Friday, July 30, 2010

கேபிள் சங்கரின் கும்மாங்கொத்து பரோட்டா

அரசியல்வாதிகள், சினிமா நடிகர்களின் பிறந்தநாட்களின் போது ஒட்டப்படும் போஸ்டர்களை பார்க்கும் போது, ஏன் இந்த தலைவர்கள் இப்படி செய்கிறார்கள் என யோசிப்பேன். ஆனால் இன்று மெயிலில், பதிவர் குழுமத்தில் ஒருவர் அனுப்பிய போஸ்டரை பார்த்ததும் புரிந்தது... தலைவர்களை விட தொண்டர்கள்தான் இந்த போஸ்டர் கலாச்சாரத்தை விரும்புகிறார்கள் என்று...  
பதிவுலகில் நல்ல நண்பர்களைச் சம்பாதித்திருக்கிறேன் என எண்ணும்போது சந்தோஷமாக இருக்கிறது.  உங்கள் அன்பு என்னை திக்குமுக்காட செய்துவிட்டது. ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

ரொம்ப நாட்களாக வாசகர்கள் பின் நவீனத்துவம், நுண்ணரசியல் என்றால் என்ன என்று கேட்கிறார்கள். மேலே உள்ள போஸ்டரை வைத்தே பின்நவீனத்துவம், நுண்ணரசியல் ஆகியவற்றை உங்களுக்கு விளக்குகிறேன்.  டிசைன் பேக்கிரவுண்டில் மாடர்னாக வண்ணச் சேர்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது அல்லவா..? ஆம் அதுதான் பின்நவீனத்துவம்!

சரி.. நுண்ணரசியல்..?

போட்டோவை தரவிறக்கி ஜும் பண்ணி பார்த்தீர்களேயானால், என் தலையில் இருக்கும் இரண்டு முடிகளுக்கு வெள்ளை கலர் அடித்து நரை முடி போல காண்பித்து என் வயதை கூட்டப் பார்க்கும் முயற்சி நடைபெற்றிருப்பதை அறியலாம். இதற்கு மேலும் நுண்ணான ஒரு நுண்ணரசியலை நீங்கள் வேறு எங்குமே பார்க்க முடியாது.
இந்த வார விளம்பரம்


இந்த வார ஜோக்


  


இந்த வார சாப்பாட்டுக்கடை

  டிஸ்கி

கேக் வெட்டும்பொழுது பிறந்தநாள் கொண்டாடும் நண்பரை சூழ்ந்து கொண்டு ஆளாளுக்கு கும்மாங்குத்து குத்துவோம். இந்த பர்த் டே பஞ்ச் வழக்கம் எங்கள் அலுவலகத்தில் உள்ளது. அதே ஸ்டைலில் நமது அண்ணன் கேபிள் சங்கரின் பிறந்தநாளான இன்று செல்லமாக இந்த கும்மாங்கொத்து பரோட்டா அவருக்கு பிறந்தநாள் பரிசாக.

ஆங் அப்புறம் சொல்ல மறந்துட்டேன்..

அனைத்தும் கற்பனையே.... சத்தியமாய் அண்ணன் கேபிள் சங்கரை தவிர வேறு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...


மென்மேலும் வளர்ந்து இவ்வருடம் கலை உலகில் இயக்குனராக கலக்க அன்புடன் வாழ்த்துவோம்..

25 comments:

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Unknown said...

கேபிள் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

அகல்விளக்கு said...

Happy Birthday to Cable Mams......

கோவி.கண்ணன் said...

செம லொள்ளு, அதுக்கு நீங்க செலவு செய்திருக்கும் உங்க உழைப்பு வியப்படைய வைத்திருக்கு.

:)

DR said...

வாய்ப்பே இல்லை தல. செமையா கலாய்ச்சிருக்கீங்க....

அப்புறம் அண்ணன் கேபிள் சங்கருக்கு என்னுடைய 29வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சாப்பாடு கடைக்கு வழி சொன்னது மிக மிக ரசிச்சேன். அலுவலகமா போய்டுச்சு. இல்லைன்னா சத்தம் போட்டு சிரிச்சிருப்பேன்...

தொடரட்டும் உங்கள் பணி... வளரட்டும் இந்த வலைமனை...

Anonymous said...

Great work. I have no words to appreciate you. Especially the last one. Keep it up Sugumar.

-Muthu...

எல் கே said...

happy birthday

Cable சங்கர் said...

பின்னுறியே சுகுமார்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

செம லொள்ளு,...

அண்ணன் கேபிள் சங்கருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சுகுமார் சார் கேபிள்ஜி ரசிகர் மன்ற தலைவர் போஸ்ட் உங்களுக்குத்தான்..கேபிள் ஜிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.உங்களுக்கு வாழ்த்துக்களோ வாழ்த்துக்கள்...

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள்

ஸ்ரீ.... said...

இடுகை அட்டகாசம் சுகுமார்! கேபிளின் வயது 29 என்பதை மென்மையாக அல்ல; வன்மையாகக் கண்டிக்கிறேன்! :)

ஸ்ரீ....

சி.பி.செந்தில்குமார் said...

சரியான நையாண்டி,எல்லாரையும் கலாய்ச்சுட்டீங்களே?

Unknown said...

சுகுமார் அண்ணே கலக்கிடீங்க...

சாருஸ்ரீராஜ் said...

அண்ணன் கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள் , இந்த வாரம் சாப்பாட்டுகடை கலக்கல்...

Ravichandran Somu said...

தலைவர் கேபிள் சஙகருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!

போஸ்டர் சூப்பர்..........

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

யுவகிருஷ்ணா said...

டேபிளின் ஏ ஜோக்குக்கான உங்கள் ஜோக்கு சூப்பர்!

அபி அப்பா said...

\\சத்தியமாய் அண்ணன் கேபிள் சங்கரை தவிர வேறு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...\\

இதுக்கு சிரிச்சு சிரிச்சு வயிறு புண் ஆகிடுச்சு. இதுக்கு உங்கபதில் என்ன? மரியாதையா என் கிட்டயும் மன்னிப்பு கேளுங்க, ஆமா சொல்லிட்டேன்:-))

செம கலக்கல்!

ஜானகிராமன் said...

வழக்கம் போல அற்புதம். பின்னிட்டீங்க. குறிப்பா அந்த இ.வா.ஜோ மேட்டர். நெனச்சாலே சிரிப்பு முட்டுது.

Ganesan said...

முதல்ல பெரியவர் கேபிளாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

சுகுமார், இந்த வாரம் ஜோக் மிகவும் ரசித்தேன்.

நல்ல கற்பனை வளம் சுகுமார். keep it up

Jey said...

கேபிளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Jey said...

கேபிளுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

vasan said...

கேபிள் ச‌ங்க‌ருக்கு பிற‌ந்த‌நாள் வாழ்த்துக்க‌ள்.

பிரபல பதிவர் said...

வாழ்த்த வயதில்லாமல் வண்ங்குகிறோம் ‍ என்று போஸ்டரில் போட்டு பதிவர்கள் அனைவரும்
கேபிளை விட வயதில் சிறியவர்கள் என்று காட்டும் உனது முயற்சியின் மூலம் நுண்ணறசியல் என்றால்
என்ன என்று புரிந்து கொண்டேன்

Unknown said...

\\சத்தியமாய் அண்ணன் கேபிள் சங்கரை தவிர வேறு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...\\

super!

A joke - superb!!!