Tuesday, April 19, 2011

மாமனார் ரஜினியின் பெயரைக் கெடுக்கும் மாப்பிள்ளை


ரஜினியின் மாப்பிள்ளை படத்தை எவ்வளவு படுத்த முடியுமோ அவ்வளவு படுத்தியிருக்கிறார்கள். ரஜினி படத்தின் ரீமேக் என்பதால் ஒவ்வொரு காட்சியிலும் ரஜினியின் இடத்தில் தனுஷ் என நினைத்தவாறே பார்க்கும்பொழுது எரிச்சலாக வருகிறது.

படத்தில் மனிஷாவிற்கு மாமியார் ரோல். ஆனால் பாட்டி போல் இருக்கிறார். இதனால் ஆண்ட்டி போல் மட்டுமே இருக்கும் ஹன்சிகா அழகாக தெரிகிறார்.  ஹாஃப் ஆஃப் ஹன்சிகாவாக தனுஷ். ஆடுகிறார், பாடுகிறார், பஞ்ச், சேட்டைகள் என ஒரு ஹீரோ என்னவெல்லாம் செய்து தமிழ் மக்களை டார்ச்சர் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறார்.

படத்திற்கு கொஞ்சம் தாமதமாக செல்ல நேரிட்டால் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் முதல் பாதியில் விவேக் அளவுக்கதிகமாக இருக்கிறார். வடிவேலுவின் பிரசாரம் கேப்டனுக்கு எவ்வளவு டார்ச்சாராக இருந்திருக்குமோ நமக்கு அவ்வளவு டார்ச்சராக இருக்கிறது விவேக்கின் அலட்டல் காமெடி.  படிக்காதவன், உத்தமபுத்திரன் படங்களில் தொய்ந்து செல்லும் முதல் பாதியை இரண்டாம் பாதியில் தூக்கி நிறுத்திய விவேக் இதில் முதல் பாதியை மொக்கையாக்குவதில் முன்னிலை வகிக்கிறார்.

இந்த படத்திலேயே அதிகமாக சிரமப்பட்டிருப்பது மனிஷாவிற்கும் கதாநாயகி ஹன்சிகாவிற்கும் டப்பிங் கொடுத்திருப்பவர்கள்தான். இரண்டு பேரும் இஷ்டத்திற்கு வாய் அசைக்கிறார்கள். அஷ்ட கோணலாகும் உதடுகளுக்கு டப்பிங் கொடுத்திருப்போர் கதிகலங்கி போயிருக்க வேண்டும். ஆங்கில டப்பிங் படங்களே தேவலாம். கொஞ்சமாவது லிப் சிங் ஆகும்.

ஒரு சில இடங்களில் தனுஷ் பீடி குடிக்கிறார். அப்பொழுதெல்லாம் நமக்கு 'ஒரு' என்பதில் ஆரம்பித்து 'ஆச்சரியக்குறி'யில் முடியும் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க இயலாதது.

படத்தில் மற்றுமொரு பி.பி. ஏற்றும் விஷயம், என்னோட ராசி நல்ல ராசி பாடல் ரீமேக். பற்றிக்கொண்டு வருகிறது. ஒரிஜனல் பாடலில் உள்ள துள்ளல், அழகு எல்லாவற்றையுமே சிதைத்திருக்கிறார்கள்.

மாப்பிள்ளை என்று பெயர் வைக்காமலோ, ரஜினி படத்தின் ரீ மேக்காக இல்லாமலோ இருந்திருந்தால், இந்த படம் குறித்து இவ்வளவு டென்சன் ஆக வேண்டிய அவசியமே இல்லை. இதுவும் ஒரு மொக்கை என ஒதுக்கி விடலாம். ஆனால்..! எனக்கு பரத் நடித்த ஆறுமுகம் படம்தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இப்படியே ரஜினி படங்களை கொடுத்துக்கொண்டே இருந்தால் இன்னும் தாவாங்கட்டையில் தாடி வைத்துக்கொண்டு "ஹே மாணிக் பாட்ஷாடா" என தனுஷ் சொல்லப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. அது மட்டும் நடந்துவிட்டால் பிறகு ரஜினி பிரியாணி போடுகிறேன் என சொல்லியதை கூட மறந்து ரசிகனாக தொடரும் பல லட்சம் பேர் சட்டையை கிழித்துக்கொண்டு பைத்தியம் பிடித்து அலையும் சாத்தியக்கூறுகள் உள்ளது.


வேணாம் மாப்பிள்ளை இதோட விட்ருங்க... வலிக்குது.. அழுதுறுவேன்...........

9 comments:

Chitra said...

படத்தில் மனிஷாவிற்கு மாமியார் ரோல். ஆனால் பாட்டி போல் இருக்கிறார். இதனால் ஆண்ட்டி போல் மட்டுமே இருக்கும் ஹன்சிகா அழகாக தெரிகிறார்.


......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... செம லொள்ளு!

சௌந்தர் said...

நமக்கு 'ஒரு' என்பதில் ஆரம்பித்து 'ஆச்சரியக்குறி'யில் முடியும் ஒரு கவிதை ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க இயலாதது.////


அடடா ஒரு பிடியே...
பிடி குடிக்குதே
சொல்றீங்களா...?????

சரியான விமர்சனம்.....

Jaleela Kamal said...

யாரா இருந்தாலும் ரஜினி நடிப்ப நெருங்க முடியாது.

சுருதிரவி..... said...

படம் எப்படியோ... ஆனால் விமர்சனம் சூப்பர்...!

வேழவளவன் said...

ரஜினி பாவம்... ரசிகர்கள் பாவம்...

சாருஸ்ரீராஜ் said...

நல்ல விமர்சனம்..

தக்குடு said...

ரொம்ப ரசிச்சு சிரிச்சேன்யா உம்ம விமர்சனத்தை படிச்சிட்டு...:) இருந்தாலும் ஹன்சிகா ஆன்டியை பாத்து இப்படி ஊத்தி இருக்க வேண்டாம்..:P

! சிவகுமார் ! said...

அடுத்த தனுஷ் படம் "பாபா" ரீமேக்காம்..

Aravintha said...

Super Review Suku......... If they post this review in every theatre of maapillai, surely the film will run for some more days....