Saturday, October 23, 2010

பரம்பரை சித்த வைத்திய விளம்பரமே பரவாயில்லைஇரவு பத்து மணி இருக்கும். கையில் ரிமோட் சும்மா இல்லாமல் சேனல் மாத்திக்கொண்டிருந்தது. ராஜ் டி.வியில் ஒரு பெண்ணும் பையனும் விழுந்து விழுந்து போன் பண்ணுங்க பண்ணுங்க என காம்பியரிங் செய்து கொண்டிருந்தார்கள். 


சரி நாமளும் இந்த சானல் பார்த்து நாளாச்சே.. கொஞ்சம் பார்ப்போம்னு பார்த்தா... சினிமா புதிர் பரிசுப்போட்டியாம். ரூ.35,000 பரிசுன்னு பெரிசா ஸ்கீரின்லயே விளம்பரம். அப்படி என்னடா கேள்வின்னு பார்த்தா.. நம்ப ஜெயம் ரவி முகம் பாதியும் தமன்னா முகம் பாதியும் போட்டு ஒண்ணா மெர்ஜ் பண்ணி வச்சிருக்காங்க... சத்தியமா எல்.கே.ஜி படிக்கிற பையன் கூட அதைப்பார்த்துட்டு ஜெயம் ரவி, தமன்னானு தலையில நொங்குன்னு அடிச்சி சத்தியம் பண்ணுவான். 


ஆனா பாருங்க போன் பண்ற பயபுள்ளைங்க ஒண்ணு கூட சரியா சொல்லலை. எல்லாம் திரிஷா, இலியானா, மாதவன்னு எக்கச்சக்கத்துக்கும் உளறுதுங்க.. பாதி பேருக்கு லைன் கிடைச்சு ஹலோ சொல்லும்போதே கட் ஆகுது.


அப்போதான் என் மனசுல ஒரு சந்தோஷ சைத்தான் எட்டிப்பார்த்துச்சு. ஆஹா மணி வேற பத்து ஆயிடுச்சு.. நிறைய பேரு இந்த டைம்ல (?)  ராஜ் டி.வி பார்க்க மாட்டாங்க. போன் அடிச்சு, பணத்தை அள்ளிட வேண்டியதுதான்னு உற்சாகமா செல்போனை கையில எடுத்துட்டேன்..


நம்பரை பார்த்தா எட்டு டிஜிட்டுக்கு பதிலா ஏழு டிஜிட்.. அப்பாவாவது நமக்கு தெரிஞ்சிருக்கனும் அது ஏழு டிஜிட் இல்லை.. ஏழரை டிஜிட்டுன்னு.. தெரியலை... அடிச்சா பாருங்க..  உடனேயே லைன் கிடைச்சிடுச்சி.. ஆஹா இன்னைக்கு சுக்கிர திசைதான் நினைச்சுக்கிட்டே லைன்ல வெயிட் பண்ணேன். உங்க அழைப்பு ரொம்ப முக்கியமானது அப்படியே இருங்கன்னு கொஞ்சம் நேரம் ஒரு வாய்ஸ் .. அப்புறம் ரொம்ப நேரம் லைன்ல இருந்து நீங்க ஸ்மார்ட்டுன்னு நிருபிச்சிட்டீங்க அப்படியே இருங்கன்னு இன்னொரு வாய்ஸ்... இல்லைன்னா எந்நேரமும் நீங்க லைனை கட் பண்ணிட்டு போகலாம்னு இன்னொமொரு வாய்ஸ்... 


நீங்கள் எங்களது அழைப்பு மையத்தை நெருங்கிட்டீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு இன்னொரு வாய்ஸ்.. ஏம்பா... அழைப்பு என்ன செல்போன் டவரை விட்டு இறங்கி நடந்தா ஸ்டூயோவிற்கு போகுது...?


இந்திய தொலைக்காட்சி தொலைபேசி நிகழ்ச்சிகளிலேயே கேட்டகாத அளவிற்கு காம்பியரிங் மக்களோ எல்லோரும் போன் பண்ணுங்க பண்ணுங்கன்னு மார்க்கெட்டிங் பண்ணிக்கிட்டே இருக்காங்க... 


போன் ரெக்கார்டர் வாய்ஸோ நீங்க நல்லவரு வல்லவரு அப்படின்னு ரொம்ப புகழுது... என்னங்கடா நடக்குதுன்னு பார்த்தா... டி.வி.யில போன் அழைப்புகள் நிமிடத்திற்கு ரூ.10னு ஓடுது.. அப்படின்னா பத்து நிமிஷம் லைன்ல இருந்தா நூறு ரூபாய் அவுட்டு...


