Thursday, September 5, 2013

வலைப்பதிவர்கள் திருவிழா | வலைமனை


கடந்த ஞாயிறு அன்று சென்னையில் நடைபெற்ற வலைப்பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றிருந்தேன். அருமையாக ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து வகையிலும் விழா சிறப்பாக நடந்தேறியது. விழா குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் கொஞ்சம் தாமதாகத்தான் செல்ல முடிந்தது. முன்னரே விழாவிற்கு அழைத்து எனது வருகையை உறுதிசெய்து கொண்டு அதை பட்டியலில் வெளியிட்ட பதிவர் ஆரூர் மூனா செந்தில் இன்முகத்துடன் வாயிலில் வரவேற்றார்.

எனது பதிவுலக குரு கேபிள் சங்கர், தல ஜாக்கி சேகர், கே.ஆர்.பி.செந்தில், வீடு திரும்பல் அண்ணன் மோகன் குமார், மெட்ராஸ் பவன் சிவக்குமார் ஆகியோரை உள்ளே நுழைந்ததும் சந்திக்கும் பேறு பெற்றேன்.

 அரங்கில் நுழையும் முன், பெயர், வலைதள முகவரியை பதிவு செய்து கொண்டு அடையாள அட்டை தந்தார்கள். அந்த பதிவு உள்ளே மேடைக்கு சென்று சில நிமிடங்களில் பதிவர் அறிமுகத்திற்காக மேடைக்கு அழைத்தார்கள்.

மேடையில் பேசும்பொழுது, முகத்தில் பதட்டத்தையும், வயித்தில் தொப்பையையும் மறைக்க வேண்டி முழு கவனமும் சென்றதால் வேறு ஏதும் பேசத்தோன்றாமல் விழா குழுவினருக்கு வாழ்த்து சொல்லி இறங்கினேன்.

  
பிரபு கிருஷ்ணா உடன்...



இறங்கி அமர்ந்ததும் இதுவரை சந்தித்திராத பதிவுலக நண்பர் பிரபு கிருஷ்ணாவை சந்திக்க முடிந்தது. அவருடனே உணவு இடைவேளை வரை அமர்ந்திருந்தேன். சிறப்பு விருந்தினர் பாமரன் பேச்சு சுவாரஸ்யமாக இருந்தது.  பின்னர் சுவையான அசைவ மற்றும் அசையாத உணவு வகைகள் பரிமாறப்பட்டது.

 எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் சிறப்பான பேச்சு, புத்தக வெளியீட்டு விழா என மதிய நிகழ்வுகளும் குதூகலமாக அரங்கேறின.  காலையில் வர இயலாத பலரை  மதியம் காண முடிந்தது.

சதீஷ் சங்கவி எழுதிய 'இதழில் எழுதிய கவிதைகள்'  மோகன் குமார் எழுதிய 'வெற்றிக்கோடு' சுரேகா எழுதிய 'எஸ்கேப்'  உள்ளிட்ட 5 புத்தகங்களின் வெளியீட்டு விழா மாலை நடைபெற்றது. இதில் வெற்றிக்கோடு புத்தகத்தின் முகப்பு அட்டையை நான் வடிவமைத்திருந்தேன். அதற்காக அந்நிகழ்வின் போது மோகன்குமார், மேடையேற்றி பொன்னாடை போர்த்தி அன்பு செலுத்தினார். இது எனக்கு முதன்முறை என்பதால் வெரி ஷை ஆக இருந்தது.

THAT MOMENT : VERY SHY


நான் அறிந்த வரையில் விழா ஒருங்கிணைப்பாளர்கள் பிலாசபி பிரபாகரன், ஆரூர் மூனா செந்தில், கே.ஆர்.பி.செந்தில், பட்டிக்காட்டான் ஜெய், மெட்ராஸ் பவன் சிவக்குமார், சதீஷ் சங்கவி, மோகன் குமார்ஆகியோரை கடைசியில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து  தெரிவித்தேன். பெயர் விடுபட்ட மற்றவர்களுக்கு இப்பதிவின் மூலம் என மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அண்ணன்ஸ் அகநாழிகை வாசுதேவன் மற்றும் கேபிள் சங்கர் உடன் ...


முதன் முறையாக பதிவர்கள், பிரபு கிருஷ்ணா, பிளாக்கர் நண்பன் அப்துல் பாஷித், மயிலன், பாலகணேஷ் உள்ளிட்டோரை சந்தித்ததும்,  பலாபட்டறை ஷங்கர், கே.ஆர்.பி.செந்தில், அகநாழிகை பொன்வாசுதேவன், கார்க்கி, சதீஷ் சங்கவி, தல பாலபாரதி, உண்மைத்தமிழன் , நிகழ்ச்சியை சுவையாக தொகுத்து வழங்கிய அண்ணன் சுரேகா ஆகிய பழகிய நண்பர்களை சந்தித்ததும் என மிக இனிமையான நாளாக அமைந்தது.

ஆச்சரியமான விஷயமாக, நான் இதன் முன் சந்தித்திராத பதிவர்கள் சிலருடன் பேசிக்கொண்டிருக்கும்பொழுது , வலைமனை மற்றும் போட்டோ கமெண்ட்ஸ் பற்றியெல்லாம் குறிப்பிட்டு பாராட்டினார்கள். இப்பொழுது ஏன் அதெல்லாம் எழுதுவதில்லை என கேட்டவர்களுக்கு, "திருந்திட்டேன் பாஸ்" என ஜாலியாக சொல்லிக்கொண்டிருந்தேன்.

