Tuesday, December 28, 2010

பதிவர்களுக்கு புத்தாண்டு பரிசு - பிளாக் டைட்டில் பேனர்

நெடுநாளாக செய்யவேண்டும் என நினைத்திருந்த பணி இது. பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என்னால் இயன்ற ஒரு சிறு புத்தாண்டு பரிசாக அவரவர் வலைப்பூவிற்கான பேனரை செய்து அனுப்பலாம் என்றிருக்கிறேன்.

தங்கள் வலைப்பூவில் தலைப்பு பேனர் விரும்புகிறவர்கள் கீழ்கண்ட பத்து வடிவங்களில் தாங்கள் விருப்பப்படுவதை தேர்ந்தெடுத்து, உங்கள் வலைப்பூ பெயர் (உ.தா.:- வலைமனை), அதன் கீழே வர விரும்பும் டேக் லைன் அல்லது வலைப்பூ முகவரி (உ.தா. புண்பட்ட மனதை புன்னகை விட்டு ஆற்றுவோம்), அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி முதலிய தகவல்களை பின்னூட்டமிடுங்கள்.

பேனர் பெற விரும்பும் நண்பர்கள் 2011 ஜனவரி 2ம் தேதிக்குள் பின்னூட்டமிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கூடிய விரைவிலாக (பொங்கலுக்குள்) பின்னூட்டமிடும் வரிசைப்படி பேனர்கள் ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைக்கப்படும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வடிவங்களில் வெவ்வேறானவற்றில் எதிலிருந்தும் எழுத்து வடிவத்தையோ, பின்புற தோற்றத்தையோ கலவையாக சேர்த்துப் பெற விரும்பினாலும் தகுந்த எண்களோடு குறிப்பிடுங்கள்.

பேனர் பெற விரும்பி தகவல்களை அளித்து நண்பர்கள் இடும் பின்னூட்டங்கள் வெளியிடப்பட மாட்டாது. தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் என்றென்றும் நன்றி....!!


பேனர் 1


பேனர் 2


பேனர் 3 


பேனர் 4


பேனர் 5


பேனர் 6


பேனர் 7


பேனர் 8


பேனர் 9


பேனர் 10
21 comments:

Sukumar said...

விருப்பம் தெரிவித்து பின்னூட்டம் இடும் நண்பர்கள் தயவு செய்து அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...

பொன் மாலை பொழுது said...

நல்ல முயற்சி. வாழ்த்துக்கள.

அன்புடன் அருணா said...

நல்ல பணி!பூங்கொத்து!

sathishsangkavi.blogspot.com said...

Good Post...

sathish said...

நீங்கள் செய்வதை அனைவருக்கும் ஒரு வகுப்பு மாதிரி எடுத்தல் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்

Balakumar Vijayaraman said...

உங்கள் ஆர்வத்திற்கு பாராட்டுகள் சார்.

Ram said...
This comment has been removed by the author.
Unknown said...

நன்றி சார்

Ram said...

ரொம்ப நன்றி.. இருந்தாலும் பரிசு கேட்டுபெறுவதாக இருக்ககூடாது அல்லவா.??? சரி அது போகட்டும்.. நான் Adobe photoshopல தமிழில் எழுதினால் சில வார்த்தைகள் தவறாக வருகிறது.. காரணம் என்ன.??? கொஞ்சம் விளக்கமுடியுமா.?

இராகவன் நைஜிரியா said...

மிக நல்ல முயற்சி. குட் & கீப் இட் அப் நண்பரே.

Unknown said...

பாராட்டுக்குரிய முயற்சி நண்பரே... நல்ல புத்தாண்டு பரிசுதான்... இதை நீங்க பொங்கல் பரிசுன்னு அறிவிச்சிருந்தா பொருத்தமா இருந்திருக்கும்.. பொங்கலுக்குள்ள முடிச்சு அனுப்பறதே உங்களுக்கு பெரிய வேலையா இருக்கும் இல்லியா...

பாராட்டுக்கள் நண்பரே..

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் மிக நல்ல முயற்சி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கலக்குங்க சார்.........!

Unknown said...

உங்கள் நல்ல முயற்சிக்கு நன்றிகள். காத்திருக்கிறோம்..

Unknown said...

உங்கள் நல்ல முயற்சிக்கு நன்றிகள். காத்திருக்கிறோம்..

Philosophy Prabhakaran said...

தங்களுடைய அன்பு வியக்க வைக்கிறது... ஆனால் எனக்கு வேறொரு உதவி தேவைப்படுகிறது... உங்களுடைய போட்டோ கமெண்ட்ஸ் பதிவுகளை நான் நிறைய ரசித்திருக்கிறேன்... எனக்கும் அதுபோல வெளியிட ஆசை... ஆனால் போட்டோவில் எப்படி கமெண்டுகளை பிரசுரிப்பது என்று தெரியவில்லை... அது எப்படி என்று எளிதாக புரியும்படி சொல்லிக்கொடுத்தால் சிறப்பாக இருக்கும்... நன்றி...

Unknown said...

புத்தாண்டுக்கு நான் பெறப்போகும் நல்ல பரிசு இது...நன்றி நண்பரே...

ஸ்வர்ணரேக்கா said...

good work... great...

மாணவன் said...

உங்களின் இந்த புத்தாண்டு பரிசுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும் பல..

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் எனது இதயங்கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்.....

உங்களின் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

Unknown said...

வாழ்த்துகள்

வலையப்பன் said...

எல்லோரும் சொல்லிவிட்டாலும் பரவாயில்லை. நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.
உங்கள் வலைப்பதிவில் வலைப்பதிவு டைட்டிலுக்கு கீழே நகரும் எழுத்துகளை போல எனது வலைப்பதிவில் வைக்க விரும்புகிறேன். உங்கள் வலைப்பதிவின் கீழ் பகுதியில் 'உங்கள் கருத்துகளை பின்னூட்டமிடுங்கள்" என்று மறைந்து தோன்றும் எழுத்துகளை போல எனது வலைப்பதிவில் வைக்க ஆசைபடுகிறேன். தங்களின் உதவியோ அல்லது ஆலோசனையோ வேண்டும். நன்றி