ஆஹான்னு முழிச்சிக்கிட்டு பார்த்தா டி.வி.யில எங்கேயுமே லைவ்னு போடலை...  4 நிமிஷம் காம்பியர் பேசிக்கிட்டே இருக்காங்க. அப்புறம் ஒரே ஒரு கால் வருது. அதுல பாதி அழைப்புகள் கட் ஆகிடுது. மீதி எல்லோரும் சொல்லி கொடுத்த மாதிரி(?) தப்பு தப்பா சொல்றாங்கே.. தெரியாமதான் கேக்குறேன் அது ஏம்ப்பா லைவ் அல்லது நேரலைன்னு போட மாட்றீங்க.. அப்போ ரெக்கார்டட் புரோக்கிராமா...?


 போன் பண்ணுங்கன்னுதான் எல்லா சேனலேயும் சொல்வாங்க.. ஆனா இந்த நிகழ்ச்சியில மட்டும் போன் பண்ணி வெயிட் பண்ணுங்க வெயிட் பண்ணுங்கன்னு சொல்றாங்க.. அப்ப தெரியலை இப்படி பின்னால வெயிட்டா பண்ண போறாங்கன்னு,...


ம்ம் என்ன பண்ணி என்ன ஆகப்போகுது.. உன்க்கு எங்கயா போச்சு புத்தின்னு தானே கேக்குறீங்க... அது புரியுது.. ரெண்டு நிமிஷத்துல மேட்டர் புரிஞ்சு போனாலும்,சரி ஏதோ நமக்காவது ரெண்டு நிமிஷத்துல புரிஞ்சுது... எத்தனை அப்பாவி மக்கள் இது மற்ற நிகழ்ச்சி மாதிரின்னு நினைச்சு லைன்லேயே இருப்பாங்க.. அவங்க ஏமாற கூடாதுன்னு பதிவாவது போட்டுடலாம்னு பத்து நிமிஷம் வெயிட் பண்ணி லைன் கிடைக்குதான்னு பார்த்தேன். ம்ஹும் கிடைக்கலை...


ஸ்லாட் சும்மா இருக்குதுன்னு இந்த மாதிரி நிகழ்ச்சிகளை கொடுத்து பேரை கெடுத்துக்கொள்வதற்கு பதிலா.. பேசாம அந்த பரம்பரை சித்த வைத்தியசாலை போன்ற சூப்பர் சித்தர் விளம்பரங்களையே போடலாம். அதைப்பார்த்து தேடிப்போய் ஏமாறுகிற மக்கள் சதவிகிதம் கம்மியாய் இருக்கும். இது கையில் போன் இருக்கிறதால மக்கள் பட் பட்டுன்னு விட்டில் பூச்சி மாதிரி ஏமாற அதிக வாய்ப்பிருக்கு...


எது எப்படியோ... ரொம்ப நாள் கழிச்சி இந்த சானலை பார்த்ததுக்கு அபராதமா நூறு ரூபாய் கட்டியாச்சு... ரைட்டு விடு.. எவ்வளவ்வோ ஏமாந்தாச்சு.. இதை ஏமாற மாட்டோமா...

32 comments:

Unknown said...

பாஸ், எனக்கும் 100 ரூபாய் அவுட் ஆயிருச்சு, நல்லா ஏமாத்தறாங்க பாஸ்.

எஸ்.கே said...

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் எங்க வீட்டிலேயும் ஏமாந்தாங்க சார்! 5 நிமிஷத்தில் 50 ரூபா பணால்!

Sukumar said...

இரவு வானம் said...
பாஸ், எனக்கும் 100 ரூபாய் அவுட் ஆயிருச்சு, நல்லா ஏமாத்தறாங்க பாஸ். //

ஆஹா.. அப்போ நான் தனியாள் இல்லையா... வாங்க வாங்க ராசா..

Sukumar said...

எஸ்.கே...

வாங்க பாஸ்... பார்த்தீங்களா.. இந்த பதிவை போடலாமா வேணாமானு யோசிச்சிக்கிட்டே இருந்தேன்.. பரவாயில்லை.. நெறைய பேர் ஏமாந்துருக்கோமா...

ராம்ஜி_யாஹூ said...

சூப்பர சொன்னிங்க.
நிப்றைய மக்கள் இது மாதிரி ஏமாறுகிறார்கள்.

சாருஸ்ரீராஜ் said...

100 ரூபாய் பணம் தண்டம் அழுது ஒரு பாடம் கத்துகிட்டீங்க.

முரளிகண்ணன் said...

அய்யோ பாவம். (இதை குஷி மும்தாஜ் வாய்ஸில் படித்துக் கொள்ளவும்)

DR said...

பதிவு எல்லாம் நல்லா தான் இருக்குது. ஆனா இந்த அக்டோபர் மாத கம்மெண்டர் போட்டி முடிவை தான் அறிவிக்க மாட்டேங்குறீங்க...

