Wednesday, August 19, 2009

சேரனுக்கு ஒரு ரசிகனின் மின்னஞ்சல்

அன்புள்ள லெனின் என்கிற சேரன் அவர்களுக்கு...
தினமும் படுத்தி எடுக்கும் ஆபிசை கட் அடித்து ஒரு இனிய காலை பொழுதில் பொக்கிஷம் பார்க்க போனேன். அதற்கு நீ ஆபிசுக்கே போய் இருக்கலாம் என இதை படிக்கும் பதிவு உலக நண்பர்கள் பின்னூட்டம் இடக்கூடும். ஆனால் நான் அவ்வாறு கூற மாட்டேன் . ஏன் எனில் இந்த படத்திற்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களையும் மீறி உங்கள் முகத்துக்காக மட்டுமே பொக்கிஷம் பார்க்க போனேன். ஆனால் உங்கள் முகமே பொக்கிஷம் படத்திற்கு பெரிய எதிர்மறை விஷயமாகி விட்டிருக்கிறது என்பதை உங்கள் ரசிகனாய் நான் சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து ஏன் மாய கண்ணாடியில் கூட பளிச்சென்று இருந்த நீங்களா அது....? கடைசி வரை வயதான சேரனை காட்டவே இல்லையே என படம் பார்க்க வந்திருந்த என் நண்பனிடம் கேட்டேன். அப்ப படத்துல வந்த சேரன் மட்டும் எப்படி இருந்தாராம் என கமெண்ட் அடித்தான். உங்கள் ரசிகர்களிடமிருந்தே இவ்வாறு கேட்டபது கஷ்டமாய் இருந்தாலும் உங்களின் உண்மையான ரசிகர்களின் விருப்பம் / நலன் கருதி அடுத்த படத்திலாவது வேறு ஹீரோவிற்கு பரிசீலனை செய்தால் நன்றாக இருக்கும்.
யாரும் யோசித்திராத களங்களில் சிந்தனைகளை சொல்லி தமிழ் திரையுலகில் நீங்கள் தனி இடம் பெற்று விட்டதனால் இன்றும் உங்களுக்கு பெரிய ஒபெனிங் இருக்கிறது. மாய கண்ணாடி தோற்ற நிலையில் இந்த கதையின் மேல் நீங்கள் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்து எவ்வளவவு பீல் பண்ணி இந்த படத்தை எடுத்திருக்கிறீர்கள் என தெரிகிறது.
பொதுவாக உங்கள் படங்களில் பீலிங்க்ஸ் பயங்கரமாய் இருக்கும். பாரதி கண்ணமாவில் பார்த்திபன் எரியும் சிதையை நோக்கி ஓடும்போதும், பொற்காலத்தில் முரளியின் திருமணம் போதும், ஆட்டோகிராப்பில் மாலையுடன் படகில் செல்லும் கோபிகாவை மயக்கத்தில் நீங்கள் பார்க்கும் போதும் சுவாசிக்க முடியாமல் தவித்திருக்கிறேன். ஆனால் உங்களின் மற்ற படங்களை விட இந்த படத்தில் பீலிங்க்ஸ் அதி பயங்கரமாய் இருக்கிறது. படம் பார்க்கும் எங்களை தவிர திரையில் எல்லா காட்சியிலும் லெனின், நதீரா, தந்தை, மகன், நண்பன் என அனைத்து கதா பாத்திரங்களும் ஆளாளுக்கு பீல் பண்ணி கொண்டே இருக்கிறார்கள். இது போதாதென்று கடைசியில் வரும் லெனினின் மனைவி ரொம்ப ஓவராய் பீல் பண்ணுகிறார். ஆளாளுக்கு பீல் பண்ணுவது படம் எப்ப முடியுமோ என எனக்கு ரொம்ப பீலிங்க்ஸ் ஆகி விட்டது.
அந்த காலத்து கடித போக்குவரத்தின் காத்திருத்தலையும் தவிப்பையும் இன்றைய இளைய தலைமுறைக்கு சொல்ல முற்பட்டிருக்கிறீர்கள். ரொம்ப சந்தோஷம். அதற்காக படம் முழுவதும் கடிதம் எழுதுவதும் அதை வரி விடாமல் முழுவதும் படித்து காட்டுவதும் நதிராவிடமிருந்து கடிதம் வரவில்லை என அடிக்கடி நீங்கள் தவிப்பதுமாய் திரும்ப திரும்ப வரும் ஒரே காட்சிகளினால் கவனம் சிதறி தூரத்து சீட்டில் கற கற மொற மொற வென யாரோ வீல் சிப்ஸ் கடித்து கொண்டிருந்த்தின் மேல் எனக்கு கவனம் சென்று செம கடுப்பாகி விட்டது.
எல்லாவற்றையும் மீறி குறையே சொல்ல முடியாத ஓளிப்பதிவு, ஒலி சேர்க்கை, ஸ்பெஷல் எபெக்ட்ஸ், லோகஷன்ஸ் என உங்கள் ப்ரெசென்ட்டேஷன் தியேட்டரை விட்டு எழுந்து போக விடாமல் தடுக்கிறது.
ஒருவேளை தப்பி தவறி இந்த மின்னஞ்சல் உங்கள் கண்ணில் பட்டு தொலைந்தால் நீங்கள் புண் பட கூடும். நீங்கள் இது போன்ற வார்த்தைகளை ஏற்று கொள்ள சிரம படுவீர்கள் என எனக்கு தெரியும். மாய கண்ணாடி தோல்வி அடைந்த நிலையிலே தினமும் விளம்பரம் கொடுத்தீர்கள்... நாங்கள் சொல்ல வந்ததை நீங்கள் சரியாய் புரிந்து கொண்டீர்களா என எழுதி அனுப்புங்கள்... பரிசு கொடுப்போம் என அறிவித்தீர்கள்... சார்.. எங்களுக்கு சரியாய் புரிந்ததால்தானே அந்த படமே பிடிக்காமல் போனது ....எது எடுத்தாலும் எங்களுக்கு பிடிக்க வேண்டும் என்கிற அளவிற்கு நீங்கள் யோசிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
ஆட்டோகிராப் படத்தினால் எங்களை பீலிங்க்ஸ் ஆக்கினீர்கள். எங்களால் மறக்க முடியாதுதான். அதற்காக இனியும் உங்களிடம் மக்களை பீலிங்ஸ் ஆக்கி அழ வைக்க வேண்டும் என்கிற கதைகள் இருந்தால் தயவு செய்து கொஞ்ச நாள் அவைகளை ஏதாவது பெட்டியில் வைத்து பூட்டி பொக்கிஷம் ஆக்கிடுங்க பாஸ்... உங்க லெவலே வேற... எங்களின் சிந்தனையை ஹேக் செய்து பத்து பதினைந்து நாட்கள் தவிக்க வைக்கும் அளவிற்கு உங்களால் கதை சொல்ல முடியும். பாத்து பண்ணுங்க பாஸ்...

- உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கும் ரசிகன்

18 comments:

SK said...

இவ்வளவு பேரு அவருக்கு கடிதம் எழுதினா அவரு தாங்குவாரா ??

butterfly Surya said...

அருமை சுகுமார். நல்லா எழுதியிருக்கிறாய். இன்னும் நிறைய எழுதவும்.

ஆனால் இயக்குனர் சேரனை பிடித்த எனக்கு நடிகர் சேரனை துளியும் பிடிக்கவில்லை.

ஏற்கனவே மாயக்கண்ணாடியும், ராமன் தேடிய சீதை (கள்) பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆனேன்.

அதனால் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. லக்கி/ அதிஷா பதிவை படித்த பிறகு நல்ல முடிவும் எடுத்து விட்டேன்.

மனதிற்குள் புதைந்திருக்கும் சோகத்தை காட்ட முகத்தை அஷ்டகோணல் ஆக்க வேண்டாம் என்று நேரில் பார்த்தால் சேரனிடம் சொல்லி விடுங்கள் என்று கேபிளிடம் கூறிவிட்டேன்.

இல்லையென்றால் இத்தாலிய திரைப்படமான "The Keys To The House" படத்தில் பதினைந்து மகனுக்கு தந்தையாக உணர்ச்சி குவியலாய் நடிப்பை கொட்டியிருக்கும் நாற்பதே வயதான Kim Rossi Stuartன் நடிப்பை பார்க்க வேண்டும்.

