Tuesday, September 29, 2009

ஆறுமுகம் திரைப்படம் - சனி பெயர்ச்சிக்கு சிறந்த பரிகாரம்


உங்க ராசிக்கு சனி பெயர்ச்சியினால கண்டம் இருக்கு இனிமே டைம் சரியா இருக்காது. அதனால உங்க வாட்ச் கூட சரியா ஓடாதுன்னு ஏதாவது வாரா இதழ்ல படிச்சீங்களா... அதையே மண்டையில போட்டு யோசிச்சிக்கிட்டு இருந்தா எப்படி... நம்மக்கிட்ட சொல்ல வேண்டியதுதான...
இதோ பாருங்க நீங்க எந்த ராசியா வேணா இருந்துட்டு போங்க இந்த சனி பெயர்ச்சி பத்தி நீங்க ஒன்னியும் கவலை பட வேணாம்... நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு பரிகாரம்தான்... நேரா போயி சின்ன தளபதி பரத் நடிச்சிருக்கிற ஆறுமுகம் படத்தை ஒரே ஒரு வாட்டி முழுசா பாருங்க. (பாதியில எழுந்து வந்தா பரிகாரம் பலிக்காது. அப்புறம் நிர்வாகம் பொறுப்பல்ல சொல்லிபுட்டேன்.)
இந்த படத்தை பாத்தா எப்படிங்க தோசம் போகும்னுதானே கேக்குறீங்க. வரேன் வரேன்... இந்த படத்தை முழுசா பாத்துட்டீங்கன்னா உலகத்துல வேற எந்த கொடுமையும் ஒரு விஷயமாவே உங்களுக்கு தெரியாது... ஏன்னா படம் முழுக்க கொடுமையோ கொடுமை அவ்ளோ கொடுமை கொட்டி கிடக்கு...
நாம லொள்ளு சபா பாத்திருப்போம். ஒரு நல்ல படத்தை எடுத்துகிட்டு அதே காட்சிகளை காமெடியா மாத்தி அமைப்பாங்க. இங்க பாருங்க அண்ணாமலை படத்தை அப்படியே எடுத்து அதை எவ்வளவ்வு அசிங்க படுத்த முடியுமோ அவ்வளவ்வு அசிங்க படுதியிருக்கங்க.... எனக்கு தெரிஞ்சி லொள்ளு சபால கூட ஒரு படத்தை இவ்ளோ அசிங்க படுத்தியது இல்லை. வேற யாராவது எடுத்திருந்தா கூட மன்னிச்சிடலாம். ஆனா அண்ணாமலை எடுத்த அதே டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவே இந்த வேலையை செஞ்சிருக்காருன்னா அட போங்க சார் ரொம்ப சின்ன பிள்ளைதனமா இருக்கு.
ஏன்டா கண்ணா பின்னானு எழுதுற படம் எடுக்குறவங்க பாவம் இல்லையானு தயவு செஞ்சு யாரும் கேட்டுடாதீங்க. ஆறுமுகம், டைரக்சன் சுரேஷ் கிருஷ்ணானு விளம்பரத்துல போட்டிருந்துச்சு . சரி நல்ல இயக்குனாராச்சேன்னு அவரை நம்பி போனேங்க. அண்ணாமலை, பாட்ஷா, போன்ற பல வெற்றி படங்களை எடுத்த இயக்குனரா இது.. எனக்கெனவோ ஒரு டவுட்... இந்த பிரபல பதிவர்கள் பெயரில் போலியானவர்கள் பதிவு போடுவது போல யாரோ போலி சுரேஷ் கிருஷ்ணா இந்த படத்தை எடுத்திருக்க கூடும் என நினைக்கிறன்.
அண்ணாமலை படத்தை அப்படியே 80 சதவிகிதம் எடுத்து வச்சிருக்காரூங்க. மீதி 20 % நல்லா இருக்கானு கேக்காதீங்க. அதுல படையப்பா-10%, பாட்ஷா- 5%, , சிவாஜி- 2%, தெலுங்கு படங்களின் வாசனை - 3% என்கிற பார்முலாவில் உள் பங்கீடு இருக்கு. இவ்வளவும் சூப்பர் ஹிட் படங்களாச்சே .. இதோட கலவை எப்படி சூப்பரா இருக்கும்னு யோசிக்கிறீங்களா.. நீங்க ரொம்ப பாசிடிவ் கேரக்டர் சார் !
