Friday, July 9, 2010

ஆனந்தபுரத்து வீடு - ஃபர்ஸ்ட் ஷோ - திரை அனுபவம்

முன்கதை சுருக்கம் :


மர்ர்ர்ர்ம தேசம்ம்.. என மணலை மென்று தின்னும் குரல், சீரியலை விரும்பாத பல இல்லங்களில் கூட அலறியிருக்கிறது. ரகசியம், விடாது கருப்பு,  எதுவும் நடக்கும், சிதம்பர ரகசியம் போன்ற மர்ம தொடர்களால் சின்னத்திரையை அசத்திய இயக்குனர் நாகா முதன்முதலாக வெள்ளித்திரையில்.  கூடவே இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு என நான் கொஞ்சம் எதிர்பார்த்திருந்த படம்.


கமலா திரையரங்கத்தில் முதல்நாள் முதல்காட்சி. என்றும் இல்லாத திருநாளாய் இன்று வழக்கம் போல சும்மா கூப்பிட்டு பார்த்த போது என் தந்தையும் திடீரென என்னுடன் கிளம்பினார். படம் கொஞ்சம் பயமா இருக்கும் பரவாயில்லையா என கேட்டபோது, ஏதாவது திரில்லாங்கான சீன் வந்தா கண்ணை மூடிக்கிறேன் என்றார். "அப்போ நீ முழு படமும் கண்ணை மூடிகிட்டுதான் உட்காரனும்" என சொல்லியபடியே என் தந்தையையும்அழைத்துச் சென்றேன். கடைசியில் நான் சொன்னபடியே ஆனது.
பின்குறிப்பு 


படத்தை பார்க்க இயக்குனர் நாகா, தயாரித்த இயக்குனர் ஷங்கர், கதாநாயகி சாயா சிங் அனைவரும் வந்திருந்தனர். படம் முடிந்து வெளியே வந்தபோது விறுவிறுவென ஷங்கர் காரில் ஏறி பறந்துவிட்டார். நாகா, சாயா சிங் இன்னும் படத்தில் நடித்த சிலரும் கும்பல் கட்டி பேசிக்கொண்டிருந்தனர். 
மெயின் ஸ்டோரி


ஓரு ஊர்ல... சரி வேணாம். ஆனந்த புரம்ங்கிற ஊர்ல கார் விபத்தில் இறந்துவிட்ட தன் அப்பா அம்மா வாழ்ந்த பூர்வீக வீட்டுக்கு விடுமுறைக்கு வருகிறார் நாயகன் நந்தா தன் மனைவி சாயா சிங் மற்றும் வாய் பேச முடியாத தன் மழலையுடன். அங்கு ஆவியாக அவரது தாய் தந்தையர் உலவுகின்றனர்.  குழந்தை மற்றும் சாயாவுக்கு சேவைகள் செய்கிறர்கள். இதை காணும் சாயா அதிர்ச்சி ஆகிறார். நாயகன் நம்ப மறுக்கிறார்.

இவ்வாறான நிலையில் வியாபாரத்தில் ஏற்பட்ட துரோகத்தால் வட்டிக்கு கடன் வாங்கி திருப்பி தரமுடியாமல் தலைமறைவாக இந்த ஊருக்கு வந்திருக்கிறார் நந்தா என்பது தெரிய வருகிறது. நந்தாவை தொடர்ந்து அவரது வொர்க்கிங் பார்ட்னர் நண்பரும்  (சிதம்பர ரகசியம் சீரியல் ஹீரோ) அந்த வீட்டிற்கு வருகிறார். கடனை கொடுத்த கேங் இவர்களை விடாமல் வீட்டிற்கு முன் நின்று டார்ச்சர் செய்கிறது. கடைசியில் எப்படி அந்த கடனை அடைத்தார். யார் ஏமாற்றியது, யார் காப்பாற்றியது என்பனவற்றையெல்லாம் விரும்புபவர்கள் வெள்ளித்திரையில் போய் பார்த்துக்கொள்ளலாம்.


அமானுஷ்ய விஷயங்களை ஹாட்டாக டீல் செய்யும் நாகாவின் ஸ்டைல் படத்தில் மிஸ்ஸிங். மாறாக இராம நாராயணன் படங்களை போன்ற கிராபிக்ஸ் காட்சிகளே படத்தை ஆக்ரமிக்கிறது.  ஆவிகள் வீட்டு வேலைக்காரர்களை போல துணி துவைப்பது, சமையல் செய்வது எல்லாம் சரிதான். அதற்காக அதையே படம் முழுவதும் செய்திருப்பது போர் அடிக்கிறது.  நான் ரசித்த ஒரே கிராபிக்ஸ் என்றால் அது டைட்டில்தான். 'அட்டகாசம் போ' என அந்த ஒரு இடத்தில்தான் நான் நிமிர்ந்து உட்கார்ந்ததாய் ஞாபகம்.
அதே நந்தா... தன் பங்கை சரியாகவே செய்திருக்கிறார். சாயா சிங்... அட போயா என சொல்லாமல் அம்மாவாக நடிக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சில சில இடங்களில் அசத்தி இருக்கிறார். அந்த பொடியன் வாவ்... துரு துருவென நன்றாக ஆட்டம் போட்டிருக்கிறது. 'பாலா சார்' என கரகர குரல் வில்லன் இம்ப்ரஸ் செய்திருக்கிறார். நிறைய வாய்ப்புகள் இனி வரலாம் அவருக்கு. கலைராணியும் அதிகம் வருகிறார்.  ஊர் பாஷை ஸ்லாங்கை உறுத்தாமல் உச்சரிக்கிறார். 


பிண்ணனி இசை நன்றாக இருக்கிறது. இரண்டு பாடல்களும் படத்திற்கு வேகத்தடை. 
கதை என்று பார்த்தால் சாதராணமாக சொல்லிவிடக்கூடிய நாவல் கதைதான். முதன்முதலில் வெள்ளித்திரையில் கால்பதித்திருக்கும் நாகா அசாதாரண கதையை எடுத்திருக்க வேண்டாமா... சரி சாதாரண கதையானாலும் அதை ஈரம் போன்றதொரு திரில்லிங்கான தொனியில் சொல்லியிருக்கலாம்.  என்னவோ போங்க...


இயக்குனர் ஷங்கர் தயாரித்த படங்களை வெற்றி விகிதத்தில் வரிசைப்படுத்தினால், இந்த ஆனந்தபுரத்து வீடு, அறை எண் 305ல் கடவுளுக்கு கீழேயும் ரெட்டசுழிக்கு மேலேயும் இடம் பிடிக்கும் அளவிற்கு டைம்பாஸ் வாட்ச் வகையைச் சார்ந்தது.பின்குறிப்பு 2 சாயா சிங் படத்தை விட 200 சதவிகிதம் நேரில் ரொம்ப அழகாக இருந்தார்.  நாகா கொஞ்சம் தனியே போய் வெகு நேரம் போன் பேசிக்கொண்டிருந்தார். பேசி முடிப்பார் ஏதாவது படத்தைப் பற்றி பேசலாம் என பார்த்திருந்தேன். ஆனால் அவருக்கு அழைப்புகள் வந்து கொண்டிருக்கவே கைகுலுக்கிவிட்டு நகர்ந்தேன். ( நல்லவேளை அவர் போன் பேசிக்கிட்டிருந்தாருன்னு சொல்றீங்களா... அதுவும் சரிதான்..)


முன்கதை சுருக்கம் 2

"அப்போ நீ முழு படமும் கண்ணை மூடிகிட்டுதான் உட்காரனும்" என சொல்லியபடியே என் தந்தையையும் அழைத்துச் சென்றேன். கடைசியில் நான் சொன்னபடியே ஆனது.

பாதி படம் கண்ணை மூடியபடியேதான் இருந்தார். அப்பப்போ நான் எழுப்பி விட்ட போது படத்தை கொஞ்சம் பார்த்தும் என்னை கொஞ்சம் பார்த்தும் கிண்டலாக சிரித்தார். 'ஊரெல்லாம் கிண்டலடிக்கிற உன்னை என்னிக்காவது யாராவது கிண்டல் அடிப்பாங்கடா அப்போ உனக்கு தெரியும்' என என்றோ வந்த மட்டுறுத்தப்பட்ட அனானியின் பின்னூட்டம் என் மனக்கண்ணில் பிளாஷ் ஆகி மறைந்தது.

