Thursday, March 3, 2011

கலைஞர் அரசின் மாபெரும் சாதனை - செம்மொழி பூங்கா

நுங்கம்பாக்கத்திலிருந்து நேராக கடற்கரை செல்லும் வழியில் ஜெமினி பிரிட்ஜ் சந்திப்பினை தாண்டிய உடனே வலது பக்கம் அமைந்திருக்கிறது செம்மொழி பூங்கா.

பூங்கா முகப்பு

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே....

பைக்கை பார்க் செய்தது முதலே பெரிய பருப்பு மாதிரி கையில் காமிராவுடன் புகைப்படம் எடுத்தபடியே நுழைந்தேன். டிக்கெட் எடுக்கும்பொழுது கையில் காமிராவை பார்த்த கவுன்ட்டர் பெண், "சார் காமிராவிற்கு ரூ.30 டிக்கெட்" என்றார். ஆனால் நுழைவு கட்டணமோ வெறும் ரூ.5 ரூபாய்தான். ஒரு கருவிக்கு இருக்கும் மதிப்பு கூட மனுசனுக்கு இல்லாம போயிடுச்சு நாட்டுல என நினைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தால், சென்னையின் முதல் உண்மையான 'பூ'ங்கா அசத்தலாக வரவேற்கிறது. அழகான பூக்கள், அழகான செடிகள், பச்சைப் பசேலென்ற நிலப்பரப்பு, அடர்ந்த மரங்கள் என உட்லண்ட்ஸ் டிரைவ் இன் உரிமையாளரை தவிர வேறு யார் நுழைந்தாலும் மனதில் குதூகலத்தை வரவழைக்கும் பூங்கா.

நுழைவு சீட்டு வாங்கும் இடம்.. 

பச்சை பசேலென...

பூங்கா முழுவதும் உள்ள வெவ்வேறு பகுதிகளும் விதவிதமான வடிவங்களில் லேன்ட்ஸ்கேப்பிங் செய்யப்பட்டிருப்பது அழகாக இருக்கிறது.  வாத்துக்கள் தங்குவதற்கு ஒரு மலை போன்ற மேடு, அதில் அருவி போல ஒரு செயற்கை நீரூற்று, அழகாக டிசைன் செய்யப்பட்டு போன்சாய் மரங்கள் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சிறு பகுதி, சின்ன மணியை நடுவில் சேர்க்கும் வட்ட புதிர் போன்ற வடிவத்தில் ஒரு சிறிய இடம், ஒரு ஓப்பன் தியேட்டர் மேடை சுற்றி பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க அரை வட்டத்தில் அடுக்கடுக்காய் படிகள், 'ரிலாக்ஸ் மேன்' என சொல்வது போன்று அமைக்கப்பட்டிருக்கும் சற்றே சாய்ந்த நாற்காலிகள் என யாரோ ஆர்வத்துடன் மெனக்கெட்டு டிசைன் செய்திருக்கிறார்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.

செம்மொழி பூங்காவின் ஹைலைட்டான விஷயம் அதன் கழிவறைதான்.  ஒரு பூங்கா கழிவறையினுள் மூச்சை அடக்காமல் ஒரு தமிழன் சென்று திரும்புவது அநேகமாய் இதுதான் 'தமிழக வரலாற்றிலேயே முதன்முறை.'  உள்ளே உட்கார்ந்து காப்பி சாப்பிடலாம். அவ்வளவு சுத்தமாக வைத்திருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை கலைஞர் அரசின் மாபெரும் சாதனை இதுதான் என்பேன். (அட சத்தியமாதாங்க!)

கலக்கல் கழிவறை

ஆனால் அபாயகரமான ஒரு விஷயம் இங்கே என்னவெனில் ஆண்கள், பெண்கள் கழிவறை நேர் எதிரே வெகு சிறிய இடைவெளியில் அருகருகே அமைந்துள்ளது.  குறுக்கே ஒரு தடுப்பு சுவர் அல்லது ஒரு மறைவு உடனடியாக அமைக்க வேண்டியது அவசியம்.

