Thursday, October 13, 2011

மன்மோகன் என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா? | கூடங்குளம்




மை டியர் மன்மோகன் சிங் சார்,

நான் ஒரு சாதாரண இந்திய குடிமகன். அப்பாவி தமிழ் பிளாக்கர். கடந்த வருடம் வரை அணுமின் உற்பத்தி குறித்து நேர்மறையான மனப்பான்மையையே நானும் கொண்டிருந்தேன். ஆனால் ஜப்பானில் நேர்ந்த விபத்திற்கு பிறகு பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற டக்கர் நாடுகளே இருக்கும் அணு உலைகளை படிப்படியாக மூடிவிட முடிவெடுத்துவிட்ட நிலையில், கூடங்குளம் மிகவும் பாதுகாப்பானது என சொல்ல நீங்கள் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா..?

இல்ல அவ்ளோ பெரிய அப்பா டக்கரானு கேக்குறேன்.

ஒரு சுனாமி விபத்து, ஒரு பூகம்ப விபத்து விளைவிக்கும் சேதாரங்களை போன்றதல்ல ஒரு அணு உலை விபத்து.  மற்ற விபத்துகளால் நேரும் பாதிப்புகளை காலப்போக்கில் சீரமைத்து மறுபடி வாழ்க்கையை துவங்கலாம். 

ஆனால் அணு கதிர்களோ, செடிகள், விலங்குகள், மனித டி.என்.ஏ, நீர்நிலைகள் என எல்லாவற்றிலும் ஊடுருவி வரும் ஆயிரக்கணக்கான தலைமுறைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பாதிப்படைந்த பகுதி மற்றும் அதை சுற்றி இருக்கும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டரில் வரும் பகுதிகளையும் பயன்படுத்த தகுதியற்றவையாக மாறிவிடும்.

டிநகர் ரங்கநாதன் தெருவில் 'பலா சொளை பத்து ரூவா' என கூவுவது போல் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டிருப்பது ஜப்பான் புகுயுஷிமாவை விட அதி நவீனமான அணு உலை என்றும் மிகுந்த பாதுகாப்பானது என்றும் நீங்களும் உங்கள் விஞ்ஞான பெருமக்களும் தொடர்ந்து கூவிக்கொண்டே இருக்கிறீர்கள். 



அப்படியே வைத்துக்கொண்டாலும், ஒரு விபத்து ஒரு பேரழிவு நிலை என்று வந்துவிட்டால் நமது பொறுப்பை தட்டிக்கழிக்கும் மனநிலையுள்ள அதிகாரிகள் அணு விபத்தை எதிர்கொண்டு எத்தகைய மீட்பு / சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.


மீண்டும் மீண்டும் இது பாதுகாப்பானது, பயப்பட வேண்டாம், இந்த திட்டதிற்கு ஆதரவு தாருங்கள் என்றே நீங்கள் லெட்டர் எழுதப்போகிறீர்கள் என்றால் உங்களுக்கே ஒரே ஒரு கேள்வி...


ஒழுங்காக ஒரு ரோடு போட முடிகிறதா மிஸ்டர் சிங் உங்களால்?  மழை , வெயிலில் இந்திய நாட்டின் எந்த ரோடாவது அதற்கு செலவு செய்யப்பட்டதற்கு ஈடான தரத்துடன் விளங்குகிறதா...?



இருக்கிற எதையுமே ஒழுங்காக செய்யயாத அமைச்சர்கள், அதிகாரிகளை கொண்ட நீங்கள்...இந்த அணு உலையை அசால்ட்டாக பாதுகாப்பேன் என்று சொல்வதை பொதுஜனமான நாங்கள் எப்படி நம்ப முடியும் மிஸ்டர் சிங்...?


ரொம்பவும் வேண்டாம்.. ஒரு மூன்று மாதம் நாட்டில் எங்குமே குண்டு வெடிப்பு நிகழாமல் உங்களால் பாதுகாக்க முடியுமா..? சேர்ந்தாற்போல் ஒரு இரண்டு வருடம் ஆவதில்லை.. சீரான இடைவெளியில் ஏதாவது ரயில் கவிழ்கிறது.  விமானம் நொறுங்குகிறது.


இவையெல்லாம் விபத்துகள்.. விபத்துகள் இயற்கையானவை அவற்றை தடுக்க முடியாது என்று நீங்கள் கூறுவீர்களேயானால், அணு உலை விபத்தும் தவிர்க்க முடியாதது தானே...?


இல்லை.. அது நடக்கவே நடக்காது ... பயங்கரமான பாதுகாப்பு வழிமுறைகளை வகுத்துள்ளோம் என்று மீண்டும் மீண்டும் சொல்வீர்களேயானால், 


மன்னிக்கவும் மிஸ்டர் சிங்.. இயற்கை உங்களை விட மிகப்பெரியது!   இயற்கையின் சீற்றம் இன்னமும் உங்கள் விஞ்ஞானத்தின் எந்த ஒரு தொழில்நுட்பத்திற்குள்ளும் அடங்காதது!





9 comments:

கார்த்திக் said...

நல்ல நேர்மையான பதிவு..வாழ்த்துக்கள்....

கார்த்திக் said...

நல்ல..நேர்மையான..பதிவு
வாழ்த்துக்கள்.......

கூடல் பாலா said...

இடிச்ச புளி சிங் ...

SURYAJEEVA said...

இன்னும் அருமையான கேள்வி இருக்கு?
முப்பது வருஷம் இயங்கிய பிறகு அந்த அணு உலை கட்டிடத்தை என்ன செய்வதை உத்தேசம்?
அணுக கழிவுகளை பிரான்ஸ் நாட்டில் நடந்தது போல் நிலத்தடி நீரில் தான் கலக்க போகிறீர்களா?

Anonymous said...

// நான் ஒரு சாதாரண இந்திய குடிமகன். அப்பாவி தமிழ் பிளாக்கர் //.

உங்களின் பதிவில் இருந்தே நீங்கள் ஒரு அப்பாவி என்பது புரிகிறது சார் .

வெளங்காதவன்™ said...

குத்துங்க எசமான் குத்துங்க!

Anonymous said...

குத்துங்க எசமான் குத்துங்க!

- வெளங்காதவன்.

aotspr said...

நல்ல உண்மையான பகிர்வு........
வாழ்த்துக்கள்......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

நெல்லி. மூர்த்தி said...

தங்களுடைய அதிமேதாவிதனத்தை காண்பிக்க அணுவிஞ்ஞானிகள் கூடங்குளத்தை தளமாக்குகின்றனர். எந்த ஒரு குற்றச்சாட்டையுமே விசாரித்தால் நம் மன்மோகன் சிங் “எனக்கு தெரியாது! அந்த துறையினரைத் தான் கேட்க வேணும்!!” என்பவர் அணுவிபத்துக்கு மட்டும் விதிவிலக்காகிவிடுவாரா என்ன? அவர் ஒரு கீ கொடுத்த பொம்மை. அவரிடம் ஆக்கபூர்வமாக எதையும் எதிர்பார்ப்பதிற்கில்லை!