகிறார்களோ இல்லையே, டிஸ்கவரி சேனலுக்கு ஒதுக்கலாம். அவ்வளவு அருமையான அறிவியல் நிகழ்ச்சிகளை எளிமையாக புரியுமாறு தமிழை படுத்தாமல் தமிழ்படுத்தியிருக்கிறார்கள். சூப்பர் சிங்கர், சன் சீரியல்களுக்கு கும்பல் கும்பலாய் பலர் சென்று விட சில நூற்றுக்கணக்கான பேர் மட்டுமே பார்க்கக்கூடிய இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு அரசு உதவி அறிவியல் தமிழை வளர வைக்கலாம்.

     திருமதி செல்வமும் நாதஸ்வரமும் ஓடும் போது என் அம்மாவிடம் ஏதாவது கேள்வி கேட்டால் விளம்பர இடைவேளையில் தான் பதில் வரும். இவை இரண்டும் அம்மா விரும்பி பார்க்கும் மெயின் சீரியல்கள். செல்லமே சைட் சீரியலாம் சில தினங்கள் சாய்ஸில் விட்டுவிடுவார். தங்கம் சீரியலை ஆரம்பத்தில் விரும்பி பார்த்தவர், இப்போது அப்போதுதான் சமைக்கவே எழுந்து செல்கிறார். ஐயா ஐயான்னு மொக்கை அடிக்கிறாங்களாம்.



     வெகு சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாதஸ்வரம் சீரியல் சன் டி.வி.யில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சின்னத்திரையிலேயிருந்து வெள்ளித்திரைக்கு பல பேர் போகலாம். ஆனால் ஒரு படத்தில் சறுக்கினாலும் திரும்பவும் முயன்றால் படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கக் கூடிய திருமுருகன் மறுபடி சின்னத்திரைக்கே திரும்பி வந்ததற்கு அசாதாரண தைரியம் வேண்டும்.



     வசந்த் டி.வி.யில் ஒரு பாட்டு. 'நாளைய வசந்தமே, தலைவனே வா வா' என பாடல் கம்பீரமாய் ஒலிக்க வசந்த் அன் கோ இயக்குனர் நிற்கிறார், நடக்கிறார், சிரிக்கிறார், கை அசைக்கிறார், நல உதவிகள் செய்கிறார் இன்னும் ஏராளமான றார் களுடன் விஜய் அறிமுக பாட்டு ரேஞ்சுக்கு போட்டு தாக்குகிறார்கள். இளைய தளபதி விஜய்யை கலாய்பதற்கு வாழ்க்கையில முதல் முறையாய் அப்பொழுதுதான் வருத்தப்பட்டேன். 


     கேப்டன் டி.வி.யில் ஒரு கேன்டிட் கேமரா நிகழ்ச்சி சில நாட்கள் முன்பு பார்த்தது. போலீஸ் வேடமிட்டு கொண்டு நிகழ்ச்சி நடத்தும் குழுவினர் போவோர் வருவோரை இம்சித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு ஒரே ஃபீலிங்ஸ் ஆயிடுச்சு. நம்ம கேப்டன் சார் அந்த காக்கி சட்டையை போட்டுகிட்டு எவ்வளவு பாகிஸ்தான் தீவிரவாதிகளை பிடிச்சிருக்காரு... இப்ப என்னடானா அவரு டி.வி.யிலேயே பொதுமக்களை பிடிச்சு டென்ஷன் பண்றாங்க... என்ன கேப்டன் சார் உங்க டி.வி.யிலேயே இப்படி சட்டத்தை கையில எடுத்துக்கலாமா?

பிறந்தநாள் வாழ்த்து




     குரல்வலை எனும் வலைப்பூ அதிபர் திரு.MSV Muthu அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.
நான் பார்த்த முதல் வலைப்பூ குரல்வலைதான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் அம்பத்தூரில் உள்ள ஒரு பி.பி.ஒ நிறுவனத்தில் பொட்டி தட்டி கொண்டிருந்த போது நண்பர் ஒருவருக்கு இவரது கதைகள் மின் அஞ்சலில் வரும். அவரிடம் இருந்து அவைகளை பெற்று ஸ்க்ரீனை சின்னதாக்கி வேலை நேரங்களில் கதைகள் படித்து கொண்டிருப்பேன்... தூரத்தில் இருந்து பார்பதற்கு வேலை செய்வது போலவே இருக்கும். நேரில் பார்பதற்கு உன்னாலே உன்னாலே வினய் மாதிரி இருப்பார். இவரது சிறுகதைகள் அட்டகாசமாக இருக்கும். 