பதிவர் திருவிழாவிற்கு சென்று பதிவர்களை பார்த்த பிறகாவது ஒரு பதிவு போட வேண்டும் என்ற உந்துதலில் 6 மாத காலம் கழித்து பாழடைந்த மண்டபமாக இருந்த வலைமனைக்கு சுண்ணாம்பு அடித்து, ஹெட்டர் பேனர் எல்லாம் மாற்றி ஒரு பதிவு போடும் இத்தருணம், வெகுநாட்களாய் காணாமல் போன  பிடித்த பொருள் ஒன்று மீண்டும் கிடைக்கும் பொழுது எழும் திருப்தியை தருகிறது.


16 comments:

Prabu Krishna said...

:-))))

கோகுல் said...

அடையாளமே தெரியாம ஆளே மாறிட்டிங்க பாஸ்

சேலம் தேவா said...

சுண்ணாம்பு அடித்த வீடு சூப்பருங்கோ...உங்களை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி.

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியே தொடரவும்...

வரதராஜலு .பூ said...

/"திருந்திட்டேன் பாஸ்" //

why? come back boss

Anonymous said...

நன்றி சுகுமாரன், நீங்கள் வருகை தந்ததே எங்களுக்கு மகிழ்ச்சி

ராஜி said...

கிரகப்பிரவேசத்துக்கு வாழ்த்துகள்

கார்த்திக் சரவணன் said...

தொடருங்கள் சுகுமாரன்... நன்றி...

Admin said...

உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி நண்பா! நீங்க கல்யாணம் ஆகி நடுவயதுடையவரா இருப்பீங்கன்னு நெனச்சேன்.... :)

Admin said...

email follow-up :)

aavee said...

நிறைய பேர்கிட்ட பேச முடியாம போயிடுச்சு.. உங்ககிட்டையும். மற்றொரு சந்திப்பில் பார்க்கலாம் பாஸ்!!

Unknown said...

என்னால் கலந்து கொள்ள இயலாததத்தில் மிக வருத்தமே

பெருங்காயம் said...

டெக்னிகல் டெர்ரொர் வலை மனையை மறந்து முகநூலில் அடைக்கலம் ஆகிடீங்க

CS. Mohan Kumar said...

:))

Your writing style has a good sense of humour. Please continue whenever time permits, not affecting your regular work.

”தளிர் சுரேஷ்” said...

மீண்டும் வலைமனைக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்!

Sukumar said...

Blogger Prabu Krishna said...
:-))))

---> நன்றி பிரபு.. தங்களை சந்தித்து பேசியது முக்கியமான தருணம்.

Blogger கோகுல் said...
அடையாளமே தெரியாம ஆளே மாறிட்டிங்க பாஸ்
---> ஆமாவா பாஸ்.. நீங்க ஆனா அப்படியேதான் இருக்கீங்க...

Blogger சேலம் தேவா said...
சுண்ணாம்பு அடித்த வீடு சூப்பருங்கோ...உங்களை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி.
---> நன்றி பாஸ்.. உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
இப்படியே தொடரவும்...
---> நன்றி..


Blogger வரதராஜலு .பூ said...
/"திருந்திட்டேன் பாஸ்" //

why? come back boss
---> வரனும் பாஸ்... :))


Blogger ஆரூர் மூனா செந்தில் said...
நன்றி சுகுமாரன், நீங்கள் வருகை தந்ததே எங்களுக்கு மகிழ்ச்சி
---> நன்றி செந்தில்...


Blogger ராஜி said...
கிரகப்பிரவேசத்துக்கு வாழ்த்துகள்
---> வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி...


Blogger ஸ்கூல் பையன் said...
தொடருங்கள் சுகுமாரன்... நன்றி...
---> நன்றிங்க ஸ்கூல் பையன்...


Blogger Abdul Basith said...
உங்களை சந்தித்ததில் ரொம்ப மகிழ்ச்சி நண்பா! நீங்க கல்யாணம் ஆகி நடுவயதுடையவரா இருப்பீங்கன்னு நெனச்சேன்.... :)
---> அப்துல், உங்கள் புன்னகை மிக அழகு. வெகு நாள் பழகிய நட்பின் உணர்வை கொடுத்தது. தங்களை சந்தித்தது இனிமை.


Blogger கோவை ஆவி said...
நிறைய பேர்கிட்ட பேச முடியாம போயிடுச்சு.. உங்ககிட்டையும். மற்றொரு சந்திப்பில் பார்க்கலாம் பாஸ்!!
---> பார்ப்போம் பாஸ்.. :))



Blogger சக்கர கட்டி said...
என்னால் கலந்து கொள்ள இயலாததத்தில் மிக வருத்தமே
---> அடுத்த முறை கலந்து கொள்ளுங்கள்.. நன்றி



Blogger பெருங்காயம் said...
டெக்னிகல் டெர்ரொர் வலை மனையை மறந்து முகநூலில் அடைக்கலம் ஆகிடீங்க
---> ஹா.. ஹா... சிவக்குமார் வலைப்பூவில் கொடுத்திருந்த கமெண்ட்... முகநூலில் கூட அதிகம் எழுதுவதில்லை பாஸ்...


Blogger மோகன் குமார் said...
:))

Your writing style has a good sense of humour. Please continue whenever time permits, not affecting your regular work.
---> நன்றியண்ணே.. தங்களது அன்பை என்றும் மறவேன்...


Blogger s suresh said...
மீண்டும் வலைமனைக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் தொடருங்கள்!
---> வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்... நன்றி ...