நுழைவாயிலிலும் நீரோடையிலும் செயற்கை நீரூற்றுகள் பொங்குகின்றன. புல்தரைகள், செடிகள் யாவையும் சரியாக பராமரிக்கிறார்கள். ஆங்காங்கே நாற்காலிகளில் இருக்கும் காதல் ஜோடிகள் செம்மொழி பூங்காவினை செம மொழி பூங்காவாக மாற்றிக்கொண்டிருந்தார்கள்.

இன்னும் நிறைய பூச்செடிகளை வைக்கலாம். இன்னும் கொஞ்சம் பூத்துக்குலுங்கினால் செம்மொழி பூங்காவினை அடித்துக்கொள்ள முடியாது.
உள்ளே எதுவும் உணவு பொருட்கள் கிடைக்காதது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். ஸ்னாக்ஸ், டீ, காபி போன்ற சிறு ஸ்டால்களையாவது அமைக்கலாம்.

வாழ்க வாழ்க....!!!

எல்லாவற்றையும் ரசித்து விட்டு திரும்புகையில் 'முதல்வர் கலைஞர் வாழ்க' என பெரிய கல்வெட்டு நம்மை வழியனுப்புகிறது. இது போன்ற பெர்சனல் செய்திகளை தவிர்த்து, அசோகர் மரம் நட்டார் என்பதை போல கலைஞர் பூங்கா வைத்தார் என ஏதாவது எழுதியிருக்கலாம்.  இல்லையெனில் ஆட்சி மாறினால் இதற்கு மேலேயே நிரந்தர முதல்வர் அம்மா வாழ்கவென இதைவிட பெரிய கல்வெட்டினை போட்டிக்கு வைப்பார்கள். 

வாத்து.. பாத்து பாஸ்..

கலைஞருக்கு பாராட்டு விழா நடக்காத ஒரே மேடை

போன்சாய் செட்டப்

புதிர் மாதிரி வடிவம்

நீரோடை

வாத்து தங்குமிடம்

அண்ணா சாலையில் சோத்து மூட்டையை கட்டிக்கொண்டு நகரமே பரபரவென ஓடிக்கொண்டிருக்க, அதனை ஒட்டி அமைந்துள்ள இந்த பூங்கா அதற்கு அப்படியே நேர்மாறாக மனதும் உடலும் ரிலாக்ஸ் ஆக அருமையான இடம்.

 ஒரு நல்ல புத்தகத்துடன் உள்ளே சென்று ஒரு நாள் முழுவதும் உட்கார்ந்து விட வேண்டும் என்றிருக்கிறேன்.

டிஸ்கிளைமர் : இந்த நாற்காலியில் இருந்த ஒரு காதல் ஜோடியினர், காமிராவுடன் நான் அருகில் வருவதை பார்த்த உடனேயே அலறி அடித்து எழுந்து ஓடிவிட்டனர். அவர்களை தவிர இந்த பதிவிற்காக வேறு ஜீவன்கள் துன்புறுத்தப்படவில்லை.

20 comments:

பொன் மாலை பொழுது said...

Very Nice.:))

மாணவன் said...

புகைப்படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு அருமையாக படம் பிடித்துள்ளீர்கள் நண்பரே நீங்கள் சொல்வதுபோல பரபரப்பான சென்னை நகருக்குள் இப்படி ஒரு மனசை ரிலாக்ஸ் செய்ய கூடிய ஒரு பூங்கா இருப்பது வரவேற்கதக்கதும் பெருமை பட வேண்டிய விசயந்தான்...

பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)

DR said...

அப்போ மத்த பதிவுக்கு எல்லாம் ஏதாவது ஒரு உயிரை துன்புரித்திக்கிட்டே தான் இருக்குறீங்களா ?

மாட்டிக்கிட்டாறு மயில்சாமி..

தமிழ்வாசி பிரகாஷ் said...

படங்களுடன் சேர்த்து பூங்காவின் அழகை விவரித்திருக்கிறிர்கள். அருமையான பதிவு.

வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில் . மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

sathishsangkavi.blogspot.com said...

சென்னை வந்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்ன்னு சொல்லுங்க...

கோவையிலும் ஒரு செம்மொழி பூங்கா வருதுன்னு அறிவிச்சாங்க... அது அப்படியே நிக்குது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thanks. will go soon

Unknown said...

super sir, pakirvukku nanri

Chitra said...

கலைஞருக்கு பாராட்டு விழா நடக்காத ஒரே மேடை

.....பதிவுலகம் சார்பாக அங்கே ஒரு பாராட்டு விழா நடத்திட்டாப் போச்சு! ஹா,ஹா,ஹா,ஹா....

MSV Muthu said...

>>வாத்து.. பாத்து பாஸ்..
;)

middleclassmadhavi said...

பதிவு அருமை, டிஸ்க்லைமர் உட்பட!! அடுத்த சென்னை விசிட்டில் பூங்காவிற்கும் விசிட்!

Anonymous said...

நல்ல பதிவு. இதைப் படித்தவுடன் மனதில் தோன்றியது இது தான்: கலைஞருக்குப் பிறகு- தமிழகத்தில் இதேப் போன்றதொரு விஷயங்கள் எல்லாம் நடக்குமா? நம் வலைப்பதிவர்கள் சகட்டுமேனிக்கு திட்ட ஒரு சரியான ஆளாவது கிடைப்பாரா?... இப்படியாக!

CS. Mohan Kumar said...

Nice photoes and write up.

Advance wishes for reaching 300 followers (Me the 299th)

Prakash said...

Pls visit Anna Centenary Library built by this DMK Rule at Gandhi Mandapam Salai, Kotturpuram - Chennai.

நிலவு said...

போலீசுக்கு ஒரு நியாயம் - பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு நியாயமா ? http://powrnamy.blogspot.com/2011/03/blog-post_02.html

சாருஸ்ரீராஜ் said...

பூங்காவை நல்லா சுத்தி காமிச்சுடீங்க, அடுத்த முரை சென்னை வரும் போது நேர்ல பார்கும் ஆவலை தூண்டுது...

Krubhakaran said...

http://ilakindriorpayanam.blogspot.com/2010/12/blog-post.html

செம்மொழி பூங்காவில் என் அனுபவங்கள்

Unknown said...

பசங்களோட போய்ட்டு வரனும்..

Anonymous said...

//உள்ளே எதுவும் உணவு பொருட்கள் கிடைக்காதது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். ஸ்னாக்ஸ், டீ, காபி போன்ற சிறு ஸ்டால்களையாவது அமைக்கலாம்.//

Dont think it is a good suggestion...will bring lot of plastic wastes to the green park......

Anonymous said...

கொஞ்ச நாள் முன்னாடி அண்ணல் இதை ஆபாச பூங்கா என்று எழுதி இருந்தாரே... நீங்கள் ஏதாவது ஆபாசத்தை பார்த்தீர்களா??

Sukumar said...

கக்கு - மாணிக்கம் said...
Very Nice.:))

-----> Thank u So much..!!!

மாணவன் said...
புகைப்படங்கள் அனைத்தும் கொள்ளை அழகு அருமையாக படம் பிடித்துள்ளீர்கள் நண்பரே நீங்கள் சொல்வதுபோல பரபரப்பான சென்னை நகருக்குள் இப்படி ஒரு மனசை ரிலாக்ஸ் செய்ய கூடிய ஒரு பூங்கா இருப்பது வரவேற்கதக்கதும் பெருமை பட வேண்டிய விசயந்தான்...

பதிவிட்டு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி நண்பரே :)

-----> அழகாக பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்துவதற்கு நன்றி நண்பரே...

Dinesh said...
அப்போ மத்த பதிவுக்கு எல்லாம் ஏதாவது ஒரு உயிரை துன்புரித்திக்கிட்டே தான் இருக்குறீங்களா ?

மாட்டிக்கிட்டாறு மயில்சாமி..

-----> இதென்னண்ணே கேள்வி.. எத்தனை பேரை மொக்கை பண்றோம்... பாவம்... ஹி..ஹி..
(தப்பிச்சிட்டாரு மயில்சாமி)

தமிழ்வாசி - Prakash said...
படங்களுடன் சேர்த்து பூங்காவின் அழகை விவரித்திருக்கிறிர்கள். அருமையான பதிவு.

