Friday, September 25, 2009

பதிவர் கேபிள் சங்கர்ஜி தொல்லை தாங்க முடியலப்பா....


பின்ன என்னங்க... நான் பாட்டுக்கு ரெண்டு போட்டோ போட்டு நாலு கமெண்ட் கொடுத்து ரஜினி, கஜினினு கில்மாவா தலைப்பு வச்சு பொழப்பு ஓட்டிகிட்டிருக்கேன். அது பிடிக்கலை இவருக்கு. அடிக்கடி நீ எழுதுயா.. நல்லா வரும்யா.... கமான் கமான்னு ஒரே உற்சாகப்படுத்துறாரு. அதான் அவரு படுத்துற படுத்துல (அதான்... உற்சாகம்... உற்சாகம்.. ) ஏதாவது எழுதி பாப்போமேன்னு உக்கார்ந்தேன். அப்படியாகப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த முதல் மொக்கை பதிவை அவருக்கே டெடிகேட் செய்யும் விதமாக "திரை அரங்க விமர்சனம்" எழுதுறேன். நல்லா இருந்தா நம்மளை கவனிங்க. நல்லா இல்லைனா, ஏங்க... இவனெல்லாம் எழுதலைன்னு எவன் அழுதான்னு நீங்க தாராளமா அவரையே 'கவனிங்க...!'
தல கேபிள்ஜி நாலு லட்சம் ஹிட்ஸ் தாண்டியதற்கும் அலெக்சா ரேட்டிங்கில் ஒரு லட்சத்திற்குள் வந்ததற்கும் (98,186 ) வாழ்த்துக்கள் !
_____________________________________________

கடைசியாய் கமலா தியேட்டரில் சிவாஜி படம் பார்த்தது. இப்போ என்னமாய் மாறி இருக்கிறது தெரியுமா ? நம்பவே முடியவில்லை. உள்ளே நுழையும் போதே... "சார்... ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு உள்ள போக கூடாது" என சொல்கிறார்கள்." அது ஏன் சார் எங்களை பார்த்து அந்த கேள்வியை கேட்டீங்க என நானும் ஒரு எதிர் கேள்வியை கேட்டேன் . கூட வந்த என் நண்பன் கிருஷ்ணா கமலா தியேட்டர் இப்படி கெட்டுபோய் விட்டதே என புலம்பியபடியே வந்தான்..!

பொக்கிஷம் படம்! பாக்ஸில் டிக்கெட் எடுத்து கொண்டு போய் உட்கார்ந்தோம். பரவாயில்லை. கமலா தியேட்டருக்கான எந்த அடையாளமும் இப்போ தெரியாமல் நல்லா செய்திருக்கிறார்கள். விளம்பர ஸ்லைடுகள் போட ஆரம்பித்தவுடன் ஒரு காதல் ஜோடி வந்தது. அவர்களுக்கு நடுவில் சீட்... நாங்கள் கார்னரில் இருந்தோம்.. பய புள்ள கிருஷ்ணாவோடு கார்னர் சீட்டில் உட்கார்ந்து என்ன ஆகா போகுது..? 'பெக்க பெக்க' என முழித்து கொண்டிருந்த அந்த காதல் ஆண் புறாவிடம் "பாஸ்.... இங்க வந்திடுங்க..." என்றதும் ஆர்வத்தோடு சீட் மாற்றி கொண்டான். என் தலைமுறைகளையே அந்த நேரத்தில் மனமார வாழ்த்தி இருப்பான் என அவன் தேங்க்ஸ் சொன்ன விதத்திலேயே உணர முடிந்தது.

படம் ஆரம்பித்தது.. சேரன் படம்.. இதோ நல்லா போகும்... இதோ நல்லா போகும்... என மனதை தேற்றி கொண்டே பார்த்ததில் இடைவேளையே வந்துவிட்டது. பளிச்சென்று வந்த வெளிச்சத்தில் அப்போதுதான் அந்த காதல் ஜோடியை பார்த்தேன். பகீரென்றது !

