Monday, February 17, 2014

வலைமனை | ஃபீலிங்ஸ் 17 02 14



நேற்று மதியம் டைடல் அருகே சிக்னலில் நின்று கொண்டிருந்த பொழுது வண்ணத்தாள் சுற்றப்பட்ட பரிசுப்பொருட்கள் சகிதம் அருகே பைக்கில் ஒரு காதல் ஜோடி. தாமதமாக வேலன்டைன்ஸ் டே கொண்டாடுகிறவர்களாக இருக்கும் என நானாய் நினைத்துக் கொண்டேன். அவர் ஏதோ சொல்ல சொல்ல இந்தப் பெண் வெட்கப்பட்டுக்கொண்டே கேட்டது அவ்வளவு அழகு.

சிக்னல் விட்டு முன்னே அவர்கள் சென்றதும்தான் கவனித்தேன், பெண் டிஷர்ட்டில் "Love - Not War" என்ற வாசகம். அதைப் பார்த்ததும் சட்டென, திருமணம் முடிந்ததும் இதே பெண் அவரை தூக்கிப் போட்டு மிதிக்கும் காட்சி கண்முன்னே விரிய எனக்கு தாங்க மாட்டாத சிரிப்பு. 

'ராஜீவா பாரத் சுலோஷனா' என வாயில் நுழையாத என்னத்தையோ அழகாய் பாடி ஓட்டு கேட்கும் ராகுல் காந்தியை தோற்கடிக்கின்றனர் காதலிகள்.




பிரதமரையே சந்தித்துவிட்டு கெத்தாய் வந்தாலும் வாசலில் ஒரேயொரு ஜெயா டி.வி ரிப்போர்ட்டரை நிற்க வைத்து கேப்டனை வெத்து பண்ணிவிடுகிறார்கள்.

கேப்டன் கஷ்டப்பட்டு திங்க் பண்ணி திங்க் பண்ணி பேட்டி கொடுக்க, 'உங்க டூத்பேஸ்ட்ல உப்பு இருக்கா?' என்பது போல முகத்துக்கு நேராக ஜெயா டி.வி லோகோவை நீட்டி எதையாவது கேட்டு வெறியேத்திவிடுகிறார்கள். பிறகென்ன, சும்மா இருக்கும் பூனையை எலி சீண்டுவதும் பூனை கடுப்பாகி கலாட்டா செய்வதும் என நமக்கு ஜகஜ்ஜாலியாக 'டாம் அண்ட் ஜெர்ரி' பார்ப்பது போலவே இருக்கிறது. 


கேப்டனுக்கு வாக்களிப்போம். நகைச்சுவையை வாழவைப்போம்.




யுடியூப்பில் பிடித்த திரைப்படத்தை ஓடவிட்டு கேட்டவாறே மணிக்கணக்காக எடுக்கும் பெரும் பணிகளை செய்வது எனக்கு ரொம்ப பிடிக்கும். விடிய விடிய தனியாய் அமர்ந்தாலும் துணை இருப்பது போலவும் பழக்கப்பட்ட வசனங்கள் என்பதால் கவன மாற்றம் ஏற்படுத்தாமலும் இருக்கும். இரண்டரை மணி நேரத்தில் எவ்வளவு முடித்துள்ளோம், அடுத்த படம் முடிவதற்குள் எவ்வளவு முடிக்கலாம் என்கிற கணக்கிடுதல் வசதியும் உண்டு. 



ஒரேயொரு குறை என்னவென்றால், "மாணிக் நஹி.... மாணிக் பா.." என்பது போன்ற முக்கிய இடங்களை கூட அறியாத ரசனையற்ற யூ-டியூப், பட்டென பாஸ் ஆகி 'அப்பாக்கு டாட்டா சொல்லு' என டிக்கெட் கூஸ் விளம்பரத்தை போட்டு தாளிப்பது செம கடுப்பு.



எட்டு மணி நேர டெட்லைனில் கிரியேட்டிவ்வாக ஒரு டிசைன் செய்யவேண்டுமெனில் ஏழே முக்காலாவது மணித்துளியில்தான் மண்டைய பிய்த்துககொண்டு ஐடியாஸ் கொட்டுகிறது..! 
அதுவரை பேஸ்புக்கை மேலிருந்து கீழும் பின்னர் கீழிருந்து மேலும் ஸ்க்ரோல் செய்து, அதை குளோஸ் செய்து, அடுத்த நிமிஷம் மறுபடியும் ரீஓப்பன் செய்து  சேம் ஸ்டெப்ஸ் ரிப்பீட் செய்து... நடுவில் கூகுள் பிளஸ் உள்ள சென்று வெளியே வந்து... சின்னதாய் ஒரு விண்டோவில் கேண்டி கிரஷ் தரும் ஐந்து லைஃப்பையும் காலி செய்து என ஏழரை மணி நேரமும் சுறுசுறுப்பாய் இயங்க வைக்கின்றன இந்த சோஷியல் நெட்வொர்க்ஸ்.

நல்லவேளை.. இவைகள் மட்டும் இல்லையென்றால் சோம்பேறி ஆகியிருப்பேன் என நினைக்கிறேன் 




4 comments:

Unknown said...

#நல்லவேளை.. இவைகள் மட்டும் இல்லையென்றால் சோம்பேறி ஆகியிருப்பேன் என நினைக்கிறேன் #
சுறுசுறுப்பு சரி தூக்கத்தையும் இழந்து கொண்டிருக்கிறோம் ?

குட்டன்ஜி said...

இவையெல்லாம் ஒரு போதஒயாகி விட்டன!
ஃபாண்ட் மிகவும் சிறிதாக இருக்கிறதே!

சேக்காளி said...

//எட்டு மணி நேர டெட்லைனில் கிரியேட்டிவ்வாக ஒரு டிசைன் செய்யவேண்டுமெனில் ஏழே முக்காலாவது மணித்துளியில்தான் மண்டைய பிய்த்துககொண்டு ஐடியாஸ் கொட்டுகிறது//
அப்போ ஏழரையோட தாக்கம் ரொம்பதான்னு சொல்லுங்க.இல்லேன்னா எழரை முடிஞ்சு ஏழே முக்காலுக்கு எப்படி கொட்டும்?

raamraam said...

hello will you please type letters
boldly?