Monday, November 29, 2021

அதிசய மூங்கில் - விடாமுயற்சி




சீனாவில் ஒரு வகை அதிசய மூங்கில் உள்ளது. ஐந்தரை வருடங்களில் 80 அடி உயரம் அளவு வளரும் இது, முதல் 5 வருடங்களில் ஒரு அடி கூட வளர்வதில்லை. ஆனால் அதற்கடுத்த 6 மாத காலத்தில் சடாரென உயர்ந்து 80 அடி உயரத்தை எட்டுகிறது.

5 வருடங்களாக ஒரு அடி கூட வளராத அந்த மூங்கில் ஆறே மாதத்தில் அவ்வளவு உயரம் எழும்புவது எப்படி? அத்தனை காலங்களும் அது வெறுமனே தூங்கிக் கொண்டிருக்கவில்லை. நிலத்திற்கடியில் ஆழமாக தனது வேர்களை விஸ்தாரமாக வளர்த்துக் கொண்டு, உறுதியான அஸ்திவாரத்தை அமைத்துக் கொள்கிறது. இதன் காரணமாக அதனால் சொற்ப காலங்களில் அவ்வளவு கம்பீரமான உயரத்தை எட்ட முடிகிறது. 

இதுபோல நாமும் நமது திட்டங்களில், வேலைகளில், ஏதோ ஒரு மாபெரும் லட்சியத்தை அடைய நெடுங்காலம் சில நேரம் பயணிக்க வேண்டி வரும். உடனடி பயன்களோ பலன்களோ கிடைக்காமல் நாம் சோர்வுற்றிருப்போம். அந்நேரங்களில் இந்த அதிசய மூங்கிலை நாம் நினைவில் கொள்வோம். 

தொடர்ந்து நமது பயிற்சியை, நமது முயற்சியை பலப்படுத்திக் கொண்டு அந்த வேர்களைப் போல் விஸ்தாரமான அஸ்திவாரத்தை நமது லட்சியத்திற்கு அமைத்தால் சரியான தருணத்தில் நாம் விரும்பிய பலனும் பயனும் அந்த 80 அடி மூங்கில் போல் எழுந்து நிற்கும்.