Wednesday, February 25, 2015

வலைமனை | ஃபீலிங்ஸ் 25 02 15



இதோ இன்னுமொரு உலகக்கோப்பை. ஆனால் 96ல்  பப்பிள் கம் ஸ்டிக்கரையோ 99ல் பிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டுகளையே சேர்த்து வைத்து கிரிக்கெட் பார்த்த ஆர்வம் இப்பொழுது இல்லை.

ஒன்று வருடா வருடம் ஆடித்திருவிழா மாதிரி ஐ.சி.சி ஏதோவொரு கோப்பையை வைத்து கல்லா கட்டி கரகாட்டம்  ஆடத்துவங்கிவிட்டது காரணமாக இருக்கலாம். அல்லது வயதாவதாலும் இருக்கலாம். :)

டெக்கரேஷனுக்கு தூவும் கொத்தமல்லி தழை போல எப்பொழுதும் வந்து போகும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணிகள் பயமுறுத்துவது இந்த உலகக் கோப்பையின் ஹைலைட்.  ஜிம்முக்கு சென்று வந்தது போல் ஜிம்பாப்வே இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளிலும் 275க்கு மேல் அடித்திருக்கிறார்கள். போன உலகக் கோப்பையிலேயே ரவுடியாக ஜீப்பில் ஏறி விட்ட அயர்லாந்து இம்முறை வெஸ்ட் இன்டீஸ் முகத்திலேயே மார்க் போட்டுவிட்டார்கள். ஆப்கானிஸ்தானும் பிளேடை மென்று வாயில் வைத்தபடி யார் மேல் துப்பலாம் என காத்திருக்கிறது. ஆக மொத்தம் ஆரோக்யமான போட்டித் தொடர் இந்த 2015 உலகக் கோப்பை.

•••

கோலி அளவிற்கோ தவான் அளவிற்கோ தோனி ஆடுவதில்லை என்கிறார்கள். அவங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்லிக்கிறேன். 'தல'ன்னு ஃபார்ம் ஆயிட்டா.. நாம ஆட வேணாம்..  விராட் கோலியவோ , அருண் விஜய்யவோ ஆட விட்டு நின்னு அழகு பார்த்தா போதும். :)

•••

ஐ, இசை, என்னை அறிந்தால், அனேகன் என வாரா வாரம் முதல் காட்சிக்கு சென்ற சாதனையை விட்டுவிட வேண்டாம் என கடந்த வெள்ளியன்று புக்கிங் சைட்டை ஒப்பன் செய்தால் புதிய ரிலீஸ் 'சண்டமாருதம்'.

120 ரூவாய் கொடுப்பது கூட ஓ.கே. ஆனால் சரத்குமார் படத்திற்கு பார்க்கிங் காசு ரூ.100 கொடுத்தால் படம் பார்க்கும் பொழுது மனசாட்சி மவுனமாக இருக்காது என்பதால் அப்படியே சைட்டை குளோஸ் செய்துவிட்டேன்.

•••

சின்ன வயதில் சர்க்கஸ் பார்த்தது.  கடந்த வாரம் சென்றிருந்தோம். சென்டிரல் ரயில் நிலையம் அருகே  மூர் மார்கெட் திடலில் ஒரு மெகா சைஸ் டென்ட் அடித்து நடத்துகிறார்கள். முன்பு போல் மிருகங்கள் என எதுவுமே இல்லை. எல்லாமே மனிதர்களின் சாகசம்தான்.


டிக்கெட் விலை ரூ.100, ரூ.200, ரூ.300 என இருந்தது. உள்ளே செல்லும் பொழுது அது கொஞ்சம் அதிகமாய்த் தெரிந்தாலும் நிகழ்ச்சி முடிவில் அத்தனை கலைஞர்கள், அமைப்பு, பொருட்கள் என இந்த சினிமா-சீரியல்-ஐபிஎல் காலத்தில் இவ்வளவு கட்டணத்தில் இந்த கலையை பராமரித்து நடத்துவதே பெரிய விஷயம் போல் இருந்தது.

கழிப்பறைகள் சென்னை புத்தக கண்காட்சி தரத்தில்  இருக்கின்றன என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். :)

குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காக புரமோட் செய்யப்படும் இந்த நிகழ்ச்சியில் சாகசம் செய்யும் வட, வடகிழக்கு மாநில பெண்களின் சின்ன சின்ன ஆடைகள் ஒன்றுதான் நெருடல்.

•••

இந்த எதிர்வினையை தோழிகள், சகோதரிகள் என பல பேரிடம் கேட்டிருக்கிறேன். எதற்காகவாவது ஐஸ்வர்யா ராயை இழுத்தால் பத்தில் எட்டு பெண்கள் அந்த பதிலை சொல்லி விடுவார்கள்.

அன்றும் அப்படித்தான், எங்கேயோ வெளியில் கிளம்புவதற்கு தங்கமணி தாமதமாக்கி கொண்டிருக்க, நான் கடுப்பில்,
 "ஐஸ்வர்யா ராய்க்கு கூட மேக்கப் போட்டு கிளம்ப இவ்ளோ நேரம் ஆகாது." என்றேன். உடனே பல்வேறு கால நிலைகளில் கேட்டு பழகிய அதே பதில் வந்தது.

"ஐஸ்வர்யா ராய் என்ன பெரிய அழகியா..?"
  "ஆமா.. இல்லையா பின்ன.. மிஸ் வேர்ல்ட் பட்டம் வாங்கியிருக்காங்கல...?"
"அவங்களுக்கு இன்டிரஸ்ட் இருந்துச்சு காம்பெட்டிஷன்ல கலந்துக்கிட்டாங்க... நாங்க கலந்துக்கலை. அவ்ளோதான்" என்றார் சிம்பிள் அன்ட் சீரியஸாய்.

சில வேளைகளில் ஏதோவொரு துணிக்கடையில் அந்த பளீர் லைட்டிங் வெளிச்சத்தில், பளபள கண்ணாடியில் முகத்தை பார்க்கும் பொழுது "ச்சே.. ஒரு ஆங்கிள்ல நாமளும் லைட்டா அழகாத்தான் இருக்கோம்.." என்று தோன்றும். ஆனால் அதை வெளியில் சொல்லும் தைரியம் வாய்த்ததில்லை. இந்த விஷயத்தில் இந்த பெண்களின் அநியாய தன்னம்பிக்கையும், துணிச்சலும் ஆச்சரியமூட்டுகிறது.

____________________________________________________

Best of  'பீலிங்ஸ்' : http://www.valaimanai.in/p/blog-page_9.html 
____________________________________________________

வலைமனை பிற பதிவுகள் : சினிமா | நகைச்சுவை | புத்தகம் 
பேஸ்புக் பக்கத்தில் இணைய : https://www.facebook.com/valaimanai.in

No comments: