Wednesday, April 14, 2010

கொல்கத்தா சூப்பு கங்குலிக்கு ஆப்பு

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். நேற்றைய சென்னை சூப்பர் கிங்க்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான போட்டி சென்னை ரசிகர்களுக்கு சரியான விருந்தாய் அமைந்தது.  முதலில் மூன்று விக்கட்டுகளை கைபற்றியதுமே தீ பிடித்து கொண்டதை போல வேகம் எடுத்தது ஆட்டம்.  ஆனாலும் 139 ரன்கள வரை கொல்கத்தா எடுத்தது. இரண்டாம் பாதியில் ஹைடன் அவுட் ஆனதுமே இதுவும் ஒரு பஞ்சாப் சூப்பர் ஓவர் மேட்ச் போல ஆக போகிறது என தோன்றியது. ஆனால் ரைனாவும் விஜயும் விலாசியதில் 13.3 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்க்ஸ். 
        போட்டி முழுவதும் கங்குலியின் முக பாவங்களையே காட்டி கொண்டிருந்தார்கள் பாவமாய் இருந்தது.  மேட்ச் முடிந்ததும் புள்ளி பட்டியலை பார்த்தால் கீழே இருந்த சூப்பர் கிங்க்ஸ் இரண்டாம் இடத்திற்கு வந்திருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம் அதெப்படி இத்தனை டீம்கள் 12 புள்ளிகளுடன் செமி பினல்ஸ் போவோமா என்ற நிலையில் இருக்கிறது. ஒரு வேலை டி.ஆர்.பி யை கடைசி வரை தக்க வைத்துக்கொள்ள ஏதாவது ராஜ தந்திரம் நடக்கிறதா...? சரி சரி... நமக்கெதுக்கு அரசியல், ஐ.பி.எல் எல்லாம்... வாங்க வழக்கம் போல கலாய்க்கலாம்.








































































நேற்றைய பதிவில் இர்பான் பதான் வானத்தில் பறப்பது போன்ற ஸ்டில் கொடுத்து நண்பர்களின் கமென்ட் கேட்டிருந்தேன்... அனைவரும் இட்ட கமேண்டுகளில் இந்த கமெண்டுகள் எனக்கு பிடித்திருந்தது. 



































































நண்பர்கள் வி.பாலகுமார் மற்றும் பா.வேல்முருகன் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். 
கமென்ட் கொடுத்த அனைவருக்கும் எனது நன்றிகள். 


அப்புறம் இன்னும் ஐ.பி.எல் திருவிழா ஒரு வாரம்தான் இருக்கு.. அதுவரை கொண்டாடுவோம்.. அப்புறம் என்னன்னா கேக்குறீங்க ? வேற மேட்டர் சிக்காமலா போயிரும்...?  ரைட்டு வராட்டா... நாளை சந்திப்போம்...!
 ஆங் அப்புறம் அப்படியே எஸ்கேப் ஆகாம... கொஞ்சம் ஓட்டை போடுங்க சாமி. பின்னூட்டம் கொடுத்து உங்க கருத்தை சொன்னா இன்னும் நல்லா இருக்கும்...!

9 comments:

sivaG said...

சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்!!!

Sukumar said...

வாங்க sivaG சார்.... வாழ்த்துக்கு நன்றி... தங்களுக்கும் சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்.....

Balakumar Vijayaraman said...

நன்றியும் வாழ்த்துக்களும்.

Sukumar said...

வாங்க வி.பாலகுமார்...உங்கள் வாழ்த்துக்கு என் நன்றி... நன்றிக்கு வாழ்த்துக்கள்.... :)

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு. சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள் சார்.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

சுகுமார் சார் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நேத்து ஒரு நாள் சைட்க்கு வர முடியல...
போட்டியெல்லாம் வச்சு ஜமாய்ச்சுடிங்க....

manjoorraja said...

சித்திரை திருநாள் வாழ்த்துகள்.

அனைத்தும் அருமை.

பா.வேல்முருகன் said...

thank u sukumar sir. i cannot reply u immediately after getting ur award.thank u very much.

irundhalum unga alavukku comment adikka mudiyadhu.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல கவரேஜ் பாஸ்.