Wednesday, April 4, 2012

ஃபேஸ்புக் தோழியும் பொய் சொன்ன நண்பனும்





து மாதிரி ஃபேஸ்புக் என்று ஒன்று வந்து தொலைக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் பத்தாம் வகுப்பு டியூஷனில் உடன் படித்த தனலட்சுமி, கவிதாக்களின் அப்பா பெயரையும் கேட்டு தெரிந்து வைத்திருப்பேன்.  இப்போழுது தனலட்சுமி என தேடினால் ஆயிரக்கணக்கில் தனலட்சுமிகள் ஃபேஸ்புக்கில் லைன் கட்டுகிறார்கள். நாய்குட்டி பொம்மையும், குட்டி பெண் பாப்பா போட்டோக்களும் புரொஃபைல் பிக்சராய் வைக்கப்பட்டு அதன் பின் மறைந்திருக்கும்  தனலட்சுமிக்களில் நம் தனலட்சுமியை எப்படி கண்டுபிடிப்பது என நினைக்கும்பொழுது அழுகையே வந்துவிடுகிறது.


ஆனால், நாம்தான் இவ்வளவு ஃபீல் செய்கிறோம், இதே நேரம் அந்த தனலட்சுமி நம்மை சுத்தமாக மறந்த நிலையில் செரலாக்கை கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்கு பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டிருக்கும் என நினைக்கும்பொழுது வந்த அழுகை கூட நின்னுடுது.


---


ங்கமணி கிச்சனில் கிரைண்டருடன் சண்டை போட்டபடி மாவும் கையுமாக இருந்த சுபமாலை வேளையில், குழந்தையை மடியில் வைத்தபடியே இணையத்தை மேய்ந்துக்கொண்டிருந்தேன். "ம்மே" மட்டுமே சொல்லக்கூடிய, எவ்வளவு கேட்டாலும் அப்பாவோ, தாத்தாவோ இன்னபிற வார்த்தைகளோ வாயில் வராத பத்து மாத அப்பாவிக்குழந்தை. 


மேய்ச்சல் போக்கில் பேஸ்புக்கில் புதிதாய் ஆட் ஆன தோழியின் புரொபைலை கிளிக் செய்தேன். அவ்வளவுதான்... சரஸ்வதி சபதத்தில் அருள் வந்து திடீரென பேசும் சிவாஜி மாதிரி, அந்த தோழியின் புகைப்படத்தை பார்த்ததும் மடியில் இருந்த குழந்தை "க்கா... அக்கா" என ஹை டெசிபலில் அபாய ஒலியெழுப்ப,  கிச்சனில் இருந்து ஆச்சரியமாக தங்கமணி படாரென எட்டிப்பார்க்க, மடியில் குழந்தை அங்குமிங்கும் மீன் போல துடித்ததால் சட்டென விண்டோவை குளோஸ் செய்ய முடியாமல் எல்லாம் சுபமாய் முடிந்தது. 


இன்னும் நமக்கெதிராய் செயல்பட குழந்தைக்கு என்னென்ன பயிற்சிகள் தரப்படுகிறதோ என நினைத்தாலே கலக்கமாய் இருக்கிறது.
---


மீபத்தில் திருமணமான உயிர் நண்பன், படத்துக்கு கூப்பிட்டாக் கூட ரொம்ப நல்லவன் மாதிரியே பேசுனான். இடையில இடையில அவன் மனைவியோட சிரிப்புக்குரல் வேற கேட்டுச்சு. ரொம்ப நல்லவன் மாதிரி சீன் போடுறானேனு, டவுட்டோட, 


"ஏன்டா ஸ்பீக்கர் போட்டு பேசுறியாடா?"னு கேட்டேன். 

"இல்லையே"ன்னான். 

"ம்.. சரி சரி..  அப்புறம் மச்சி.. பழைய ஃபிகர் சுப்ரபா கூட இன்னும் கான்டாக்ட் இருக்காடா?"ன்னு ஒருவார்த்தைதான் கேட்டேன்.

அப்ப கட் ஆன கால்தான். 

# பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு



22 comments:

சரவணகுமரன் said...

மூணுமே சூப்பர்.

இந்த சமயம், மூணு சூப்பருன்னு சொன்ன ஒரே ஆளு நாந்தான்’ன்னு நினைக்கிறேன். :-)

சௌந்தர் said...

என்னா வில்லத்தனம்..??

குசும்பன் said...

பங்கு வீட்டுக்கு போன் போடுறோம்...வாலி படத்துல விவேக் கேட்கிற மாதிரி...நாங்க கேட்கிறோம்...

வெளங்காதவன்™ said...

:-)

வெளங்காதவன்™ said...

:-)

முரளிகண்ணன் said...

கலக்கல்

anujanya said...

சான்சே இல்ல!

//செரலாக்கை கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்கு பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டிருக்கும்//

//சரஸ்வதி சபதத்தில் அருள் வந்து திடீரென பேசும் சிவாஜி மாதிரி, அந்த தோழியின் புகைப்படத்தை பார்த்ததும் மடியில் இருந்த குழந்தை "க்கா... அக்கா" என ஹை டெசிபலில் அபாய ஒலியெழுப்ப, கிச்சனில் இருந்து ஆச்சரியமாக தங்கமணி படாரென எட்டிப்பார்க்க, மடியில் குழந்தை அங்குமிங்கும் மீன் போல துடித்ததால் சட்டென விண்டோவை குளோஸ் செய்ய முடியாமல் எல்லாம் சுபமாய் முடிந்தது. //
ஹையோ, சிரிச்சு மாளல :)))))))))))))))))))))))))))

புதுகை.அப்துல்லா said...

கலக்குற சந்துரு :)))

இல்யாஸ்.மு said...

super:)

Prabu Krishna said...

ஹா ஹா ஹா. கடைசி தான் செம கலக்கல்.

rajamelaiyur said...

//நாம்தான் இவ்வளவு ஃபீல் செய்கிறோம், இதே நேரம் அந்த தனலட்சுமி நம்மை சுத்தமாக மறந்த நிலையில் செரலாக்கை கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்கு பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டிருக்கும் என நினைக்கும்பொழுது வந்த அழுகை கூட நின்னுடுது
//

ஓவரா பீல் பண்ணாதிங்க ...தனம இல்லனா தாரா

arasan said...

அனுபவத்தின் அழகிய வெளிப்பாடு .. அருமை .. ஹா ஹா ஹா

DHANS said...

//இதே நேரம் அந்த தனலட்சுமி நம்மை சுத்தமாக மறந்த நிலையில் செரலாக்கை கரைத்து மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பாப்பாவின் வாய்க்கு பதிலாய் காதில் ஊட்டிக்கொண்டிருக்கும் //
திரிஷா இல்லையென்றால் திவ்யா என்று ஒருகாலத்தில் திரிந்து, இனிக்கு பழைய திரிசவோ திவ்யாவோ எப்படி இருக்காங்கனு பேஸ்புக்ல தேடினா ஆயிரம் திவ்யா ஒரே மாதிரி வராங்க.




//பயபுள்ள பொய் சொல்லிட்டான் போலிருக்கு// யாருகிட்ட பாஸ் ??

vadakaraithariq said...

அனைத்தும் ரசிக்க வைத்தது. நன்றி

ஜோசப் பால்ராஜ் said...

கலக்கல் எழுத்து.

உங்க பங்காளிப் பய தான் ஒயுங்கா எழுத மாட்டேங்குறான், நீராச்சும் இப்டி அடிக்கடி எழுதும்யா.

சத்ய நாராயணன் said...

ஹா.. ஹா.. ஹா..

அன்புடன் அருணா said...

ஹா.. ஹா.. ஹா.. ! கலக்கல்ஸ்!

Romeoboy said...

:))))))))

Unknown said...

செம செம.

butterfly Surya said...

சூப்பர் சுகுமார். கலக்கல்.

aalunga said...

ஹா... ஹா... ஹா... சிரிப்பை அடக்க முடியல!!

ஜோ/Joe said...

:)))))))))))))))