20 comments:

Jey said...

உங்க புண்ணியத்துல எனக்கு ஒரு டிக்கெட் பணம் மிச்சம்:)

ஜானகிராமன் said...

இந்த வடையும் போச்சா...

ராம்ஜி_யாஹூ said...

அப்போ இணையத்தில் பாக்க வேண்டாம். இரண்டு மணி நேரத்தை சேமிக்க உதவினீர்கள் நன்றிகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

paakkalaama

IKrishs said...
This comment has been removed by the author.
DR said...

டைரக்டர் நாகா "விசில்" படத்தை இயக்கியதாக ஞாபகம்...

பனித்துளி சங்கர் said...

பாவம் இந்த கதையினால் நாயாக உழைத்த பலரின் நிலைமை . பகிர்வுக்கு நன்றி

IKrishs said...

நாகாவின் மைக்ரோ தொடர்களும் குறிப்பிடதக்க ஒன்று .
அனுராதா ரமணனின் கதையில் உருவான "Bachelors Party" மற்றும் காயத்ரி ஜெயராம் ,ரேவதி சங்கரன்
நடித்த paying guest பற்றிய தொடரும் சின்ன திரையில் மிக சிறப்பான முயற்சி !
சிதம்பர ரகசியம் ஹீரோ வின் பெயர் "கிருஷ்ணா " என்று நினைக்கிறன் ,,,

பிரபல பதிவர் said...

vada pocha?

Sukumar said...

வாங்க Jey வருகைக்கு நன்றி... ஹி.. ஹி..

Sukumar said...

வாங்க ஜானகிராமன்.. போயே போச்சு... இட்ஸ் கான்... வருகைக்கு நன்றிங்க..

Sukumar said...

ராம்ஜி யாஹு.. வருகைக்கு நன்றி பாஸ்...

அகல்விளக்கு said...

ஓக்கே....

சன்டே மதராசபட்டினம் கன்பார்ம்...

(முன்னாடி ஆ.வீ.யா இல்ல மதராசபட்டினமான்னு குழப்பிகிட்டு இருந்தோம்...

Sukumar said...

ரமேஷ் ரொம்ப நல்லவன்.. பார்க்கலாமான்னு கேக்குறீங்களே...நீங்க நெஜமாவே ரொம்ப நல்லவர் சார்... ம் ம்.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போனா.. ஒரு வாட்டி பார்க்கலாம்..

Sukumar said...

வாங்க தனுசுராசி.. எனக்கு தெரிந்து இதுதான் அவரது முதல் படம்... நாகா என்பது விசில் படத்தில் வரும் அமானுஷ்ய கேரக்டர் பாஸ்....

Sukumar said...

வாங்க பனித்துளி சங்கர் ...
கண்டிப்பாக நல்ல உழைப்புதான்.. ஆனால் கொஞ்சம் திட்டமிட்டு உழைத்திருக்கலாம்.. நாகாவிற்கு தெரியாத கதைகளா.. வேறு எதையாவது புதிதாக சொல்லியிருக்கலாம்...

Sukumar said...

நன்றி கிருஷ்குமார்.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்... நீங்கள் குறிப்பிட்ட தொடர்களை நான் மிஸ் செய்துவிட்டேன் என நினைக்கிறேன்...

Sukumar said...

வாங்க சிவகாசி மாப்பிள்ளை..
ஆமாங்க... :(

Sukumar said...

வாங்க அகல்விளக்கு.. நானும் மதராசப்பட்டிணம் போகலாமுன்னு இருக்கேன்... ஆனா ஆ.வி.யை குழந்தைகள் ரசிக்கக் கூடும்னு நெனைக்கிறேன்....

ஷஸ்னி said...

ஷங்கர்(தயாரிப்பாளர்) இன் தலையீடுகள் இருந்திருக்கும் . இதனால் இயக்குனர் சுதந்திரம் பாதிக்க பட்டிருக்கும்