என்னதான் காதலர்களாயினும் ஒரு காதலன் இப்படியா நடந்துகொள்வது... அவன் மனுஷனா இல்ல மண்ணாங்கட்டியா என்றே தெரியவில்லை.. சொல்லவே நாக்கு கூசுகிறது.. அந்த பெண் படம் பார்த்து கொண்டிருக்க .. அவன் தூங்கி கொண்டிருந்தான் சார்.. தூங்கி கொண்டிருந்தான். இந்த மாதிரி கொடுமையும் எங்காவது நடக்குமா... ? நண்பன் கிருஷ்ணா வாங்கி கொடுத்த கொக்க கோலாவை இறக்கி தொண்டையை அடைத்த துக்கத்தை போக்கினேன்.

இடைவேளைக்கு பிறகும் படம் தேறாது என கன்பார்ம் ஆனதால் கமெண்ட் திருவிழாவை ஸ்டார்ட் பண்ண ஆரம்பித்தேன். 1980 களில் சேரன் லெட்டர் எழுதுவதுதான் படமே. ஒரு காட்சியில் சேரன் பத்மப்ரியாவை பார்பதற்காக ஊருக்கு வந்துவிட்டு வேலை விஷயமாக வந்தேன் என அப்பா விஜயகுமாரிடம் சொல்லுவார். அதை கண்டு விஜயகுமார் "என்கிட்ட பொய் சொல்றியேப்பா..." என்பார். அந்த இடத்தில் நான் "1940 ல அவரு எவ்ளோ லெட்டர் எழுதியிருப்பாரு...அவருகிட்டயேவா " என டைமிங் கமெண்ட் அடித்தேன். அதை கேட்டு பாக்ஸில் என்னையும் தூங்கி கொண்டிருந்த அந்த வெண்ணையும் தவிர்த்து பாக்கி இருந்த பதினாலு பெரும் கொல்லென சிரிக்க, பதிவு போட்ட பத்தே நிமிஷத்தில் பதினஞ்சு பின்னூட்டம் வந்தது போல ஒரே ஜிவ்வுன்னு ஆகி அடுத்தடுத்து கமெண்ட் அடிக்க ஒரே காமெடி திருவிழாதான்.

நான் மொக்க ஜோக் அடித்தாலும் தொடர்ந்து அந்த பெண் புறா சிரிக்க ஆரம்பித்து விட்டது . ( நம்ம ப்ளாக் பாலோயர்ஸ் மாதிரி ரொம்ப நல்ல கேரக்டர் போலிருக்கு) அலாரம் அடிச்சா ஆப் பண்ணிட்டு தூங்கிடலாம்... ஆம்புலன்ஸ் அடிச்சா ஆப் பண்ண முடியுமா ? மத்தவன் ஜோக்குக்கு தன் பிகர் சிரிப்பதையும் தாண்டி யாராவது நிம்மதியாய் தூங்க முடியுமா என்ன? அதற்கப்புறம் அவன் தூங்கவே இல்லை ! சீரியசான சினிமாவை விட்டுட்டு சிரிச்சிக்கிட்டிருக்கிற என்னையே பாத்துக்கிட்டு மட்டுறுத்தல் செய்யப்பட்ட அனானி பின்னூட்டம் மாதிரி அம்போன்னு பாவமாய் உட்கார்ந்திருந்தான் !

____________________________

அமைந்தகரை முரளிகிருஷ்ணா தியேட்டரில் சின்ன வயசில் குடும்பத்தோடு படம் பார்க்க போவோம். கடந்த மாதம் அலுவலக விஷயமாய் வெளியே சுற்றிய ஒரு சுபயோக தினத்தில் ஒரு மணி நேரம் துண்டு விழுந்தது. பார்த்தால் பக்கத்தில் முரளி கிருஷ்ணா . அன்று தான் மதுரை சம்பவம் திரைப்படம் ரிலீஸ். இந்த தியேட்டர் போய் ரொம்ப நாளாச்சே சும்மா இடைவேளை வரை பார்க்கலாம் என போனேன். இப்போதும் இங்கே பால்கனி டிக்கெட் விலை வெறும் 20 ரூபாய்தான். சவுண்ட் சிஸ்டம் எல்லாம் நல்லா இம்ப்ரூவ் செய்திருக்கிறார்கள்.

அப்போதெல்லாம் இந்த தியேட்டரில் மூட்டைபூச்சி பயங்கரமாய் கடிக்கும். இந்த முறை ஹரிகுமாரின் "தெக்குல திண்டுக்கல்லு..." போன்ற அற்புத டயலாக் டெலிவரியில் நான் லயித்திருந்தேன். மனிதர் பயங்கரமாய் கடித்ததால்.... ச்சே... நடித்ததால் மூட்டை பூச்சி கடித்ததா இல்லையா என்பன போன்ற சின்ன கடிகளை என்னால் சரியாய் நினைவு கூற முடியவில்லை. இன்னும் இரண்டே படம் நடித்தால் ஹரி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹீரோ ஆவது நிச்சயம்.

இடைவேளை வரை பார்த்த மட்டும் என் 'கேன த்ரிஷ்டியில்' நான் அறிந்து கொண்டது... விரைவில் ஹரிகுமார் சூரதளபதி ஆகும் ஆபத்து தமிழகத்திற்கு இருக்கிறது என்பதைத்தான். அகில இந்திய ஹரிகுமார் ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடலாமா என தீவிரமாய் யோசித்து வருகிறேன். யார் கண்டார்.... ஒரு வேளை 2011 -ல் இவரே முதல்வர் ஆகிவிட்டால் கவியரங்கத்தில் அவரை வாழ்த்தி பாட 'வெயிட்டான' கவிஞர் போஸ்டிங் ஏதாவது எனக்கு கிடைக்குமுல்ல !!

( தங்கள் தலைவர் பற்றி அப்டேட் ஏதும் வராமல் போஸ்டர் ஒட்டி பல மாதங்களாகி காய்ந்த கையோடும் காலியான பர்சோடும் காத்திருக்கும் ஜே.கே.ரித்தீஷ் மன்ற ரசிகர்கள் எங்கள் மன்றத்துக்கு வரவேற்கப்படுகிறார்கள்! )

________________________________________________

அப்புறம் கோயம்பேடு ரோஹிணி தியேட்டர் பற்றி கண்டிப்பா சொல்லணும். அங்க மதுரை சம்பவம் படம் மாதிரி என் வாழ்கையில் பல அதிருற சம்பவம் நடந்திருக்கு....

இந்த மொக்கையை படிச்சிட்டு நாளைக்கும் வரணும்னு நெனக்கிற அளவுக்கு நீங்க நல்லவரா இருந்தா அடுத்த பதிவில் அதை பத்தி சொல்றேன்......!! சந்தேகமே இல்லை இனி வரவே மாட்டேனு சொல்றீங்களா.... அப்ப சாமி போகும்போது ஓட்டாவது போட்டுட்டு போங்களேன்... கார்னர் சீட்ல உக்காந்துக்கிட்டு காதல் ஜோடிக்கு இடம் விடாம நீங்க செஞ்ச பாவமெல்லாம் தீர்ந்து உங்களுக்கு புண்ணியமா போகும் !!!

27 comments:

Cable சங்கர் said...

வாழ்த்துக்கு நன்றி..

நல்லாத்தானேய்ய்யா எழுதுற.. மக்களே நீங்களே சொல்லுங்க ஒருத்தனை எழுத சொல்லி ”ஊக்கு” விக்கிறது தப்பா..?:)

butterfly Surya said...

கேபிள்ஜீ.. நீங்க சொன்னா அப்பீலே இல்லை..

சுகுமார், ஒழுங்கா அவரு சொல்றதை கேளு...

ராஜன் said...

நல்லா இருக்கு அப்படியே, பொய்ட்டே இருங்க...

வரதராஜலு .பூ said...

நெஜமாவே நல்லாவே எழுதறிங்களே தல.

ஒஹோ, கேபிள் சங்கர் சார் ”ஊக்கு” விக்கறதாலயே?

பட்டைய கௌப்புங்க

பாசகி said...

//ரஜினி, கஜினினு கில்மாவா//

ஹலோவ்வ்வ் :)

பொக்கிசம் மேட்டர் டாப்பு. ஃபர்ஸ்ட் கியர்-ல ஆரம்பிச்சு டாப் கியர்ல போச்சு, நல்ல வேளை தியேட்டர்ல ஆக்சிடெண்ட் ஆகல :)

இராகவன் நைஜிரியா said...

கேபிளார் கணிப்புச் சரியாகாத்தாங்க இருக்கு.

