அகில உலகத்தையே கலக்கும் ஐ.பி.எல் பற்றிதான் இப்போ ஊரெங்கும் பேச்சு. பல நடிகர்கள் இதில் ஓனர்களாக இருபதால் அவர்களுக்கும் நல்ல பப்ளிசிட்டி. இதனால் நம் தமிழ் நடிகர்கள் சிலரும் புதிய அணிகளை உருவாக்கினால் எப்படி இருக்கும் என ஒரு கற்பனை கலாட்டா.
பத்து வேடத்தில் நடித்து சாதனை செய்தாயிற்று அடுத்து என்ன செய்யலாம் என யோசித்த கமல்ஜி இந்த அணியை வாங்கியிருக்கிறார்.... அது சரி அது என்ன கமல் லெவன் ஹாலிவுட் என்றுதானே கேட்கிறீர்கள்.. காரணம் இருக்கிறது... சச்சின், யுவராஜ், டோனி, கவாஸ்கர் என கமல்ஜியே பதினொரு வேடத்தில் களமிறங்கி விளையாடுகிறார்.. இதற்காக ஆஸ்த்ரேலியாவில் இருந்து சிறப்பு மேக்கப் நிபுணர்கள் வர இருக்கிறார்கள். இந்த கமல்ஜியின் அதிரடி புராஜெக்டினால் ஒட்டுமொத்த ஹாலிவுட்டும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது.
நம்ம தலைவரும் ஒரு அணியை வாங்குகிறார். மும்பை எந்திரன்ஸ் என பெயர் வைக்கபட்டுள்ளது. டீம் கோச்சாக நியமிக்கப்பட்டுள்ள இயக்குனர் ஷங்கரின் ஐடியா படி மும்பை விஞ்ஞானி ஒருவரின் உதவியில் 11 ரோபோக்கள் உருவாக்கப்பட உள்ளன. மனிதர்களை வைத்து விளையாடினால் தோற்பதற்கு வாய்பிருப்பதால் இந்த ரோபோக்களை களமிறக்குகின்றனர். சிறப்பு ப்ரோக்ராம் செய்யப்பட்ட இந்த எந்திரன்ஸ், 20 ஓவர்களில் சுமார் 1000 ரன்கள் வரை அடிக்கும் என எதிர்பார்க்கபடுகின்றது.
அன்னிய ஆதிக்கத்தின் அடையாளமே இந்த கிரிகெட் என சாடிய டி.ஆர் சார், ஒரு அணியை உருவாக்கி தமிழ்ர்களின் பெருமையை நிலை நாட்ட உள்ளார். ஆம் கிரிகெட் பேட், மற்றும் பால் வைத்து விளையாட கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர்.... தென்னை மட்டை வைத்து பேட் செய்யவும், இளனியை வைத்து பௌலிங் செய்யவும் மனு செய்துள்ளார். இது குறித்து அவர் கொடுத்த பேட்டியில் " டேய்.... இந்த ஐ.பிஎல் மேட்சி ரொம்ப போரு...அத பாத்து என் தங்கச்சி கண்ல கண்ணீரு..... பேட் பால் கண்டுபிடிச்சவன் யாரு...அத மாத்த போறேண்டா இந்த டி.ஆரு..... " என உணர்ச்சி வசப்பட்டு சொடுக்கு போட்டு கொண்டே கூறினார்.
எல்லோரும் இறங்கும்போது நம்ம கேப்டன் சும்மா விடுவாரா.... கேப்டன் டாப் டென் கிங்க்ஸ் என்ற அணியை வாங்கியிருக்கிறார். இதில் கேப்டனுடன் டாப் டென் ப்ளேயர்ஸ்களின் மாதிரிகள் விளையாட உள்ளனர். அதாவது கருப்பு டெண்டுல்கர் , சிகப்பு பிரைன் லாரா, மாநிறம்..........
கேப்டன் எது செய்தாலும் அவருக்கு போட்டியாக இருப்பேன் என வைகை புயல் வடிவேலு அண்ணனும் பல நாளாய் கிளப்பாமல் கிடந்த தன் அதிரடி குரலை தூசு தட்டி கிளம்பி விட்டார். வைகை வாரியர்ஸ் மதுரை என அணியை உருவாகிய அவர் கூறுகையில்...."அண்ணே மதுரை பக்கம் மன்னார்குடி பக்கம் நமக்கு ரசிகர்கள் ஜாஸ்திண்ணே... அவிங்கள்ள எவ்ளோ அடிச்சாலும் தாங்குற ஒரு 11 பேரை செலக்ட் பண்ணியிருக்கொம்னே...அவரு எந்த மேட்சில விளையாண்டாலும் எதிர்த்து நிப்போம்னே..." என நான் ஸ்டாப்பை பொரிந்து தள்ளினார்.
