Saturday, May 14, 2011

2011
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பெரிதும் பேசப்பட்ட அந்த நாள் கடந்தேறிவிட்டது. இனி அடுத்த 5 ஆண்டு காலத்திற்கு முதல்வராக நீங்கள் இருங்கள் என மக்கள் ஜெவை நோக்கி கை காட்டி விட்டார்கள். அதிமுக ஆதரவை விட தி.மு.க எதிர்ப்பு அலையே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணம் என எல்.கே.ஜி படிக்கும் சிறுசுகள் கூட சொல்லிவிடும். கருத்துகணிப்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள் தமிழக மக்கள் என்பது இந்த யாரும் கணிக்க முடியாத எண்ணிக்கையினால் தற்போது மிக உறுதியாக நிரூபணமாகி இருக்கிறது.

நேற்று முடிவுகள் வெளியான தினம் காலை முதலே லைவ் பிளாக்கிங் செய்யலாம் என ஆசையோடு உட்கார்ந்தால் பிளாக்கர் சதி வேலை செய்துவிட்டது. ஆனாலும் மனதில் அவ்வப்போது குறிப்பெடுத்துக்கொண்டே வந்தேன்.

காலை 8 மணிக்கெல்லாம் கலைஞர் தொலைக்காட்சியில் நக்கீரன் கோபாலும், லயோலா பேராசிரியர் ஒருவரும் கடையை விரித்து கச்சேரியை ஆரம்பித்து இருந்தனர். நிகழ்ச்சி தொகுப்பாளர் நக்கீரன் கருத்துக்கணிப்பின் துல்லியத்தை புகழ்ந்து கொண்டு இருந்தார். மெதுவாக தேர்தல் முடிவுகள் பாதகமாக வர ஆரம்பிக்க, கலைஞர் தொலைக்காட்சி 'சங்கத்தை கலைங்கடா' என அந்த நிகழ்ச்சியை நிறுத்தி மானாட மயிலாட ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டது.

ஜெயாவில் காலையில் ஒரு ஜோசிய கூட்டம் உட்கார்ந்து கொண்டு 'இந்த நாள் இனிய நாள்' என கும்மியடித்துக்கொண்டு இருந்தார்கள்.

அதிமுக லீடிங் அதிகரிக்கும் வேளையில் ஜெயா டி.வி, ராஜ், பொதிகையில் நிகழ்ச்சிகள் களை கட்டியது. ஜெயாவில் இடையிடையே வேலாயுதம் டிரைலர் வேறு. "இந்த மாதிரி எந்த ஹீரோவும் பழி வாங்கி நான் பார்த்ததே இல்லை" என சந்தானம் விஜயை பார்த்து சொல்வது போன்ற வசனம்.  அனேகமாய் தோற்றுப்போன தி.மு.கவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட முதல் நக்கல் அம்பு இதுவாகத்தான் இருக்கும்.

'பட் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு' என்கிற வாசகத்திற்கு பொருத்தமாக சன் டிவி நடந்து கொண்டது. சில கட்டங்களில் ஜெயா டிவியில் காட்டியதை விட அதிக எண்ணிக்கையில் 'சன்'னில் அதிமுக முன்னிலை வகித்தது. ஒரு ரவுண்ட் விட்டபோது எங்கள் பகுதி அதிமுக அலுவலகத்தில் சன் டிவியைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

மதியம் ஒரு மணிக்கெல்லாம் அதிமுகவின் வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவித்து நகரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விட்டன. ஆங்காங்கே பட்டாசுகளுக்கும் பஞ்சமில்லை.

இரவு வீடு திரும்பிய பின்னர்தான் டிவியை பார்த்தேன். வெற்றி பெற்ற ஒரு தேமுதிக எம்.எல்.ஏ உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கேப்டன் ஆணைப்படி அம்மா ஆணைப்படி செயல்படுவேன் என்றார். சரியா போச்சு, மக்கள் ஆணைப்படின்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்ல தெரியலையே, தேமுதிகவிற்கு இன்னும் பயிற்சி போதவில்லையோ என நினைத்துக்கொண்டேன்.