-----> மிக்க நன்றி தமிழ்வாசி....

சங்கவி said...
சென்னை வந்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம்ன்னு சொல்லுங்க...

கோவையிலும் ஒரு செம்மொழி பூங்கா வருதுன்னு அறிவிச்சாங்க... அது அப்படியே நிக்குது...

-----> ஊக்கத்திற்கு நன்றி ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
thanks. will go soon

-----> Thank u so much..!!!!

இரவு வானம் said...
super sir, pakirvukku nanri

-----> Thanks for the feedback sir..!!!!

Chitra said...
கலைஞருக்கு பாராட்டு விழா நடக்காத ஒரே மேடை

.....பதிவுலகம் சார்பாக அங்கே ஒரு பாராட்டு விழா நடத்திட்டாப் போச்சு! ஹா,ஹா,ஹா,ஹா....

-----> நடத்திடுவோம்.. நன்றி வருகைக்கு...

MSV Muthu said...
>>வாத்து.. பாத்து பாஸ்..
;)

-----> ஹி..ஹி.. நன்றி அண்ணே வருகைக்கு

middleclassmadhavi said...
பதிவு அருமை, டிஸ்க்லைமர் உட்பட!! அடுத்த சென்னை விசிட்டில் பூங்காவிற்கும் விசிட்!

-----> நன்றிங்க வாழ்த்துக்கு.... கண்டிப்பாக போய் பாருங்க....

கொக்கரகோ... said...
நல்ல பதிவு. இதைப் படித்தவுடன் மனதில் தோன்றியது இது தான்: கலைஞருக்குப் பிறகு- தமிழகத்தில் இதேப் போன்றதொரு விஷயங்கள் எல்லாம் நடக்குமா? நம் வலைப்பதிவர்கள் சகட்டுமேனிக்கு திட்ட ஒரு சரியான ஆளாவது கிடைப்பாரா?... இப்படியாக!

-----> ஹா..ஹா..அதென்னவோ கரெக்டுதான் பாஸ்.. எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாருல்ல...????

மோகன் குமார் said...
Nice photoes and write up.

-----> Thank u so much boss!!!

Advance wishes for reaching 300 followers (Me the 299th)

-----> Thanks for dis too...!!!

Prakash said...
Pls visit Anna Centenary Library built by this DMK Rule at Gandhi Mandapam Salai, Kotturpuram - Chennai.

-----> Yes sir.. i am thinkin of it too.. Thanks for the reminder....!!!!

சாருஸ்ரீராஜ் said...
பூங்காவை நல்லா சுத்தி காமிச்சுடீங்க, அடுத்த முரை சென்னை வரும் போது நேர்ல பார்கும் ஆவலை தூண்டுது...

-----> கண்டிப்பா பாருங்க மேடம்.. நல்ல இடம்.....

KK said...
http://ilakindriorpayanam.blogspot.com/2010/12/blog-post.html

செம்மொழி பூங்காவில் என் அனுபவங்கள்

----> உங்கள் பதிவை பார்த்தேன்.... சூப்பர் பாஸ்.. அருமையான புகைப்படங்கள்.. நல்ல பதிவு.... வாழ்த்துக்கள்

கே.ஆர்.பி.செந்தில் said...
பசங்களோட போய்ட்டு வரனும்..

----> தல.. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா....???????

Anonymous said...
//உள்ளே எதுவும் உணவு பொருட்கள் கிடைக்காதது மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட். ஸ்னாக்ஸ், டீ, காபி போன்ற சிறு ஸ்டால்களையாவது அமைக்கலாம்.//

Dont think it is a good suggestion...will bring lot of plastic wastes to the green park......

----> There's lot of Dustbins kept inside the park. I hope no one will ever want to pollute this beautiful place....

Anonymous said...
கொஞ்ச நாள் முன்னாடி அண்ணல் இதை ஆபாச பூங்கா என்று எழுதி இருந்தாரே... நீங்கள் ஏதாவது ஆபாசத்தை பார்த்தீர்களா??

----> அப்படியா... எனக்கு எதுவும் தெரியலையே...