ஆனா நீங்களே ஒரு பயங்கர நெகடிவ் கேரக்டரா இந்த கலவையை யோசிச்சி பாருங்க. சாம்பார், சட்னி, குருமா எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணா வாந்தி எடுக்குற மாதிரி ஒரு காக்டைல் வருமே.. ஆங்... கரெக்ட்டு. படம் அப்பிடி இருக்க்கி....
அதுல பால் வியாபாரம் இதுல இட்லி வியாபாரம். அதுல அப்பா கட்டுன வீடு இதுல அம்மாவோட சமாதி. அதிலும் சமாதியை இடிச்ச உடனே பரத் சொல்ற டயலாக் செம காமெடி. இவ்ளோ நாள் உயிரோட (?) சமாதியில இருந்த எங்க அம்மாவை இடிச்சி கொன்னுடீங்களேடா ....( ஸ்..ஸ்... ப்பா... முடியல... சுரேஷ் கிருஷ்ணாவுக்குள்ள ஒரு மினி பேரரசு ஒளிஞ்சிக்கிட்டிருக்கார்னு இப்பதான் தெரியுது ) அப்புறம் அண்ணாமலை வரலாற்று சிறப்பு வாய்ந்த சபதம் டயலாக்... உன்னோட முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி........ அப்படியே காப்பி பேஸ்ட் பண்ணி அதை எவ்வளவவு அசிங்க படுத்த முடியுமோ அவ்வளவ்வு அசிங்க படுத்தி இருக்காங்கம்மா.
சரத்பாபு கேரக்டர்ல ஒரு புது முகம்(எங்கேயோ பாத்த மாதிரி இருக்கு). ராதாரவி கேரக்டர்ல ரம்யாகிருஷ்ணன். குஷ்பூ கேரக்டர்ல ப்ரியாமணி ஆண்டி. ஜனகராஜ் கேரக்டர்ல கருணாஸ். வைஷ்ணவி கேரக்டர்ல சரண்யா மோகன். அப்புறம் சொல்லவே வருத்தமா இருக்கு ரஜினி கேரக்டர்ங்க்ற நெனப்புல பரத் ( சத்தியமா முடியல).
அநேகமாய் அந்த சிவப்பு கலர் துண்டு இப்போதெல்லாம் கோ-ஆப்டெக்சில் கூட விற்கமாட்டார்கள் ஆனால் அதை இந்த பரத் எங்கு போனாலும் இடுப்பில் கட்டி கொண்டு அண்ணாமலை லுக் வர வழைக்க முயற்சி செய்திருக்கிறார் பாருங்க.... சரி இடுப்பில் துண்டு கட்டினால்தான் ரஜினி லுக் வரவில்லை செகண்ட் ஹாபில் கோட் சூட் போட்டாலாவது பணக்கார அண்ணாமலை கெட்டப் வருமா என்றால்.. அட போங்கடா அதுக்கு அந்த துண்டே தேவலை.
சரத் பாபு கேரக்டர்ல அந்த நடிகர் ஒன்னும் சொல்றதுக்கில்லை. ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரி என நினைத்து கொண்டு ரொம்பவும் இம்சிக்கிறார். அதிலும் அவர் வரும் காட்சிகளில் "இஸ் புஷ் தஸ் முஷ்" என டெரராய் பின்னணி இசை கொடுத்திருக்கிறார்கள் பாருங்கள்... அப்படியே நாம் பயந்து விடுகிறோம் எப்படா வீட்டுக்கு போறதுன்னு. சரண்யா மோகனை இதுக்கு மேல யாரும் மொக்கை பண்ண முடியாது. (ஏன் மேடம் நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு...?)
இதுக்கு மேலவும் கை பர பரன்னு டைப் அடிக்கனும்னு தோணுது. ஆனா இப்படியே போனா இந்த படத்தை பத்தி ஒரு ப்ளாகே ஆரம்பிக்கிற அளவு மனம் குமுறுவதால் இதோட நிறுத்திக்கிறேன்.
கடைசியா ஒரு விஷயம். நீங்க ரஜினி ரசிகரா இருந்தா படம் பாக்கும்போது தியேட்டர் ஸ்க்ரீனை கிழிக்கணும்னு தோணும். நீங்க ரஜினி ரசிகர் இல்லேன்னா உங்க சட்டையை கிழிக்கணும்னு தோணும். நீங்க பதிவரா இருந்தா வீட்டுக்கு போய் பதிவு போட்டு கிழிக்கணும்னு தோணும். ஆக மொத்ததுல ஆறுமுகத்துல அப்படி என்னத்த கிழிச்சிருக்காங்கன்னு யாரும் கேக்க முடியாது!

