Wednesday, August 31, 2011

மங்காத்தா - விதிகளை உடைத்த அஜித்




தமிழ் சினிமா ஹீரோக்கள் இதையெல்லாம் பண்ணக்கூடாது என இலக்கணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மாஸ் ஹீரோக்கள் அந்த இலக்கணங்களை கடைப்பிடிப்பது அவசியம்.  கதாநாயகியை ஏமாற்றாதது, கெட்ட வார்த்தைகளை தவிர்ப்பது, உண்மையான வயதை மறைப்பது என மாஸ் ஹீரோக்களுக்குண்டான அத்தனை இலக்கண விதிகளையும் துணிச்சலாக உடைத்து மங்காத்தா விளையாடி இருக்கிறார் அஜித்.

தனது முக்கியமான 50வது படத்தில் பிற நடிகர்களுக்கு முக்கிய தோற்றங்கள் கொடுத்து, கதைக்கு முன்னுரிமை கொடுத்து நடித்திருக்கும் அஜித்தின் பெருந்தன்மை பாராட்டுதலுக்குரியது. அதிலும் தனக்குண்டான மாஸ் ஓபனிங், ரசிகர்கள், இமேஜ் என எதைப்பற்றியும் யோசிக்காமல் ஒரு பக்கா நெகடிவ் கதாபாத்திரத்தை செய்திருப்பது அஜித் மேல் உள்ள மரியாதையை ரசிகர்களுக்கு நிச்சயம் அதிகரிக்கும்.

 எவ்வளவு கெட்டவனாக ஹீரோவை காண்பித்தாலும் கடைசியில் ஒரு பிளாஷ்பேக் வைத்து அவன் நல்லவன்தான் என ஒரே சீனில் மாறும் சாதாரண சினிமாவாக அமையாத கிளைமேக்ஸ் தமிழுக்கு புதுசு.


த்ரிஷா, ஆன்ட்ரியாயை விட அஞ்சலி அழகாக தெரிகிறார். லட்சுமி ராய்க்கு பதில் வேறு யாரையாவது போட்டிருக்கலாம்.  அழகான ஒளிப்பதிவு, அடுத்தடுத்து நகரும் விறுவிறுப்பான காட்சிகள், ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவை என போரடிக்காமல் செல்கிறது மங்காத்தா.


பல இடங்களில் அஜித்தின் புதிய தோற்றம் அட்டகாசமாக இருக்கிறது. ஆனாலும் ஏன் இப்படி எல்லாம் நடிக்க/பேச சம்மதித்தார் என தோன்றும் அளவிற்கு இருக்கும் சில இடங்களை தவிர்த்திருக்கலாம்.  இரண்டாம் பாதியில் சேஸிங் காட்சிகள் நீளமாக இருக்கிறது.

பின்னணி இசை அட்டகாசம். அதற்கு உழைத்தது போல் பாடல்களுக்கு உழைக்கவில்லையோ யுவன் என தோன்றுகிறது.  அனுபவ இயக்குனர்கள், அஜித்திற்கு ஹிட் படங்களை தருவதில்லை எனும் கூற்றை தைரியமான படைப்பை சிறப்பாக கொடுத்து உடைத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

ஏகன், அசல் மூலம் சோர்ந்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இந்த மங்காத்தா. மற்றவர்களுக்கு போரடித்து போன வழக்கமான மாஸ் ஹீரோ சப்ஜெட்டுகளிலிருந்து ஒரு மாற்று அனுபவமாக அமையும்.

Mangatha Mankatha Movie reivew vimarsanam valaimanai sukumar swaminathan blog review
Thala 50 Ajith Ajithkumar venkat prabhu Mankathaa



7 comments:

(Mis)Chief Editor said...

மங்காத்தா....ஒன்லி 'தல'...
மத்ததெல்லாம் சேர்ந்தும் 'போதல'யாமே!

- பார்க்கோணும்!

Unknown said...

விமர்சனம் என்ற பெயரில் முழுக்கதையையும் எழுதி,படம் பார்க்கும் போது ஏற்படும் சுவாரஸ்யத்தை கெடுக்காமல் மேலோட்டமான ஆனால் சிறப்பான விமர்சனம்... தொடரட்டும்!

Philosophy Prabhakaran said...

மகிழ்ச்சி...

Philosophy Prabhakaran said...

மங்காத்தா – THIS IS MY F**CKING REVIEW
http://philosophyprabhakaran.blogspot.com/2011/09/this-is-my-fcking-review.html

மாணவன் said...

//ஏகன், அசல் மூலம் சோர்ந்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட் இந்த மங்காத்தா.///

s.. மங்காத்தா தல ரசிகர்களுக்கு ஒரு தீபாவளிதான்....
விமர்சனம் நல்லாருக்கு நண்பரே.

kobiraj said...

நல்ல விமர்சனம் .என் பக்கமும் வரலாமே

Rizi said...

good