ஆவி பேய் கதைகளில் அண்ணன் நிபுணரோ நிபுணர். சமுதாய அக்கறை கொண்ட இவரது கருத்துக்கள் சிந்திக்க வைக்கிறார்போல் இருக்கும். சிங்கப்பூரில் பணி நிமித்தமாக வசித்து வரும் இவருக்கு என்னுடைய சிறப்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.





பதிவுலகம்

     கால்பந்து குறித்து அதிகம் எனக்கு தெரியாது. ஆனாலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் என்னென்ன நடக்கிறது என அவ்வப்போது அறிந்து கொள்ள உதவியது பதிவர் லோஷன் எழுதிய பதிவுகள். தமிழில் சப்டைட்டில் போட்டு மேட்ச் பார்ப்பது போன்று இருந்தது இவரது கால்பந்து குறித்த பதிவுகள். அவருக்கு என் வாழ்த்துக்களும் நன்றிகளும்.

     சமீபத்தில் படித்த பதிவர் ராஜாவின் ஆர்குட் படுத்தும் பாடு நல்ல சிரிப்பை வரவழைத்தது. ஸ்கராப் மெசேஜ்களுக்கான அவரது கமெண்டுகளை படித்து கண்களில் நீர் வர சிரித்துக்கொண்டிருந்தேன்.

     சில சமயம் சிலவற்றை படிக்கும் போது குபீர் என சிரிப்பு வரும். பதிவர் சரவணக்குமரனின் ஆனந்தபுரத்து வீடு விமர்சனம் படிக்கும்போது இந்த ஒற்றை வரி என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
  "ஷங்கர் இன்னும் சில காலத்திற்கு படம் தயாரிக்க போவதில்லையாம். படம் பார்த்து பயந்தது,  அவர் ஒருவராகத்தான் இருக்கும்."


இந்த வார விட்ஜெட்

     என் வலைப்பூவில் கீழே ஓடிக்கொண்டிருக்கும் "உங்கள் கருத்துக்களை பின்னூட்டமிடுங்கள்...." பிளாஷினை உங்கள் பதிவில் இணைக்க :

<object width='300' height='75'><embed src='


http://www.hostanypic.com/out.php/i6066_feed.swf' width='450' height='90' wmode='transparent'/></embed></object>
<br /></a>

6 comments:

Jey said...

காக்டெல் துணுக்குகள் அருமை.

விட்ஜெட், டிப்ஸுக்கு நன்றி, என் பிளாக்கில் சேர்த்துவிட்டேன்.

ARV Loshan said...

நல்லதொரு கலவை அலசல்..


//தமிழில் சப்டைட்டில் போட்டு மேட்ச் பார்ப்பது போன்று இருந்தது இவரது கால்பந்து குறித்த பதிவுகள்//
ஆகா.. நன்றி.. :)

ஆர்குட் படுத்தும் பாடு - :)

"ராஜா" said...

நண்பரே நன்றி ....

Cable சங்கர் said...

m.. நாதஸ்வரம் படு மொக்கை என்று என் அம்மா சொல்கிறார்கள்.

butterfly Surya said...

பீலீங்ஸ்.. அருமை.

தொடரவும்..

Appu said...

ஏனுங்க டிஸ்கவரி சேனல் மேல உங்களுக்கு அவ்வளவு என்ன கோவம்?
ஏதோ எப்படியோ நல்லது நடக்குது. சந்தோசப் படுங்க. அதுக்கு நாம நிதி உதவி கொடுத்து, நிதி உதவி கொடுத்ததுக்கு உபகாரமா பெண்புலி ஸ்பெஷல் ப்ரோக்ராம் அதை இங்கிலீஷ்ல போடுங்கனு சொல்லி , நிதி உதவிக்கு ஒரு பாராட்டு விழா பெண் புலி டிஸ்கவரில வந்ததுக்கு தனி பாராட்டு விழா. தமிழ் நாடு தாங்காதுங்க. நம்ம காசு இல்லாம உதவி இல்லாமலும் தமிழ் வளரும் விடுங்க!