38 comments:

Anonymous said...

hahaahahahah

butterfly Surya said...

wow.. xlent ... ஹேய். நீயும் ரவுடி தான்..

குருவை மிஞ்சப்போற சிஷ்யன்.

ஹாலிவுட் பாலா+கேபிள் = சுகுமார்

உண்மைத்தமிழன் said...

சரி.. பார்த்து தொலையலாம்னு நினைச்சிருந்தேன்.. இது கதியும் இப்படியா?

Sukumar said...

Sachanaa..
Welcome to Valaimanai.. Thanks for ur encouragement...!!

Sukumar said...

butterfly surya...
ரொம்ப நன்றிண்ணே எல்லாம் உங்க ஆசீர்வாதம்

Sukumar said...

உண்மைத் தமிழன்
// சரி.. பார்த்து தொலையலாம்னு நினைச்சிருந்தேன்.. இது கதியும் இப்படியா //
அண்ணே... பாத்தா நாமலே தொலஞ்சு போய்டுவோம்ண்ணே... இது கதி அதோ கதி....
வருகைக்கு நன்றிண்ணே

Anonymous said...

அடி எவ்வளவு பலம்னு நீங்க குமுறிக் குமுறி கொந்தளிக்கிறதுல தெரியுது.

சென்ஷி said...

அவஸ்தைகள் ஆயிரம் இருக்கறப்ப காசு கொடுத்து இப்படியா அவஸ்தையை அள்ளிப்போட்டுக்கறது..

:-))


உங்க விமர்சன நடை சூப்பர்!

Sukumar said...

வடகரை வேலன்...
ஆமாம் அண்ணாச்சி... முடியல.... நானும் சரி வந்தது வந்துட்டோம் .. பதிவு எழுதாவாது இந்த படம் பயன்படட்டுமேனு பல்லை கடிச்சிட்டு பாத்தேன்...
வருகைக்கு நன்றி அண்ணாச்சி..

Sukumar said...

சென்ஷி...
வாங்க அண்ணே.. சரியா சொன்னீங்க போங்க...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிண்ணே.....

IKrishs said...

அந்த அண்ணாமலை படத்துல சரண்யா (ஓல்ட்) எங்க வராங்கன்னு சொன்னா தேவலை .. ரேகா ..வைஷ்ணவி இவங்க தானே அதுல நடிச்சு இருப்பாங்க..
...

நாமக்கல் சிபி said...

:))

நல்ல வேளை!

டிவில போட்டாக்கூட தலைவெச்சிப் படுக்க மாட்டேன்!

மிக்க நன்றி!

Sukumar said...

கிருஷ்குமார்...
தவறை சுட்டி காட்டியதற்கு நன்றிங்க... திருத்திவிட்டேன்.
( ஹி..ஹி.. ஹி... இந்த படம் பாத்து மைண்ட் ரொம்ப கன்பியூஸ் ஆயிருச்சின்னு நெனைக்கிறேன்....)

