Tuesday, January 4, 2011

புத்தக கண்காட்சிக்காக பலி கொடுக்கப்பட்ட பன்னிக்குட்டி

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..


மீண்டும் சென்னையில் புத்தக கண்காட்சி. இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது. கையில் நொறுக்கு தீனியுடன், மார்கழி பனியில் ஒவ்வொரு ஸ்டாலாக மேய்வது ரொம்பவும் ஜாலியான விஷயம். இம்முறை பொங்கல் பண்டிகையின் போதும் நடைபெறுவது கூடுதல் சந்தோஷம்.  கடந்த முறை வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து விட்டேன். வாங்கிய அன்றே முழு இரவும் படித்து முடித்தது ராஜிவ் கொலை வழக்கு.2010 முதல் புத்தகங்கள் குறித்தும்  பதிவுகள் எழுதி வருகிறேன். பல புத்தகங்கள் படித்து முடித்தும் இன்னும் நேரம் / சோம்பேறித்தனம் காரணமாக பதிவிடாமல் வைத்திருக்கிறேன். விரைவில் பதிவிட வேண்டும். கலாய்த்து எழுதும் ஆயிரக்கணாக்கான ஹிட்ஸை விட புத்தகங்கள் மூலம் வரும் நூற்றுக்கணக்கான ஹிட்ஸ் ரொம்பவும் மன நிறைவை தருகிறது.


கடந்த வருடம் நான் படித்ததிலேயே ரொம்பவும் பிடித்தது இரண்டு புத்தகங்கள். பா.ராகவன் அவர்கள் எழுதிய உணவின் வரலாறு ஒன்று. மற்றொன்று கிழக்கு சார்பில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்ட திருப்புமுனை.

(அது சரி.. கண்காட்சியில் பதிவர்களுக்கு என யாரும் 10 சதவிகிதத்தை விட அதிகமான தள்ளுபடி தராங்களா பாஸ்..?)***

புத்தக கண்காட்சி துவங்கும் இந்நாளில் மேலும் ஒரு சந்தோஷம். இன்று மாலை 6 மணிக்கு பதிவர் கேபிள் சங்கர் அவர்களின் மீண்டும் ஒரு காதல் கதை புத்தகம் வெளியிடப்படுகிறது.  இதில் எனக்கொரு தனிப்பட்ட மகிழ்ச்சி என்னவெனில் நான் வடிவமைத்து வெளிவரும் முதல் அட்டைப்படம் தாங்கிய புத்தகம் இது.

இவ்விழாவில் நண்பர்கள், பதிவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கிறோம்.


***

எப்பொழுதும் புத்தக கண்காட்சியில் நிறைய புத்தகங்கள் வாங்க ஆசைப்பட்டாலும் பட்ஜெட் இடிக்கும். இதற்காக இம்முறை ஒரு ஐடியா செய்து, கடந்த 1 வருட காலமாக ஒரு திறக்க முடியாத பன்னிக்குட்டி உண்டியல் வாங்கி, 5 ரூபாய் நாணயங்கள் கையில் கிடைக்கும் பொழுதெல்லாம் அதற்கு உணவாய் இட்டு வந்தேன். நேற்றுதான் புத்தக கண்காட்சிக்காக அந்த பன்னிக்குட்டியை பலி கொடுத்தேன். பத்து புத்தகங்களாவது வாங்கும் அளவிற்கு கணிசமான தொகை சேர்ந்திருக்கிறது.

17 comments:

Raju said...

பன்னிக்குட்டி ஐடியா நல்லா இருக்கே பாஸ்!
புத்தக அட்டை பார்க்கும் போதே நினைச்சேன், உங்க கைங்கர்யமாதான் இருக்கும்ன்னு..
வாழ்த்துகள்ப்பா.

மாணவன் said...

வாழ்த்துக்கள் சார்,

உங்களது வடிவமைப்பு மிக அருமையாக சார் தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்

இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!
இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

Unknown said...

தூள் ..

சேலம் தேவா said...

வடிவமைப்பு கிளாஸா இருக்கு சார்..!! நீங்க புத்தகங்கள் வாங்கறதுக்காக அந்த அழகான பன்னிக்குட்டிய உடைச்சிட்டிங்களே..?! ரொம்ப பீலீங்கா இருக்கு..!! :-((

Cable சங்கர் said...

இம்முறை மட்டுமல்ல. என் எலலா முயற்சிகளுக்கும் சுகுமார் தான் டிசைனர். என்ன முதல் புத்தகம் வேறு ஒருவர் செய்துவிட்டார். இரண்டாவது புத்தகம் கிழக்கு, இதை இவனிடம் கொடுத்தால் சரியாக முடிப்பான் என்று எனக்கு தெரியும் ஆனால் இந்த மூன்று புத்தகங்களுக்கு சுகுமார் டிசைன் செய்த விளம்பரம் தான் உபயோகித்தேன்.

என்னுடய திரைப்படத்திற்கு சுகுமார் தான் டிசைன் செய்துக் கொடுத்திருக்கிறான். நல்ல கைராசிக்காரன்..

சாருஸ்ரீராஜ் said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்... பன்னிக்குட்டி ஐடியா ரொம்ப உபயோகமாக இருக்கும் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாழ்த்துக்கள் தல!
(பன்னி பாவம்ல?)

DR said...

"பன்னிக்குட்டி பலி" ன்னு சொன்ன உடனே விஷயம் ரொம்ப சீரியஸ்-ஹா இருக்கும்னு நினைத்துக்கொண்டு வந்தேன். கடைசியில இப்புடி தொப்பி விழுந்திடுச்சு எனக்கு...

தமிழ்மணம்-ல ஓட்டு போட்டா எனக்கு இந்த எர்ரர் மெசேஜ் வருது. இதை எப்படி சரி செய்வது என்று கமெண்ட் போடுற யாராவது சொல்லிக்கொடுத்தா நல்லா இருப்பீங்க...

\\Voting from other sites not allowrd. Please vote from the blog.\\

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னது பிரபல பதிவர் பன்னிகுட்டியை பலி கொடுத்டுடீங்களா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள் தல!
(பன்னி பாவம் இல்லை )

butterfly Surya said...

பன்னிகுட்டியை உயிரோட எனக்கு கொடுக்க கூடாது.. இப்படியா பலி கொடுக்கணும்.??

Philosophy Prabhakaran said...

சீரியசான மேட்டரோன்னு நெனச்சு பதறிட்டேன்...

a said...

Ha Ha...... naan veera etho ninachen... mani maniyai setha kasai vaithu mani maniyana puthagankalai vangavum
(sorry for the comment in thanglish)

அமுதா கிருஷ்ணா said...

so funny.

வெற்றி-[க்]-கதிரவன் said...

//கலாய்த்து எழுதும் ஆயிரக்கணாக்கான ஹிட்ஸை விட புத்தகங்கள் மூலம் வரும் நூற்றுக்கணக்கான ஹிட்ஸ் ரொம்பவும் மன நிறைவை தருகிறது.//

-:)

எஸ்.கே said...

மனமார்ந்த வாழ்த்துக்கள்!

Unknown said...

இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் தின வாழ்த்துக்கள்!