Tuesday, August 4, 2009

விருது விருது வருது வருது ...!!!!

பதிவுலகில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் சுவாரஸ்ய பதிவர் விருது அங்க சுத்தி இங்க சுத்தி எனக்கும் வந்திடிச்சி....
பதிவர் கலக்கல் கலையும் பதிவர் குடந்தை அன்புமணியும் எனக்கு இந்த விருதை அளித்துள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்த விருதினை அண்ணன் எம்.எஸ்.வி.முத்து
அவர்களுக்கு வழங்குகிறேன்.

நான் பார்த்த முதல் வலைப்பூ குரல்வலைதான். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நான் அம்பத்தூரில் உள்ள ஒரு பி.பி.ஒ நிறுவனத்தில் பொட்டி தட்டி கொண்டிருந்த போது நண்பர் ஒருவருக்கு இவரது கதைகள் மின் அஞ்சலில் வரும். அவரிடம் இருந்து அவைகளை பெற்று ஸ்க்ரீனை சின்னதாக்கி வேலை நேரங்களில் கதைகள் படித்து
கொண்டிருப்பேன்... தூரத்தில் இருந்து பார்பதற்கு வேலை செய்வது
போலவே இருக்கும். நேரில் பார்ப தற்கு உன்னாலே உன்னாலே வினய் மாதிரி இருப்பார். இவரது சிறுகதைகள் அட்டகாசமாக இருக்கும். ஆவி பேய் கதைகளில் அண்ணன் நிபுணரோ நிபுணர். சமுதாய அக்கறை கொண்ட இவரது கருத்துக்கள் சிந்திக்க வைக்கும். சிங்கப்பூரில் பணி நிமித்தமாக வசித்து வரும் இவருக்கு என்னுடைய சிறப்பு பரிசு இந்த சுவாரஸ்ய வலை பூ விருது..___________________________________________________________________________

"இந்த பதிவர் என் சிறந்த நண்பர்"
எனும் விருதினை
அவர்களும்
அவர்களும்
கொடுத்திருக்கிறார்கள் ...
இருவருக்கும்
என் நன்றிகள்....
அந்த விருதினை
தல கேபிள் சங்கருக்கு
அளிக்கிறேன்......


தல கேபிள் சாருக்கு அறிமுகம் கொடுத்தா அது சன் டி.வி.க்கே விளம்பரம் போட்ட மாதிரி ஆயிரும். அதனால டக்குனு சொல்றேன்.
அப்ப நான் புதிய பதிவர் ( டேய் இப்பவும் நீ புதுசுதாண்டா...) இந்த திரட்டி மேட்டர்
எல்லாம் தெரியாது. நானே பதிவு போட்டு நானே படிச்சிக்குவேன். இப்படியே பதிவுலக வாழ்க்கை நிம்மதியா போய் கிட்டிருக்கும்போது ஒரு நாள் தெரியா தனமா ஆனந்த தாண்டவம் படம் பாத்து தொலைச்சிட்டேன். இந்த மாதிரி மொக்கை படம் ரிலீஸ் ஆகுற மோசமான உலகத்துல நாம ஒரு நிமிஷம் கூட உயிரோட இருக்க கூடாதுன்னு முடிவெடுத்தேன்.
சரி நம்மள மாதிரியே யாரவது ஆனந்த தாண்டவம் பாத்துட்டு குத்துயிரும் கொல உயிருமாய் இருக்காங்களான்னு கூகிள் ஆண்டவரை கேட்டபோது கிடைத்த பூ தான் கேபிள் சங்கர் வலை பூ. ஒரு மொக்கை படம் பாத்தாலே பி.பி. ஏறுகிற நிலையில இவர் என்னடானா போஸ்டர் கூட ஓட்ட பணமில்லாத பட்ஜெட் படங்களை எல்லாம் தேடி பாத்து விமர்சனம் எழுதி இருந்தாரு... ஏண்ணே இப்படின்னு கேட்டா அவருக்கு இதேதான் ஹாபியாம். இவ்ளோ நல்லவரா இருக்காரேன்னு தொடர்ந்து அவரது வலைபூவை படிக்க ஆரம்பிச்சேன்.
பதிவுலக மக்கள் தொகை விழிப்புணர்ச்சி, பின்னூட்டங்கள், திரட்டி, லிங்க் , இன்ன பிற விஷயங்கள் எல்லாம் அவரை பார்த்து அறிந்ததுதான். ஏதாவது சந்தேகம் என்றால் எப்போது போன் செய்தாலும் விளக்கி சொல்வார். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் புதுசு பழசு என பார்க்க மாட்டார். இப்படியாகப்பட்ட அண்ணன் கேபிள் சங்கருக்கு நண்பர் பதிவர் விருது கொடுப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் ...!
(இதான் உங்க டக்கா...?)

_________________________________________________________________________

அடுத்ததா பட்டாம்பூச்சி விருது கொடுத்திருக்காரு பதிவர் சுபாங்கன். பல வலைகளில் இந்த பட்டாம்பூச்சி விருதினை பார்த்திருக்கிறேன். எனக்கும் அது கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. அவருக்கு என் நன்றி.
இந்த பட்டாம்பூச்சி விருதை
பதிவர் வழிபோக்கன் அவர்களுக்கும்
பதிவர் ஸ்வர்ணரேகா அவர்களுக்கும்
அளிப்பதில் நிறைவான மகிழ்ச்சி அடைகிறேன்.....!
__________________________________________________________________________

ஒரு வழியா விருதுகள் கொடுத்தாச்சு.... இந்த நேரத்தில் அண்ணன் எம்.எம்.அப்துல்லாவின் பொன் மொழியை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்....