முன்னரே சொன்னது போல ஆட்சியில் பங்கு கோர மாட்டோம் என கேப்டன் காமெடி பண்ணிக்கொண்டிருந்தார். என்னவோ இவர் கேட்ட உடனே அவர் கொடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பது போல. தனி பெரும்பான்மையினால் ஜெயித்திருக்கும் ஜெ, அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க கேப்டனுக்கும் நாமம் வாழ்க என சொல்லக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெவின் பேட்டியை பார்த்தேன். வழக்கத்திற்கு மாறாக, அவரிடம் இம்முறை ஒரு பணிவு தெரிந்தது. இது மக்கள் வெற்றி என திரும்ப திரும்ப அழுத்தி கூறினார். அவர் பேசிய விதத்தைப் பார்த்தால் ஒருவேளை தமிழகத்தில் நிஜமாகவே நல்லாட்சி வந்துவிட்டதோ என சந்தேகமாக இருக்கிறது!

காலை எழுந்து இந்த பதிவை டைப் செய்கையில் இதோ வெளியே ஜன்னல் வழியே பார்க்கிறேன். எங்கள் தெருவில் அம்மா பேனர்கள் முளைக்க ஆரம்பித்துவிட்டது. இனி அடுத்த 5 வருடங்களுக்கு தமிழகம் 'பச்சை பசேலென' இருக்கும் என்பதில் மட்டும் சந்தேகமேயில்லை.

Sukumar Swaminathan Blog on Tamilnadu Assembly Election Results 2011
Jayalalitha wins Captain Vijayakanth verdict day Tamilnadu poll 2011
valaimanai blog

8 comments:

மதுரை சரவணன் said...

அம்மா நல்லாட்சி தருவார்கள் .......பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

முதலமைச்சராக ஓரளவுக்குத் தான் இலங்கைப் பிரச்சினை பற்றி செயற்பட முடியும் என்று சொன்ன போது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும். மறக்காமல் துணிந்து (அதற்கு அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால் கூட பரவாயில்லை) ராஜபக்சவை நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று சொன்னதைக் கேட்ட போதே, கொஞ்சம் மாறிவிட்டார் என்றே தெரிகிறது.

கடைசி வரிகளில் உள்ள சார்காசம் க்ளாஸ்.

www.dhaindia.blogspot.com said...

க‌ண்டிப்பாக‌ கேப்ட‌ன் சீண்டி பார்க்க‌ப்ப‌டுவார்....காட்சிக‌ள் மாறும்.. க‌ட்சிக‌ள் மாறும்...
ம‌க்க‌ளின் ஏக்க‌ம் என்றும் இருக்கும்.. திருட‌னாய் பார்த்து திருந்தா விடில் திருட்டை ஒழிக்க‌
முடியாது.. இன்னொரு ஜெயா பிக்ச‌ர்ஸ் வ‌ராத‌ வ‌ரை திரை துறைக்கு நிம்ம‌தி.பார்க்க‌லாம்..

Denzil said...

நக்கலிலும் நடுநிலைமை! கிளாஸ்!

Sukumar said...

@ மதுரை சரவணன்...
யாரோ நல்லாட்சி தந்தால் நல்லதுதான் பாஸ்.. நன்றி வருகைக்கு

@ அனாமிகா துவாரகன்

மாறிவிட்டார் என்றேதான் எனக்கும் தோன்றுகிறது.. அப்படி இருந்தால் நன்றாக இருக்கும். நன்றி கருத்துக்கு....


@ Dhaiindia

ம்.. நன்றி பாஸ் வருகைக்கும் கருத்துக்கும்

@ Denzil

ரொம்ப நன்றிங்க வாழ்த்துக்கு....

Karuthu Kandasamy said...

ட்வீட்டரில் ..படித்ததில் பிடித்தது....


@Vaanmugil : விக்கல் நிற்க விஷம் குடித்திருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்களே!, இன்னும் 2 நாட்களில் பேயாட்டம் தொடக்கம். என்ஜாய்!

சாருஸ்ரீராஜ் said...

present

வேலன். said...

//தனி பெரும்பான்மையினால் ஜெயித்திருக்கும் ஜெ, அண்ணா நாமம் வாழ்க, எம்.ஜி.ஆர் நாமம் வாழ்க கேப்டனுக்கும் நாமம் வாழ்க என சொல்லக்கூடிய நாள் வெகு தொலைவில் இல்லை //

மக்கள் நாமம் வாழ்க சொல்லாமல் இருந்தால்சரி...
வாழ்க வளமுடன்.
வேலன்.