நல்லா எழுதிறீங்க. சிரிக்க சிரிக்க எழுதறீங்க.

கீப் இட் அப்.

அஹோரி said...

என்ன ஒரு அடக்கம் ?
நல்லாத்தான் இருக்கு பதிவு.
நல்ல ஈஈஈதுங்கோ

blogpaandi said...

nalla pathivu. Athuvum padam odumpothu neengal kodutha comment super!!!!

Unknown said...

chennai thiyetter mattm thana? engal oorukku vanthathillaiya?

Beski said...

நல்லா சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க... கேபிள்ஜி ஊக்கு வித்த ஆளுங்க நறுக்குன்னு குத்தாம விட்டதில்ல, இல்லையா கேபிள்ஜி?

கமலா தியேட்டரப் பற்றி நானும் முன்பு எழுதியிருக்கிறேன்...
-இங்கே-

பாலா said...

இப்படித்தான்... கேபிள் என்னை மாட்டி வுட்டாரு...! இப்ப அடுத்த ஆளா? :) :)

வெல்கம்.. வெல்கம்..!!! கமெண்ட்ஸை விட்டுடாதீங்க!

Unknown said...

thamizhmanaththulayum ஏத்திவிட்டுட்டொம்ல...

நீங்க எங்க போனாலும் விட மாட்டோமே...

Sukumar said...

கேபிள்ஜி...
நல்லா இருக்குங்களா....
எல்லாம் உங்கள் ஊக்குவிப்புதான் தலைவரே....

Sukumar said...

butterfly surya
சரிங்கண்ணா.. அப்படியே ஆகட்டும்...

Sukumar said...

ராஜன்
தல, ரைட்டு... ரொம்ப நன்றி வருகைக்கு

Sukumar said...

Varadaradjalou.P
ஓகே சார்... வருகைக்கு ரொம்ப ரொம்ப நன்றி.. ஊக்குவிப்பிற்கும்...

Sukumar said...

பாசகி...
// ஹலோவ்வ்வ் :) //
சும்மா ஒரு ரைமிங்குக்குதான் தல... டென்ஷன் ஆகாதீங்க...

// நல்ல வேளை தியேட்டர்ல ஆக்சிடெண்ட் ஆகல //
நல்லா சொனீங்க போங்க... வருகைக்கு நன்றிங்க...

Sukumar said...

இராகவன் நைஜீரியா
சார்.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க....
நைஜீரியா நாட்டு கொடியில ரெண்டு ஹிட்ஸ் கூடி இருக்கும்போதே நெனச்சேன்... அது நீங்களாதான் இருக்குமுன்னு....

Sukumar said...

அஹோரி...
அண்ணே.. உங்க தொடர் ஆதரவிற்கு ரொம்ப நன்றிங்க...

Sukumar said...

blogpaandi
ரொம்ப நன்றிங்க தல... உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்....
உங்கள் பெயர் சூப்பருங்க....

Sukumar said...

Haja
வாங்க பாஸ்.... நம்ம ஊரு எந்த ஊருன்னு சொன்னீங்கன்னா வந்துடலாம்...

Sukumar said...

எவனோ ஒருவன்
ரொம்ப நன்றிங்க... கே.பி சினிமாவில் நட்சத்திரங்களை உருவாக்கியது போல்.. கே.ஜி ப்ளாகில் உருவாக்குகிறார்... அண்ணனுக்கு நன்றி...
உங்க பதிவு படங்களோட கலக்கலா இருக்குதுங்க....

Sukumar said...

ஹாலிவுட் பாலா...
ஓஹோ நீங்களும் கேபிள் பட்டறையில் வந்த மாணிக்கமா.... வாழ்த்துக்கள்....
பாஸ் கமெண்ட் கூடவே பொறந்தது விட முடியுமா....

Sukumar said...

ப்ரியமுடன் வசந்த்
ரொம்ப நன்றி வசந்த்
காதுல பீர்- அ வாத்தது போலிருக்கு......

பாலகுமார் said...

நல்லா இருக்கு சார், தொடர்ந்து கலக்குங்க ! :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

எம்.எம்.அப்துல்லா said...

//நல்லாத்தானேய்ய்யா எழுதுற.. //

இதை கன்னாபின்னான்னு ரிப்பீட்டிக்கிறேன் :)