Sukumar said...

நாமக்கல் சிபி....
// டிவில போட்டாக்கூட தலைவெச்சிப் படுக்க மாட்டேன்! //
நீங்க ரொம்ப நல்லவருங்க...
வருகைக்கு நன்றி நண்பரே...

IKrishs said...

//சரி இடுப்பில் துண்டு கட்டினால்தான் ரஜினி லுக் வரவில்லை செகண்ட் ஹாபில் கோட் சூட் போட்டாலாவது பணக்கார அண்ணாமலை கெட்டப் வருமா என்றால்.. அட போங்கடா அதுக்கு அந்த துண்டே தேவலை.

:))))

JK Ritheesh,TR padangal madhiri indha padathayum "comedy" niraya irukkum pola...

Sukumar said...

// JK Ritheesh,TR padangal madhiri indha padathayum "comedy" niraya irukkum pola... //
ஆமா கிருஷ்குமார்... கருணாஸ் காமெடியை விட பரத், ரஜினி மாதிரி செய்ற காமெடிகள் அதிகம்....

நையாண்டி நைனா said...

ada... nanbaa....

கிரி said...

//நீங்க ரஜினி ரசிகரா இருந்தா படம் பாக்கும்போது தியேட்டர் ஸ்க்ரீனை கிழிக்கணும்னு தோணும். நீங்க ரஜினி ரசிகர் இல்லேன்னா உங்க சட்டையை கிழிக்கணும்னு தோணும். நீங்க பதிவரா இருந்தா வீட்டுக்கு போய் பதிவு போட்டு கிழிக்கணும்னு தோணும். ஆக மொத்ததுல ஆறுமுகத்துல அப்படி என்னத்த கிழிச்சிருக்காங்கன்னு யாரும் கேக்க முடியாது!//

ஹா ஹா ஹா

டோட்டல் டேமேஜ் பண்ணிட்டீங்க

Cable சங்கர் said...

யோவ் நானே பாக்கலைன்ற போதே தெரியவேணாமா..// சரி விடு பதிவு கிடைச்சிது இல்ல..

சிங்கக்குட்டி said...

தூக்கில் போடும் முன் கைதியிடம்,

போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன?

கைதி - தளபதி படம் பார்க்கணும்

போலீஸ்- அங்கே கூட்டமா இருக்கும். வேணும்னா சின்னத் தளபதி படம் பார்க்கிறீயா?

கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்.

வேற ஒன்னும் சொல்லுறதுக்கு இல்லப்பா :-))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தமிழ் திரையுலகில் மிக முண்ணனியில் இருக்கும் முதல் மூன்று நாயகர்களை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தான். தமிழில் எந்த கால கட்டத்தில் இது நிகழ்ந்ததில்லை. எந்த மொழியிலும் இனி நிகழப் போவதுமில்லை.

அந்தப் படங்கள் ஆளவந்தான்,பாபா,கஜேந்திரா

இளந்தமிழன் said...

பாவம் பரத்..... ஆக்சன் ஹீரோ ஆக ட்ரை பண்றார்....

உங்க விமர்சனம் நல்ல இருக்கு.

கலையரசன் said...

சுகு சாமிய்ய்ய்!! எனக்கு ஒரு உண்மதெரிஞ்ஜாகனும்...

நீதானே சுரேஷ் கிருஷ்ணாவுக்கு அ.பொ.அ?

Unknown said...

ur review super.....

Unknown said...

ur review super.....

Unknown said...

ur review super.....

sivakumar said...

//தமிழ் திரையுலகில் மிக முண்ணனியில் இருக்கும் முதல் மூன்று நாயகர்களை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கிய ஒரே இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தான். தமிழில் எந்த கால கட்டத்தில் இது நிகழ்ந்ததில்லை. எந்த மொழியிலும் இனி நிகழப் போவதுமில்லை.