அண்ணன் ஜே.கே.ரித்தீஷின் "ராமாநாதபுரம் ரணகள ரைடர்ஸ்" அணியில் விளையாடவே அனைத்து வீரர்களும் விருமபுவதாய் தகவல். இந்த அணியின் சிறப்பம்சமே .... விளையாடும் அனைத்து ப்ளேயர்ஸ்களுக்கும் வித வித கலர் ஜெர்சிக்கள்....விளையாடும் ஒவ்வொரு பாலுக்கும் ஆயிரம் ஆயிரமாக கட்டுகள் அள்ளி அள்ளி கொடுக்கப்படுமாம்.. தோத்தாலும் ஜெயிச்சாலும் அண்ணன் வைய்யவே மாட்டாராம். சிரிச்சிகிட்டே பிரியாணி பொட்டலம் கொடுப்பாராம்.
என்ன நண்பர்களே படிசிடீங்களா, புடிச்சிருந்தா அப்டியே உங்க ஓட்டை குத்துங்க சாமி குத்துங்க.....
இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!
இதுவரை எல்லா பதிவுகளுக்கும் ஆதரவு கொடுத்து வரும் நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.......!
36 comments:
அட்டகாசமான கற்பனை..
ரொம்ப நல்லா இருக்கு..
என் ஆதரவு ராமநாதபுரம் டீமுக்குத்தான்.. டீம் கேப்டன் மாப்ள டக்லஸ்..
கான்சப்ட் மேட்டரே சூப்பரு...!
ஆமா, இதெல்லாம் எந்த Software ல பண்ணினீங்க சுகுமார்..!
வாங்க லோகு அண்ணே... ரொம்ப நன்றி..... ஜெ,கே .ஆர் அண்ணே ரொம்ப நல்லவராமே...... இந்த பதிவ பாத்தா கூட ஆயிரம் ரூபா கொடுப்பாரு,, யாராவது எடுத்து சொல்லுங்கப்பா
செம காமெடிங்க :-))))
அணிகள் பெயர் பட்டாசா இருக்கு ;-)
டக்லஸ் அண்ணே... ரொம்ப நன்றிண்ணே.... போடோஷாபில் செஞ்சேன் அண்ணே
// கிரி //
தல... ரொம்ப தேங்க்ஸ் தல
சூ
ப்
ப
ர்
ஐ
டி
யா
த
ல
நல்ல கற்பனை... வாழ்த்துக்கள்
வினோ
என்வழி.காம்
very nice. keep it up
ரித்தீஸ் டீமுக்கு அப்ளை பண்ணலாம் னு இருக்கேன். இது ரித்தீஸ் நற்பணி மன்ற ப்ளாக் பிரிவு அதிகாரிகளுக்கு தெரியுமா?
ரித்தீஸ் டீமுக்கு அப்ளை பண்ணலாம் னு இருக்கேன். இது ரித்தீஸ் நற்பணி மன்ற ப்ளாக் பிரிவு அதிகாரிகளுக்கு தெரியுமா?
அட்டகாசம் பண்ணிட்டீங்க போங்க.. கிளப்பல்ஸ்..
கற்பனை அருமை...
கலக்குங்க...
:)))
செமங்க!!!
சூப்பர்...ஸ்சூப்பர்...ஸ்ஸ்சூப்பர் ..
(சுந்தரம் மாஸ்டர் ஸ்டைலில் படிக்கவும்.. :-)
சுரேஷ் அண்ணே வாங்க...
ரொம்ப ,,, ந ன் றி ண் ணே
// வினோ என்வழி.காம் ///
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
முரளிகண்ணன் சார்... உங்கள் வாழ்த்துக்கு நன்றி ...
// pappu //
வாங்க சார்... அப்பளை பண்ணும்போது சொல்லுங்க நானும் வரேன்.....
கார்த்திகை பாண்டியன் சார்... வருகைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி...
வாங்க வழிபோக்கன் சார்... ரொம்ப தேங்க்ஸ்... கலக்கிடுவோம் ....
வாங்க கடைக்குட்டி சார்.....சுந்தரம் மாஸ்டர் போலவே படித்தேன்....தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்ங்க .....
தலைவர் ரித்தீஸ் டீம் பெயருல தலைவர் பெயர காணேம்.
என்னோட சில suggestion
முகவை பதினொன்னு.
ரித்தீஸ் ரிட்டன்ஸ்(Groundஅ விட்டு இல்ல)
இன்று தான் தற்செயலாக உங்கள் ப்ளொக் பக்கம் வந்தேன். தீவிர ரசிகை ஆகிவிட்டேன். இளனி பெளலிங் மாட்டர் சூப்பர்......எழுத்து பணி தொடர வாழ்த்துக்கள்
நல்ல காமெடி சுகுமார்.
வாங்க விஷ்ணு அண்ணே...
தங்கள் பரிந்துரை அருமை.......!
வாங்க மதுவந்தி ..... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க.....
shortfilm india ...... மனைக்கு வந்ததற்கும் உற்சாகத்திற்கும் ரொம்ப நன்றி .....
Post a Comment