Sunday, February 27, 2011

சென்னை பதிவர் சந்திப்பு - அண்ணே அப்துல்லா நஷ்ட ஈடு தருவாரா?சென்னையின் வாகன சமுத்திரத்தில் பைக்கில் நீந்தி கே.கே நகரில் கரை சேர்ந்து
 பதிவர் சந்திப்பு நடைபெற்ற டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கினுள் நுழைந்த பொழுது சரியாக சுரேகா மைக் பிடிக்க ஆரம்பித்திருந்தார். வந்திருந்த பதிவர்கள் வரிசையாக தங்களை சுய அறிமுகம் செய்து கொண்டனர்.  ஒருவர் தன்னை வாசகன் என அறிமுகம் செய்து கொண்டார். அதிகபட்ச கிளாப்ஸ் அவருக்கு கிடைத்தது.சிறப்பு விருந்தினராக தென்மேற்கு பருவகாற்று இயக்குனர் சீனு ராமசாமி மற்றும் சிங்கை பதிவர் ஜோசப் பால்ராஜ் ஆகியோர் வந்திருந்தனர். பத்து நிமிடங்கள் அவை அவரிடம் ஒப்படைக்கப்படுகிறது என சுரேகா,  இயக்குனர் சீனுவிடம் மைக்கை கொடுத்தார்.

பத்து நிமிடம்தானே பாவம்போல இருக்காரு.. பேசிட்டுப்போறாரு என்றுதான் யாரும் நினைப்பார்கள் அவரது உருவத்தை பார்த்தால். அவ்வளவு எளிமையாக அமைதியாக இருக்கிறார். யாரும் நினைத்தார்களோ இல்லையோ நான் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் அவர் சுமார் 40 நிமிடம் பேசியிருப்பார், எந்த ஒரு இடத்திலும் அலுப்பு தட்டவேயில்லை. சுவாரஸ்யமான பேச்சு. ஒரு சினிமா பிரமுகர் போன்ற தோரணையே இல்லாமல் கேட்பவர்கள் எல்லோரையும் அவரது தோழர்கள் போல பாவித்து, தனது பட அனுபவங்களை, அது பட்ட பாடுகளை ஒளிவு மறைவு இல்லாமல் எளிமையாய், புன்சிரிப்போடு நகைச்சுவையாய் விவரித்த விதம் வெகு அழகாக இருந்தது.
தியேட்டரில் ஒரு படத்தை ஒரு வாரம் மேல் வைத்துக்கொள்வதே இல்லை. வீட்டில் இருக்கும் கரப்பான்பூச்சிகளை பட் பட்டென அடித்துக்கொள்வது போல் படத்தை தியேட்டரில் டக்கு டக்குன்னு அடிச்சு அடிச்சு கொல்லுறாங்க என்பது போல பல இடத்தில் இவரது உதாரணங்கள் ரசிக்கும்விதத்தில் இருந்தது.

பதிவர்கள், பதிவுலகம் குறித்து அவர் பேசியவை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் இருந்தன. தென்மேற்கு பருவக்காற்று மக்களை சென்றடைய முதற்காரணம் பதிவர்கள்தான் என்றார். மேலும் பதிவர்கள் சார்ந்த பல கருத்துக்களை எடுத்துரைத்தார்.

அவர் பேசி முடித்தபின் பதிவர்கள் தங்கள் கேள்விகளை அவரிடம் கேட்டனர். தினமும் அரை மணி நேரம் சட்டையுடன் தன்னையும் உஜாலாவில் ஊற வைத்து வெளுத்தாற்போல் இருக்கும் அப்துல்லா அண்ணேவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

கேள்வி பதில்கள் முடிந்த உடன், சிங்கை பதிவர் ஜோசப் பால்ராஜ் பேசினார். மணற்கேணி, சிங்கை பதிவர்கள் குழுமம் குறித்து எல்லாம் அவர் பேசிக்கொண்டிருக்கையில் "அங்க இவ்வளோ நேரம் என்ன கழட்டுறீங்க ?" என்கிற பொருள் பட நாகரீகமான சொற்களுடன் தங்கமணியிடமிருந்து எஸ்.எம்.எஸ் வந்ததால் அவரது உரையை கவனிக்க முடியாமல் வெளியே சென்று தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டியதாகிவிட்டது.

நிகழ்ச்சியில் பதிவர்கள் கேபிள் சங்கர், உண்மைத்தமிழன், காவேரி கணேஷ், கே.ஆர்.பி.செந்தில், சுரேகா, கார்க்கி, பலாபட்டறை சங்கர், பிலாசபி பிரபாகரன், ஆதி தாமிரா, எறும்பு ராஜகோபால், டாக்டர் புரூனோ, மதார்,  குகன், எம்.எம்.அப்துல்லா, டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்.டிஸ்கி : என் கேமரா எடுத்த கடைசி புகைப்படம் இதுதான் என நினைக்கிறேன். வெள்ளை சட்டையில் பிளாஷ் பட்டு ரிஃப்ளெக்ட் ஆகி லென்சுக்கே மறு பிளாஷ் அடித்து கேமரவினுள் இருந்து தற்போது புகை வருகிறது. இதற்கு நஷ்ட ஈடு கேட்டு அண்ணன் அப்துல்லாவிடம் கோரிக்கை விடுக்கிறேன். தயவு செய்து அண்ணேவை இனி போட்டோ எடுப்பவர்கள் பிளாஷ் இல்லாமல் எடுக்குமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
10 comments:

எல் கே said...

கடைசி கமென்ட் சூப்பர்

எல் கே said...

நானும் வந்தேன்

Philosophy Prabhakaran said...

அதிரடியாக பேசி அனைவர் கவனத்தையும் ஈர்த்த அண்ணன் சர்க்கஸ் சிங்கத்தின் பெயரை தவறவிட்டதற்கு எனது கடும் கண்டனங்கள்...

tamilvaasi said...

சென்னை பதிவர்கள் சந்திப்பு. மிக அழகாக தொகுத்திருகிறீர்கள்


வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.

shortfilmindia.com said...

என் போட்டோவை போடாத உள்குத்தை நான் கண்டிக்கிறேன்

DR said...

அவரை சொல்லி குற்றம் இல்ல... உங்களுக்கும் படம் எடுக்க தெரியலைன்னு சொல்லுங்க...

சூரியனுக்கு ஃபிளாஷ் போட்டு எடுத்தா டாலடிக்காம என்ன செய்யும்...

! சிவகுமார் ! said...

நண்பரே, சர்க்கஸ் சிங்கத்தை மறந்துட்டீங்களே...

எங்களை படம் பிடித்ததற்கு நன்றி!

எல் கே said...

என்னையும் கேபிளையும் இருட்டடிப்பு செய்ததற்கு கண்டனம்

Ram said...

ஆமாம் என் பேர் எங்க காணும்.!!!

! சிவகுமார் ! said...

//அண்ணே அப்துல்லா நஷ்ட ஈடு தருவாரா?//

"நஷ்ட ஈடு தந்தே தீருவேன்"என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். 'வெள்ளுடை வேந்தரே' என பட்டம் தந்தே தீரவேண்டும் என்பது கண்டிசன்!