அந்தப் படங்கள் ஆளவந்தான்,பாபா,கஜேந்திரா..//
அது மட்டுமா?
அஜீத்,[ஜனா] சரத்குமார்,[ஒருவன்]தனுஷ் [ப.அழகுசுந்தரம்]
பரத் ஆறுமுகம்..இப்படி அனைவருக்கும் ப்ளாப் படம் கொடுத்த ப்ளாப் மன்னன் இவர் தான்.
அவரின் ரீமேக் படங்கள் ஜனா,கஜேந்திரந்திரா----மூலம்==பாட்ஷா..
ஆறுமுகம்--மூலம் அண்ணாமலை மற்றும் சில..
இதை பற்றி தனி ப்ளாக்கே எழுதலாம்..

ஸ்வர்ணரேக்கா said...

சுகுமார் அண்ணே!!

தெரியாத்தனமா ஆபீஸ்ல உங்க பதிவ படிச்சிட்டேன்... சிரிச்சு சிரிச்சு கண்ல தண்ணி வந்துருச்சு...

என்னடா இது.. நாம கொதிச்சு, கொந்தளிச்சு போய் எழுதியிருக்கோம்... இந்த பொண்ணு சிரிக்குதுன்னு நெனைக்காதீங்க...நெசமாத்தான் சொல்றேன்... அதிலயும்..
//அதிலும் ரம்யா கிருஷ்ணன் வரும் காட்சிகளில் "இஸ் புஷ் தஸ் முஷ்" என டெரராய் பின்னணி இசை கொடுத்திருக்கிறார்கள்.. //

இந்த வரிய படிச்சிட்டு... சிரிச்சு மாளவில்லை....

//அண்ணாமலை, பாட்ஷா, போன்ற பல வெற்றி படங்களை எடுத்த இயக்குனரா இது.. //

பாபா எடுத்ததும் அவர் தான்னு மறந்துட்டீங்களே அண்ணே!!

Unknown said...

நல்ல காமெடி விமரிசனம்

ஆறுமுகம்-காணாப்போகும்.. :)))

ரங்குடு said...

கடவுளே... கடவுளே...

Unknown said...

உங்கள் வலைத்தளத்தின் டிராபிக் ஐ அதிகரிக்க இன்றே tamil10.com தளத்துடன் இணையுங்கள் .இதின் enhanced user optimization என்ற வசதி இருப்பதால் உங்கள் பதிவுகள் ஸ்பாம் தளங்களால் பாதிக்கப் படாமல் உடனுக்குடன் பிரபல செய்திகளின் பிரிவுக்கு வந்து விடும்

உங்கள் பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கவும்
ஒடாளிப்பு பட்டையை பெற இங்கே சொடுக்கவும்

U.P.Tharsan said...

:-))
//ஆறுமுகம் திரைப்படம் - சனி
பெயர்ச்சிக்கு சிறந்த பரிகாரம்//

நல்ல தலையங்கம்

பிரகாஷ் said...

JANA DIRECTION SHAJI KAILAS

அஹோரி said...

:-)

அக்னி பார்வை said...

same blood

Anonymous said...

[url=http://vonmertoes.net/][img]http://hopresovees.net/img-add/euro2.jpg[/img][/url]
[b]oem software site, [url=http://bariossetos.net/]selling software with[/url]
[url=http://hopresovees.net/][/url] version of photoshop to buy download acdsee pro free
profit software discounts [url=http://hopresovees.net/]software reseller business[/url] pirated adobe software
[url=http://vonmertoes.net/]buying oem software[/url] academic software pricing
[url=http://vonmertoes.net/]selling software 2007[/url] windows vista tutorial
price charting software [url=http://hopresovees.net/]buy dvd burning software[/b]

Several tips said...

உங்கள் ப்ளாக் ஒரு நல்ல ப்ளாக்.

sarathirajan said...

Ennala mudiyala..thalai therikra mari aydchu..ipdi oru review nan padichtella........