Wednesday, March 3, 2010

தியானபீட விளையாட்டு பிள்ளை - சன் பிக்சர்சின் சூப்பர் டூப்பர் ஹிட்


சன் பிக்சர்சின் தீராத விளையாட்டு பிள்ளை எதிர்பார்த்த அளவு வெற்றி நடை  போடாத நிலையில் செவ்வாய் மாலை சன் நியூஸ் ரிலீஸ் செய்திருக்கும் "தியான பீட விளையாட்டு பிள்ளை" வெளியிட்ட சில மணித்துளிகளிலேயே உலகெங்கும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது.
     புன்னகை தளபதி 'நித்தி' இதுவரை பார்த்திராத புதிய கோலத்தில் நடித்திருப்பதே  இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் படத்தில் நடித்திருக்கும் கதாநாயகி யார் என சஸ்பென்சாக வைத்திருந்ததும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .
  வழக்கமாக ஒரு நாளுக்கு நான்கு ஷோ மட்டுமே படங்கள் திரையிடப்படும் நிலையில் இந்த திரைக்காவியம் அரை மணிக்கொரு முறை சன் நியூஸ் சேனலில் ஒளிபரப்பட்டது அனைத்து ரசிகர்களிடேயும்  வரவேற்பு பெற்றது.
 குப்பென்று பத்திகொள்ளும்    என எதிர்பார்க்கப்பட்ட   அஜித் ரஜினி பிரச்சனை  பொசுக்கென்று முடிந்து விட்டது. அடுத்த  படம் வேறு வெள்ளி கிழமைதான் வரும். அதுவரை பதிவு போட என்ன செய்வது என பதறி கொண்டிருந்த பதிவுலகிற்கு   " நித்தியின் சித்து விளையாட்டு "  ஸ்டான்ட் காட்சிகள் பெரும் டாபிக் ஆக அமைந்ததால் எல்லோரும்  சேனலுக்கு நன்றி தெரிவித்து யூடூப் லிங்க் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
  தங்களது ஆன்மீக குரு இதுவரை எவ்வளவோ தியான முறைகளை  சொல்லி தந்துள்ளார். ஆனால் இத்தைகைய புதிய தியான ஆசனங்களை எங்களுக்கு இவ்வளவு நாட்களாய் சொல்லி தராமல் ஏமாற்றி வந்தது ஏன் என படத்தை பார்த்த சீடர்கள் அதிர்ச்சி அடைந்து வருத்தம் தெரிவித்தனர்.
 தங்களது எல்லா படங்களுக்கும் இடைவிடாத  விளம்பரம் போடுவது போல இந்த படத்திற்கும் சன் டி.வி.யில் "அடுத்த காட்சி 9 மணிக்கு... 9.30 மணிக்கு... 10 மணிக்கு " என இடைவிடாத  ப்ளாஷ் நியூஸ் ஓடிய வண்ணம் இருந்தது குறிப்பிடதக்கது.
  அதே போல் ஊர் ஊராய்  சென்று படத்தின்  ரிசல்ட்டை பாலோ அப் செய்யும் தங்களது பாரம்பரிய  முறைப்படி, இந்த படத்திற்கும், திருவண்ணமலையில் ஆசிரமம் முற்றுகை, புதுவையில் படம் எரிப்பு, கடலூரில் பறந்தது செருப்பு என விடாது பாலோ செய்து சூடாக ரிசல்ட் சொன்ன சன் நியூஸ் சேனலின் கடமை உணர்வை தமிழ் குடிமகன்கள் மெய் சிலிர்த்து பாராட்டி புளகாங்கிதம் அடைந்தனர்.  
  படத்தின் பின்னணி இசை நன்றாக வந்திருக்கிறது. குறைவான நேரமே கொடுக்கப்பட்டாலும் டெர்ரராக இசை அமைத்த இசை அமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.
  எங்கே படத்தின்  காட்சிகள் மக்களுக்கு புரியாமல் போய் விடுமோ என அஞ்சி க்ரியேடிவ் டீம் அமைத்துள்ள வர்ணனை வசனங்கள் அடுத்த வருடத்திற்கான விருது பெரும் சாத்திய  கூறுகள் உள்ளது.
 படத்தில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்சிகள் இருந்ததால் அதை தாங்களே சென்சார் போர்டாக செயல்பட்டு அனைவரும் பார்க்கும் விதத்தில் U செர்டிபிகேட்டுடன் வெளியிட உதவிய எடிட்டரின் பணி பாராட்டுக்குரியது 

  "தியான பீட விளையாட்டு பிள்ளை" -  சன் பிக்சர்சின் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் !

13 comments:

sivaG said...

சும்மா நச்சுனு இருக்கு! அப்ப பாக்ஸ் ஆபீசில் நொ 1?

MSV Muthu said...

Again a nice one!

Unknown said...

புன்னகை தளபதியா?

நக்கீரன் கொடுத்த பின்னணி மியூஜிக்தான் தல ஜூப்பரா இருந்துச்சு....

நாதிர்தின்னா நாதிர்தின்னா

butterfly Surya said...

சூப்பர் ஹிட்.

முரளிகண்ணன் said...

செம கலக்கல்

Sukumar said...

வாங்க sivaG வருகைக்கு நன்றி ....

Sukumar said...

Muthu MSV வாங்க தல... ரொம்ப நன்றி....

Sukumar said...

வாங்க வசந்த்... கரெக்ட்டு நாதிர் தின்னா தீம் மீசிக் சூப்பர்

Sukumar said...

butterfly surya.. வாங்க தல நன்றி...

Sukumar said...

முரளிக்கண்ணன் ... வாங்க சார்... சௌக்கியமா....

சரண் said...

சூப்பரப்பூ!!!!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை ...........

Unknown said...

Arumai