நடிப்பை விருப்ப பாடமாய் படித்திருக்கும் இவர் நம்ப உலக நாயகன் போல ஐந்து வயது முதல் நடித்து வருபவர்.


சுகுமாரும் திரை விமர்சனம் எழுதுவது நினைத்து ரொம்ப Happy Feelings.

Hearty Wishes.. Keep Rocking..

Sukumar said...

வாங்க SK உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

அடுத்த படமும் இப்படி எடுத்தா நாங்க தாங்க மாட்டோமில்ல..... அதுக்குதான் பாஸ்.......

Sukumar said...

வாங்க வண்ணத்து பூச்சி அண்ணே.....

// நல்லா எழுதியிருக்கிறாய். இன்னும் நிறைய எழுதவும். //

// சுகுமாரும் திரை விமர்சனம் எழுதுவது நினைத்து ரொம்ப Happy Feelings. //

அப்படியா சொல்றீங்க... எழுதிடுவோம்ண்ணே....

உண்மைத்தமிழன் said...

நன்று சுகுமார்..!

நையாண்டி நைனா said...

Sarithaan....

pathil kaditham vanthathaa?

Sukumar said...

உண்மைத்தமிழன் அண்ணே..... தங்கள் வருகையால் வலைமனை சிறப்பு பெற்றது.... வாழ்த்துக்கு நன்றி அண்ணே....

Sukumar said...

வாங்க நையாண்டி நைனா .....
நதீராவின் முகவரி கிடைக்காமல் கடைசியில் லெனின் கடிதங்களை போஸ்ட் பண்ணாமல் வைத்திருப்பது போல் சேரன் சாரின் மின்அஞ்சல் முகவரி கிடைக்காமல் இதை மெயில் பண்ணாமல் வைத்திருக்கிறேன்....

கலையரசன் said...

//சிதறி தூரத்து சீட்டில் கற கற மொற மொற வென யாரோ வீல் சிப்ஸ் கடித்து கொண்டிருந்த்தின் மேல் எனக்கு கவனம் சென்று செம கடுப்பாகி விட்டது.//

யோவ்... சுகுமாரு! மரியாதையா போட்டோ கமெண்ட் போடுறதை தற்காலிகமா நிறுத்திட்டு இதுபோல பதிவா போடு... உனக்கு நகைசுவை அட்டகாசமா வருது!

பள்ளிகூட நினைவுகள் எழுதியபோதே சொன்னேன்.. நீதான் கேக்கலை, இனிமேல் இதுபோல் இடுகைகள் ...

- உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கும் ரசிகன்

Cable சங்கர் said...

இவ்வளவு எழுதுவியா நீ..? சபாஷ்..

Unknown said...

இது மாதிரி இடுகைகள் தொடர்ந்து எழுத கேட்டுகிறேன்.....

சம்பத் said...

நல்ல ஒரு கடிதம்....

maalicious said...

Dear Sukumar,

I don't have tamil fonts in my system, so I have to type in English. My parents both are ardent fans of Cheran since his earlier movies. Their favorite movie is Mayakkannadi. I liked it a lot too. But, I read the review of this movie in TOI and warned my parents not to experiment as the review stated the movie was average. Unfortunately, they went for the movie. They were totally silent when they came back!! Later I found that this movie had driven them to despair!! If some of the actors/directors need some lessons in making FEELINGS movies, they better draw inspirations from our neighboring country movies...not some Hollywood ones. I can quote an Iranian film called The Song of Sparrows (2008). I watched it on UTV world movies. It will move anyone to tears who watches it, even if they don't know Persian.

Sukumar said...

தங்கள் வார்த்தைகள் நிறைய உற்சாகம் கொடுக்கிறது கலை.. ரொம்ப நன்றி....!!!

Sukumar said...

கேபிள் சங்கர்..
நல்ல இருக்கா தல... உங்களோட அனைத்து விதமான ஆதரவிற்கும் நன்றி தல..

Sukumar said...

ப்ரியமுடன் வசந்த்...
ரொம்ப நன்றி வசந்த்... எழுதிடுவோம்,

Sukumar said...

ரொம்ப நன்றிங்க சம்பத்....

Sukumar said...

Maalicious....Thank u so much for taking time to share your valuable thoughts.....!!!