DR said...

Follow Up

Ganesan said...

ஹி.. ஹி.

Bavan said...

அடங்கொய்யால.. இதுதானா நடக்குது அங்க.. நானும் ரொம்ப நாளா என்னாடா இது யாருமே call எடுக்கிறாங்க இல்லையேன்னு பாத்துகிட்டிருந்தேன்..:)

இந்த நிகழ்ச்சியில மூச்சு விடாமப் பேசுறவரப்பாத்தா ரொம்ப பாவமாக்கூட இருந்திருக்கு..:-o

Bruno said...

விழிப்புணர்வு ஏற்படுத்தும் இடுகை

நன்றிகள் பல

ஜீவன்பென்னி said...

இந்த மாதிரி நிகழ்ச்சி ஹிந்தில ஜூம்ங்கிற ஒரு மியுசுக் அலைவரிசைல ரொம்ப நாளா ஓடிக்கிட்டி இருக்குங்க. அங்க பரிசு ஒரு லட்சம்.

பழமைபேசி said...

அய்யோ...பாவம்...

a said...

100 ரூபா கட்டி கத்துக்கிட்ட பாடத்த எங்களுக்கு
இலவசமா சொல்லி கொடுத்துட்டீங்க...

தேவன் மாயம் said...

நானும் ஒரு 9 ரூபாய் இழந்தேன்!

சென்ஷி said...

//

நீங்கள் எங்களது அழைப்பு மையத்தை நெருங்கிட்டீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்கன்னு இன்னொரு வாய்ஸ்.. ஏம்பா... அழைப்பு என்ன செல்போன் டவரை விட்டு இறங்கி நடந்தா ஸ்டூயோவிற்கு போகுது...?

//

ஹாஹாஹா :))

Sukumar said...

ராம்ஜி_யாஹூ

வாங்க ராம்ஜி ... ஆமாங்க... வருகைக்கு நன்றி

Sukumar said...

சாருஸ்ரீராஜ் ..
ஆமாங்க... அதேதாங்க.. வருகைக்கு நன்றி...

Sukumar said...

முரளிகண்ணன்...

ரொம்ப சிரிச்சேன்.. உங்க கமெண்டை பார்த்து.. அவ்வளவு பாவமாவா இருக்கு.... தல...

Sukumar said...

Dinesh

வருகைக்கு நன்றி தலைவா.. அக்டோபர் மாசம் முடிஞ்சதும் அறிவிக்கலாமுன்னு பார்த்தேன் பாஸ்...

Sukumar said...

காவேரி கணேஷ் ..

வாங்க தல.. வருகைக்கு நன்றி,

Sukumar said...

புருனோ..

வாங்க சார்.. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Sukumar said...

Bavan..

ஆமா நண்பா.. நீங்க சொன்னப்புறம்தான் ஞாபகம் வருது.. மூச்சு விடாம பாடுறேன்னு எஸ்.பி.பி கணக்கா காம்பியரிங் பண்றாங்க.. வருகைக்கு ரொம்ப நன்றி

Sukumar said...

ஜீவன்பென்னி ..
வருகைக்கு நன்றிங்க.. அங்க எப்படின்னு தெரியலை.. ஆனா இங்க லைவ்னு போடலை.. இது நியாயமான பரிசுப்போட்டியே இல்லை..

Sukumar said...

பழமைபேசி ..
வாங்க ..வருகைக்கு நன்றிங்க.. ஏதோ ஆறுதல் சொல்ல வந்தீங்களே. அதுக்கு ரெம்ப தேங்க்ஸ்

Sukumar said...

வழிப்போக்கன் - யோகேஷ்
ஆமா பாஸ்.. எல்லோருக்கும் சொல்லலாமுன்னுதான்...

Sukumar said...

தேவன் மாயம்..

பார்த்தீங்களா.. நீங்களுமா.. (அது எப்படிங்க உங்களுக்கு மட்டும் ஒரு ரூபாய் குறைச்சிருக்காங்க...)

Sukumar said...

சென்ஷி...
பாருங்க பாஸ்... காமெடி பண்றாங்க.. வருகைக்கு நன்றி...

maalicious said...

ungaludaiya post vida tamanna-jeyam ravi merge panna andha screenshot dhaan bayangara comedy!

cheena (சீனா) said...

அன்பின் சுகுமார் - இப்படி எல்லாம் நடக்குதா என்ன - அது சரி - ஜாக்கிரதயா இருக்கனூம் போலேயே - ம்ம்ம் - நல்வாழ்த்துகள் சுகுமார் - நட்புடன் சீனா

Prabu Krishna said...

விளக்கத்துக்கு நன்றி சகோ