"இனி எனக்கு விருது தர இருக்கும் அன்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்...இனி விருதுக்குப் பதிலாக பொற்கிழியோ அல்லது பணமுடிப்போ தந்தால் இன்னும் மகிழ்வேன்."

ரைட்டு....! வரட்டா .... நெக்ஸ்ட் மீட் பண்றேன்....!!

22 comments:

Cable சங்கர் said...

"இனி எனக்கு விருது தர இருக்கும் அன்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்...இனி விருதுக்குப் பதிலாக பொற்கிழியோ அல்லது பணமுடிப்போ தந்தால் இன்னும் மகிழ்வேன்."
//

எனக்கும் அதே ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்..

butterfly Surya said...

சுகுமார். எனக்கு நீங்க இந்த விருது கொடுக்காததால் பொற்கிழிக்காக காத்திருக்கிறேன்.

சரவணகுமரன் said...

//எல்லாம் தெரியாது. நானே பதிவு போட்டு நானே படிச்சிக்குவேன். இப்படியே பதிவுலக வாழ்க்கை நிம்மதியா போய் கிட்டிருக்கும்போது //

ஹி ஹி... :-)

Sukumar said...

வாங்க கேபிள் அண்ணே... வருகைக்கு நன்றி.....!!

Sukumar said...

வண்ணத்துபூச்சி அண்ணே...
எங்களை மாதிரி தருமி தான் பொற்கிழிக்கு ஆசை படனும்... நீங்க எல்லாம் சிவா பெருமான் ரேஞ்சுல சிந்திக்கிறவர்....

Sukumar said...

வாங்க சரவணகுமரன் சார்....வருகைக்கு மிக்க நன்றி...!!!

டவுசர் பாண்டி said...

சோக்கா கீதுபா , ஒரு கவித மேரி எழ்தறியே வாஜார், தூள் டக்கர்

Unknown said...

வாழ்த்துக்கள் சுகுமார்

வழிப்போக்கன் said...

ர்ரொம்ப நன்றி அண்ணா...
:)))
மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்....

கலையரசன் said...

நானும் இப்படியே எழுதியிருக்கலாமோ?

ஒரு வழியா கடனை தீர்த்துடீங்க!!

ஸ்வர்ணரேக்கா said...

விருதா!! எனக்கா!! என்னால நம்பவே முடியலியே... பக்கத்தில எல்லாரயும் கிள்ளி பாத்துட்டு தான் நிம்மதியானேன்...

ஒரு பொற்கிழி பார்சல் அனுப்பியிருக்கேன்.... வாங்கிக்கங்க...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அழகு...,

Sukumar said...

டவுசர் பாண்டி
அண்ணாத்தே மெய்யாலுமே புச்சிக்கீதா.....இன்னா வார்த்தை சொல்லிட்ட நைனா......எனக்கு ஒரே குஜால்சா ஆயிடிச்சி...... அப்பாலிக்கா மீட் பண்ணுவோம்.....

Sukumar said...

பிரியத்துக்கும் வாழ்த்துக்கும் விருதுக்கும் நன்றிகள் வசந்த்.....!!!

Sukumar said...

வாங்க வழிப்போக்கன்... தொடர்ந்து கலக்குங்க.....!!

Sukumar said...

வாங்க கலக்கல் கலை... வருகைக்கும் விருதுக்கும் நன்றி நன்றி....!!

Sukumar said...

பக்கத்துல எல்லாரையும் கிள்ளி பாத்தீங்களா ...?? சரியான டெர்ரர் பதிவரா இருப்பீங்க போலிருக்கே....
வாழ்த்துக்கள்...
இன்னும் பொற்கிழி வரலங்க....பாத்து அனுப்புங்க....

Sukumar said...

சுரேஷ் அண்ணே... உங்க அன்புக்கும் விருதிற்கும் ரொம்ப ரொம்ப நன்றிங்க...!!

குடந்தை அன்புமணி said...

விருது பெற்றவர்களைப் பற்றிய தங்கள் அறிமுகங்கள் நன்று.

கடைசியாக அப்துல்லா அண்ணன் கூறியதை போட்டிருந்ததுதான் உண்மையிலேயே பிடிச்சிருந்தது. ஏன்னா அதைத்தான் நானும் விரும்புகிறேன்.வாழ்த்துகள் நண்பா.

நிகழ்காலத்தில்... said...

\\"இனி எனக்கு விருது தர இருக்கும் அன்பர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்...இனி விருதுக்குப் பதிலாக பொற்கிழியோ அல்லது பணமுடிப்போ தந்தால் இன்னும் மகிழ்வேன்."\\

விருது கொடுப்பவரின் அன்பே முக்கியம், பொற்கிழி பணமுடிப்போ எதிர்பார்ப்பது மகிழ்ச்சிக்குரியது அல்ல

பணத்தை கொடுப்பவராக இருங்கள்., ஏன் பெறுபவராக இருக்கிறீர்கள்???!!!

சிங்கக்குட்டி said...

//நானே பதிவு போட்டு நானே படிச்சிக்குவேன். இப்படியே பதிவுலக வாழ்க்கை நிம்மதியா போய் கிட்டிருக்கும்போது// படிக்க நல்லா இருந்துச்சு :-)) மேலும் விருதுக்கு வாழ்த்துக்கள்.

MSV Muthu said...

Thanks Sukumar!

32 கேள்விக‌ள்; ப‌தில் சொல்ல‌ வ‌ர‌வும்.:)