Thursday, May 31, 2012
Thursday, April 12, 2012
என் விகடனில் வலைமனை
இந்த வார ஆனந்த விகடன் இணைப்பான என் விகடன் சென்னை பதிப்பு வலையோசையில் வலைமனை குறித்த அறிமுகம் கொடுத்திருக்கிறார்கள். சமீபத்தில் எழுதிய இரண்டு பதிவுகளுடன், எனது ட்வீட்ஸும் பிரசுரிக்கப்பட்டு இருக்கிறது.
ரெண்டு பக்கம் விகடனில், அதுவும் பிறந்த ஊர், படித்த கல்லூரியின் அடையாளங்களுடன். தீபாவளி ராக்கெட்டின் திரியைக்கொளுத்தினாற் போல் மனது பறந்து கொண்டிருக்கிறது. இரண்டு ஆஸ்கார்களை வாங்கி கொண்டு ஏ.ஆர் எல்லாம் எப்படித்தான் கம்மென்று இருந்தாரோ... மேன் மக்கள் மேன்மக்களே...!
விதையில் ஒளிந்திருக்கும் செடியை தண்ணீரும், ஒளியும் மேலெழ செய்வது போல ஊக்கம் தந்து வலைமனையை உயிர்ப்போடு வைத்திருக்கும் இணையம் மற்றும் இணையம் சாராத அனைத்து நண்பர்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மற்றும் பதிவர்களை ஊக்கப்படுத்தும் விகடன் குழுமத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
Wednesday, April 11, 2012
நாக்கை கடித்த ஷேவாக் - வார்னிங் கொடுத்த தோனி | வலைமனை போட்டூன்ஸ்
அனைத்து கற்பனையே .. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல.. (படங்கள் | நன்றி : பி.சி.சி. ஐ)
Thursday, April 5, 2012
ஐ.பி.எல் கொசுவர்த்தி | வலைமனை
2009ல் வலைமனையில் பதிவெழுத ஆரம்பித்த வேளையில் ஒன்றிரண்டு பதிவுகள் எழுதி போஸ்ட் செய்து நானே படித்து சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பேன். இப்படியாய் பதிவுலக வாழ்க்கை நிம்மதியாய் போய்கொண்டிருந்த நிலையில் திடீரென ஒருநாள் நான் ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸை போட, அது வரை ஹிட் மீட்டரில் சிங்கிள் டிஜிட் மட்டுமே பழகியிருந்த எனக்கு நூறு, ஆயிரங்கள் முதல்முறையாக பரிச்சயம் ஆனது. பின்னர் ஐ.பி.எல் சீசன்களில் அடிக்கடி போட்டோ கமெண்ட்ஸ் போட ஆரம்பித்தேன். மெயில்களில் போட்டோ கமெண்ட்ஸ் சுற்றி வருவது குறித்து பழக்கப்பட்ட நண்பர்கள் கூறும்பொழுதெல்லாம் உற்சாகமாக இருக்கும். இப்பொழுதும் கூட சில சமயம் பேஸ்புக்கில் ஏதோ ஒரு சங்கத்தில் நூற்றுக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டிருக்கும் வலைமனை போட்டோ கமெண்ட்டை பார்க்கும் பொழுது எனக்கே செம காமெடியாக இருக்கிறது.
ம் ம்.. இதான் சிம்பிளான கொசுவர்த்தி பிளாஷ்பேக்.. இப்போ கடந்த வருடங்களில் நான் பதிவிட்ட ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸ்களில் சிலவற்றை கொசுவர்த்தி சுற்றி காட்டப்போகிறேன். விரைவில் நடப்பு ஐ.பி.எல் போட்டோ கமெண்ட்ஸையும் எதிர்பார்க்கலாம். இணைய நண்பர்களின் ஆதரவிற்கும் அன்பிற்கும் என்றென்றும் எனது நன்றிகள்.
Subscribe to:
Posts (Atom)














